சத்ய சாய் பாபா – 18

18. போதை நீக்கும் போதகன்

வியாதிகளில் எத்தனை கொடியது, போதைப் பொருள்களைப் பழக்கிக்கொண்டு அடிமையாகும் அவல நிலை? கிருமிகளால் ஏற்படும் நோயைத் தீர்ப்பதைவிட மனத்தின் கிருத்ரிமத்தால் ஏற்பட்டு வேரோடி விடும் பழக்கங்களைக் களைவது எத்தனை கடினமானது? தானாகவே வரவழைத்துக் கொள்ளும் இந்த ஸ்வயம்கிருத அனர்த்தத்தில் இழிவுற்று விழுந்துவிடும் மனிதனை ஸத்ய ஸாயி எழுப்பி நிறுத்திப் பழக்கத்தை அப்பழுக்கற கல்லி அப்புறப்படுத்தும் அற்புத அருள் அது தனியாக ஓர் அத்தியாயம் பெற வேண்டிய அம்சம்தான்.

***

ம்முடையகிங்குக்கு அறவே பிடிக்காததுஸ்மோக்கிங்‘. இதில் எந்த ஆசார்ய புருஷரையும் விட அவர் கண்டிப்பானவர். கண்டிப்பையே பரம ஹாஸ்யமாக அவர் ஆக்கிய ஒரு நிகழ்ச்சியை மறைவிலே புகைத்த ஒரு மாணவனின் புகைக்கும் கோலப் புகைப்படத்தையே சிருஷ்டித்துக் காட்டி அப்பழக்கத்தைப் புகைத்துப்போக வைத்த நகைச்சுவை நாடகத்தைஸ்வாமி”, 12ம் அத்தியாயத்தில் சொல்லியிருக்கிறேன்.

யூ.டி. ஸந்தானத்துக்கும் ஸிகரெட்டுக்கும் சிநேகிதம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ஒரு கால் நூற்றாண்டுத் தொடர்பாக வெள்ளி விழாவுக்கே உரித்தாகி விட்டிருந்தது அவரது புகைப்பழக்கம். இந்த நீண்ட இடைக் காலத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, மூன்று சிகரெட்டில் ஆரம்பித்தது முப்பதில் சிகரமிட்டது.

இந்த அத்யந்த உறவுக்கு அந்திம நாள், D-Day, 1978 ஸெப்டெம்பர் 21 என்றும், அதனால் அதுஎன் பிரேமன் ஸ்வாமியின் தினம்என்றும் நெகிழ்ந்து கூறுகிறார் ஸ்ரீ ஸந்தானம். அன்று முற்பகல் புதிசாக ஒரு பாக்கெட் வாங்கி, அதிலிருந்து ஒன்றைஇழுத்துவிட்டு, ஸாயி பக்தரான ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றார். இவரை உட்கார வைத்துவிட்டு நண்பர் ஒரு அதிசயம் சொன்னார் அன்று காலை அவர் குருவார பூஜை செய்தபோது ஸ்வாமி உருவெளிக் காட்சி கொடுத்தாராம். அவரைக் குறித்து ஏதும் சொல்லாமல், ஸந்தானத்தின் புகைப் பழக்கத்தை நிறுத்தச் சொல்லிவிட்டு மறைந்தாராம்.

ஸந்தானத்திடமே கனவிலோ, வேறு விதமாகவோ சொல்லியிருக்கக்கூடாதோ என்றால், அப்புறம் லீலா நாடகம் என்பது என்னவாகிறது? இப்படி ஒருவரிடம் இன்னொருவர் குறையைச் சொல்லித் திருத்த உத்தரவிடுவதும் ஸ்வாமி அபூர்வமாக ஆடுகிற ஓர் ஆட்டமாகும். குறை கூறப்படுபவர், குறை கூறுபவரிடமே இதனால் குறைகண்டு, ‘ஸ்வாமி இடைத்தரகர் இல்லாமல் தாமே ஒவ்வொரு பக்தரையும் கையாள்பவராச்சே; எவருடைய குற்றத்தையும் இன்னொருவரிடம் காட்டிக் கொடுக்கமாட்டாரே; அதனால் இது இந்த ஆசாமியே அடிக்கிற கப்ஸாதான்என்று நினைத்து, அவர்களிடை அபிப்பிராய பேதம் ஏற்படுவதும் கூட லீலா நாடகத்தில் அல்லது கர்ம நீக்கத்தில் ஓர் அபூர்வ அங்கம்தான்.

நல்லவேளை, ஸந்தானம் நண்பரை ஸந்தேஹிக்கவில்லை. “ஸ்வாமி சித்தம் இதுவானால் இந்த நிமிஷத்திலிருந்து நான் ஸிகரெட்டைத் தொடுவதில்லைஎன்றார். ஸ்வாமியின் சித்திரத்துக்குத் தண்டமிட்டு, “இந்த நீண்ட காலப் பழக்கத்தின் விருப்ப முளையை நீயே கிள்ளியெறிய வேண்டும்என்று மனமாரப் பிரார்த்தித்தார்.

