அழகம்மாளின் துயரத்திற்கு முடிவு இருப்பதாக தெரிய வில்லை. திருவண்ணாமலையிலிருந்து திரும்பிய ஓராண்டுக்கெல்லாம் நாகசாமி இறந்து விட்டார். சம்பாதித்துத் தன்னைக் காப்பாற்ற வேண்டிய மூத்த பிள்ளை போய் சேர்ந்து விட்டான். அன்னையின் வேதனைக்கு அளவேயில்லை.
இனி அவளுக்கு கடைசிப் பிள்ளை நாகசுந்தரம்தான் கதி. கோயிலில் கணக்குப் பிள்ளை உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தார். அண்ணை பார்க்க வேண்டும் என்று ஒரு நால் அவருக்கு ஆவல் பிறந்தது உடனே திருவண்ணாமலைக்குப் புறப்பட்டு வந்தார். சகோதரரைக் கண்டு மனம் கலங்கினார். கண்ணீர் பொங்க அவரைக் கட்டித் தழுவிக் கொண்டார். அந்நெரத்திலும் பால ரமணர் உணர்ச்சி வஸ்பபடவில்லை.
அப்போது பால ரமணர் பவழக் குன்ரை விட்டு அருணாசலத்தின் குகையொன்றில் வாசம் செய்து கொண்டிருந்தார். அதற்கு சத்குரு சுவாமி குகை என்று பெயர். விரூபாட்ச தேவர் குகையிலிருந்து அங்கு வந்திருந்தார். விரூபாட்ச குகையில், ரமணரைக் காண வருகிறவர்களிடமிருந்து அதன் நிர்வாகிகள் பணம் வசூல் செய்தார்கள். தன்னைக் கருவியாக்கிக் கொண்டு பணம் சம்பாதிப்பதை இளம் சுவாமிகள் வெறுக்கவே, அங்கிருந்து புறப்பட்டு இந்தக் குகைக்கு வந்தார். மலர்த் தேனை நாடி வரும் வண்டுகள் போல் அங்கும் பக்தர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.
தம்பி நாகசுந்தரம், அண்ணனோடு தங்கி சேவை செய்ய வேண்டும் என்று விரும்பினார். தம் பிருப்பத்தை அண்ணனிடம் தெரிவித்தார். அவர் “கூடாது?” என்று தலையை அசைத்து விட்டார். அண்ணன் அபிப்ராயத்திற்குத் தலை வண்ணகி விட்டு, தம்பியும் ஊர் திரும்பி விட்டார்.
பின்னர், அழகம்மாளும், இதர உறவினர்களும் ஓரிரு முறை திருவண்ணாமலைக்கு வந்து போனார்கள். ஒரு சமயம் காசி யாத்திரை சென்ற போது, மகனை தரிசித்து விட்டுப் போனார். 1914-ம் வருடம் வேங்கடரமண சுவாமியை தரிசிக்க திருப்பதி சென்று திரும்பிய போது, திருவண்ணாமலையில் இறங்கி, விரூபாட்ச குகையில் இருந்த பால ரமணருடன் சில நாட்கள் தங்கினார். அப்போது அழகம்மாளுக்கு டைபாயிடு காய்ச்சல் கண்டது. அன்னையின் உடல்நிலை கண்டு அண்ணல் வேதனைப்பட்டார். பெற்ற தாயைப் பொறுமையுடனும் அக்கறையுடனும் பேணிக் காதார்.
ஒரு சமயம் தாயின் உடல்நிலை மோசமாகியது. நிலைமை கவலைக்கிடமாகி விட்டது. அத்தருணத்தில் தெய்வ மகன், அப்பன் அருணாசலேசனைக் குரித்துப் பிரார்த்தித்தார். அது தீந்தமிழ்ப் பாக்களாக மலர்ந்தது.
- அலையா வருபிறவி யத்தனையு மாற்ற மலையா யெழுந்த மருந்தெ –
தலைவாநின்றாள் கதியாய் வாழுமென் றாய்தாப மாற்றியேயானவதுவு முங்கடனே யாம்.
- காலகா லாவுன் கமல பதஞ்சார்ந்த பாலனெனையீன்ரால் பாலந்தக்
காலன்றான் வாரா வகையுன் கால் வாரிசமெ காட்டுவா யாராயிற் காலனுமே யார்?
- ஞானாங்கி யாயோங்கு நல்லருண வோங்கலே!
