ரமண சரிதம் – 1

திருச்சுழி மதுரையிலிருந்து தென் கிழக்கே முப்பது மைல் தொலைவில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கிறது. மதுரையிலிருந்து அருப்புக்கோட்டைக்குப் போகும் பாதையில் இருபது மைல் சென்றால், கரியாபட்டி ஏன்ற ஊரையடுத்து திருச்சுழிக்கு ஒரு பாதை பிரிகிறது. அப்பாதையில் கடைசி மூன்று நான்கு மைல்கள் கரடு முரடாக இருக்கிறது. சிறிது சுற்றிக் கொண்டு போனாலும் சீரான பாதையில் செல்ல வேண்டும் என்று நினைப்பவர் அப்பாதையில் திரும்பாமல் நேரே அருப்புக்கொட்டைக்குச் சென்று அங்கிருந்து கிழக்கே எட்டு மைல் வந்தால் திருச்சுழியை அடையலாம். ரயிலில் செல்ல விரும்புபவர்கள் விருதுநகர் மானாமதுரை ரயில் பாதையிலுள்ள திருச்சுழி ஸ்டேஷனில் இறங்க வேண்டும்.

தல புராணங்களிலும், தேவாரப் பாடல்களிலும் இவ்வூர் திருச்சுழியல் என்றே குறிப்பிடப் பட்டுள்ளது. பெரும் பிரளயம் வந்த போது, தேவர்கல் முறையிட்டுக் கொண்டதன் பேரில், சிவபெருமான் பிரளயத்தைச் சுழித்து, திருக்குளத்தின் அடியில் புகச் செய்தார். அப்பிரளயவிடங்கருக்கு, பூமிநாதர் ஆலயத்தில் ஒரு தனிச் சந்நிதி இருக்கிறது.

திருச்சுழியல் திருத்தலம் புராதனப் பெருமை வாய்ந்தடு. திருமேனிநாதரை திரேதாயுகத்தில் பூமிதேவி பூசித்தாள். திரேதா யுகத்தில் பிரளயம் சுழித்த வரலாறு நடைபெற்றது. துவாபர யுகத்தில் கௌதமரும், அகலிகையும் சிவபெருமானின் திருநடனமும், திருமணக் கோலமும் கண்டு களித்தனர். கலியுகத்டில் கடைச் சங்கத்து தமிழ்ப் புலவர்கள் திருமேனி நாதரை வழிபட்டனர்.

காசி, திருக்காளத்டி, திருக்கழுகுன்றம், சிதம்பரம், கும்பகோணம், திருவாரூர் முதலிய தலங்களில் ஆயிரம் அசுவமேத யாகம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அந்தப் பலனை, திருச்சுழியில் சிவனடியார் ஒருவருக்கு ஒரு பிடி சோறு வழங்குவதன் மூலம் பெற்று விடலாம். திருச்சுழியில் பிறந்தவர்களுக்கு மறு பிறவியே கிடையாது.

திருச்சுழியில் உறையும் பரமனை, பார்வதி தேவியும், தேவர்களும், மாமுனிவர்களும், பேரரசர்களும், நாயன்மார்களும், சிவனடியார்கலும் வழிபட்டு புண்ணியம் பெற்றிருக்கிறார்கள்.

சுந்தரமூர்த்தி நாயனர் இத்தலத்தைப் பற்றி ஒரு பதிகம் பாடியருளியிருக்கிறார். மாணிக்கவாசப் பெருமான் திருக்கோவையாரில் திருச்சுழி பற்ரி சிறப்பித்துள்ளார். நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் இத்தலத்திற்கு வருகை தந்து வழிபட்டிருக்கிரார்கள்.  திருச்சுழியின் மகிமையை ஸ்ரீ சுந்தரர் முதல் பாடலிலேயே அழகாக விளக்கியிருக்கிரார்.

மண்ணாகியும், உயிராகியும், உயிர்க்குப் புஅலிடமாயும், நிலமாகவும், நிலத்தை ஆதரிக்கும் மழையாகவும், மதியாகவும், விதியாகவும் உள்ள பெருமான் உறையும் திருச்சுழியலை மலர்ச் சோலைகளில் தேன் உண்ண வரும் வண்டினங்கல் இசை பாடி, திருச்சுழியலை – மனத்தால் நினைப்பவர்கள், காலனைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. அவர்களுக்கு முக்தி கிடைப்பது நிச்சயம்.