ஆரோக்யத்தை முன்னிட்டே புகைப் பழக்கத்தை ஆக்ஷேபிக்கும்ரீடர்ஸ் டைஜஸ்ட்போன்ற பத்திரிகைக் கட்டுரைகளைப் பார்த்தால் தெரியும், இந்தப் பழக்க வாஸனை, அல்லது துர்வாஸனை, களைய முடியாதபடி எத்தனை ஆழமாக ஆணிவேர், சல்லிவேர் விட்டு ஓடுவது என்று. ஸிகரெட் மட்டுமல்ல; மதுபானம், அபின், கஞ்சா உண்பது, ஸமீப காலத்தில் முரசு கொட்டிப் பரவி வரும்ட்ரக் அடிக்ஷன்போன்ற எல்லா போதைப் பொருள் பழக்கமுமே பேயாகப் பிடித்துக் கொள்பவையாகும். ஸினிமாவும் ஒரு மஹா மஹா போதைதான். பகையறியா ஸ்வாமி இவையாவற்றுக்குமே எனிமி நம்பர் ஒன்!

ஸ்வாமி சித்ரத்தின் முன் பிரதிக்ஞை செய்த போதிலும் சபலமும், போராட்டமும், ஆசாபங்கமும் ஒரு வார காலம் ஸந்தானத்தைப் பாடாகப்படுத்தின. சூளுரை மீறி ஸிகரெட்டைத் தொட்டே விடுகிற நிலையிலும் கட்டுப்படுத்திக் கொண்டார். பிரார்த்தனை, பிரார்த்தனை, பிரார்த்தனை அப்படியொரு பிரார்த்தனை செய்தார். வெற்றி கண்டார். வெற்றி அவருடைய உறுதிக்கா, பிரார்த்தனை சக்திக்கா, பகவானின் கிருபைக்கா?

சில காலத் தத்தளிப்பால் தாம் பெற்ற சிரகால லாபத்தை எண்ணிப் பூரித்தார் ஸந்தானம். “என்ன நிம்மதி? எத்தனை பணம் மிச்சம்? ஆரோக்யத்தில் எவ்வளவு அபிவிருத்தி? கடைசியாக, ஆனால் முக்யத்தில் கடைசியாக அல்ல, என் அகமுடையாள் முகத்தில் எப்படிப்பட்ட மலர்ச்சி?” என்கிறார். “என் அனுபவத்தைப் படித்த பின் என் பக்த சோதரருள் ஒருவரேனும் இப்பழக்கத்தை உடனே விட்டால் இந்த உலகிலேயே என்னிலும் ஆனந்தமுடையவர் இருக்க முடியாது. மனோபலத்தை இழக்க வேண்டா. ஸ்வாமி எக்காலும் கூட இருக்கிறார். என் அழைப்புக்கு வந்ததுபோல் உங்களுக்கும் வருவார். சற்றும் சந்தேகமில்லைஎன்று சாற்றுகிறார்.

***

ஸ்வாமியின் ஜன்ம ஸ்தலத்துக்கு ஏறக்குறைய மைதையான அந்தஸ்தை பெங்களூர் ஒயிட்ஃபீல்டுக்கு பகவான் தந்திருப்பதற்குப் பல காரணங்களிருக்கலாம். ரேஸிலும், குடியிலும் முழுகிய பெங்களூரில், தம் சக்தியால் ஆயிரமாயிரவரை இந்தஅச்வமேதத்திலும், ‘தீர்த்தாடனத்திலும் பாழாகாமல் ஸ்வாமி கரை சேர்த்திருப்பதையும் ஒரு முக்யமான காரணமாகக் கருதலாம்.

***

ருவரை சோனியாகவும், பலவானாகவும் இரண்டு போட்டோக்களில் காட்டி, அதில் இளைத்த கோலம் தங்கள் மருந்தைச் சாப்பிடு முன் என்றும், பருத்த கோலம் மருந்தைச் சாப்பிட்ட பின் என்றும் மருந்து உற்பத்தியாளர்கள் விளம்பரம் செய்வதுண்டல்லவா? இதுபோல ஸ்ரீ ஆங் சூயீது ஆஹ் என்ற மலேஷியச் சீனரின் கன்னம் ஒட்டி, கண் குழிந்து, ஏக்கம் கவ்விய முகத் தோற்றத்தையும், பக்கத்திலேயே அவரது தளதளக்கும் கன்னமும், ஒளி மினுக்கும் கண்ணும், ஊக்க நகையும் கூடிய இன்னொரு படத்தையும் வெளியிட்டிருக்கிறார் ஸ்ரீ ஜெகா, தனதுஜர்னி டு காட்புத்தகத்தில். முன் படம், அவர் ஸாயி அருள் பெறுமுன்; பின்னது அருள் பெற்ற பின்.

