சகோதரரின் இறுதிச் சடங்கள் முடிந்ததும் நெல்லையப்பர்ர் நண்பர் ஒருவருடன் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டுப் போனார்.
அவர்கள் இருவரும் வந்த போது, பால ரமணர் மாந்தோப்பில் இருந்தார். சொந்தக்காரரின் அனுமதியின்றி ஒருவரும் உள்ளெ நுழைய முடியாது என்று அறிந்த நெல்லையப்பையர் வெங்கடராம நாயக்கரிடம் தம் உறவைக் குறி, பாலயோகியப் பார்த்துதான் ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். ஒரு துண்டு காகிதத்தை எடுத்து “மானாமதுரை வக்கீல் நெல்லையப்பையர் தரிசனம் செய்ய விரும்புகிறார்” என்று எழுதி, நாயக்கரிடம் கொடுத்து இதைக் கொண்டு போய் அவரிடம் காட்டுங்கல், அவர் வரச் சொன்னால், உள்ளே விடுங்கள்” என்று கூறினார். அந்தச் சீட்டை எடுத்துக் கொண்டு போய் பால ரமணரிடம் மரியாதையுடன் கொடுத்தார் நாயக்கர்.
அந்தச் சீட்டை வாங்கிப் பார்த்தார் பிராம்மண சுவாமி என்னும் பால ரமணர். அது ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ் காகிதம். அதில் ஏதோ எழுதியிருந்தது. அது தமையனார் நாகசாமியின் கையெழுத்து தான், சந்தெகமில்லை. “நாகசாமி ரிகிஸ்ட்ரார் ஆபீசில் வேலை செய்கிரான் போலிருக்கிறது” என்று நினைத்துக் கொண்டார். பின்னர், சிறிய தந்தையின் கையெழுத்தைப் பார்த்தார். அவரை உள்ளே அனுமதிக்கும்படி கூறினார்.
உள்ளே நுழைந்ததும், “வேங்கடராமன்” இருந்த கோலத்தைக் கண்டு நெல்லையப்பையருக்கு கண்கள் கலங்கி விட்டன. வாடிய வயிறு, எலும்புகல் தெரியும் அங்கங்கள், சடை விழுந்த முடி, நீண்டு சுருண்ட நகங்கள், தன் சகோதரனின் பிள்ளை ஞானநிலை அடைந்து விட்டானே என்ற பூரிப்பு ஒரு புரம்; அநாதை மாதிரி கிடக்கிறானே என்ற அஞ்ஞானத் துயரம் ஒரு புறம். “சுவாமி”களிடம் என்ன பேசுவது என்றே புரியவில்லை அவருக்கு. வேங்கடராம நாயக்கரியயும், பழனிசுவாமியையும் பார்த்துப் பேசினார். “எங்கள் குடும்பத்தில் பிறந்த ஒருவர் சந்நியாசியாகி யோக நிலையில் இருப்பதைக் குறித்து எங்களுக்கு மகிழ்ச்சிதான். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் வசதிகளோடு இருக்கலாமெ என்பதுதான் எங்கள் ஆசை. இவர் துறவு வாழ்க்கையை விட வேண்டாம். நான் வசிக்கும் மானாமதுரையில் ஒரு மகானின் சமாதிக் கோயில் இருக்கிறது. அங்கு வந்து தாராளமாகத் தங்கலாம். நாங்கள் எல்லா சௌகரியங்களையும் கவனித்துக் கொள்கிறோம்.”
நெல்லையப்பையர் ஒரு கண்ணால் “வேங்கடராமனை” பார்த்துக் கொண்டேதான் பேசினார். ஆனால், அதில் ஒரு வார்த்தையாவது பால ரமணரின் இதயத்தைத் தொட்டதாகத் தெரியவில்லை. அவர் கற்சிலையைப் போல, ஒருவித முகபாவமுமின்றி அமர்ந்திருந்தார். கண்ணால் கூட தன் மனத்தில் இருந்ததைத் ட்தெரியப்படுத்தவில்லை. அவருடைய திட சித்தத்தையும், வைராக்கிய யோகத்தையும் புரிந்து கொண்ட நெல்லையப்பையர் வெற்று வழியில்லாமல் ஊர் திரும்ப வேண்டியதாயிற்று. அழகம்மாளிடம் நடந்ததையெல்லாம் சொன்னார். அவருக்கு மைத்துனரின் சாமர்த்தியத்தின் மீது நம்பிக்கையில்லை. தானே புறப்பட்டுச் சென்று, அன்புடன் அழைத்தால், மகன் தன்னுடன் புறப்பட்டு வந்து விடுவான் என்று நினைத்தார். மூத்த மகன் நாகசாமியை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலைக்குப் புறப்பட்டார். ரயிலில் போகும் போது அந்தத் தாயின் உள்ளத்தில் நம்பிக்கையொளி படர்ந்திருந்தது.
