சத்ய சாய் பாபா – 5

5. பாபா ஒரு பாப்பா!

மன்னாதி மன்னர்!
அலகிலா விளையாட்டுடையவர்!
அகிலம் தழுவும் அற்புதங்களில் அலையாடுபவர்!
அறிவிலா? ஹிமோத்கிரிதான்.
அருளிலோ, மஹா ஸமுத்திரம்.
காரிய சக்தியில் நம்பத்தகா வீரியர்.

த்தனையிலும் எங்கள் பாபா ஒரு பேபி! எங்கள் ஸாய் ஒரு சேய்!

ஸில்க் போட்டுக்கொண்டு ஜில்க் ஜில்க் என்று எங்கள் ஸ்வாமி வரும்போது பச்சைக் குழந்தையைப் பார்க்கிற பவித்ர ஆனந்தம் உண்டாகிறது.

வேதம் பரப்பிரம்மனைதந்தையில் சிறந்தஸபர்லேடிவ்தந்தை” ‘பித்ருதம: பித்ரூணாம்என்றது; அன்னையருள் உயர்ந்து நிற்கும்ஸுபர்லேடிவ்அன்னையாக, ‘அம்பிதமே!’ என்று அழைத்தது. அதே சமயத்தில் அந்த அம்மையப்பனை இளசிலும் இளசான, குழந்தைத் தன்மையில்ஸுபர்லேடிவ்ஆனயவிஷ்டனாகவும் வேதம் கொஞ்சுகிறது; ஆம், குழந்தைப் பரமாத்மனை முத்தமிட்டுக் கொஞ்சுகிறது.

கடலும் கதிரோனும் கலந்திடு சங்கமத்தில்
கவிதையால் முனிவரர் முத்தமிடும் மதலையாம்

என்கிறது ரிக்வேதம்.7

அன்புத் தாயாம் பாற்கடலாகவும், ஆதிக்கத் தகப்பனாகிய ஆதித்தனாகவும் உள்ள கடவுள் இவை இரண்டின் ஸங்கமத்திலே எளிய குழந்தையாகவும் நெளிகிறானாம். கடல் அலைகளாகக் கேசபாரமும், உதய சூரி பிரவாஹமாக அங்கியும் தரித்த ஐவன் இன்றும் குழந்தை ஸ்வாமியாக உள்ள வைபவத்தைஸ்வாமியிலே சொல்லியிருக்கிறேன். (குறிப்பாக யோக ஸாயிஎன்ற அத்தியாயத்தில்.) இன்னும் சில இங்கே பார்க்கலாம். இவற்றில் அவர் புரியும்மிராகிள்களில்கூட அற்புதத்தைவிட குழந்தை விளையாட்டே அதிகம் இருக்கக் காண்பீர்கள் அதிசய உணர்ச்சியை இதன் இன்புணர்ச்சி விழுங்கி விடுவதையும் கவனிப்பீர்கள்.

***

பெங்களூரில் உள்ள மூதாட்டி மிஸ்ஸிஸ் கித்வானியின் சிறிய வீட்டுச் சுவரில் சிவப்புச் சிவப்பாக ஏதோ கறைகள் இருப்பதைப் பார்க்கிறார் கோலாலம்பூரைச்சேர்ந்த ஸ்ரீ ஜே. ஜகதீசன். (இந்த ஜகதீசனிடமுமே ஆழ்ந்த பக்தி, அறிவுத் திறம், கடமை உணர்ச்சி, எழுத் தாற்றல் இவற்றோடு குழந்தைத்தன்மை நிறையக் கூடியிருப்பதை இவரது “Journey to God” என்ற நூலைப் படிப்பவர்கள் உணரலாம். ஸ்வாமி இவரை ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போலாக்கும் கன்னத்தில் குத்தியும், காதைக் கிள்ளியும், மூக்கை இழுத்தும் விளையாடியிருப்பதை நூல் சொல்கிறது!)

