பையன் கெட்டிக்காரன். நல்ல உத்தியோகத்திற்கு interview வந்திருக்கிறது. எந்தக் கேள்விக்கும் நல்ல பதில் சொல்லக்கூடியவன். ஆனால் தைரியம் போதாது. எருக்கம் பூவிற்கு அன்னை தைரியம் என்ற பெயரிட்டிருக்கிறார்கள். எருக்கம் பூவை அன்னை படத்தின்முன் வைத்திருந்து பையன் கையில் கொடுத்தனுப்பினால், இண்டர்வியூவில் தெளிவாகப் பதில் சொல்விட்டு வருவான். வாய் தெற்றல் உள்ளவர்களுக்கு இண்டர்வியூ பெரிய சோதனை. ஆன்மீகப் பேச்சு என்ற மலர் இண்டர்வியூ வரைக்கும் தெற்றுவதை ஒத்திப்போடும். அளவுகடந்து வாய் தெற்றும் ஒருவர் அபாரப் புத்திசாலி. அவருக்கு இன்கம்டாக்ஸ் ஆபீஸர் செலக்ஷனுக்கு இண்டர்வியூ வந்தது. அவருக்கு அன்னைமீது குறிப்பான நம்பிக்கையில்லை. பாண்டிச்சேரிக்கு 4, 5 வருஷத்திற்கு ஒரு முறை வரும்பொழுது, அன்னையைப் பார்ப்பதுண்டு. தரிசனமாக இருப்பதைவிட அது இண்டர்வியூவாகத்தான் இருக்கும். அன்னையிடம் அவர் உறவினர் இவருடைய இண்டர்வியூவைப் பற்றிச் சொன்னார். இண்டர்வியூவில் ஒரு முறைகூடத் தெற்றவில்லை. செலக்ஷன் ஆயிற்று. வெளியில் வந்தபின் மணிக்கணக்காகப் பேச முடியவில்லை. நாள்கணக்காக அதிகமாகத் தெற்றியது. அவரே நம்பிக்கையுடைய பக்தராயிருந்தால், இண்டர்வியூவில் மறைந்த தெற்றல் அத்துடன் மறைந்திருக்கும். பயத்தை இண்டர்வியூவில் இழந்தவன் தினமும் எருக்கம்பூவை அன்னைக்குச் சார்த்தி, பயம் அழிந்து, தைரியம் வரவேண்டுமெனப் பிரார்த்தனை செய்தால், வாழ்நாள் முழுவதும், நினைக்க முடியாத ஒன்று அவனைத் தேடி வரும். பயம் அவனது வாழ்விலிருந்தே மறைந்துவிடும்.
சண்டை, சச்சரவு பல குடும்பங்களுக்குச் சொந்தம் ஆனவை. அக்குடும்பங்களில் Harmony சுமுகம் என்ற மலரை அனைவரும் அன்னைக்குச் செலுத்தினால், பூசல் அழிந்து, நல்ல நிதானமான குடும்பமாக அது மாறிவிடும். ஒரு குறையிருந்தால், அதை அழிக்க முற்படுவது நல்லது. அதைவிட நமக்குத் தேவையான எல்லா நிறைவுகளையும் தேடுதல் நல்லது. அம்முயற்சியில் நம் குடும்பத்திலுள்ள குறைகளை விலக்கும் முயற்சிகளைச் சிறப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சோகம் நிறைந்த நேரத்தில் அசோக மரத்துப்பூ, அதை மாற்றவல்லது. சோம்பேறிகளை எழுப்பி வேலை செய்யவைக்கக்கூடிய மலர் கருவேலமரத்து மலர். நம் மரபில் ஏற்பட்டவை பெரிய உண்மைகள். எவரும் மறுக்க முடியாதவை. மரபுவழிவந்த நம்பிக்கைகளில் சில அர்த்தமற்றவை, நடுவில் தாமே புகுந்துகொள்ளும். அவையும் உயர்ந்த நம்பிக்கைகளுடன் கலந்து வரும்பொழுது, எது சாஸ்திரப்படி உண்மை, எது இடைச்செருகல், எது