எந்த அம்சத்தில் அருள் என்றால்: ஐந்து குழந்தைகளும் மனைவியும் கொண்ட குடும்பத்துக்குத் தலைவரான துறைமுகத் தொழிலாளி ஸதுரதிருஷ்ட வசமாகத் தமது முப்பத்தைந்தாவது வயதில் கெட்ட வா ஹவாஸத்துக்கு ஆளானார். அப்போது பிடித்துக் கொண்டது சந்து என்ற அபினி வகையைப் புகைக்கும் பழக்கம். புகை நல்ல மேக மந்தையாகவே மூண்டுவிட்டது. புகைக்காமல் பத்து மணி நேரத்துக்கு மேல் போனால், தோல் கொதிப்பு கண்டு உடம்பெல்லாம் வியர்வை வெள்ளமாகும். கை நரம்புகள் முறுக்கிக் கொள்ளும். உடல் முழுதும் வலி பிளந்து தள்ளும். சாகமாட்டோமா என்றாகிவிடும். இருநூறு டாலர் சம்பளத்தில் குடும்பப் பாடே பெரும்பாடாக இருக்கும்போது, அதில் சுமார் பாதியாவது சந்துவுக்குச் செலவிடாவிடில் முடியாது என்றாகிவிட்டது. விட்டால் கஷ்டம் என்றால், விடாததால் மட்டும் சௌக்யமா ஏற்பட்டது? இந்தப் பழக்கத்தால் முப்பத்தெட்டாவது வயதிலேயே மூப்புற்ற கிழவனாகச் சுருங்கி விட்டார். அப்போது எடுத்ததுதான் அந்த முதற் படம். போதாக்குறைக்கு இந்த சட்ட விரோதமான காரியத்துக்காகப் போலீஸில் பிடிபடுவோமோ என்ற கிலி வேறு.

தடுமாறித் தவித்துக் கொண்டிருந்த ஆங் இன்னொரு தொழிலாளியான ஸ்ரீ ராஜாராம் என்பவரிடமிருந்து நம் பகவானைப் பற்றிக் கேள்விப்பட்டார். “நான் மொடாக் குடியனாக இருந்தேன். என் சண்டைக் குணம் குடிவெறியில் மேலும் தீவிரமாகிவிடும். இத்தனை கெடுதலின் நடுவில் தினம் சிறிது யோகாப்பியாஸம் செய்வதும் சமய நூல்கள் படிப்பதும் வழக்கமாகக் கொண்டிருந்தேன். பாபா பற்றிப் படித்தேன். அவதாரி என்ற நம்பிக்கை பெற்றேன். ஸாயி பஜன்களுக்குப் போக ஆரம்பித்தேன். ஒருநாள் பாபா டாலர் ஒன்று வாங்கி அணிந்து கொண்டேன். அந்த விநாடியே மதுபான வேட்கை என்னைவிட்டு ஓடிவிட்டது. உருப்பட ஆரம்பித்தேன்என்று ராஜாராம் உருக்கமாகச் சொன்னார்.

உருப்படத் தவித்த ஆங் உடனே பாபாவை அடைக்கலம் புகுந்தார். தாமும் ஸாயி பஜனைகளுக்குச் செல்ல ஆரம்பித்தார். ஸாயி சந்திரனின் ரஸம் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இறங்க சந்துவின் ரஸத்தில் வேட்கை தணியலாயிற்று. ஒரு பாபா டாலரும் வாங்கி அணிந்தார் ஆங். ராஜாராமுக்குக் கொடுத்த அதே அருளை இவருக்கும்டிட்டோசெய்தார் ஸ்வாமி. சந்துவின் அழைப்பு, இழுப்பு அடியோடு நலிந்து விழுந்தது. ஐந்தாண்டாகப் பிடித்தாட்டிய வேதாளம் பாதாளத்துக்குப் போய்ச் சேர்ந்தது. கனவிலே அடிக்கடி வந்து அவரைத் தம் கனிவிலே காத்து வருகிறாராம் ஸ்வாமி. காப்புக்கு பிரத்யக்ஷ ஸாக்ஷியம் ஆங்கின் இரண்டாவது புகைப்படம்!

