ரமண சரிதம் – 2

அன்று திருவாதிரைத் திருநாள். ஆருத்திர தரிசனத்திற்காக சுவாமி வீதிவலம் வந்து கோயிலுக்குள் நுழையப் போகும் நேரம். நடுநிசியைக் கடந்து ஒரு மணியாகி விட்டது.

அந்தப் புனித வேளையில், அந்த அறையில், பச்சைக் குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. அடு வானவெளியில், அருணாசல, அருணாசல என்று எதிரொலிக்கிறது.

அந்த ஒலி பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு குருட்டுக் கிழவியின் காதில் விழுகிறது. பளிச்சென்று ஒரு ஜோதி அவளுக்குத் தரிசனமாகிறது. அந்த அதிர்க்சி தாங்காமல் அவள் பதை பதைக்கிறாள்.

அப்பனே, சண்முகா, கந்தா, வேலா, என்று உச்ச ஸ்தாயியில் அவல் உணர்ச்சி வசப்பட்டு கூக்குரலிடுகிறாள்.

அருட்பெரும்ஜோதி தனிப் பெரும் கருணை தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன் மனித உருவில் தோன்றிய அறையில், ஆன்மீக சக்தி உடலெங்கும் பாய்ந்து, அலைமோதும் அருள் வெள்ளத்தில் பார்ப்பவர்கள் கரைந்து விடுவர். அருணாசல நாமம் அவனியெங்கும் ஓங்கார நாதமாய், வேத கீதமாய் ஒலிக்கிறது.

சுந்தரமய்யருக்கு மூன்று குமாரர்கள். மூத்தவரின் பெயர் நாகசாமி. அடுத்தவர் வேங்கடராமன். நாகசாமிக்கும், வெங்கடராமனுக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம். நாகசுந்தரம் வெங்கடராமனுக்கு இளையவர். ஆறு வயது சிறியவர். இவர்களுக்கு அலமெலு என்று ஒரு சகோதரியும் உண்டு.

நாகசாமியும், வேங்கடராமனும், திருச்சுழி மேல ரத வீதியிலுள்ள சேதுபதி ஆரம்பப் பள்ளியில் படித்து வந்தார்கள். அண்ணன் படிப்பில் அக்கறை காட்டினார். தம்பி, விளையாட்டில் அக்கறை காட்டினார். வேங்கடராமன் புத்திசாலிதான். ஒரு தரம் புத்தகத்தைப் புரட்டினால், அந்தப் பாடம்  அவருக்கு அப்படியே மனப்பாடம் ஆகிவிடும். ஆசிரியர் கூறுவதும் மனத்திலெ பசுமையாகப் பதிந்து விடும். ஆனால்,  புத்தகத்தை கண்டால் ஏனோ அவருக்கு வெம்பாகக் கசந்தது.

குழந்தைகள் ஆங்கிலக் கல்வி கற்க வெண்டும். பெரிய உத்தியோகம் பார்க்க வேண்டும். கை நிறையச் சம்பாதிக்க வேண்டும் என்று சுந்தரம் ஐயருக்கு கொள்ளை ஆசை. இருக்காதா?

ஆனால் தந்தைக்கு நாகசாமியின் மீது இருந்த நம்பிக்கை வெங்கடராமனின் மீது இல்லை. இந்த ப் பையன், பசங்களையெல்லாம் கூட்டி வைத்துக் கொண்டு எப்போதும் தெருவிலேயே விளையாடிக் கொண்டிருக்கிறானே, இவனுக்கு எப்படிப் படிப்பு வரும்? என்ரு வேங்கடராமநைப் பற்றி சுந்தரம் ஐயர் அடிக்கடி கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். தம்முடைய குழந்தை பிற்காலத்தில் ஞான சூரியனாஅப் பிரகாசிக்கப் போகிறான் என்றோ, பெரும் படிப்பு படித்தவர்கல் எல்லாம் அவர் காலடியில் வந்து அமர்ந்து மெய்யறிவு பெறப் போகிறார்கள் என்றோ அவர் அப்போது கண்டாரா? இவன் படித்துப் பட்டம் பெற்று குடும்பத்தைக் காப்பாற்றுவானா? என்று அந்த சிறுவரை நினைத்து தந்தை எந்நேரமும் எங்கினாரோ, அந்தச் சிறுவர் உலகத்தையெ தம் குடும்பமாக ஏற்று, அத்தனை பேர் துயரத்தையும் துடைக்கப் போகிறார் என்று அவர் கனவு கண்டிருக்க முடியுமா?