சமூக நியதியை சாஸ்திரத்தின் பெயரால் சொல்லப்படுகிறது என்ற பாகுபாடு சாமானிய மனிதனுக்கிருப்பதில்லை. இலவ மரத்தை வீட்டில் வைக்கமாட்டார்கள். அந்த பஞ்சு வெடிப்பதைப்போல், குடும்பம் வெடித்து நாசமாய்விடும் என்றொரு நம்பிக்கையுண்டு. எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. இலவமரத்துப்பூவை அன்னை, “செயல் வெற்றி” என்று கூறுகிறார்கள். பொறுமையான உழைப்பும், பூரணச் சமர்ப்பணமும் சேர்ந்து அளிக்கும் வெற்றி என அன்னை இதை வர்ணிக்கிறார்கள். மஞ்சள் இலவனை இப்படிச் சொன்னவர்கள், வெள்ளை இலவம் பூவை, “பெரு முயற்சி” என்றழைக்கிறார்கள். பல முயற்சிகளையும், பல திட்டங்களையும், பல ஏற்பாடுகளையும் செய்யவல்லது என்ற விளக்கம் அளிக்கின்றார் அன்னை. வெற்றிலைப் பூவை வீரியம் என்கிறார். சிவந்த மல்லிகைப் பூ மென்மை எனப்படும். முருங்கமரத்துப்பூ சுத்தம், ஒழுங்கு ஆகும். மஞ்சள் பூவுக்கு சாந்தம் என்று பெயரிட்டுள்ளார். வேப்பம் பூவை ஆன்மீகச்சூழலென்றும், பூசுணைப்பூவை அபரிமிதமெனவும், தூங்குமூஞ்சி மரப்பூவை விவேகம்
எனவும், எள்ளுப்பூவை சமரசம் எனவும், பாகல் பூவை இனிமை எனவும், அரளியைச் சிவந்ததாயிருந்தால் பொய்மையின் சரணாகதி எனவும், வெண்மையானால் கடவுள் சிந்தனை எனவும், தென்னம் பூவை பல திறப்பட்ட செழிப்பு எனவும், கத்தரிப்பூவைப் பயமின்மை எனவும் அன்னை அழைக்கின்றார்.
நாமிருக்கும் இடத்தில் எந்த புஷ்பங்கள் கிடைக்கும் என்பதை முதலில் கருதாது, ஒரு குடும்பத்திற்குத் தேவையான அம்சங்கள் எவை, அவற்றைக் குறிக்கும் புஷ்பங்கள் எவை என முதலில் கருதுவோம்.
உடலின் செயலை முதலிலும், உணர்ச்சியை அடுத்தபடியாகவும், அறிவை முடிவாகவும் கருதலாம். அவற்றையெல்லாம் தாண்டியுள்ள பட்டியலைக் கடைசியில் சேர்ப்போம்.
செயலுக்குரியவையும், செயலால் சேரக்கூடியவையும் செல்வம், ஆரோக்கியம், இளமை, ஆயுள், வளம், வமை, திண்மை, வீடு, வசதி, அபரிமிதம், தெம்பு, முன்னேற்றம், சேர்ந்து செயல்படுபவை ஆகும்.
உணர்வைச் சேர்ந்தவை, பாதுகாப்பு, சுமுகம், திருப்தி, எதிரியை வெல்லுதல், அதிர்ஷ்டம், ஆச்சரியம், சந்தோஷம், நிம்மதி, அமைதி ஆகும்.
அறிவுக்குரியவை புத்தி, திறமை, வெற்றி, சமயோசிதப் புத்தி, விவேகம், நினைவு, தெய்வநினைவு ஆகியவை.
ஆத்மாவுக்குரியவை ஆர்வம், நம்பிக்கை, பக்தி, சேவை, வழிபாடு ஆகும்.
பொதுவாக, தைரியம், பொறுமை, சாந்தம், நல்லெண்ணம், இனிய உறவு, தன்னலமின்மை, இலட்சியம், சத்தியம், தூய்மை, நேர்மை, நிதானம், பிரார்த்தனை ஆகியவை நமக்கு நல்ல அம்சங்கள்.