தற்போது க்ளாங் என்ற இடத்திலுள்ள ஸத்ய ஸாயி ஸேவா தளத்தில் வெகு உற்சாகத்துடன் தொண்டு புரிந்துவரும் இன்னொரு மலேஷியத் துறைமுகத் தொழிலாளி ஸ்ரீ எஸ். ஜாக்ரியாஸ் என்ற கிறிஸ்துவத் தமிழர். இவர் போதைப் பொருள் வசியத்தால் ஆங்கை விடவும் அவஸ்தைப்பட்டவர். ஹெரோயின் என்ற லாஹிரிப் பண்டம் வைத்தடாலர் 1ஸிகரெட்பிடிக்கும் துர் வழக்கம் இவருக்கு இருபத்தைந்தாவது வயதில் ஏற்பட்டது. அது 1973ம் ஆண்டு. இதில் அவர் அடைந்த கிளுகிளுப்பு அவரைப் படுகுழிக்குக் கிடுகிடுவென அழைத்துப்போகத் தொடங்கியது. சிகரெட்டினால் தம் தேக நலனும் மனோபலமும் ஊறு பெறுவதை இவர் உணர்ந்து, அப்பழக்கத்தை நிறுத்த முயன்றபோதுதான் அதன் ஆதிக்க சக்தி எத்தனை அசுரத்தனமானது என்பதைப் புரிந்து கொண்டார். எலும்புக்குள் ஓடும் சத்து வரை துளைக்குமாறு கத்தியால் குத்தினால் எப்படித் துன்புறுத்தும்? அத்தகைய வேதனை ஹெரோயின் இல்லாவிடில் உண்டாயிற்றாம்! பணம் பற்றாக் குறையாலும் மார்க்கெட்டில்டாலர் 1-ஸிகரெட்கிராக்கி ஆனதாலும் பழக்கத்தைக் கொஞ்சம் நிறுத்த நேரிட்டாலும் உடனே உள்ளே சூழும் அனற் புழுக்கள்! அப்பப்பா! சுவரிலும், இரும்பு பார்களிலும் முட்டி மோதிக் கொள்வார். உடலெல்லாம் வெட்டுக் காயமுண்டு ரத்தம் சொட்டுவார். இந்த லக்ஷணத்தில் அந்த வயதிலேயே கல்யாணமாகி, இரண்டு குழந்தைகள் வேறு! குடும்ப வாழ்வு சிதிலமாகியிருந்தது. ஹெரோயினுக்காக அவரது கடிகாரம், ஸைக்கிள், மனைவியின் நகைகள் யாவும் வட்டிக் கடைக்குப் போயின.

ஸ்போர்ட்ஸ் விற்பன்னராக ஒரு காலத்தில் கட்டுமஸ்தாக இருந்த ஜாக் 160 ராத்தலிலிருந்து 115 ராத்தல் எடைக்கு வந்து, வெம்பல் பழமாகி, சோர்வும் சோகமுமே உருவாகிவிட்டார். நான்கு மாதங்கள் என்னென்னவோ வைத்தியமும் செய்து கொண்டார். பைத்தியப் பழக்கத்தை வைத்தியம் மாற்ற முடியவில்லை.

சக தொழிலாளர்களால் ஒதுக்கப்பட்டு, சிந்தாக் கிராந்தராகக் கப்பலொன்றில் துவண்டு விழுந்தார் ஒரு நாள். ‘ஒரு நாள்என்று அடையாளமின்றித் தள்ளாமல், அன்று தேதி 1975 ஜூலை 18 எனக் குறித்து வைத்துக் கொண்டிருக்கிறார். அருகே ஒரு தொழிலாளர் மற்றவர்களுக்குத் தமிழில் ஏதோ படித்துக் கொண்டிருந்தார். ஜாக்கின் செவி அதில் ஈடுபட்டது. ஏதோ ஒரு பத்திரிகையில் ஸ்ரீ ஸத்யஸாயி பாபாவைப் பற்றி வந்திருந்த கட்டுரை படிக்கப்படுகிறது. அவரது அன்புசால் அற்புதங்களைப் பற்றிக் கேட்கக் கேட்க ஜாக்குக்கு உருக்கம் உண்டாயிற்று. படிப்பவருக்கு அருகிலேயே பின்னால் போய் நின்று கொண்டார். படித்து முடித்த பின் அந்தப் பத்திரிகையைக் கேட்டு வாங்கிக் கொண்டார், முதலில் தமக்குத் தெளிவாகக் கேளாததையும் படித்துத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்.