வேண்டுமென்றே சிவப்பு நீரை வாரி அடித்துச் சுவரைப்பாழ்படுத்தியிருப்பது போலத் தோன்றுகிறது.

8பத்தாம் மண்டலம் 123வது சூக்தம், முதல் மந்திரம்.

ஏன் இப்படிச் செய்திருக்கிறது?” என்று கேட்கிறார் ஜெகா அதுதான் ஜகதீசனின் செல்லப் பெயர்.

எல்லாம் இந்த ஸ்வாமி பண்ணுகிற ஹிம்ஸைதான்என்று அலுத்துக் கொள்கிறாள் மூதாட்டி.

ஹோலியன்று அந்த அம்மாள் எங்கேயோ வெளியிலே போய்த் திரும்பினாள். அன்றைக்கு வண்ண நீரை அடித்துக்கொள்வது வடக்கத்தியர் வழக்கமல்லவா? கண்ணனே இப்படிச் சிவப்பு நீரை அடிக்க, இந்தச் சிவப்பிலே, அதாவது காதலிலே, தானும் முழுக்க முழுக்க ஊறிச் சிவந்துவிட வேண்டும் என்று மீரா நிறையப் பாடியிருக்கிறாளே! அந்த வண்ண நீர் விளையாட்டுத்தான் ஸாயிக் கண்ணனின் லூட்டியாகி கித்வானிப் பாட்டியைஹிம்ஸைசெய்திருக்கிறது! வெளியே சென்றவள் வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தால் சுவரில் செந்நீராக வழிகிறது! “என்ன ஸ்வாமி, நீ ரொம்பவும்வழியறே?” என்று ஸ்வாதீனமாகப் புகார் சொல்லத்தான் அவளுக்குத் தோன்றுகிறது.

தீராத விளையாட்டுப் பிள்ளைஸாயி
உருவிலே பாட்டிக்கு ஒயாத தொல்லை

வாழ்க்கையில் எத்தனையோ மொத்துண்டு, நெருங்கிய பந்துக்களையெல்லாம் வாரிக் கொடுத்துவிட்டு நின்ற மிஸ்ஸிஸ் கித்வானிக்கு ஆறுதல் தந்த பரம ஞான உபதேசமே இந்தப் பச்சைப்பிள்ளைத் தொல்லைதான்! ஸாயிக் குழவியின் சள்ளைகளில் கிழவி பெறும் பேரானந்தம் உண்டே!

அவள் வீட்டுச் சுவரில் பல இடங்களில் பென்ஸிலால் ஏதேதோ எழுதியிருக்கிறதே அதெல்லாமும் நம்அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகனின்கைங்கரியம்தானாம்! கண்ணுக்குத் தெரியாத ஸூக்ஷ்மக் கையின் அந்த எழுத்துக்கள் எந்த அளவுக்குப் பாட்டியின் தலையெழுத்தைத் துடைத்தனவோ?

***

திகாலையில் ஸ்வாமியோடு சில அத்தாணிச் சேவகர்கள் ஒயிட்ஃபீல்டிலிருந்து புட்டபர்த்திக்குப் புறப்படுகிறார்கள். ஸ்வாமியோடு கார் பயணம் செய்யக் கிடைத்திருப்பது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிதான். இருந்தாலும்காப்பி கொடுக்காமல் காரில் ஏற்றிவிட்டாரேஎன்ற ஏமாற்றமும் இருக்கத்தான் செய்கிறது.

கார் போகிறது.

ஸ்வாமி கையைச் சுழற்றுகிறார். வெள்ளை வெளேரென்று பெப்பர்மின்ட்கள் கரத்தில் ஸ்ருஷ்டி யாகின்றன. உடன் வருபவர்களுக்குத் தலா ஒன்று தருகிறார். கணக்கு சரியாயிருக்கிறது வழக்கம் போல! வழக்கம் போலவே தாம் மட்டும் ஸ்ருஷ்டித்த தின்பண்டத்தை உட்கொள்ளவில்லை.