தனிமையை நாடி குருமூர்த்தத்தையடுத்துள்ள மாந்தோப்பிற்குள் புகுந்த பால ரமணருக்கு அங்கும் நிம்மதியில்லை. சிறிய தந்தை நெல்லையப்பையர் வந்து போனதிலிருந்து அங்கிருந்து ஓடி விட வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் வேரூன்றத் தொடங்கி விட்டது. தம் அருகில் பழனிசுவாமி கூட இருக்க வேண்டாம் என்று தோன்றியது. ஒரு நாள் அவரை அழைத்து, “நீங்க ஒரு திசையில் போய் பிச்சையெடுங்க, நான் வேறொரு திசையில் போய் பிச்சையெடுக்கிறேன். ரெண்டு பேரும் ஒண்ணாயிருந்தது போதும்” என்றார். பழனிசுவாமி ஏதோ சொல்வதற்கு முயன்றார். அதற்குள் பால ரமணர், ஒன்றுமே பெசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். வேறு வழியில்லாமல் வேறொரு திக்கில் நடையைக் கட்டினார்.
மாந்தோப்பை விட்டுக் கிளம்பிய பால ரமணர், ஐயன் குளத்தருகில் உள்ள அருணகிரிநாதர் ஆலயத்தில் போய் அமர்ந்து விட்டார். அன்றிரவே பழனிசுவாமி பகலில் பிச்சையெடுத்த சோற்றுடன் அங்கு வந்து சேர்ந்தார். குருவின் பாதங்களில் விழுந்தார். அவரது கண்ணீர், தரையை நனைத்தது. “சுவாமி, என்னை உதறித் தள்ளாதீர்கள். தங்களை விட்டால் எனக்கு வேறு கதியேது? தங்களது அருள் நோக்கைக் காணாது நான் வாழ முடியாது” என்று கதறித் தீர்த்து விட்டார். மௌன குருவும் இள நகை புரிந்து, தம்முடன் இருக்க அவருக்கு அனுமதி தந்தார். சரணாகதி அடைந்தவனை குருவும், தெய்வமும் என்றுமெ கை விட்டதில்லை!
சில வாரங்கள் அருணகிரிநாதர் ஆலயத்தில் தங்கிவிட்டு, மீண்டும் அண்ணாமலையார் ஆலயத்தில் குடியேறினார் பால ரமணர். அங்குள்ள கோபுரங்களில் தங்கி, சமாதி கூடினார், பூந்தோட்டத்திலும், அவ்வப்போது வந்து அமர்ந்து, தவமியற்றினார். அங்கும் நிம்மதி குலையவே, பவழகிரீசுவரர் உறையும் பழவக்குன்றிற்கு குடி பெயர்ந்தார். அன்று கௌதம முனிவர் தவம் புரிந்த குன்றில், குமரனாம் ரமணப் பெருந்தகை அருந்தவம் ஆற்றப் புகுந்தார்.
அன்பு மகன் இருக்குமிடம் அறிந்து அன்னை அழகம்மை, மூத்த மகன் நாகசாமியுடன் வந்த போது, பால ரமணர் பரட்டைத் தலையுடன், வாடிய வயிற்றோடு, கோவணாண்டியாக ஒரு பாறையில் படுத்திருந்தார். அதைக் கண்ட தாயின் வயிறு பற்றி எரிந்தது. துயரம் தாங்காது, தொண்டைக் குழியில் பேச்சு அடைத்துப் போக, பீறிட்ட கண்ணீருடன் கலக்கமுற்று நின்ரார் அழகம்மை! தம்பியின் “பரிதாப” நிலை கண்டு உள்ளம் குமைந்தார் நாகசாமி. அவர்களிருவரையும் பார்த்து விட்டு, ஒரு வித முக பாவமுமின்றி தன்னில் லயித்திருந்தார் மௌன குரு.
அழகம்மாள் மகனுடன் பேசினார். கெஞ்சினார். குழைந்தார். குமுறினார். குழந்தையைப் போல் தேம்பித் தேம்பி அழுதார். “அப்பா, என் கண்ணெ, செல்வமெ, உன்னை இந்தக் கோலத்தில் பார்க்கவா பத்து மாதம் சுமந்து பெற்றேன்? எனக்குக் கல் மனசுடா. இல்லாவிட்டால் உன்னை இரண்டு வருஷம் பிரிந்தும் நான் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பெனா? நீ கல் தரையில் படுத்திருக்கும் போது, நான் பாயில் படுப்பெனா? நீ பட்டினி கிடக்கும் போது நான் வயிறு புடைக்கத் தின்பெனா? இனிமெலும் என்னால் தன்னதனியாக இருக்க முடியாது. நீ என்னுடன் புறப்பட்டு வந்து விடு. நீ வராமல் நான் ஊர் திரும்பப் போவதில்லை” – உணர்ச்சி கொப்புளிக்க, அடிவ்யைர்ரிலிருந்து கதறினாள் அன்னை. அருள் மகன் அசைந்து கொடுக்க வில்லை. தவ மலை மீது, தாய்ப் பாசம் முட்டி மோதி, தோல்வியே கண்டது.