ஆனால் இவர் தனியாகக் கட்டுரையைப் படிக்கத் தொடங்கியபோது ஒன்றுமே அர்த்தமாகவில்லை. ஹெரோயின் வேட்கை உள்ளேயிருந்து இவரது சித்தத்தை வேட்டையாட ஆரம்பித்ததன் விளைவு! உள்ளே துளைத்த நோவில் கட்டுரையைப் படித்துப் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே அம்முயற்சியை விடுத்து அதில் பிரசுரமாயிருந்த பகவானின் திரு உருவத்தில் கண்ணைச் செலுத்தினார். வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் சில நாழி. “ரக்ஷகனாக வந்திருக்கிறேன் என்று நீ சொல்வதாகப் படித்தார்களே! நீ மெய்யாலுமே இப்படி பலரைக் காத்து வருகிறாயெனில் என்னையும்தான் ஏன் காக்கக்கூடாது?” என்று புத்தகத்திலிருந்த வித்தகரிடம் பேசினார். பேசிக் கொண்டே படத்தைப் பார்க்க, ஜாக்கினுள் இனம் தெரியாத ஏதோ ஓர் உணர்வு எழும்பியது. முடியும், கையின் ரோமமும் குத்திட்டு நின்றன. வேட்கை வேட்டை தேய்வது தெரிந்தது. அதோடு வலி வேதனை குறைவது நன்றாகப் புரிந்தது. ஒரு வேகத்தில் படத்தைப் பத்திரிகையிலிருந்து கிழித்துக் கையில் பிடித்தபடியே வீட்டுக்குப் புறப்பட்டார். ஆஹா, அதன் சக்திதான் என்னே? ஒரு மாடு கொட்டிலுக்கு வந்தால் தன்னால் நின்று விடுவதுபோல, எத்தனையோ மாதங்களாகத் தினந் தினமும் இவருடைய கால் ஒருடாலர் ஸிகரெட்கடைமுன் தன்னால் நின்று வியாபாரம் புரிய வைக்கும். இன்று அந்தக் கால் அதே கடையின் முன் நிற்காமல் நடையைக் கட்டியது!

வீடு அடைந்ததும் படுக்கையறையின் மரச் சுவரில் படத்தைக் குத்தி மாட்டினார் ஜாக். குளித்தார். இதுவரை செய்தநித்ய கர்மாநுஷ்டானமான ஹெரோயின் தூப உபசாரத்தை இன்று செய்து கொள்ளாமல், படத்தின் முன் அமர்ந்து, அதில் தர்சனம் தந்த துரையிடம், துறைமுகத்தில் கேட்டதையே மீண்டும் கேட்டார். “ரக்ஷகனாக வந்திருக்கிறேனென்று நீ சொல்லிக்கொண்டு, அவ்வாறே பலரைக் காத்தும் வருகிறாயெனில் என்னையுந்தான் காக்கலாகாதா?”

அப்புறம் சுமார் ஒரு மணி தன்னை மறந்த தியானம் போன்ற நிலையில் அந்தச் சித்திர தேவதையையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, கண் அயர்ந்து விட்டார். எத்தனையோ காலமாகத் தம்மை விட்டு ஓடிப் போயிருந்த ஆழ்ந்த நித்திரையில் திளைத்த பின் விழித்தெழுந்த அவர் கண்களில் நேரே பதிந்தது அதே படம்தான்.

பல் துலக்கு முன்பே ஒரு இழுப்பு இழுக்கும் பலகாலப் பழக்க வாஸனை அன்று காலையும் அவருடைய இதயக் கதவத்தைக் கொஞ்சம் தட்டத்தான் செய்தது. ஆனால் அதற்குப் பதில் குரலாக இவருடைய நாடியில் வழக்கமாக எழும் எரிச்சலும், எலும்பில் மூளும் கத்திக் குத்து வலியும் இன்று மவுனம் சாதித்தன. எனவே பலத்துக்கு மசியாமல் தெய்வ பலத்தை நம்பி நின்றார். அன்று பிற்பகல் மூன்று மணிக்குத்தான்ஷிஃப்ட்ஆதலால், “ஆஹா, இதுவும் ஒரு பாக்கியம்என்று மகிழ்ந்து, தனக்கு அபாரத் தெம்பும், அலாதித் தெளிவும் தந்த படஉருவ பகவானையே மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டு வீட்டோடு இருந்துவிட்டார். பிறகு வேலைக்குச் சென்றார். அது நாள் வரை இல்லாத புத்துணர்ச்சியோடு அலுவலை முடித்தார். இரவு வீடு திரும்பினார். ஆச்சரியம்! ‘ஒரு முழு நாள் ஓடிவிட்டது, தன்னை முழுகடித்த போதை வெள்ளத்தின் தாக்குதல் இல்லாமலே! ஆசை அழிந்ததோடு, அதன் பின்விளைவுகளான பயங்கர நோவுமல்லவா தடம் தெரியாமல் மறைந்து விட்டது?

ஒரு நாள் போனால் அப்புறம் கேட்பானேன்? ஒரு நாள் பல நாளாகி, ஜாக்கின் பழக்க தோஷத்தை ஸமூலம் தகர்த்தெறிந்து விட்டது. பழைய பலத்தையும், அந்தப் பழைய காலத்தில் அவர் அறிந்திராத பக்தி நலத்தையும் பெற்றார். லாஹிரிப் பிடியிலிருந்து மீண்ட ஜாக் இன்று வட்டாரம் முழுதும் ஸாயியின் பிரேம் லஹரியைப் பரப்பும் தொண்டைப் புரிந்து வருகிறார்.