காப்பி தேவைப்படும் இந்தக் காலை வேளையிலா பெப்பர்மின்ட்?’ என்ற எண்ணத்துடனே அவர்கள் வெள்ளை மிட்டாயை வாயில் போட்டுக் கொள்கிறார்கள்.

அட! வாய்க்குள்ளே அந்த வெள்ளை வில்லைகள் ஒன் காப்பியாக ருசித்து, மணக்கின்றனவே!

வேளை தப்பாமல் குழந்தைகளுக்குக் காப்பி கொடுத்த ஸாயி மாதாவோ குறும்புக் குழந்தையாக அவர்களைப் பார்க்கிறார். ‘காப்பிக் கலர் மிட்டாயாகத் தராமல் வெள்ளையாகக் கொடுத்தே எப்படி ஏமாற்றினேன் பார்த்தாயா?” என்று கேட்காமல் கேட்டன குறுநயனங்கள்.

குழந்தே! உன்னிடம் ஏமாற ஜன்மாந்தரத் தவம் அல்லவா செய்திருக்க வேண்டும்?

(காலந் தவறாமல் காப்பு தருவதுபோல், காப்பியும் தரும் ஸாயியின் கரிசனத்தில் எனக்கே ஒரு சொந்த அனுபவம் உண்டு.)

***

ப்படியும் ஒரு குழந்தைப் பிள்ளையாக ஸ்வாமி இருப்பாரா?” என்று எண்ணுவீர்கள், இப்போது சொல்லப் போவதைப் படித்த பின்.

ஸ்வாமியும் அடியார் சிலரும் சில கார்களில் புட்டபர்த்தியிலிருந்து பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்தனர். வழியில் ஓரிடத்தில் வண்டிகளை நிறுத்தினார்கள். ஸ்வாமி ஒவ்வொரு காருக்கும் சென்று அதற்குள் இருந்தோரிடம் சிறிது குசலப் பிரச்னம் செய்தார்.

ஒரு வண்டியிலிருந்தவர்களிடம் இப்படிப் பேசிக் கொண்டேயிருந்தவர் சட்டென்று ஜன்னலுக்குள்ளாகத் தலையை விட்டுக் கொண்டார்.

ஏன் இப்படிச் செய்யறேன் தெரியுமா? எதிர்ப் பக்கமா வண்டிங்க வரதோல்லியோ? அதுலே இருக்கிறவங்களுக்கு ஸ்வாமியை அடையாளம் தெரிய வேணாம்னு தான் தலையை உள்ளே ஒளிச்சுக்கறேன்என்றார்.

கண்ணன் சொல்லு மொழிகள் குழந்தைகள் போல் ஒரு சூதறியாது சொல்வான் என்ற கவிமொழிக்கு இலக்கியமாகப் பேசுகிறார் பகவான்!

இவர் தலையை ஒளித்துக்கொண்டால் என்ன? கழுத்திலிருந்து கால் முடியத் தொங்கும் இவரது பளபள பட்டங்கி, எதிரே போவோருக்கு இவரை அடையாளம் காட்டிவிடாதா என்ன? முகத்தை மறைத்துக்கொண்டால் முழுதும் மறைத்துக் கொண்டதுபோல நினைக்கிறாரே! இப்படியும் ஒரு குழந்தைப் பிள்ளையாக நம் ஸ்வாமி இருப்பாரா?

***

தெய்விகக் கொடுமுடியில், கெடுபிடியில் ஸ்வாமி தமது மத்ய ஸ்தாபன முக்கியஸ்தர்களைக் கிடுகிடுக்க வைத்துக் கொண்டிருந்தார்.

