பக்தர்கள் கொண்டு வரும் உணவுப் பண்டங்கலையெல்லாம் ஒன்றாகக் கலந்து பகவானுக்கு ஒரு கவளம் கொடுத்து விட்டு, மீதியை சுற்றியிருப்பவர்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கும் பழக்கத்தை பழனிசுவாமிதான் தொடங்கினார். பால ரமணருடைய தவத்திற்கு ஓர் இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த பழனிசுவாமி, சில சமயங்களில் அவரை உள்ளே வைத்துப் பூட்டி விட்டுப் போய் விடுவார்.
குருமூர்த்தத்தைச் சுற்றிலும் நிறைய புளிய மரங்கல் உண்டு. ஒரு நால் ஒரு மரத்தடியில் பால ரமணர் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு புளியம்பழத்தைத் திருடுவதற்கு இரண்டு பேர் வந்தார்கள். அதில் ஒருவன் கல் நெஞ்சுக்காரன். ஒரு ஜீவனுக்கும் எந்த வித தீங்கும் நினைகாமல் சாந்த மூர்த்தியாக அமர்ந்திருந்த ரமணரைக் கண்டான் அவன். அவனுக்கு விபரீத எண்ணம் ஒன்று தோன்றியது. அதை நண்பனிடம் கூறினான்: “அதோ கொட்டு கொட்டுன்னு முழிச்சுக்கிட்டு பேசாமே ஒண்ணு உட்கார்ந்துகிட்டிருக்கு பார், வா, கள்ளிப்பாலைக் கொண்டு வந்து அதோடு கண்லே ஊத்தலாம், அப்போதாவது பேசுதா பார்க்கலாம்” – அவன் உள்ளத்தில் புகுந்த பேய் பயங்கர யோசனையைக் கூறிற்று. ஆனால், நண்பனோ, சற்று இரக்கம் உள்ளவன். அவன் சொன்னார், பாவம், அந்தப் புள்ளை நம்மை என்ன செய்யுது? நாம வந்த காரியத்தை முடிச்சுகிட்டுப் போவோம்.”
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் பரப்பிரும்மமாக அமர்ந்திருந்தார் பால ரமணர். இந்த நிகழ்ச்சியைக் கேள்வியுற்ற பழனிசுவாமிக்கு கவலை அதிகரித்தது. அதை விட பாதுகாப்பான இடத்திற்கு ஞான குருவை அழைத்துச் சென்று விட வேண்டும் என்று அப்போதே முடிவு செய்து விட்டார் அவர்.
அது மட்டுமல்ல; வர வர பால ரமணருக்கு உடல் சக்தி குறைந்து கொண்டே வந்தது. உட்கார்ந்தால், எழுந்திருக்க முடியவில்லை. எழுந்து நின்றால், நாலடி கூட நடக்க முடிவதில்லை. சுருண்டு சுருண்டு விழுந்தார். அப்போதெல்லாம் பழனிசுவாமிதான் கீழே விழுந்து விடாமல் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொள்வது வழக்கம்.
பால ரமணருக்கு ஓய்வு கொடுக்கவும், பார்க்க வருபவர்களின் தொந்தரவைக் குறைக்கவும், பழனிசுவாமி அவரை அருகிலுள்ள மாந்தோப்பிற்குள் அழைத்துச் சென்றார். அங்குள்ள ஒரு பரணில் இருவரும் குடி புகுந்தனர். தோப்பின் சொந்தக்காரரான வெங்கடராம நாயக்கரின் அனுமதியின்றி ஒருவரும் உள்ளெ நுழைய முடியாததால், ஞானத் தவ யோகிக்குத் தேவையான தனிமை கிடைத்தது.