அன்னை பிரார்த்தனை என்றே ஒரு மலருக்குப் பெயரிட்டிருக்கிறார்கள்.
மேற்சொன்ன அம்சங்களைக் கூடியவரை மலர்களுடைய பெயரால் மீண்டும் எழுதுகிறேன். பட்டியலில் கடைசியில் இருப்பதால், மலர்ப் பெயரை மட்டும் குறிக்கிறேன்.
அல், நாகலிங்கப்பூ, பூவரசம்பூ, வாடாமல்லிகை, கொய்யா, பூசுணை, சாமந்தி, பட்டிப்பூ, ஆகியவை செயலுக்குரியவை.
உணர்ச்சிக்குரிய மலர்கள் கொடிரோஸ், மயிற்கொன்றை, குரோட்டன்ஸ், காசாம்பூ, அரளி, பெட்டுனீயா ஆகியவை.
அறிவுக்குரிய மலர்கள் பாக்குமரப்பூ, மனோரஞ்சிதம், நந்தியாவட்டை, குவளை, சூரியகாந்தி, புகையிலைப்பூ, மாம்பூ, மகிழம்பூ, செம்பருத்தி ஆகும்.
ஆத்மாவுக்குரியவை பவழமல்கை, வெண்தாமரை, செந்தாமரை, தூங்குமூஞ்சிமரப்பூ, காகிதப்பூ, வேப்பம்பூ, மற்றவை மகிழம்பூ, எருக்கம்பூ, பன்னீர்ப்பூ, விருட்சிப்பூ, பழம் கொடுக்கும் மாதுளைப்பூ ஆகும்.மேற்சொன்ன 34 பூக்களில் எவருக்கும் 5 அல்லது 6 மலர்கள் கிடைக்கும். சிலருக்கு 10உம் கிடைக்கலாம். அத்துடன் வழிபாட்டை ஆரம்பித்து, நம் குடும்பத்திற்கு அத்தியாவசியமான மலரை எப்பாடுபட்டாவது கொண்டுவந்து வழிபாட்டைத் துவங்கினால், வழிபாடு வளர்ந்து, சிறந்து, முழுப்பயனையும் நாளாவட்டத்தில் கொடுக்க, மற்ற மலர்கள் கிடைக்க வகை ஏற்படும்.
ஆங்கில பெயர் / விஞ்ஞான பெயர் English Name/Botanical Name (2) | அன்னையிட்ட பெயர் Mother’s Name (3) | தமிழ் பெயர் Tamil Name (4) |
Water Lily Nymphaea | செல்வம் | அல்லி |
Cannon – Ball Tree Couroupita Guianensis | லக்ஷ்மி கடாக்ஷம் | நாகலிங்கப்பூ |
Portia Tree Thespesia Populnea | உடல்நலம் | பூவரசம்பூ |
Globe amaranth Gomphrena Globosa | மரணமிலா வாழ்வு | வாடா மல்லிகை |
Guava Psidium guajava | நிதானம் | கொய்யாப்பூ |
Pumpkin Cucurbita Maxima | அபரிமிதம் | பூசுணைப்பூ |
Florists’ Chyrsanthemum Chyrsanthemum Morifolium | சக்தி, தெம்பு | சாமந்தி |
Rose periwinkle Catharanthus roseus | முன்னேற்றம் | பட்டிப்பூ நித்திய கல்யாணி |
Coral vine , Queen’s wealth Antigonon Leptopus | சுமுகம் | கொடிரோஸ் |
Gul Mohur Delonix Regia | சித்தி | மயிற் கொன்றை |
Croton Codiaeum | தவறான எண்ணங்களை மறுக்கும் திறன் | குரோட்டன்ஸ் |
Ironwood Miracle Memecylon tintctorium | அற்புதம் | காயாம்பூ |
Oleander Nerium Oleander | இறைவனை நாடும் இனிய எண்ணம் | அலரிப்பூ (கஸ்தூரிப் பட்டை) |
Petunia Petunia Hybrida | உற்சாகம் | பெட்டூனியா |
Betel-nut palm Areca catechu | நிதானமான தெம்பு | பாக்குமரப் பூ (கமுகு) |
Ylang -Ylang Artabotrys | தெளிவான மனம் | மனோ ரஞ்சிதம் |
Thevetia Peruviana (white) | தூய்மையான மனம் | நந்தியா வட்டை |
Yellow Oleander Thevetia Peruviana | மனம் | குவளை மணிஅரளி |
Sunflower Helianthus | ஒளியை நோக்கி வரும் சித்தம் | சூரியகாந்தி |
Sweet-scented Tobacco Nicotiana alata Grandiflora’ | பகுத்தறிவு | புகையிலைப்பூ |