***

பாபா! இங்கே இந்த ஊரிலேயே ஆண்டாண்டுகளுக்கு முன் நீங்கள் என் கிளாஸ்மேட்டாக இருந்தீர்களே! நீங்கள் என்னை மறந்திருக்க முடியாது. இந்தப் பழக்கம் என்னை எத்தனை ஆழத்துக்கு இழுத்துக் கொண்டு போய் விட்டது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களை ஸந்தேஹிப்பவர்களும் இருக்கிறார்கள். ஈச்வரனாகப் பூஜிப்பவர்களும் இருக்கிறார்கள். நான் சர்ச்சை ரீதியில் இதில் ஈடுபட விரும்பவில்லை; என் சொந்த அனுபவத்தின் மீதே விடை காண விரும்புகிறேன். விஷமான இந்த மார்ஃபியாப் பழக்கத்திலிருந்து விடுபடும் மனோ தைரியத்தையும் பலத்தையும் நீங்கள் அருள முடியுமானால் நீங்கள் கடவுளே என்று நம்புகிறேன்” 1940ல் ஸத்யநாராயண ராஜுவுடன் உரவகொண்டா பள்ளியில் படித்த மீரா மொஹியுதீன் முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிற்பாடு அவர் ஊரிலே நடந்த ஒரு ஸாயிபஜனின்போது இவ்வாறு நெஞ்சுருகி வேண்டினார்.

உரவகொண்டாவில் அவர் ஒரு டாக்டர். ஆறு பெண்களையும் நாலு பிள்ளைகளையும் அவருக்குப் பெற்றுத்தந்த மனைவி மரணமடைந்தபின், இந்தப் பெரிய குடும்பத்தின் பொறுப்புச் சுமையை மறக்க மார்ஃபியா இன்ஜெக்ஷனை நாடினார். அப்புறம் அதுவே மகாபெரிய சுமையாகி விட்டது! விஷம் ஏறுவதுபோல் டோஸேஜ் ஏறியது. இரண்டு ஊசியில் ஆரம்பித்து, எட்டே நாளில் நாலாகி, ஒரு பக்ஷத்தில் எட்டாகி, ஒரு மாதம் பின்னர் பதினாறாகி, இந்தப் பதினாறு பெற்ற பெருவாழ்விலும் திருப்தியுறாமல் அடுத்த மாதம் இருபது, அதற்கடுத்த காலாண்டில் முப்பது என்று போய் நின்றது. ஒரு நாளுக்கு முப்பது இன்ஜெக்ஷன்கள் போட்டுக் கொண்டார் டாக்டர் மொஹியுதீன். அந்த அளவுக்குக் கொஞ்சம் குறைத்தாலும் அளவிலா வேதனை செய்யும். உடலெல்லாம் வலி, இடைவிடாக் கொட்டாவி, வியர்வைப் பெருக்கு, வெள்ளமாக உமிழ்நீர் ஊறல், அங்கங்கே பிடிப்பு, எல்லாவற்றினும் மேலாக பீதி உணர்ச்சி இவை உண்டாகித் துன்புறுத்தும். இவரது வருவாய் ஆயிரம் ரூபாய்க்குள்தான். பத்து பிள்ளைகளைப் பராமரிப்பதோடு, இப்படி தினம் முப்பது ஊசிக்குச் செலவிடுவதென்றால் எப்படி முடியும்? கொஞ்சம் கொஞ்சமாக நிலங்களையும், மனைக் கட்டுக்களையும் விற்று அதில் பெற்ற முப்பதினாயிரம் ரூபாய்களை நாலாண்டுகளில் மார்ஃபியா அரக்கனுக்குக் கப்பம் கட்டினார். பிறகு விற்க ஏதுமில்லாததால், பெற்ற குழந்தைகளுக்குச் செய்ய வேண்டியதை அறவே புறக்கணிக்கும் அரக்கனாகித் தம் வைத்திய வரும்படியில் பெரும் பகுதியை மார்ஃபியாவுக்கே செலவிடலானார். குழந்தைகள் உண்ண உணவு போதாமல், உடுக்க உடை போதாமல் அநாதைகள் போல் பரிதவித்தன. பேஷன்ட் எவரேனும் ஃபீஸ் கொடுத்துப் போவாரா என்று கவனித்துக் கொண்டிருந்து, தந்தையிடம் பிச்சையெடுப்பது போல் அதை வேண்டின. “அரிசி, புளி, மிளகாய் வாங்கப் பணம் தராவிட்டாலும் நாலு பிஸ்கெட் வாங்கித் தின்னவாவது கொஞ்சம் கொடு அப்பாஎன்று பெற்ற மக்கள் முறையிடுவார்கள். அதற்கும் அவர் காது மரத்தது!