விஷயம் இதுதான்: ஸ்வாமியின் பிருந்தாவன இருக்கை முன்ஹாலில் அந்த முக்கியமான அங்கத்தினர்கள் குழுமியிருந்தார்கள். ஸ்வாமி இன்னும் மாடியிலிருந்து இறங்கி வரவில்லை. அவர்கள் தங்களுக்குள் பல விஷயங்களைப் பேசிக் கொள்ளலானார்கள்.

ஸ்வாமி வந்தார். வழக்கம்போல் தண்ணென்று வரவில்லை. தணலாக வந்தார். தீ வர்ண அங்கியரின் வாக்கிலும் பொறி பறந்தது.

உங்களுக்கெல்லாம் ஸ்வாமி ஸாக்ஷாத்தாக ஸ்வாமியேதான் என்று கொஞ்சமாவது பிரக்ஞை இருக்கிறதா? இருந்தால், ‘ஏதடா, மாடியிலே ஒரு தெய்வம் அல்லவா இருக்கிறது?’ என்று பக்தி சிரத்தையாக, கப் சிப் என்று உட்கார்ந்துகொண்டு, தியானம் ஜபம் பண்ணிக் கொண்டிருக்க மாட்டீர்கள்? ஊர்வம்பு, உங்கள் வீட்டு வியவஹாரம் எல்லாம் அளந்து கொண்டிருக்கிறீர்களே! ஊரான் பணத்தைப்போட்டு உங்களுக்கு வம்புச்சாவடியா கட்டி வைத்திருக்கிறேன்? ஏதோ, ஆர்கனைஸேஷன் ஸடமாசாரங்கள் கொஞ்சம் டிஸ்கஸ் செய்தால் பரவாயில்லை. ஜபத் தியானாதிகள் பண்ணி கொண்டிருப்பதுதான் இந்த இடத்துக்கு ஏற்றது. இது என்ன கிளப்பா? இல்லாவிட்டால் சாதாரண வீடா? தெய்வம் இருக்கிற கோயிலில் எப்படி இருக்கவேண்டுமோ அப்படியல்லவா இங்கே நடந்துகொள்ள வேண்டும்? அதுவும் நீங்கள் யாரு? ஸ்வாமி ஆர்கனைஸேஷனிலேயே அங்கமாக இருக்கிறவர்கள். மற்ற பக்தர்களுக்கு நீங்கள் எக்ஸாம்பிளாக இருக்க வேண்டாம்? உங்களுக்கு உள்ளூர பயம், பக்தி, வினயம் இல்லாமல் மற்றவர்களிடம் போய் என் ஸ்வாமித்வத்தை நீங்கள் டமாரம் போட்டால் அது ஷரியாக்ரிஸி இல்லை? ஆர்கனைஸேஷன்காரர்கள் என்று உங்களைப் பிரித்து, மற்ற டிவோட்டீஸுக்கு இல்லாத சலுகையாக உங்களை மட்டும் இந்தக் கட்டடத்துக்குள் விட்டதே தப்பு; ஸ்வாமி நான் பண்ணின தப்புஎன்றெல்லாம்ஹா ஹூஎன்று பூகம்பமாடினார் பகவான்.

அழுக்கை முறுக்கிப் பிழிந்து, அடித்துத் தோய்த்து சுத்தப்படுத்தும் அன்புப் பணியில் ஓர் அங்கம்தான்.

பிரமுகர்கள் யாவரும் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு வெளியேறினர்.

அவருக்கும் சரி, அவர்களுக்கும் சரி, பிரேமபாசம் இதனால் வலிவுறுமேயன்றி நலிவுறுமா என்ன? மறுநாள் காலையும் தரிசனத்துக்கு வந்தார்கள். வெளிக் காம்பவுன்டையும் ஹாஸ்டலையும் தாண்டி ஸ்வாமியின் இருக்கைக்குரிய உள் காம்பவுன்டை நோக்கி அவர்கள் செல்கையில் இரண்டு தொண்டர்கள் ஓடோடி எதிர் வந்தார்கள்.