Mango Mangifera Indica | தெய்வஞானம் | மாம்பழம் |
Spanish Cherry Mimusops Elengi | பூர்த்தி | மகிழம்பழம் |
Hibiscus ‘Hawaiian’ (medium to large, single, lemon-yellow with red centre) | மனத்தின் திறன் | செம்பருத்தி (எலுமிச்சை மஞ்சள், சிவப்பு மையம்) |
Night Jasmine Nyctanthes arbortristis | (பக்தி) ஆர்வம் | பவழமல்கை; பாரிஜாதம் |
Sacred Lotus (white) Nelumbo nucifera Alba | தெய்வசித்தம் | வெண் தாமரை |
Sacred lotus (Pink) | அவதாரம் | செந்தாமரை |
Rain Tree Enterolobium saman | விவேகம் | தூங்குமூஞ்சி மரப்பூ |
Bougainvillea | பாதுகாப்பு | காகிதப்பூ |
Neem Tree; Margosa Azadirachta indica | ஆன்மீகச்சூழல் | வேப்பம்பூ |
Spanish cherry Mimusops elengi | பொறுமை | மகிழம்பூ |
Mudar Calotropis procera | தைரியம் | எருக்கம்பூ |
Guettarda speciosa | உணர்வில் சாந்தம் | பன்னீர்ப்பூ |
Ixora thwaitesii | உடலின் அணுவில் அமைதி | விருட்சிப்பூ |
Pomegranate tree Punica | மாதுளம்பூ |
Water lily Nymphaea (white with golden centre) | மஹாலட்சுமியின் பூரணச் செல்வம் | அல்லி (வெண்மை நிறம், தங்க மையம்) |
Nymphaea (Yellow shades) | உதாரகுணச் செல்வம் | அல்லி (மஞ்சள் நிற பரவியது) |
Cactus | தனம் | கள்ளி |
Hedge Cactus Cereus | அதிர்ஷ்டம் | |
Coconut palm Cocos nucifera | பல்வகைச் சிறப்பு | தென்னம்பூ |
Lantana (White) | உடலின் தூய்மை | உணிப்பூ |
Alexandrian Laurel Calophyllum inophyllum | உடல் அமைதி | புன்னைப்பூ |
Turmeric Curcuma | அமைதி, சாந்தம் | மஞ்சள் செடி பூ |
Hibiscus Hibiscus miniatus (deep salmon orange) | நிரந்தர இளமை | |
Chinese Woolflower Celosia argentea | மரணமிலா வாழ்வுக்கான ஆர்வம் | பண்ணைக் கீரைப்பூ |
Bougainvillea (White) | பூரணப் பாதுகாப்பு | காகிதப்பூ (வெண்மை) |
Ravenia spectabilis | சந்தோஷமான இதயம் | |
Sorrowless tree of India, Asoka Saraca indica | சோகமின்மை | அசோகம்பூ |
Glory lily; Flame lily Gloriosa | சச்சரவின்மை | செங்காந்தள் |
Carnation Dianthus caryophyllus | கூட்டுறவு | |
Citronella grass, Lemon grass Cymbopogon | உதவி | வாசனைப் புல்; கற்பூரப்புல் |
Bitter gourd Momordica charantia | இனிமை | பாகல்பூ |
Ridge gourd Luffa acutangula | அன்பான மனம் | பீர்க்கம்பூ |
Blanket flower Gaillardia pulchella Lorenziana ( compositae flowers with trumpet- shaped florets) | வெற்றிகரமான எதிர்காலம் | |
Forget-me-not Myosotis | அழியா நினைவு | |
Cassia species Yellow flowers | கவனமான மனம் | ஆவாரம்பூ; பொன்னாவரை |
Christ’s Thorn Euphorbia milii | ஒருநிலைப்பட்ட மனம் | |
African marigold Bright yellow) Tagetes erectaSpun Yellow | மனத்தின் தெம்பு | துலுக்க சாமந்தி (பளிச்சிடும் மஞ்சள்) |
Shasta daisy Chrysanthemum Maximum | படைக்கும் சொல் | |