மாந்தோப்பில் இருந்த ஆறு மாதங்களையும் பயனுடன் கழித்தார் பழனிசுவாமி. ஊருக்குள் சென்று நூல்நிலயத்தினின்று கைவல்ய நவநீதம், யோக வாசிஷ்டம், விவேக சூடாமணி போன்ர புத்தகங்களை எடுத்து வந்து, ஒவ்வொரு வரியாக நிதானமாகப் படித்துக் கொண்டிருப்பார். ரமணர் அதை உன்னிப்பாக கவனிப்பார். சில சமயங்களில் அப்புத்தகத்தை வாங்கி, ஒரு புரட்டு புரட்டுவார். அதில் புதைந்துள்ள கருத்துக்களெல்லாம் படம் பிடித்தாற்போல் அவரது மனத்தில் அப்படியே பதிந்து விடும். சுய உணர்வாலும், ஆன்மீக அனுபவத்தாலும் பரிபூரண ஞானம் பெற்றவருக்குப் படித்து அறிந்து கொள்ள வேண்டியது ஒன்றுமேயில்லை. இருப்பினும், உணர்வோடு ஒன்றி விட்ட தன் அனுபவங்களுக்கான விளக்கங்கலை அவர் படித்த நூல்களில் கண்டார். எண்ணக் குவியல்களின் வடிவங்கள் எழுத்தில் பொதிந்திருக்கக் கண்டார். தம்மை நாடி வருபவர்களின் சந்தேகங்களைப் போக்கவும், உணர்ந்து விட்ட தெளிந்த ஞானத்தை, உலகத்தாரின் உள்லத்தில் எளிதாகப் பதிய வைப்பதற்கும் அந்நூல்களில் மேற்கோள்கள் பரவியிருக்கக் கண்டார். இவ்வாறே புலமை மிக்கவர்களோடு பால ரமணர் பழகப் பழக, சமஸ்கிருதத்திலும், மலையாளத்திலும் பிர்மைக்கத் தக்க தேர்ச்சி பெற்ரு தம் கருத்துக்களை அமொழிகளில் எடுத்துரைக்கவும் தொடங்கினார்.
மதுரையில் படித்துக் கொண்டிருந்த வேங்கடராமன், திருவண்ணாமலைக்கு ஓடி வந்து இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இதுவரியயில் ஓர் உறவினராவது அவரை வந்து பார்க்கவில்லை. எப்படிப் பார்ப்பார்கள்? “ஓடிப்போனவர்” இருக்குமிடம் அவர்களுக்குத் தெரிந்தால்தானே!
“என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டேன்” என்ரு சாதாரணமாக ஒரு கடிதத்தை எழுதி வைத்து விட்டு மூன்று ரூபாய் பணத்துடன் வேங்கடராமன் எளிதாக ஊரை விட்டுப் புறப்பட்டு விட்டார். ஆனால், சிறிய தந்தையையும், சித்தியையும், மூத்த சகோதரர் நாகசாமியையும் அச்செய்தி இடியெனத் தாக்கியது. படிப்பதற்காகத் தன் பராமரிப்பில் விட்ட பையனை வீட்டை விட்டு வெளியேறும்படி விட்டு விட்டோமெ என்று சுப்பய்யர் தவியாய்த் தவித்து விட்டார். மன்னி அழகம்மாளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என்று துடித்து விட்டார். எங்கெல்லாமோ சென்று தேடினார். போளீசில் எழுதி வைத்தார். யார் யாருக்கோ கடிதம் எழுதினார். ஒன்றும் பயனில்லை.
அண்ணன் நாகசாமியின் மனச்சாட்சி உறுத்தியது. “நாம் கடிந்து பேசியதால் தானே தம்பி ஓடி விட்டான்! இப்படிச் செய்வான் என்று தெரிந்திருந்தால் அப்படிப் பேசியிருக்க மாட்டேனே. அப்படி என்ன பேசி விட்டேன்? சாதாரணமாக தினம் சொல்வது போலத்தானெ சொன்னேன்! ஓர் அண்ணனுக்கு இந்த உரிமை கூடக் கிடையாதா? எங்கே போய் விடப் போகிறான்? கையிலிருக்கும் பணம் தீர்ந்ததும் திரும்பி வந்து விடுவான். ஒரு வேளை வரா விட்டால்…..? அம்மாவுக்கு என்ன பதில் சொல்லுவது? அவள் முகத்தில் எப்படி விழிப்பது…..? ஈசுவரா, எனக்கு இப்படி ஒரு சோதனையா?”
அப்போது அழகம்மாள் மானாமதுரையில், மைத்துனர் நெல்லையப்பையர் இல்லத்தில் இருந்தார். அந்த அம்மாளுக்குச் செய்தி எட்டியதும் வெதனையால் வெதும்பினார். நெஞ்சு குமுரினார். வயிர்றில் அடித்துக் கொண்டார். வாய் விட்டு அலறினார். எப்படியாவது குழந்தை இருக்குமிடத்தைக் கண்டு பிடித்து, அவனை அழைத்து வரும்படி மைத்துனர்களீடமிம், பிள்ளையிடமும் வேண்டினார். அந்நெரமும் ஏக்கத்தில் மூஃஜ்கியிருந்தார், உணவு செல்லவில்லை. உறக்கம் கொள்ளவில்லை.
