இளைஞராக திருவண்ணாமலைக்கு வந்த கணபதி சாஸ்திரிகளின் புகழ் நாடெங்கும் பரவியது. அவரது கல்வியறிவும், வாதத் திறனும், புத்திக் கூர்மையும் கேட்போரை வியக்கச் செய்தன. இதைக் கண்ட வயதான பண்டிதர்கள் சிலர் பொறாமை கூட அடைந்தார்கள்.
திருவண்ணாமலையிலிருந்த வேத சாஸ்திரப் பாடசாலையில் கணபதி சாஸ்திரிகள் சிறிது காலம் பண்டிதராக இருந்தார். அப்போது வயதான பண்டிதர் ஒருவர் இவருடன் தர்க்கம் புரிந்து தோற்கடிக்கும் எண்ணத்துடன் திருவண்ணாமலைக்கு வந்தார். பாடசாலையின் வாயிலில் நின்று பேசிக் கொண்டிருந்த இளைஞர்கலை அணுகி, “கணபதி சாஸ்திரிகள் எங்கேயிருக்கிறார்?” என்று கேட்டார். அவர்களில் ஓர் இளைஞர் “நான் தான் கணபதி. உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். தன்னை அந்தப் பையன் ஏளனம் செய்கிறான் என்று நினைத்து முகத்தைச் சுளித்துக் கொண்டார் வயோதிகப் பண்டிதர். பின்னர் உண்மையை அறிந்து ஆச்சரியப்பட்டுப் போனார்.
“கணபதி சாஸ்திரிகள் என்றால் ரொம்ப வயதானவராக இருக்கும் என்று நினைத்து வந்தேன். இத்தனை இள வயதில் உன் புகழ் இத்தனை தூரம் பரவியிருப்பது ஆச்சரியத்திலும், ஆச்சரியம். நீ ரொம்ப புத்திசாலி. உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாம் என்று நான் வந்தேன், என்று அந்தப் பண்டிதர் கூற, “தாராளமாகக் கேளுங்கள், எனக்குத் தெரிந்த வரையில் பதில் கூறுகிறேன்” என்று தன்னடக்கத்துடன் கூறினார் கணபதி சாஸ்திரிகள்.
பெரியவர் ஒரு சிறு கேள்வியைக் கேட்டார். அடுத்தக் கணம் சற்றும் யோசிக்காமல், இள முனிவர் உபநிடதங்களிலிருந்தும், சாஸ்திரங்களிலிருந்தும் மேற்கோல்கள் காட்டி மூச்சு விடாமல் பேசத் தொடங்கி விட்டார். பல ஆதாரங்களைக் காட்டி, பல வித அர்த்தங்களை எடுத்துக் கூறி, பெரியவரின் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார். அவற்றையெல்லாம் சரிவரப் புரிந்து கொள்ளக் கூட முடியாமல் அந்தப் பெரியவர் திக்கு முக்காடிப் போனார். கணபதி சாஸ்திரிகள் ரொம்பவும் பெரியவராகவும், அவர் எதிரில் தாம் மிகவும் சிறியவராகவும் அவருக்குத் தோண்றவே, மேல் வேட்டியை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு பேசினார்.
“அப்பா, உன்னை நான் தவறாக எடை போட்டு விட்டேன். உன்னைக் கேள்வி கெட்க வேண்டும், உன்னை மட்டம் தட்ட வேண்டும் என்றுதான் நான் இங்கு வந்தேன். ஆனால், உன் அறிவின் ஆழத்தைக் கண்டதும் என் புத்தியின் சிறுமைத்தனம் எனக்கு நன்றாகப் புரிந்து விட்டது. நீ மகா மேதாவி, பண்டிதர்களுக்கெல்லாம் பண்டிதன், என்னை மன்னித்து விடு” என்று அழ மாட்டாத குறையாகக் கூறினார்.
கணபதி முனிவர் அவரிடம், “தாங்கள் அப்படிச் சொல்லக் கூடாது. என் அறிவு கை மண் அளவுதான்; உங்களைப் போன்ற பெரியவர்கலிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் எத்தனையோ இருக்கிறது” என்று மிக மிகப் பணிவுடன் கூறினார்.