Snapdragon Antirrhinum majus | தெளிவின் திறன் | |
West Indian Holly Sage Rose Turnera ulmifolia | விழிப்பான மனம் |
Eranthemum nervosum | மனத்தில் மௌனத்தை நாடும் ஆர்வம் | |
Wandering Jew Zebrina pendula | பிராணனின் வமை | |
Sweet alyssum Lobularia maritima | நல்லெண்ணம் | |
Jacaranda | உணர்வில் நல்லெண்ணம் கொள்ள முயல்வது | |
Herald’s trumpet Easter Lily Vine Beaumontia jerdoniana | தன்னலமற்ற தன்மை |
Day flower Commelina species | தர்மம் | |
Brinjal; Egg Plant Solanum torvum | பயமின்மை | கத்தரிப்பூ |
Amaranth Amaranthus bicolor ‘Molten Fire’ | வீரம் | |
Cockscomb Celosia argentea ‘Cristata’ | தீரம் | கோழிக் கொண்டை |
Hibiscus (light to medium red) | பொங்கிவரும் சக்தி | செம்பருத்தி (சிவப்பு) |
Hibiscus (grey lavender to deep lavender, single, magenta- centre) | முயற்சியின் திறன் விடாமுயற்சி | |
Pot marigold Calendula officinalis | ||
Wedelia | மஞ்சள் கரிசலாங்கண்ணி | |
Acalypha | தொடர்ந்தசெயல் | |
Acalypha wilkesiana Copper leaf | உணர்வின் தொடர்ந்த செயல் | |
Floss Flower Ageratum houstonianum | உணர்வின் பொறுமை | |
Zinnia | பொறுத்துக்கொள்ளும் திறன் | |
Bleeding Heart; Glorybower Clerodendrum speciosum | நல்லமனப்பான்மையை அடையும் ஆர்வம் |
Oleander (single, crimson) Nerium Oleander | into Right தவற்றை நேர்படுத்துவது | அரளி |
African violet Saintpaulia ionantha (purple) | உணர்வின் சரியான செயல் | |
Wallflower Cheiranthus cheiri | அசையாத நம்பிக்கை | |
Blanket flower Gaillardia pulchella, ‘picta’ | சிரித்த முகம் | |
African daisy Arctotis stoechadifolia ‘Grandis’ | சந்தோஷமான முயற்சி | |
Bauhinia purpurea | உணர்வின் வலு | மந்தாரை |
Allamanda cathartica | வெற்றி | |
Sesbania grandiflora | சித்தியின் ஆரம்பம் | அகத்திப்பூ |
Kopsia fruiticosa | தீவிர முடிவு | |
Lady of the Night Brunfelsia americana | முடிவு | |
Sesame; Gingelly Sesamum indicum | சமரசம் | எள்ளுப்பூ |
Bottle gourd Lagenaria vulgaris | உணர்வின் அபரிமிதம் | சுரைக்காய்பூ |
Touch-me-not Balsam, Snapweed Impatiens balsamina | உதாரகுணம் | காசித்தும்பை |
Tristellateia australis | மனத்தின் நேர்மை | |
Oleander (double pink) Nerium oleander | பொய்யின் சரணாகதி | அலரி (அடுக்கு, இளஞ்சிவப்பு) |
Transvaal daisy; Gerbera jamesonii | மனம் திறந்து பேசுதல் | |
Chalice vine; Cup-of-gold vine Solandra hartwegii | முழுமையான உண்மை | |
Wormia bourbridgii | சத்தியத்தை நாடும் முயற்சி | |
Pereskia | ஒருபொழுதும் பொய் சொல்லாதே | |
Cornflower;Bachelor’s button Centaurea cyanus | இலட்சியம் | |
Tuberose Polianthes tuberosa | புதிய சிருஷ்டி | சம்பங்கி |
Dahlia (very large, dark red) | பெருந்தன்மை | |