சுந்தரம் ஐயரின் முன்னோர்களுக்கு ஏற்பட்டிருந்த ஒரு சாபத்தின் காரணமாகத் தம் பிள்ளைகளில் ஒருவர் குடும்பத்தை விட்டு ஓடப் போகிறார் என்று அந்தப் பெரியவருக்கு எப்படித் தெரியும்?

சுந்தரம் ஐயரின் பரம்பரையில் யாரோ ஒருவர், வீடு தேடி வந்த சந்நியாசியை உணவளித்து உபசரிக்காமல் உதாசீனப்படுத்தி விட்டாராம்! கோபம் கொண்ட அந்த சந்நியாசி, உங்கள் வம்சத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும்  ஒருவர் குடும்பத்தைத் துறந்து, வீட்டை விட்டு வெளியேறி, உணவுக்காக நாலு பெரிடம் கையெந்தி வாழ வேண்டும் என்று சபித்து விட்டுப் போய் விட்டாரம். சுந்தரம் ஐயரின் தந்தையோடு பிறந்தவர், காஷாயம் தரித்து, தண்டமும் கமண்டலமும் ஏந்தி, ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்தார். திடீரென்று ஒரு நாள், கிராமத்தை விட்டு எங்கோ ஓடிப் போய் பரதெசியைப் போல் திரிந்து கொண்டிருந்தார். இந்தத் தலைமுறையில், தமது இரண்டாவது பிள்ளை, பதினாறாவது வயதில் எல்லாவற்றையும் உதறித் தள்ளி விட்டு, அருணாசலத்தில் போய் அமரப் போகிறார் என்று தந்தைக்குத் தெரிந்திருந்தால் அவருடைய பள்ளிப் படிப்பைப் பற்றி கவலைப்பட்டிருப்பாரா?

பகவான் ரமணர் பிள்ளைப் பருவத்தில் படித்த பள்ளியில் ஸ்ரீ ரமண பகவ்ழானின் திருவுருவப்படம் மாட்டப் பட்டிருகிறடு. வருங்காலட்தில் திருச்சுழியில் எத்தனையோ பெரிய பள்ளைகளும், கல்லூரிகளும் தோன்றலாம். ஆனால் இந்தச் சிறிய ஆரம்பப் பள்ளிக்குக் கிடைத்த பெருமை வேறெந்தப் பள்ளிக்காவது கிடைக்குமா?

திருச்சுழியில் ஆரம்பக் கல்வி முடித்ததும், நாகசாமியையும், வேங்கடராமனையும், “மேல்” படிப்புக்காகத் திண்டுக்கல்லுக்கு அனுப்பினார் சுந்தரம் ஐயர். வேங்கடராமன் திண்டுக்கல்லில் ஒராண்டு படித்ததாகத் தெரிகிறது. ஆனால் இந்த வருடத்தில் தான் படித்தார் என்று நிச்சயமாக சொல்ல முடியவில்லை.

ஸ்ரீ ரமணரின் திண்டுக்கல் வாசத்தைப் பற்றி பகவானின் பேரன் விசுவநாதன் என்பவரிடமிருந்து சிறிது தெரிந்து கொள்ள முடிகிறது.

ஸ்ரீ ரமணரின் அத்தைப் பிள்ளை பி. கே. ராமசுவாமி ஐயர் திண்டுக்கல்லில் வக்கீலாகயிருந்தார். ராமசுவாமியின் பிள்ளைகளில் ஒருவர் தான் விசுவநாதன்.

அவர் ஒரு பிரம்மச்சாரி. காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுவதற்காக, கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டார். பின்னர், மன அமைதி இழந்து, ரமணாசிரமத்திற்குச் சென்றார். சற்ரு சாந்தி பெற்று ஓராண்டில் வீடு திரும்புவதாகத் தந்தையிடம் கூறிச் சென்றவர், ஆசிரமத்திலேயெ தங்கி விட்டார். பகவான் விதெக முக்தி அடைந்த பின் ஆசிரமத்தை விட்டு வெளியேறிய சாதுக்களில் விசுவநாதனும் ஒருவர்.

