அன்னிய வந்த சில மாதங்களுக்குள் ரமணர், மேலேயுள்ள ஸ்கந்தாசிரமத்திற்கு இடம் மாறி விட்டார். இன்றுள்ள ரமணாசிரமத்திற்கு அடி கோலியது ஸ்கந்தாசிரமம் தான்.
அங்கிருந்த ஆறு ஆண்டுகளும் அன்னைக்கு ஞான பாடம் நடந்து கொண்டிருந்தது. அன்னைக்கு ஞாஅ பாடம் நடந்து கொண்டிருந்தது. விரக்தி ஏற்பட்ட நிலையிலும் அவருக்கு அஞ்ஞானம் முழுமையாக மறையவில்லை. பாசத்திரை சத்திய தரிசனத்திற்குத் தடையாக நின்றது. உலகிற்கெல்லாம் ஞான குருவாக விளங்கியவரை இன்னும் “தன் மகன்” என்றே நினைத்தார். தன்னிடம் தனி அன்போடு மகன் பழக வேண்டும் என்று எதிர்பார்த்தார்.
தன் அன்னையின் மனத்திலிருந்து “சொந்த பந்த” எண்ணங்களை அகற்றுவதில் முனைந்திருந்தார் ரமணர். அவர் தாயிரம் நெராகப் பெசுவது கிடையாது. எச்சம்மாள் போன்ரவர்களுடன் மட்டும் தான் பேசுவார். இது அன்னையை வாட்டியது. ஒரு நாள் ஆதங்கம் தாங்க முடியாமல் மகனிடம் இது பற்றி கேட்டும் விட்டார். அதற்கு ரமணர், “எல்லோரும் எனக்குத் தாயார் தான். நீ மட்டுமல்ல” என்று பதில் கூறினார். அன்னையை ஆன்மீகத் துறையில் படிப்படியாக உயர்த்திக் கொண்டிருந்தார் அந்த உத்தம மைந்தன்.
இள வயது முதற் கொண்டே தெய்வ பக்தியில் திளைத்திருந்த அழகம்மாளுக்கு சிருக சிறுக வெதாந்த மனப்பான்மையும் ஏற்பட்டது. அதற்கேற்ப, அவரது உள்ளம் மாறியது. உடையும் மாறியது. அவரும் காஷாயம் தரித்துக் கொண்டார். அந்தக் குடும்பத்திற்கும் காவியுடைக்கும் மிக நெருங்கிய உறவு இருந்தது.
சத்தியப் பொருளைத் தரிசித்து விட்ட, ஆத்ம ஞானிகள் கருணைக் கடலாகக் காட்சி தருவார்கள். தங்களை நாடி வரும் எல்லா ஜீவங்களிடமும் வேற்றுமையின்றி மாசற்ற அன்போடு பழகுவார்கள். “அனைவருக்கும் ஞானம் வர வெண்டும். அதனால் துயரம் தீர்ந்த பெருவாழ்வு வாழ வேண்டும்” என்ற பேரன்போடு ஆசி வழங்குவார்கள். உபதெச மொழிகள் கூறீ நம்மை உயர்த்துவார்கள். கண்ணால் பார்த்தெ கரையேற்றுவார்கள். கரத்தால் தீண்டி நற்கதியருளுவார்கள்.
பாசத்தோடும் பெற்று வளர்த்தவளின் உரிமையோடும் தம்மைத் தேடி வந்த அழகம்மாளின் மீது ஸ்ரீ ரமணர் எல்லையற்ற கருணையைப் பொழிந்தார். தாயின் அகஞ்ஞானத்தைக் களைவதில் தீவிரமாக ஈடுபட்டார். அருள் விழியாலேயே, மௌன மொழியாலே மேலான நிலைக்கு அழைத்துச் சென்றார்.
குமரக் கடவுளும் தந்தைக்குத்தான் ஞான உபதெசம் செய்தார். அன்னைக்கே உபதேசம் செய்யும் உரிமை தெய்வத்திற்கெ இல்லாத போது, மானிடப் பிரவியெடுத்தவர்களுக்கு அந்த உரிமை இருக்க முடியுமா? அதனால் தான் ரமணரும் தம் தாய்க்கு நேரடியாக உபதேசம் செய்ய வில்லை போலும்!