தீவிரமாக ஸ்ரீ வித்யையை உபாசனை செய்ததால் முனிவரின் குண்டலினி சக்தி பிரமிக்கத் தக்கதாயிருந்தது. அது அவர் உடலை வாட்டி வதைத்தது. எப்போதும் எறும்பு கடிப்பது போன்ற ஓர் எரிச்சல் இருந்து கொண்டேயிருக்கும். அவ்வப்போது தலையில் தாங்க முடியாத கொதிப்பும் ஏற்படும். மண்டையே பிளந்து விடுவது போல் பலமான தலையிடி வரும். அப்போதெல்லம அவர் படும் வேதனையை விவரிக்கவே முடியாது.
ஒரு நாள் முனிவர் மண்டைக் கொதிப்பு தாங்க முடியாமல் பகவானிடம் ஓடினார். “சாஸ்திரிகளே, உங்களுக்கு ஒரு ஆபத்தும் வராது, கவலைப்பட வேண்டாம்” என்று கூறிய பகவான், “கணபதி முனிவரின் தலையை தமது கரத்தால் தடவிக் கொடுத்தார். உடனே கொதிப்பு அடங்கி விட்டது. அன்று மாமரக் குகையில் வந்து தியானத்தில் அமர்ந்த முனிவரின் நடு மண்டையிலிருந்து ஒரு திவ்விய ஜோதி வெளிச் சென்றதை சில சீடர்கள் கண்டு அதிசயித்தார்கள். அன்றையிலிருந்து முனிவருக்கு மண்டையைப் பிளப்பது போன்ர உணர்வு ஏற்படவே இல்லை.
ஆசிரமத்திலிருந்த பிரம்மசாரி விசுவநாத சுவாமி, கணபதி முனிவரிடம் வேத, உபநிடதங்களை ஆராய்வதில் விருப்பம் கொள்ள, அவரை பகவான், கணபதி முனிவரிடம் சென்று பாடம் கேட்கும்படி அனுப்பி வைத்தார். மறுநாள் மாமரக் குகையில் முனிவரைக் காணச் சென்றார் விசுவநாத சுவாமி. முனிவர் அவரிய இன்முகத்துடன் வரவேற்றார். அவர் எதிரில் அமர்ந்ததுமே தன்னுள் ஒரு தெய்வீக அமைதி சூழ்ந்ததை உணர்ந்தார் விசுநாத சுவாமி. பின்னர் தைத்ரேய உபநிடதத்தில் திரிசங்குவின் அனுபவங்களை விவரிக்கும் பகுதியை தனக்கு விளக்கிக் கூறும்படி அவர் முனிவரைக் கேட்டுக் கொண்டார். கணபதி முனிவரும், தெளிவாகவும், விளக்கமாகவும் எடுத்து கூறியதைக் கேட்ட விசுவநாத சுவாமி அவரை மாமுனிவராகவே மதித்தார். அன்று முதல் அவர் காலடியில் அமர்ந்து சந்தெகங்களையெல்லாம் தீர்த்துக் கொள்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டார்.
ஒரு நாள் குண்டலினி சக்தியைப் பற்றி விசுவநாத சுவாமி கணபதி முனிவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது முனிவர் அதைப் பற்றி தமது அனுபவங்கலைக் கூறி விட்டு, அதன் சக்தியையும் அவருக்கு உணர்த்திக் காட்டினார். விசுவநாத சுவாமியை தம் தலைக்கு மேல் கையை உயர்த்திப் பிடிக்கச் சொன்னார் முனிவர்.சற்றைக்கெல்லாம் அவரது உச்சி மண்டையிலிருந்து நீராவியைப் போல் வெப்பம் நிறைந்த சக்தி புறப்பட்டு தம் உள்ளங்கையைத் தாக்கியதை விசுவநாத சுவாமி உணர்ந்தாராம்.