ஸ்ரீ ரமண பகவானின் இளவயது வாழ்க்கையைப் பற்ரி அவர், தம் தந்தைக்கும், ஸ்ரீ ரமணருக்கும் இடையெ நடைபெற்ற ஒரு சுவை மிக்க, பொருள் செறிந்த நிகழ்ச்சியைக் கூறியிருக்கிறார்.

ராமசுவாமி ஐயர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, திருச்சுழியிலிருந்து அம்மாஞ்சி வேங்கடராமன் தன் அத்தானுக்கு ஒரு கடிதம் எழுதினார். அம்மாஞ்சி, அத்தானை விட நான்கு, ஐந்து வயது இளையவர். அப்படியிருந்தும் “ஆன்புள்ள அத்தானுக்கு அநெக ஆசீர்வாதம்” என்று வேங்கடராமன் அக்கடிதத்தைத் தொடங்கிருந்தாராம். இது அத்தானுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

அடுத்த முறை அவர் திருச்சுழிக்குச் சென்ற போது, அம்மாஞ்சியிடம் கடிதத்தைக் காட்டி, ஏண்டா, நீ என்னை விடச் சின்னவன். அநேக நமஸ்காரம் னு போடாமல், அநேக ஆசீர்வாதம் என்று போட்டிருக்கியே, என்று குற்றம் கண்டு பிடிப்பது போல் கேட்டாராம். அதற்கு வேங்கடராமன், அதென்னவோ எனக்குத் தெரியாது. லெட்டர் எழுதற போது, சாதாரணமா, “நமஸ்காரம், ஆசீர்வாதம்” னு எழுதறதைப் பார்த்திருக்கென். எனக்கு அதுக்கெல்லாம் அர்த்தம் தெரியாது. என்னவோ எழுதினேன் என்று அலட்சியமாகப் பதில் கூறி விட்டாராம்.

பின்னர் பல வருடங்கல் கழித்து 1923-ம் ஆண்டு ராமசுவாமி ஐயர் தம் மனைவியுடன் ரமணாசிரமத்திற்குச் சென்றார். ஓராண்டில் திரும்பி வருவதாகச் சொல்லி விட்டு சென்ற விசுவநாதன் திரும்பி வராததால், அவரை வீட்டுக்கெ அழைத்துப் போக அவர்கள் அங்கு வந்திருந்தார்கள். ஆசிரமத்திற்குள் நுழைந்ததும், ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த பகவானைக் கண்டார் ராமசுவாமி ஐயர். அடுத்த கணம் தம் வயதையும் மறந்து, அப்படியே அம்மாஞ்சியின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தார்.

வயதில் இளையவாரானாலும், பெரியவராகவே பிறந்து விட்ட வேங்கடராமன், தம்மையும் அறியாமலேயே அன்று கடிதத்தில் தமக்கு மூத்தவராக இருந்த அத்தானை ஆசீர்வத்தார். இன்று அதே அத்தானை ரமண மகரிஷியாக ஆசீர்வதித்தார்!

அன்று ராமசுவாமி ஐயர் சென்ற பிறகு, தாம் சிறு வயதில் எழுதிய கடிதத்தைப் பற்றியும், அத்தான் கோபித்துக் கொண்டனதைப் பற்றியும், பகவானே விசுவநாதசுவாமியிடம் வேடிக்கையாகக் குறிப்பிட்டாராம்.

விசுவநாதசுவாமி, ரமணர் திண்டுக்கல்லில் இருந்த போது, அவர்கல் வீட்டிற்கு வந்து விளையாடுவார் என்றும், ஆனால் அவர் அங்கே தங்கவில்லை என்ரும், எங்கு தங்கியிருந்தார் என்பது தெரியவில்லை என்று கூறுகிறார். பகவான் எந்த வகுப்பில் படித்தார், எந்த ஆண்டு படித்தார் என்பதும் தெரியவில்லை. தம் தோழர்களுடன், வேங்கடராமன் திண்டுக்கல் மலையில் ஓடியாடி விளையாடுவாராம். அந்தக் கோட்டையிலுள்ள ரகசிய வழிகளெல்லாம் அவருக்கு மிக நன்றாகத் தெரியுமாம். ரமணர் ஓடி ஒளிந்து கொண்டால் யாராலும் கண்டு பிடிக்க முடியாதாம்.  திண்டுக்கல் கோட்டைக்குள் சுரங்கப் பாதைகளும், ரகசிய அறைகளும் இருக்கின்றன. தினமும் மாலை வேளைகளில் பள்லிச் சிறுவர்கல் அனெல்லாம் ஓடி பிடித்து விளையாடுவது வழக்கம். ரமணரும் இங்கு விளையாடியதாக கூறப்படுகிறது.