திருச்சுழி பூமிநாதர் கோயிலை சுற்றிப் பார்க்கும் போது, சபா மண்டபத்தில் ஆனந்த நடம் புரிந்து கொண்டிருக்கும் நடேசன் பக்தர்களை வா வா என்று அழைப்பது தெரிகிறது. ஆனந்தக் கூத்தனின் ஜல் ஜல் என்ற சதங்கை ஒலி காதுகளில் விழுகிறது.

எதிர்ப்புறத்தில் பக்தியுடன், அறுபத்து மூன்று நாயன்மார்களும் அத்தெய்வக் கூத்தைக் கண்டு, மெய்யுருகி, கண்ணீர் மல்கி நிற்கிறார்கள். அவர்களிடையே கௌதம முனிவரையும், அகலிகையையும் காண்கிறோம்.

கோயில் உள் மண்டபத் தூண்களில் உள்ள வெள்ளையன் சேர்வை, ஆண்டியணன் சேர்வை, முத்துக் கருப்பன் சேர்வை, வேலாயுதசுவாமி இவர்களின் உருவக்சிலைகள் கலையழகோடு சிற்பச் சிறப்போடு விளங்குகினறன.

சுயம்புமூர்த்தியான, திருமேனிநாதரைத் தரிசித்துக் கொண்டு, கருவறையை வலம் வரும்போது, மேற்கெ சோமாஸ்கந்தர், விக்னேஸ்வரர், காசி விசுவநாதர், பூமி, நீளாதேவி சமேத சுழிகைக் கோவிந்தர் முதலியோர் வீற்றிருக்கக் காண்கிறோம்.

ஆடி வீதியென்றைக்கப்படும் வெளிப் பிராகாரத்தின் வடகிழக்கில் பிரளய விடங்கரின் சந்நிதிக்கு நேரே, தண்டபாணி சுவாமி கோயில் கொண்டிருக்கிறார். பார்க்க பதினாயிரம் கண்கள் வேண்டும்.

அம்மன் கோயில் மண்டபத்தின் முதல் இரு தூண்களிலும், அம்மண்டபத்தைக் கட்டிய  தாசிகளின்  அழகிய சிற்ப உருவங்களைக் காண்கிறோம். வட  பகுதியிலுள்ள மற்றொரு தூணில் தாசி திருவுமுத்தருளியின் சிற்ப வடிவம் இருக்கிறது. அதை மூச்சுப் பிடிப்பு அம்மன் என்றும் அழைக்கிரார்கள். மூச்சுப் பிடிப்பு உள்ளவர்கள் அந்த அம்மனை மூண்டு முறை வலம் வந்து மஞ்சள் எண்ணெய் சாற்றினால் மூச்சுப் பிடிப்பு விட்டு விடுகிறது என்ரு அர்ச்சகர் கூறினார்.

அர்த்த மண்டபத்தின் உத்திரத்தில் ஸ்ரீ சக்கரம் ஒன்று இருக்கிரது. ஆனால், அதில் அட்சரங்கல் பொறிக்கப் படவில்லை.

சுவாமி கோயிலில் இருந்த உற்சவ விக்ரகங்களையெல்லாம் தற்போது இந்த அறையில் பூட்டியிருக்கிறோம். அங்கு காவல் போதாது. இப்போதெல்லாம் கோவில்களில் திருட்டு பயம் அதிகமாயிருக்கு. காலம் கெட்டுக் கிடக்கிறது பாருங்கள், என்று அர்ச்சகர் கூறியபோது என் உள்ளம் விம்மிற்று. மனிதன் தன்னை திருடிக் கொண்டு போய் விடப் போகிறானே என்று தெய்வமே பயந்து ஒளிந்து கொள்ளும் நிலை நம் நாட்டில் ஏற்பட்டதை நினைத்து வெட்கப்படுவதா? வேதனைப்படுவதா?

பகவான் ரமணர் பிறந்த இல்லம் கார்த்திகை வீதிலிருக்கும், சுந்தர மந்திரம், அழகு தேவதை நர்த்தனம் புரியும் ஓர் ஆலயம். “நான்” அழிந்த பிரகு “தான்” யார் என்பது புரியும், தான் யார் என்பது புரிந்து விட்டால், பின்னர் புரிந்து கொள்வதற்கு வேறொன்றுமே இருக்காது என்ற உன்னத தத்துவத்தை விளக்குவதற்கென்றே அழகுத் தெய்வமாம் முருகனின் அம்சமாஅத் தோன்றியவர் பிறந்த இல்லம், அழகுக்கோர் ஆலயமாகத் திகழ்வதில் வியப்பில்லை. சுந்தரம் ஐயரையும், அழகம்மையையும் தந்தை தாயாக அடைந்து, அழகோடு அழகு இணைந்ததால் எழில் குமரனாகத் தோன்றி, மழலை பேசி விளையாடி மகிழ்ந்த இல்லம் அழகு தெய்வம் உறையும் ஆலயமாகத்தானே இருக்க வேண்டும்.