ஆசிரமத்திற்கு வருபவர்களிடம் ரமணர் பேசுவதை அழகம்மை உன்னிப்பாக கவனிப்பார். சஞ்சலத்தோடும், சந்தெகங்களோடும் தம்மிடம் வருபவர்களுக்கு, உலக பந்தங்களிலிருந்து விடுபட்டு, தியானத்தாலும், தியாகத்தாலும் ஞான நிலை எய்தும் வழி மறைகளை மகன் எடுத்துக் கூறும் போது, எல்லா அறிவுரைகளும் தனக்காகத்தான் என்று அந்தத் தாய் நினைப்பாள். உள்ளத்தில் எழும் கேள்விகளுக்குக்கெல்லாம் உறுதியான விடை கிடைப்பதை உணர்வாள்.
தன் மகனை வீட்டுக்கு அழைத்துப் போகலாம் என்ற சுயநல எண்ணத்தோடு வந்த அழகம்மாளுக்கு, ஆசிரமத்திலுள்ள அனைவருமெ தன் பிள்ளைகள் என்ர எண்ணம் ஏற்படும்படி செய்தார் ரமணர். “நீ மட்டும் எனக்குத் தாய் இல்லை. நான் மட்டும் உனக்கு மகன் இல்லை” என்று தாய்க்கு உணர்த்தியதன் மூலம் மாபெரும் தத்துவத்தையே விளக்கி விட்டார்.
ஞானச் செல்வனின் அமிர்த மொழிகளைக் கேட்டு, பற்றும், பாசமும் மெள்ள மெள்ள விலகி, “நான், எனது” என்ற அகங்காரம் நீங்கி, “தாய், மகன்” என்ற மாயத்திரை அகன்று, தோத்திரப் பாடல்களில் மூழ்கி, அழகம்மாள் எந்நெரமும் ஆத்ம தியானத்தில் ஈடுபட்டிருந்தார். தவச் செம்மலை ஈன்றெடுத்த தெய்வத்தாய், தன்னை மறந்து தவமியற்றிக் கொண்டிருந்தார்.
தன்னில் ஆழ்ந்து, தன்னலமற்ற தொண்டு புரிவதும் ஞானப் பெரு வாழ்வுக்கு ஒரு சாதனமெ. எனவேதான், ஆசிரமத்திலிருந்தவர்களுக்கும், தரிசனத்திற்கு வருபவர்களுக்கும், உணவளிக்கும் அந்தத் தொண்டாற்றி வந்தார் அழகம்மை. அன்புப் பணி, அவருடைய ஆன்மீக மலர்ச்சிக்குப் பெருந்துணையாய் நின்றது.
உள்ளம் உறுதியாய் இருந்த போதிலும், மூப்பின் அயர்ச்சியும், உடலின் தளர்ச்சியும், அவரது அன்றாட அலுவல்களில் நன்றாகத் தெரியத் தொடங்கியது. தென்பு குறைந்து. அசதி மேலிட்டது. உடல் நலம் குன்றியது. தன் இருதிக் காலம் நெருங்கி விட்டது என்பதை அன்னை ஒருவாறு உணரத் தொடங்கினார். பற்று அற்று விட்டதால் மரணத்தைக் குறித்து அவர் சிறிதும் சலனப்படவில்லை. “நம் உடல் தான் மடிகிறது. உண்மைப்பொருளுக்கு அழிவேயில்லை” என்று உணர்ந்தவர்களிடம் காலன் தோல்வியுற்று ஓட வேண்டியவந்தானே?
அன்னை இறுதிக் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிராள் என்பது ரமணருக்குத் தெரிந்து விட்டது. சில மாதங்களாகவே தாய் அசதியாய் சுருண்டு சுருண்டு படுப்பதையும், ஆயாசம் தாங்காமல் பெருமூச்சு விடுவதையும் அவர் கவனித்து வந்தார். அவ்வப்போது தாயை அன்புடன் விசாரிப்பார். ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி கூறுவார். அருகில் அமர்ந்து பணிவிடைகள் செய்வார். தம் உடலைப் பற்றி பகவான் கவலைப்பதேயில்லை. ஆனால், பிறருக்கு உடல் நலம் சரியில்லையென்றால் அவரால் தாங்கவே முடியாது.
அழகம்மாளுக்கு மருத்துவ சிகிச்சியளிக்கப்பட்டது. அவையெல்லாம் தார்காலிக நிவாரணமாக இருந்ததெ தவிர, பிணியைக் குணப்படுத்தியதாகத் தெரியவில்லை. அன்னையின் உடல் நிலை வர வர மோசமாகிக் கொண்டே வந்தது. தெய்வ மகனின் கவனிப்பு அதிகமாகிக் கொண்டெ போயிர்று. இரவெல்லாம் கண் விழித்திருப்பார். “ஏம்மா முணகுகிராய்? வலிக்கிறதா? எங்கேம்மா வலிக்கிறது?’ என்று பரிவோடு விசாரித்துத் தடவிக் கொடுப்பார்.