Sweet Pea Lathyrus odoratus | மிருதுவான பழக்கம் | |
Candytuft Iberis | மனத்தின் நிதானம் | |
Begonia (small) | செயலில் நிதானம் |
Begonia (double) | பூரண நிதானம் | |
Jasmine Jasminum | தூய்மை | மல்லிகை |
Skyflower;Pigeon Berry; Golden dewdrop Duranta erecta | வாழ்க்கைத் தூய்மைக்கான ஆர்வம் | |
Eye flower; Nero’s Crown Tabernaemontana coronaria | மனத்தூய்மை | |
Dahlia (medium fairly large, double) | உயர்ந்த மரியாதை | |
Rangoon creeper Quisqualis indica | விஸ்வாசம் | இரங்கூன் மல்லிகை, கொலுசுப்பூ |
Ipomoea carnea | நன்றியுணர்வு | பூவரசுகொடி |
Operculina Turpethum | பூரண நன்றியுணர்வு | |
Coriander Coriandrum sativum | மென்மை | கொத்த மல்லிப்பூ |
Changeable rose ; Cotton rose Hibiscus mutabilis | தெய்வ அருள் | பருத்தி ரோஜா |
Hibiscus albovariegata (medium, double,variegated red) | நம்பிக்கை | |
Oleander ; Nerium oleander (white, shaded light pink) | இறை நினைவு | அலரி(வெண்மை, இளஞ்சிவப்பு பரவியது) |
Japanese honeysuckle Lonicera japonica | இடைவிடாத இறை நினைவு | |
Solanum seaforthianum | இறைவன் துணையை நாடுதல் | |
True Myrtle Myrtus communis | இறைவனுக்காக மட்டும் வாழ்தல் | குழிநாவல் சதவம் |
Hibiscus ‘Hawaiian’ (very pale yellow- with light pink | இறைமுடி | |
Moses-in-a-boat Rhoeo spathecea | தெய்வ சான்னித் | |
Wine Grape Vitis vinifera | தெய்வ ஆனந்தம் | கொடி முந்திரி; பச்சை திராட்சை; திராட்சைப்பழம் |
Sweet Majoram Origanum majorana | புதிய பிறப்பு | மருக்கொழுந்து |
Zephyr Lily; Fairy lily Zephyranthes | பிரார்த்தனை | |
Punica granatum Pomegranate(which does give fruit) | தெய்வீக அன்பு | பழம் கொடுக்காத மாதுளம்பூ |
Screwpine Pandanus tectorius | ஆன்மீக மணம் | தாழம்பூ |
Divi-Divi Caesalpinia coriaria | யோக ஞானம் | கொடிவேலம்; திவிதிவி |
Frangipani Plumeria | உணர்வின் சிறப்பு | பெருங்கள்ளி |
Hibiscus (double, light salmon-pink,deep red Centre) | ||
Indian Almond Terminalia catappa | ஆன்மீக ஆர்வம் | நாட்டு வாதாம்பூ, பாதாம்பூ |
Thorn straggler Capparis brevispina | மூன்று ஆர்வங்கள் | |
Tulsi Ocimum sanctum | பக்தி | துளசி |
Leucas aspera | உண்மை வழிபாடு | தும்பைப்பூ |
Dropseed Sporobolus capillaris | அடக்கம் | |
Edward Rose; Country Rose Rosa | சரணாகதி | நாட்டு ரோஜா |
Hollyhock Alcea rosea | காணிக்கை | சீமைத்துத்தி |
Moonflower Calonyction alba | பூரணமாகத் தன்னை சமர்ப்பணம் செய்வது | |
Butterfly Pea; Mussel-shell creeper Clitoria ternatea (ultra marine colour) | ராதையின் உணர்வு | சங்குப்பூ |
Copper pod Peltophorum Pterocarpum | சேவை | பெருங் கொன்றை; இயல்வாகை |
Mexican sunflower Tithonia rotundifolia | தெய்வத்தை நாடும் உடலுணர்வு | |