மகாங்களின் விளையாட்டெல்லாம் திருவிளையாடல்களே! ஸ்ரீ ரமண மகரிஷி ஓராண்டு பல்ளியில் படிப்பதற்காகவா திண்டுக்கல் வந்திருப்பார்? புரானச் சிறப்புப் பெற்ற பத்மகிரியின் நிழைல் சிறிது காலம் தங்கி, சித்தர்கல் வாழும் அந்தப் பகுதியில் நடமாடவே அவர் அங்கு வந்திருக்க வேண்டும். அந்த ஓராண்டில் அவர் எத்தனை மகாங்களைத் தரிசித்தாரோ, எத்தனை ரிஷிகளின் ஆசியைப் பெற்றாரோ, யார் கண்டார்.

அம்மலையடிவாரத்தில் ஒரு சுவாமிகல், அவதூதராகத் திரிந்து கொண்டிருந்ததாக கூற;ப்படுகிறது. யோக மகிமைகள் நிறைந்த அந்த சித்தரைச் தரிசித்து, அவரது ஆசியைப் பெறத்தான் வேங்கடராமன் திண்டுக்கல் வந்தாரா? மலையைச் சுற்றி வரும் போது, ஒரு நாள் அந்த மகானை இவர் சந்திக்கவில்லை என்றோ, அம்மகானின் திருஷ்டி இவர் மீது படவில்லையென்றோ யாராவது மறுத்துக் கூற முடியுமா?

திண்டுக்கல் முனிசிபல் உயர் நிலைப் பள்ளையில் ரமண பகவான் படித்ததைப் பற்றிக் கூறும் விசுவநாத சுவாமி, அப்போது பகவானுக்கு ஆசிரியராக இருந்த திரு டி. வி. கிருஷ்ணய்யரைப் பற்றி பெருமையுடன் பேசுகிறார்.

ஒரு சமயம் கிருஷ்ணய்யர், பாடம் படிக்காததற்காக பகவானைப் பெஞ்சியின் மேல் ஏறச் சொன்னார். அப்போது சிறுவர் ரமணர் அந்த ஆசிரியரை ஒரு மாதிரியாக முறைத்துப் பார்த்தார். உடனெ ஆசிரியர், உறுதி குலைந்து, நீ பெஞ்சு மேலெ ஏற வேண்டாம். பேசாமல் உன் இடத்திலேயே உட்காரு, என்று கூறி விட்டார்.

பின்னர் டி. டி. கிருஷ்ணய்யர் ஆசிரியர் தொழிலை விட்டு விட்டு வக்கீலாகி விட்டார். பகவானுக்கு ஓராண்டு ஆசிரியராக இருக்க வேண்டும் என்று பேரருள் திட்டமிட்டிருந்ததால் தான் அவர் ஆரம்பத்தில் ஆசிரியர் தொழிலை ஏற்க நேர்ந்ததோ என்னவோ!

றமண பகவானுக்கு தம் ஆசிரியர் மீது இருந்த மரியாதையும் அன்பும் இறுதி வரை குறையவே இல்லை.  திண்டுக்கல்லில் இருந்து ரமணாசிரமத்திற்கு யார் வந்தாலும், தம்முடைய ஆசிரியர் டி. வி. கிருஷ்ணய்யரைப்  பற்ரி பகவான் விசாரிக்காமல் இருக்க மாட்டார்.பகவானின் இறுதி நாட்களின் போது, டி. வி. கிருஷ்ணய்யர், தமது “சீடரை”க் கானவந்தார். நோயின் வலி தாங்காது அமர்ன்டிருந்த பகவானிடம் சென்று, “என்னைத் தெரிகிறதா?” என்று கெட்டாராம். அப்போது பகவான், தம் வலியையும் மறந்து, மந்தகாசம் புரிந்து, தெரியாமல் என்ன, சௌக்கியமா? என்று ஆசிரியரை விசாரித்தாராம். ஞானச்சீடர் மறைந்த நான்கு ஆண்டுகள் கழித்து 1954-ம் ஆண்டில் தொன்ணூறு வயதைக் கடந்த குருவும் மறைந்து விட்டார்.