மின் சக்திக்கு அதி தேவதை இந்திரன். அதற்கு அவனே தலைவன். கணபதி முனிவர் “உலக்ம மின் சக்தியினால் இயங்குகிறது” என்ற “இந்திர மத”த்தில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார். நம் பண்டைய மகரிஷிகள் தங்களுக்குள் மின் அக்தியைப் பெருக்கியே அநேக காரியங்களைச் சாதித்திருக்கின்றனர். காவிய கண்ட கணபதி முனிவரும் அத்தகைய அதிசய சக்தியைப் பெற்றிருந்தார். அவரைத் தரிசிக்கச் சென்ற பலர் தங்கள் உடலில் மின் அதிர்ச்சி ஏற்படுவதை உணர்ந்திருக்கிறார்கள்.
ஒரு சமயம் திருவண்ணாமலை ஜில்லா முன்சீப் கோர்ட்டில் சரஸ்வதி பூஜையில் கலந்து கொள்ள கணபதி முனிவர் அழைக்கப்பட்டிருந்தார். அப்போது தன் இந்திர மதக் கொள்கையை விளக்கியதோடு, அதன் சக்தி எத்தகையது என்பதையும் அங்கிருந்தவர்களுக்கு நிரூபணம் செய்து காட்டினார் அவர்.
ஒருவரையொருவர் கை கோர்த்துக் கொண்டு பத்து நபர்களை வரிசையாக நிற்க வைத்தார். பிரார்த்தனை செய்து விட்டு, முதல் நபரைத் தொட்டார். உடனே அந்தப் பத்து பெருக்கும் மின் அதிர்ச்சி ஏற்பட்டது.
வெத கால ரிஷிகலும், முனிவர்களும் சந்நியாசத்தை ஏற்றுக் கொள்ல வில்லையாதலால் தாமும் அம்மகரிஷிகளைப் போல் தர்ம பத்தினியுடன் இல்லறம் நடத்துவதாக அவர் அடிக்கடி கூறுவதுண்டு. திருவண்ணாமலையில், மனைவி விசாலாட்சி அம்மையாருடனும், மகன் மகாதேவனுடனும், மகள் வஜ்ராம்பாளுடனும் அவர் குடித்தனம் நடத்தி வந்தார். குடும்பத்துடன் இருந்தாலும், உருவத்திலும், நடையுடை பாவனைகளிலும், ஆத்ம சக்தியிலும் மாமுனிவர்களையே நினைவு படுத்தி வந்தார் அவர். பாதக் குறடு இல்லாமல் நடக்க மாட்டார், மான் தோல் இல்லாமல் உட்கார மாட்டார்.
கடந்த நூற்றாண்டில் பாரதம் பெற்றெடுத்த தவப் புதல்வர்களில் கணபதி முனிவரும் ஒருவர். நாட்டுப் பற்று மிக்க அந்த மகான், கதராடையைத்தான் அணிவார். பாரதம் எல்லாத் துறைகளிலும் சிறந்தோங்க வெண்டும் என்று கனவு கண்டார் அவர். காலத்திற்கொவ்வாத பழக்க வழக்கங்களை களைந்தெறிந்து விட்டு, வெத நெறியையும், நம் புராதன கலாசார நெறிகளையும் தழைக்கச் செய்ய வேண்டும் என்பது தான் அவருடைய எண்ணமாக இருந்து வந்தது.
காவிய கண்ட கணபதி முனிவருக்கு வேதம்தான் பிரமாணம். வெதத்தில் தீண்டாமையைப் பற்றிக் கூறவில்லை என்று அவர் அடிக்கடி வாதிப்பார். பெல்காமில் நடந்த காங்கிரசுக்கு திருவண்ணாமலைப் பிரதிநிதிகளில் ஒருவராகச் சென்ர அவர், தீண்டாமையை எதிர்த்து சமஸ்கிருதத்தில் ஓர் அரிய சொற்பொழிவை நிகழ்த்தினார். அவருடைய வாதத் திறமையையும், மன உறுதியையும் கண்டு மகாத்மா காந்தி இவரைக் கட்டித் தழுவிக் கொண்டாராம்.