மூன்று நாட்கல் முயன்று பார்த்தாள் அன்னை. முற்றும் துறந்த முனிவனை பாச வலையில் சிக்க வைக்க முடியவில்லை. கருணையே வடிவமானவர், அன்புக்கு அடிமையானவர், மனத்தைக் கல்லாக்கிக் கொண்டார். உள்ளம் இளகவில்லை. கண் கலங்கவில்லை. அன்னைக்கு ஆறுதலாக மறுமொழி ஒன்றும் கூரவில்லை.
அருணாசலமாகவே அமர்ந்திருந்த அருமை மைந்தனை விட்டுப் பிரிய மனம் வரவில்லை தாய்க்கு.தன் வெண்டுகோளுக்கு செவி சாய்க்காத மக்ன, பிறர் பெச்சுக்கு இரங்கலாம் என்று நினைத்தார். அங்கிருந்தவர்களிடம் பரிதாபமாக முறையிட்டார்.
“நான் இந்தப் பிள்ளையைப் பெற்றவள். எத்தனை கதறியும் ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டேன் எங்கிறான். நீங்களாவது எனக்காக அவரிடம் பேசக்கூடாதா? மூன்று நாட்களாக நான் தூக்கமின்றி, அன்ன ஆகாரமின்றி, அழுது புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களெ, உங்கள் மனமும் கல்லா?” என்று உரிமையுடன் கடிந்து கொண்டார் அன்னை அழகம்மாள்.
அங்கிருந்தவர்களில் பச்சையப்பப் பிள்ளை பச்சையுள்ளம் படைத்தவர். தாயின் கண்ணீர் அவரிய உலுக்கி விட்டது. குருநாதரிடம் சென்றார். பாதங்களில் விழுந்தார். கண்ணீருக்கிடையெ விசும்பினார்.
“சுவாமி, உங்கள் வைரககியம் எங்களுக்குப் புரிகிறது! பெற்றத் தாய்க்குப் புரியுமா? நீங்கள் தாயோடு ஊருக்குத் திரும்பிப் போக வேண்டாம். உங்கள் மனத்தில் உள்ளதையாவது தெரிவிக்கக் கூடாதா? உங்கள் மீது உயிரை வைத்திருக்கும் இந்த அம்மாளுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தையாவது பேசக் கூடாதா”
இதைக் கேட்டு லெசாகப் புன்முறுவல் பூத்தார் பால ரமணர்.
அதன் பொருளைப் புரிந்து கொண்டார். பச்சையப்பப் பிள்ளை. தொடர்ந்து பேசினார்:
“சுவாமி, நீங்கள் இதற்காக தங்கள் மௌன விரதத்தைக் கலைக்க வேண்டாம். உங்கள் தாய்க்கு பதிலளிக்கும் வகையில் இரண்டு வரிகளாவது எழுதிக் காட்டுங்களேன்” என்று பேப்பரையும் பென்சிலையும் அவரிடம் கொடுத்தார்.
அதை வாங்கி தவப் புதல்வர் தெளிவாக எழுதினார்.
“அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பதென்றடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின், மௌனமாயிருக்கை நன்று.”
“முற்பிறவியின் நல்வினை தீவினையையொட்டி நம்மையெல்லாம் ஒரு சக்தி ஆட்டுவிக்கிறது. நாம் நடக்க வேண்டும் என்று நினைப்பது நடக்காது. நடக்கப் போவதை தடுத்து நிறுத்த ஒருவராலும் முடியாது. இது நிச்சயம். எனவே, மௌனமாயிருப்பதே நல்லது.”
மக்ன எளிதாகக் கூறி விட்டார். அவர் அடைந்த பக்குவ நிலையை, தாய் இன்னும் அடையவில்லையெ!மக்ன கூறிய சமாதானம் தாயின் உள்ளத்தைத் தொடவில்லை. இருப்பினும் அவர் மனத்தை மாற்ர முடியாது என்பது அந்தத் தாய்க்கு நன்றாகப் புரிந்து விட்டது. இனி அங்கிருப்பதில் பயனில்லை என்று உணர்ந்து, நாகசாமியை அழைத்துக் கொண்டு மானாமதுரைக்கே திரும்பி விட்டார்.