சுந்தரமய்யர் சுய முயற்சியாலும், கடின உழைப்பாலும் வாழ்க்கையில் உயர்ந்தவர். சாதாரண கணக்குப் பிள்ளை குமாஸ்தாவாக இருந்தவர். பிறருக்கு விண்ண;ப்பங்கள் எழுதித் தருபவராஅ மாறி, பட்டம் பெறாத வக்கீலாகி, செல்வம் ஈட்டியவர். கட்சிக்காரர்களையும், உதவி நாடி வருபவர்களையும் வரவேற்பதற்காக அவர் இல்லம் எப்போதும் திரந்திருக்கும்.

இல்லத்தைப் போன்ரறே அவர் இதயமும் திரந்திருந்தது. செல்வம் குவிந்தாலும், செருக்கோ, சிறுமைத்தனமோ இல்லாமல் வாழ்ந்தவர் சுந்தரமய்யர். எழைகள் கண்ணீர் சிந்தினால் அவர் பொறுக்க மாட்டார். எந்த வேலையிருந்தாலும் எழைகளின் துயரைத் துடைக்க ஓடோடிக் செல்வார். ஒரு சமயம் நள்ளிரவில் குடிசைகள் தீப்பற்றி எரிந்த போது, திக்கற்று நின்றவர்களுக்கு ஆறுதல் மொழி கூறி, வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

செல்வாக்க்கும் மதிப்பும் பெற்று ஊருக்குப் பெரிய மனிதராக வாழ்ந்த போதிலும், என்றுமெ சுயகௌரவத்தை விட்டுக் கொடுத்து சுயவிளம்பரம் செய்து கொண்டதில்லை.

ஒரு சமயம் ராமநாதபுரம் ராஜா திருச்சுழியில் முகாம் செய்திருந்தார். அப்போது ஊரிலுள்ள முக்கியபுள்ளிகளெல்லாம் சென்று, அவர் எதிரில் பல்லை இளித்து, கை கட்டி நின்றநர். சுந்தரமய்யர் மட்டும் வீட்டிலேயே இருந்தார். அவர் வராததைக் கவனித்த ராஜா ஆள் விட்டு அனுப்பினார். அந்த ஆசாமி வந்து, “ஏன் ராஜாவை வந்து பார்க்க வில்லை? அவர் உங்களை கையோடு அழைத்து வரச் சொன்னார்” என்று அழைத்த பிறகே சேதுபதியைக் காணச் சென்றார் சுந்தரமய்யர்.

தெய்வ பக்தியும், ஆசார அனுட்டானங்களும் நிரம்பப் பெற்ற சுந்தரமய்யருக்கு ஏற்ற மனையாளாகத் திகழ்ந்தார் அழகம்மை. கணவரின் கண் பார்வையிலிருந்தெ குறிப்பறிந்து, முணுமுணுக்காமல், முகம் கோணாமல் வந்த விருந்தினரையெல்லாம் உபசரிப்பார்.

உலகிற்கொரு ரமணரைப் பெற்றுத் தரப்போகும் உத்தமி, எந்நேரமும் தெய்வ சிந்தனையிலேயே நாடி வந்தவர்களுக்கெல்லாம் நல்லுபதெசம் செய்து, மனச்சாந்தி நிலவச் செய்த ஞானப் புதல்வனை ஈன்றெடுக்கப் போகும் அந்தத் தாய், கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் போதும், புடவையைக் கொடியில் உலர்த்தும் போதும் தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்.

சுந்தர மந்திரத்தை நிர்வகித்து வருபவர் பெயரிலும் அழகு இருக்கிறது. கற்பூர சுந்தர சிவாசாரியார் வருவோரை வரவேற்கிறார் , அந்த இல்லத்தில் அடியெடுத்து வைத்ததும், அஞ்ஞானம் விலகி, பிறவியெடுத்த பயனைப் பெற்று விட்ட உணர்வோடும், அவ்வுணர்வினால் தோன்றும் நிம்மதியோடும், நிறைந்து விட்ட உள்ளத்தில் பொங்கும் பேரானந்தத்தை உணரலாம்.ரமண பகவான் பிறந்த அறையில் கற்பூர மணம் பரவுகிறது. பேரழகு அங்கே அருளாட்சி புரிகிறது. பெரொளி, மின்னலாய் பாய்கிறது. அன்பு, மழையாய்ப் பொழிகிறது. கருணை, அருவியாய் கொட்டுகிறது.