சில பேஷன்டுகளே இவரிடம் முழு ஃபீஸையும் கொடுக்காமல், பிள்ளைகளிடம் ஒரு பகுதியைக் கொடுத்து வந்த காருண்யத்தால்தான் அந்த வீட்டில் பட்டினிச் சாவு ஏற்படாமலிருந்தது. பிறகு பேஷன்டுகள் வருவதும் குறைந்தது. மார்ஃபியா மயக்கத்திலேயே இருந்துகொண்டு பலம் க்ஷணித்துப்போன ஒரு டாக்டரிடம் பேஷன்டுகள் எத்தனைக் காலம்தான்பேஷன்ஸ்காட்ட முடியும்? அதன் பின் இவர் குடும்பச் செலவு பற்றி நினைக்காவிட்டாலும் இவருடைய ஊசிகளுக்கே வெள்ளையப்பன் தேவைப்பட்டான்! அதற்காகக் கடன் வாங்கினார்; யாசகம் கேட்டார்; தாம் டாக்டரானதால் ஆஸ்பத்திரிகளில் கை நீட்டியும் மார்ஃபியாவாகவே பெற்றார். இப்படி ஒன்பதாண்டுகள் 1968லிருந்து 77வரை அவரது வார்த்தைப்படியேமுதலையையும் விடக் கொடியபிடிப்பிலிருந்து மீளமுடியாமல் கஷ்டப்பட்டார்.

இன்னொரு டாக்டர், ஸ்ரீ ஆஞ்ஜநேயுலு என்பவர், உரவகொண்டா ஸத்ய ஸாயி பஜனை ஸமாஜத்தின் தலைவரானதுதான் கடைசியில் நம் டாக்டருக்கு நிஜ டாக்டரைக் காட்டிக் கொடுத்தது. வைத்திய நண்பரின் விருப்பப்படி மீரா மொஹியுதீன் குருவார பஜனுக்குச் சென்றார். அப்போதுதான் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன் தன்னுடன் படித்த பாபாவுக்குப் பிரார்த்தனை செய்தார். பிரார்த்தனையையே பாபாவின் இறைமைக்கு உரைகல்லாக்கிய சூளுரையைப் பார்த்தோமே!

பஜனை முடிவில் தந்த விபூதிப் பிரஸாதம் கைக்கு வந்ததும் அவருள் ஒரு தீர்மானம் பிறந்தது. “என்ன வலியும் பிணியும் ஏற்பட்டாலும் சரி, அடுத்த மூன்று நாட்களில், ஒரு மார்ஃபியா ஊசிகூடப் போட்டுக் கொள்ளக்கூடாது. இப்படிச் செய்யும் உறுதியை பாபா கொடுப்பாராகில் நாலாம் நாள், இதோ இந்த பஜனை மன்றத்தார் அவரை எப்படி பகவானாக பூஜிக்கிறார்களோ அப்படியே நானும் பூஜிப்பேன்என உறுதி பூண்டார்.

நினைத்தவாறே ஒரு நாளை நிமிஷம் நிமிஷமாகப் பிடித்துத் தள்ளினார். அன்று மலஜல விஸர்ஜனம் ஏற்படாமல் அவதிப்படுத்தியது. பெருக்காக வியர்வையும், தசைகளில் இறுக்கமும், உடம்புக்குள் எரிச்சலும், ஆறாகக் கண் ஜலமும், விடாத இருமலும், இவற்றுக்கெல்லாம் மேல் ஏதேதோ இல்லாத பொல்லாத கற்பனைகளுமாகப் படாத பாடுபட்டார். அத்தனைக்கும் ஆட்டம் கொடுக்காமல் விபூதித் துகள்களை அவ்வப்போது வாயில் போட்டுக் கொண்டு வந்தார். ஆட்டத்தை நிறுத்தியது அந்த பஸ்மாவேதான் என்பது அவரது நிச்சய உணர்வாயிருந்தது. ஆனால் ஆட்டம் பார்க்கும் லீலா நாடகருமாச்சே நம் நாயகர்!

அதனால் மறு நாளை இன்னும் பயங்கரமாக்கினார். அன்று விஸர்ஜனமாயிற்று; ஆனால் ஒரே ரத்தமயம்! தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற வெறி வேறு சேர்ந்தது. அப்படியும் மார்ஃபியாவுக்கு மண்டியிட மறுத்தார் மொஹியுதீன்.

மூன்றாம் நாள்இன்றோடு தம் கதை முடிந்துவிடும்; இந்த இருபத்துநாலு மணிக்குமேல் உயிர் உடம்பில் தங்க முடியாதுஎன்றே நினைத்து விட்டார். எப்படியோ அன்று பகலும் போயிற்று. இன்னம் பன்னிரண்டு மணி ஓடுமா? பாபா பகவானாக நிரூபணம் பெறுவாரா? ரொம்பவும் சந்தேகந்தான்! இரவிலே மொஹியுதீன் போட்ட கூச்சல், புலம்பிய புலம்பல், அப்பப்பா! காலால் தரையை உதைப்பார், தரை கால் இரண்டுமே உடைகிற மாதிரி! தலையைத் தூணில் மோதிக் கொள்வார்ணங் ணங்என்று. பசங்களெல்லாம் சித்ரஹிம்ஸைப் படும் தகப்பனாரைப் பார்த்து ஓலமிட்டன. அண்டை அயலாரும் கூடிக் கண்ணீர் விட்டார்கள். “பரவாயில்லை, மார்ஃபியா போட்டுக் கொள்ளுங்கள்என்று தூண்டினார்கள்.’