ஞானங்கி யாலன்னை நல்லுடலை – ஞானாங்க மாகச் செய்
துன்பத்தி லைக்கியமாக் கிக் கொள்வாய், சாகத் தீமூட்டுவதேன் காற்று
- மாயா மயக்கமதை மாற றருண மாமலையென் றாயார் மயக்ககற்றத்
தாமதமென் – றாயாகித் தன்னையடைன் தார் வினையின்
றாக்கறுத்தாள் வருலகி லுன்னையாலா லுண்டோ வுரை!
ஞானமகனின் வேண்டுகோலுக்கு ஞானத் தந்தை செவி சாய்த்தார். அன்னையின் உடல்நிலை தேறியது. மகனிடம் விடைபெற்றுக் கொண்டு ஊருக்குத் திரும்பி விட்டார்.
பாசத்துடிப்புடன் மகனை நாடிப் போனத் தாயை அருணாசல ஞானமலை தன் வயப்படுத்திக் கொண்டு விட்டது. மகனை அழைத்துக் கொண்ட தந்தை அன்னையையும் அழைத்துக் கொள்ள திட்ட்டம் வகுத்து விட்டார். அதர்கான சூழ்நிலையும் விரைவில் உருவாகியது. அழகம்மாளின் குடும்பத்திற்குப் பெரும் ஆதரவாக இருந்த நெல்லையப்பையரும் இறவனடி சேர்ந்தார். அதையடுத்து, நாகசுந்தரத்தின் இளம் மனைவியும் போய்ச் சேர்ந்து விட்டாள். மரணம் அடுத்தடுத்து கொடுத்த அடி, அன்னையின் விரக்திக்கு வித்தூன்றியது. அது வைராக்கியச் செடியாக வளரத் தொடங்கியது.
வாழ்க்கையில் இனி அழகம்மாளுக்கு என்ன இருக்கிறது? இறுதி நாட்களை அருள் மகனின் சேவையில் கழிக்க நினைத்தார். திருவண்ணாமலைக்குப் பயணமானார். எச்சம்மாள் என்ற லட்சுமி அம்மாலுடன் தங்கி, விரூபாட்ச குகையில் இருந்த மகனை அடிக்கடி தரிசித்து வந்தார். அன்னை மீண்டும் வந்த செய்தி பக்தர்களுக்கு அச்சத்தை அளித்தது. உரவு ஒட்டிக் கொண்டு விடுமோ என்று பயந்து, உத்தம குரு வேறு எங்காவது சென்று விட்டால்…..?
சேஷய்யா என்ற பக்தர் இதைப் பற்றி அழகம்மாளிடம் மனம் விட்டுப் பேசினார். சொந்த மகனிடமிருந்து தன்னைப் பிரிக்க நினைக்கும் விதியை நினைத்து மனம் குமுறினார் அன்னை. அருணாசலேசன் விரைவிலேயே விதியைத் தகர்த்தெறிந்தார். இறுதியில் அன்னையின் ஆசை நிறைவேறியது. மகனிடம் போய்த் தங்கியவர், விரூபாட்ச குகையிலிருந்த ஆசிரமத்தோடு இணைந்து விட்டார்.
தாய்க்கு எல்லா குழந்தைகள் மீதும் அன்பும் பாசமும் இருப்பது இயற்கைதானே! தன்னந்தனியாய் தவித்துக் கொண்டிருந்த நாகசுந்தரத்திற்கும் ஆல்விட்டு அனுப்பி தன்னிடம் வரவழைத்துக் கொண்டார். எந்தக் குடும்பத்தை விட்டு வேங்கடராமன் பிரிந்து வந்தாரோ, அந்தக் குடும்பம் அவரைத் தேடி வந்து விட்டது. ஆனால், நிலைமை முற்றிலும் தலை கீழாக மாறிவிட்ட நிலையில் தான் இந்தச் சேர்க்கை ஏற்பட்டது. எல்லாமே ஈசுவரனின் லீலைகள்தானே!
நாகசுந்தரம் அண்ணைன் பக்தர்களில் ஒருவரானார். நாள்டைவில் காஷாயம் ஏற்றுக் கொண்டு நிரஞ்சனானந்த சுவாமிகளானார்.
அன்னைக்கு ஆசிரமத்தில் வேலை சரியாக இருந்தது. தன் பிள்ளைகளுக்கும், தனக்கும், அங்கு வரும் அன்பர்களுக்கும் அவர்தான் சமையல் செய்தார். ரமணாசிரமத்தில் இன்றும் நடந்து கொண்டிருக்கும் அன்ன வேள்வி, அன்னை அழகம்மால் எழுப்பிய அக்னியேயாகும்.