1922-ம் ஆண்டு மே மாதம் 10-ம் தேதி, ஸ்கந்தாசிரமத்தில் எல்லோரும் அன்னையின் உடல் நிலையைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். “இன்று தாண்டுவது கஷ்டம்தான்” என்று ஒருவருக்கொருவர் ரகசியமாகச் சொல்லிக் கொண்டார்கள். இனி மருந்துகளால் பயனில்லை. மனித முயற்சியும் முடிவடைந்து விட்டது. தற்போது இயற்கையின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தால் அன்னை.
ரமண பகவான் பொறுமையே உருவாக அருகில் அமர்ந்திருந்தார். கர்ம வினையில் முழு நம்பிக்கையிருந்தும், பறந்து ஸ்லெலும் உயிரைப் பிடித்து வைக்க முடியாது என்று தெரிந்தும், அன்னைக்கு அருந்தொண்டு புரிந்து கொண்டிருந்தார். “அருணாசலா” “அருணாசலா” என்று வாய் முணு முணுக்க, பெற்றவல் பெரமைதி கொண்டு அடங்குவதை அண்ணல் அருள் நோக்கோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
காலன் மிக நெருங்கி விட்டான்.
ஆசிரமத்தினர் மீது துயர மேகம் சூழ்ந்திருந்தது. செய்து வைத்த சமயலை அன்று ஒருவரும் சாப்பிட வில்லை. பகவான் நீராகாரம் கூட உட்கொள்ள வில்லை.
அன்னைக்கு சுவாசம் கண்டு விட்டது. அடங்கப் போகும் பிராண சக்தி மெள்ள மெள்ள ஒடுங்கிக் கொண்டிருந்தது. இறுதி மூச்சு மார்புக் கூட்டினுள் துடித்துக் கொண்டிருந்தது.
சுற்றிலும் நின்றிருந்த சீடர்கள், ராமநாம தாரக மந்திரத்தை உரக்க ஜபித்துக் கொண்டிருந்தனர். ஓரிருவர் வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். தேவார திருப்புகழ் பஜனை ஒரு பூறம், தாயுமானவர், பட்டினத்தார் பாடல்களை அன்பர் ஒருவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.
அருணாசலத்திர்குப் பின்னால் அருணனும் மறைந்து விட்டான்.
அருணாசல ஜோதியோடு அழகம்மாளின் ஜீவன் கலந்து கொண்டிருந்தது.
அன்னையின் புனித ஜீவனை முக்திபுரிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார் ரமணர். தெய்வங்களும், தேவர்களும் ஆசி வழங்க அங்கு அருவமாக எழுந்தருளியிருந்தார்கள்.
மணி எட்டு அடிக்க ஐந்து நிமிடங்கள்.
பகவானின் வலக்கரம் அன்னையின் இதயக்கமலத்தில் இருந்தது. இடக்கரம் நெற்றியில் பதிந்திருந்தது. திருக்கரங்களிலிருந்து அருட்சக்தி பாய, அன்னைக்கு “ஹஸ்த தீட்சை” அளித்துக் கொண்டிருந்தார் கருணை வள்ளல். ஜீவாத்மாவை பரமாத்மாவுடன் இணைத்துக் கொண்டிருந்தார். உயிரிழந்தவள் உயர் நிலையடைய உதவிக் கொண்டிருந்தார். மாமுனிவருக்கும் தாயை மிஞ்சிய தெய்வமில்லை என்று உலகிற்கு உணர்த்திக் கொண்டிருந்தார் அந்த உத்தம மைந்தன்.
மணி எட்டு. ஜோதியோடு ஜீவன் கலந்து, உள்ளுக்குள்ளேயெ ஒடுங்கி விட்டது.
அன்னை அழகம்மால் புனிதனைப் பெற்றதனால் புண்ணியவதியானாள். இருதிக் காலத்தில், ஜீவன் முக்தரின் அருட்கரம் தீண்டப்பட்டதால், புண்ணிய லோகம் பெற்றாள். மா தவத்தின் பயனாய் மகனையே குருவாகப் பெற்ற அந்த மாதரசி, மரணத்தை வென்று, மாத்ருபூதேசுவரர் ஆனார்.