Blue Crown Passion Flower, Passiflora caerulea | மௌனம் | |
Gladiolus | பாக்கியம் | |
Barleria | விழிப்பு | டிஸம்பர்பூ |
Thunbergia erecta | ஒளியைப் பெறும் விழிப்பு | |
Thunbergia kirkii | ஸ்ரீ அரவிந்தருடைய சக்தியைப் பெறும் விழிப்பு | |
Barleria cristata (white) | இறைவனை நாடும் ஜீவனின் விழிப்பு | |
Indian cork tree Millingtonia hortensis | திருவுருமாற்றம் | மரமல்லிகை |
Hiptage benghalensis | ஆன்மீக வெற்றி |
Heliotrope Heliotropium Peruvianum | உணர்வின் சமர்ப்பணம் | |
Malvaviscus arboreus | தெய்வத்தின் அரவணைப்பு | |
Acacia auriculiformis | வேலை | |
Caper tree Crataeva nurvala | Enlightened Mind தெளிவான மன செயல் | |
Randia | ஒழுங்கு | |
Tiger-claw plant Martynia annua | ஸ்தாபன ஒழுங்கு | |
Basil Ocimum basilicum | கட்டுப்பாடு | திருநீற்றுப் கட்டுப்பாடு பச்சை |
Chinese pink Dianthus chinensis | கீழ்ப்படிதல் | |
Pseuderanthemum | ஸ்தாபனம் | |
Pseuderanthemum (white colour) | பூரண ஸ்தாபன | |
Pseuderanthemum (white with red centre) | ஸ்தாபிக்கும் ஆர்வம் | |
Pseuderanthemum (white with red dots) | நுணுக்கமான ஸ்தாபனம் |
Carambola Averrhoa carambola | ஸ்தாபன ஒத்துழைப்பு | தமரத்தங்காய் |
Queensland Umbrella Tree Brassaia actinophylla | முறையான ஸ்தாபனத் திறன் | |
Chrysanthemum ‘Cascade’ or ‘Charm’ (Small to tiny, compositae flowers) | சிறப்பான நுணுக்கமான திறன் | |
Drumstick Tree Moringa | சுத்தமான ஸ்தாபன | முருங்கைப்பூ |
Senecio Groundsel | கவனிப்பு | |
Spider plant Chlorophytum comosum ‘Vittatum’ | பொறுப்பு | |
Perennial verbena Verbena hybrida | தவறில்லாத அமைப்பு | |
Phlox Phlox drummondii | செயல்திறன் | |
Shrimp Plant Beleperone guttata | சிறப்புக்கான ஆர்வம் | |
Rondeletia Odorata | மஹாசரஸ்வதியின் செயல் சிறப்பு | |
White silk cotton tree Ceiba pentandra | செயலாற்றும் ஸ்தாபனச் சிறப்பு | இலவம்பூ |
Vinca rosea Catharanthus roseus (light pink; red centre) | உடல் இடைவிடாத முன்னேற்றம் | நித்யகல்யாணி (இளஞ்சிவப்பு, சிவப்பு மையம்) |
Catharanthus roseus (white) | பூரண முன்னேற்றம் | நித்ய கல்யாணி |
Hibiscus ‘Hawaian’ (small to medium, single, cream white, deep pink centre) | முன்னேற்றத்திற்குரிய சக்தி | |
Pussy-willow Salix discolor | எதிர்காலம் | |
Hibiscus Hawaiian (medium to large, single flower, solid pink, reddish to pink centre) | சிருஷ்டியின் பயன் | |
Hibiscus ‘Hawaiian’ (large, single, cream-white) | வெற்றிக்குரிய சக்தி | |
Flame Vine Pyrostegia venusta | சத்தியஜீவிய மழை | |
Porana volubilis | தண்ணீர் | |
Canna | சக்கரங்கள் | கொட்டை வாழை; கல்வாழைப் பூக்கள் |
Perennial aster; Italian aster Aster amellus | எளிய உண்மை |