நம்முடைய பண்டைய பழக்க வழக்கங்களைப் பற்றி அரிய ஆராச்சிகள் செய்து வைத்திருந்த அவர், அத்தனைக்கும் விஞ்ஞான முறையில் விளக்கம் தருவாராம்.
நாட்டின் மேம்பாட்டைப் பற்றியே எந்நேரமும் எண்ணிக் கொண்டிருந்த முனிவர், அந்த எண்ணம் ஈடேறும் பொருட்டு தீவிரமாக மந்திர ஜபத்தை மேற்கொண்டார். ஒவ்வொருவரும் தம் ஆத்ம சக்தியைப் பலப்படுத்திக் கொண்டாலன்றி பாரத சமுதாயத்தை மாற்றியமைக்கும் வலிமையைப் பெற முடியாது என்று உணர்ந்து, அதற்கென பல சீடர்களைச் சேர்த்துக் கொண்டு, சங்கம் அமைத்து ஜபதபங்களில் ஈடுபடும்படி பணித்தார் அவர்.
கணபதி முனிவரின் தீராத வேட்கையை பகவான் அறிவார். உள்ளத்தில் உறுதியும், மனத்தில் சாந்தியும் ஏற்படும் பொருட்டு அவ்வப்போது அவருக்கு நல்லுபதேசங்கள் செய்து வந்தார். “நான் யார்?” என்ற ஆத்ம தியானத்தில் ஆழ்ந்து, எல்லா பாரங்களையும் ஈசுவரனிடம் விட்டு விடும்படி அவருக்கு அறிவுரை கூறினார். “ஈசுவரன் எல்லா பாரங்களையும் தாங்குவான். பிறகு நாம் பாரமின்றி நிம்மதியாக இருக்கலாம் அவன், அவன் காரியத்தைச் செய்வான்” என்று ஒரு சமயம் சந்தேகத்துடன் வந்த முனிவருக்கு அருள் மொழி கூறி அனுப்பினார் பகவான்.
காவிய கண்ட கணபதி முனிவர் நினைத்த போது, சுலோகங்கள் இயற்றும் திறன் படைத்தவர். பிறருடன் பேசும் போதும், சொற்பொழிவுகள் ஆற்றும் போதும் அக்கணமே சொந்தமாக சுலோகங்கள் இயற்றி எல்லோரையும் பிரமிக்க வைப்பாராம்.
ரமண கீதையை அவர் எழுதுவதற்கு முன்பே, தமது உபந்நியாசங்களின் போது சில சுலோகங்களைக் கூறி, அவை அதில் வருவதாகச் சொல்லியிருக்கிறார். “இது ரமண கீதையி, மூன்றாம் அத்தியாயத்தில் ஐந்தாவது சுலோகம்” என்று தயங்காமல் கூறி விடுவாராம். இப்படிப் பல சுலோகங்கலை முதலில் சொல்லிய பின்னரே ரமண கீதையை எழுதி முடித்தார் அவர்.
இந்த அதிசயத்தை பற்றி பகவான் ஒரு சமயம் பக்தர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, ஒருவர், “அந்தக் கூட்டத்தில் யாராவது ரமண கீதை எங்கேயிருக்கிறது?” என்று கேட்டிருந்தால், “நயனா” என்ன செய்திருப்பார்? என்று கேட்டார். “அவரியக் கேட்பதற்கு யாருக்கு தைரியம் இருக்கு?” என்று திருப்பிக் கேட்ட பகவான், மற்றொரு விஷயத்தையும் கூறினார்.
ரமண கீதை வெளியான பிறகு அவர் பல சமயங்களில் அதில் இல்லாத சுலோகங்கலை உதாரணமாக எடுத்துக் காட்டுவார். யாராவது அந்த சுலோகங்கள் ரமண கீதையில் இல்லையே என்று சுட்டிக் காட்டினா, “இது ரமண கீதையில் இருக்கிறது” என்பார்! அப்படியொரு நூல் எழுதுவதாக அவர் திட்டமிட்டிருந்தது என்னவோ உண்மை. அது நிறைவேறாமலே போய் விட்டது.