உள்ளேகேட்டிலிருந்துபில்டிங்‘ (ஸ்வாமியின் இருக்கை) வரைபேவ்மென்டில் ஸிமென்ட் போட்டு வேலை ஆரம்பித்திருக்கிறது. யாரேனும் மிதித்துவிடப் போகிறார்களே என்பதால் ஸ்வாமி எவரையுமே உள்ளே விட வேண்டாமென்று சொல்லியிருக்கிறார்என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஸ்தாபன முக்யஸ்தர்கள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே திரும்புகிறார்கள். ஸிமென்டாம், மிதித்து விடுவார்களாம்! இன்றைக்கென்று பார்த்து ஸிமென்ட் போட முஹுர்த்தம் வந்துவிட்டதா? ஸ்வாமிக்கு இன்னமும் குழந்தைக்கோபம் உர் உர்ரென்று இருக்கிறது! அதனால் இன்றைக்கும் இவர்களை உள்ளே விடாமல் கொஞ்சம் அழவைக்க எண்ணியிருக்கிறார். அதே சமயத்தில், அவர்களை மற்றவர்களுக்குக் காட்டிக் கொடுக்காமல் அரவணைக்கும் தாய்மையில் கட்டிக் காக்கவும் பொன் மனம் எண்ணுகிறது. அதற்காக ஸிமென்டிங் நாடகம்! தொண்டர்களும் உள்விஷயம் (விஷமம்) தெரியாமல் ஸ்வாமி சொன்னதையே மெய்யாக எண்ணிக் கூறுகிறார்கள். ஸ்தாபன முக்யஸ்தர்களோ இந்ததண்டனையில் ஸ்வாமி உறுதிப்படுத்துகிற இதய ஸிமென்டிங்கை ரஸிக்கிறார்கள். அவர் அழவைக்க நினைத்தால் இவர்கள் அவரது குழந்தைத்தனத்தை நினைத்துச் சிரிக்கவே செய்கிறார்கள்! அவர் இவர்களுடைய தப்பையும் தன் கோபத்தையும் மூடி மறைத்தாலும், இவர்களோ அவற்றைப் பெருமையாகத் தாங்களே வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்! (அதனால் தானே நூலாசிரியர் இச் சம்பவத்தைப் பற்றி எழுத முடிகிறது?)

கோபத்திலும் மனம் கவரும் ஸ்வாமியின் குழந்தைத்தனத்துக்கு எத்தனை அழகான எடுத்துக்காட்டு!

***

தகமண்டலத்தில் ஸ்வாமியின்நந்தனவனமாகிவிட்ட அந்நாள்வால்தாம் ஸ்டவ்மாளிகைக்கு ஸ்வாமி நாலைந்து ஆண்டுகளுக்கு முன் சென்றிருந்தார். அது வெள்ளையர் கட்டியது. அதன் பெரிய பால்ரூம் நடன அறைக்குள் ஸ்வாமி நுழைந்தாரோ இல்லையோ, பசும் குழவியாக மாறிவிட்டார்.

தமது ஸ்தானத்தையோ, ஆஸ்தானத்தையோ, உடன் வருபவரின் முக்யத்துவத்தையோ துளிக்கூட நினைக்காமல் விளையாட்டுப் பிள்ளையானார். வால்ட்ஸ் நடனப்படிச் சுழன்று சில அடிகள் வைத்துக்கொண்டு சரசரவென்று நாட்டிய அறைக்குள் பிரவேசித்தார்!

அது மட்டுமில்லை. கண்களில் குழந்தைத்தனம் பிரகாசிக்க, “இங்கிலீஷ் டான்ஸ்!” என்று வேறு சொன்னார்!