என்ன ஆச்சரியம்! “மாட்டவே மாட்டேன்என்றார் மொஹியுதீன்.

இந்தக் கண்றாவி தாங்க முடியாமல் இரவு மூன்றே முக்கால் மணிக்கு ஒரு சக டாக்டர் அவருக்கு நாலு மார்ஃபியா ஊசி போட முனைந்துவிட்டார்.

ஹூம்என்று மொஹியுதீன் மறுத்தார். ‘இத்தனைக் காலம் பல்லைக் கடித்துக் கொண்டிருந்து விட்டு, இன்னம் இரண்டே மணியில் நாலாம் நாள் விடியவிருக்கும்போது வாக்குத் தவறுவேனா? எலும்பெல்லாம் பொடித்தாலும் சரி, ரத்த நாளங்கள் வெடித்தாலும் சரி, மார்ஃபியா மோஹினிக்கு மயங்கமாட்டேன்.’ மொஹியுதீன் தம் குட்டிப் பெண்ணைப் பார்த்தார். “ஹஃபீஸா, அதோ அந்த ஷெல்ஃபில் இருக்கிற விபூதியில் கொஞ்சம் கொண்டு வாஎன்றார். கொண்டு வந்ததும் சிட்டிகை வாயிலிட்டுக் கொண்டு நீர் பருகினார்.

பத்து நிமிஷத்தில் வெறி சமனமாயிற்று. பாவம், அவஸ்தையான அவஸ்தைப்பட்ட ஜீவன் ஆழ்ந்த நித்திரையின் வசமாயிற்று. நித்திரையில் நிச்சிந்தையாக எங்கோ புனிதயாத்திரை செய்வது போலிருந்தது. கண் விழித்தபோது கெடு முடியும் நாலாம் நாள், பகல் மணி பதினொன்று! என்ன அமைதி, எப்பேர்ப்பட்ட சாந்தி வந்து அவருக்குள் புகுந்துவிட்டது, ஒன்பதாண்டு ஆட்டத்திற்குப் பின்! மனத்தில் அலாதித் தெளிவு பிறந்திருந்தது. சரீரத்தில்ஆஃப்டர்எஃபெக்ட்என்கிறபின்விளைவான இம்சைஇம்மியுமில்லை இருமலில்லை, எரிச்சலில்லை. வலியில்லை, பயமுமில்லை. கத்தோ கத்து என்று கத்தியவர் முணமுணக்கக்கூட இல்லை.

ஸஹ டாக்டர், பகல் பன்னிரண்டு மணிக்கு நாலு மார்ஃபியா ஊசியுடன் வந்தவர், அவரைப் பார்த்து அதிசயித்தார். “ஆஹா! கடைசியில் ஸ்வாமி உங்களுக்கு அருள்மழை பொழிந்துவிட்டார்என்று நாத் தழுதழுத்துக் கூறினார். இரண்டு ஆப்பிள்கள் வாங்கி வந்து மொஹியுதீன் கையில் வைத்துவிட்டு, மார்ஃபியாவும் கையுமாகத் திரும்பினார்.

ஆப்பிளால் விழுந்தான் ஆதம். எழுந்த மொஹியுதீனுக்கும் அவரது அருமைக் குழந்தைகளுக்கும் பகவான் பரிசு இந்த ஆப்பிள்!

அடுத்த புதனன்று நகர ஸங்கீர்த்தனத்தில் கலந்து கொண்ட மொஹியுதீன் பஜனை முடிக்கும் ஸுப்ரம்மண்யேச்வரர் ஆலயத்தில், தமக்கு பகவான் பாபா செய்த கிருபா விருத்தாந்தத்தை அடியார்களுக்குக் கூறினார்.

போதகம் தரு கோவே நமோ நமஎன்று ஸுப்ரம்மண்யேச்வரனைப் போற்றுவார்அருணகிரி. போதை தீர்க்கும் கோவாக அவனே பாபா ரூபத்தில் புரியும் அருள் விசேஷமானதுதான்.போதைப் பொருட்களின் வலையில் சிக்கியோரை ஸ்வாமி மீட்கும் சரிதங்களில், சம்பந்தப்பட்ட நபர்கள் சித்ரவதையிலும் காட்டும் சித்த உறுதியிருக்கிறதே, அதுவும் ஸ்வாமியே அளிக்கும் ஆற்றல்தான் என்பதில் ஐயமில்லை. ஸித்திகளின் முடிவிடமான ஸ்வாமி செய்யும் ‘ஸித்த (siddha)’ வைத்தியத்தில் முக்கியமான அம்சம் இந்தச் சித்த (chitta) வைத்தியம்தான்!