திருவனந்தபுரத்தில் முகாமிட்டிருந்த ஒரு நாடகக் கம்ப்பெனியில் வேங்கடராமன் சேர்ந்து விட்டதாக யாரோ சொன்னார்கள். அது அழகம்மாளின் காதில் விழுந்தது. பெற்ர மனம் பித்தாயிற்றே! உடனே நெல்லையப்பையரை திருவனந்தபுரம் போய்த் தெடிப் பார்க்கச் சொன்னார். பையன் அங்கு இருப்பான் என்ற நம்பிக்கை அவருக்குச் சிறிதும் இல்லை. என்ன செய்வது? மன்னியின் ஆசைக்குக் குறுக்கெ நிற்க முடியுமா? திருவனந்தபுரம் போய் இரண்டு நாள் சுற்றி விட்டு வந்தார். நாடகக் கம்பெனிகளிலெல்லாம் ஏறி இறங்கினார். எங்குமே வேங்கடராமனைக் காண முடிய வில்லை. அந்த ஏமாற்றச் செய்தியைத் தாயாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தானே நேரில் சென்று பார்த்து விட்டு வந்து விடுவது என்று முடிவு செய்தார். தாயின் உணர்ச்சிக்கு யார் தடை போட முடியும்? துணைக்கு யாரையோ அழைத்துக் கொண்டு திருவனந்தபுரம் புறப்பட்டு விட்டார். பிள்ளைப் பாஸ்ம லெசானதா?
தெருவில் அலைந்து கொண்டிருந்த அழகம்மாள் ஒரு கணம் திடுக்கிட்டு நின்றார். “அது யார்? ஆமாம், சந்தேகமில்லை. அது வேங்கடராமனெதான். அதே உயரம், அதே நிரம், அதே சுருண்ட கேசம்!” ஒரே பாய்ச்சலில் அவனருகில் ஓடினார். “வேங்கடராமா…..டேய், வெங்கடராமா” கன்ரைத் தேடித் திரியும் பசு போல் உணர்ச்சி குரலெழுப்பினார்.
தன்னை யாரோ அழைப்பதைக் கேட்டு திரும்பினான் அந்தப் பையன். அழகம்மாளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போலாயிற்று. அது வேங்கடராமன் இல்லை. வெறூ யாரோ? ஏமாற்றத்தின் எல்லைக்கே போய் விட்டார் அவர். அழுது புலம்பினார். கீழே விழுந்து புரண்டார். உடன் வந்தவர்கல் பரிதாபப்பட்டார்கள். தாயன்பைக் கண்டு அவர்கள் தலை வணங்கி நின்றார்கள்.
இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள். எல்லோரும் எங்கெல்லாமோ தேடிப் பார்த்து ஓய்ந்து விட்டார்கள்.
இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. சுப்பய்யர் காலமானார். அதற்காக உறவினர்கள் மதுரையில் கூடியிருந்தார்கள். சடங்குகளில் கலந்து கொள்ளுவதற்காக திருச்சுழியிலிருந்து வந்த ஓர் இலைஞன் தான், வேனடராமன் திருவண்ணாமலையில் இருக்கும் செய்தியை முதன் முதலில் எல்லோருக்கும் தெரிவித்தான்.அவன் முதல் நாள் மதுரையிலுள்ள திருஞானசம்பந்தர் மடத்திற்குச் சென்றிருந்தான். அங்கு வந்திருந்த குன்றக்குடி ஆதீனத்தைச் சேர்ந்த அண்ணாமலைத் தம்பிரான், குருமூர்த்தத்தில் அமர்ந்திருக்கும் பாலயோகியின் மகிமையைப் பற்றி யாரிடமோ உணர்ச்சி பெருக்குடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் பெயர் வேங்கடராமன் என்றும், அவர் திருச்சுழியைச் சேர்ந்தவர் என்றும் தம்பிரான் கூறியதைக் கேட்ட இலைஞன் மறுநால் அந்தத் தகவலை உறவினர்களிடம் கூறியிருக்கிறான்.