நடராஜனும் காளிங்க நர்த்தனனும் பரத நாட்டியம்தான் ஆடியிருப்பார்கள். அவர்களுடைய நடனம் மஹத்துவம் நிறைந்ததாகவே இருக்கட்டும். நம் ஸாயி பாலர் ஆடிய இங்கிலீஷ் டான்ஸிலுள்ள இனிமையெளிமை அலாதியானதுதானே!

***

பாலஸாயி இன்றும் ஸாயிபாலராக இருக்கிறார்; ‘என்றும் இளையாய்என்றபடி இப்படியே இருப்பார் இனியும்.

முருகன், கண்ணன் முதலியோரை பால ஸுப்ரம்மணியராகவும், பாலகிருஷ்ணனாகவும் குழந்தை வடிவில் வணங்குகிறோம். அகிலாண்ட ஜனனியான மஹா த்ரிபுரஸுந்தரியை பாலா என்று பிஞ்சுருவில் கொஞ்சுகிறோம். “பாலா, லீலா விநோதிநிஎன்று அவளை ஸஹஸ்ரநாமம் சொல்லும். நம் லீலா நாடகரோ, தனியாக ஒரு பால வடிவம் தமக்குத் தேவையில்லாமல், இன்றைக்கும் அவ்வப்போது தாமே குழந்தையாகி விடுகிறார். தாம் இந்த மண்ணில் இருக்கப்போகும் தொண்ணூற்றாறாவது வயது வரையிலும் இப்படிக் குழந்தைத் தன்மையைத் தம்மில் குழைத்துக்கொண்டே அடியார் உள்ளத்தைக் குழைப்பார்!

ஸாம்பமூர்த்தி என்ற ஒரு ஸாயித்தம்பி. சில ஆண்டுகளுக்குமுன் அவர் கல்லூரி முடித்தபோது தாமே ஒரு குழந்தை போலிருந்தாலும், ‘சியாமகோபால்என்று ஸ்வாமியின் ஒரு படம் உண்டே, அதை வைத்துக்கொண்டுகுழந்தை! குழந்….தைஎன்றே கொஞ்சுவார்!

அந்தக் குழந்தையின் கையிலுள்ள விளையாட்டுச் சொப்புக்கள்தாம் நாம். “நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா?” என்று அழ வேண்டாம், “நானும் உன் கைப் பொம்மை ஆனேனே!” என்று ஆனந்தித்தே பாடலாம்.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் இருக்கும். அப்போது ஸ்வாமிக்கு ஏறத்தாழ முப்பது வயதிருக்கலாம். அந்த வயதில் அவர் பொம்மை வைத்துக்கொண்டு ஸந்தோஷமாக விளையாடியிருக்கிறார்!

ஆம், அவரது அகடிதகடனா அற்புதங்களைப் பற்றி உலகம் வியந்து கொண்டிருக்க, அடியார்கள் அவரது தரிசன ஸ்பரிசனங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்க, அவரோ இலவம் பஞ்சென இலேசாக மிதந்து கொண்டு கஸ்தூரியவர்களின் வீட்டுக்கு வருவார். அவ் வீட்டில் ஒரு கரடி பொம்மை உண்டு. சாவி கொடுத்தால் அதுஜிங் ஜிங்என்று தாளம் தட்டும். அமுக்கினால்க்வாக் க்வாக், என்று கத்தும். முப்பது வயதுக் குழந்தை அந்தக் கரடிப் பொம்மையை வைத்துக்கொண்டு மும்முரமாக விளையாடும்! சாவி கொடுக்கும். கரடி தாளம் தட்டுவதைப் பார்த்துத் தானும் கைகொட்டிக் கொட்டம் போடும். அதை அமுக்கி, அது, ‘க்வாக் க்வாக்ஒலியெழுப்ப, தன் விலா எழச் சிரிப்பாகச் சிரித்து மகிழும். முழு மனத்தைச் செலுத்தி ஒரு குழந்தை எப்படி விளையாடுமோ, அப்படியே விளையாடி விநோதம் கண்டார் வையம் வழுத்திய விஞ்சையர்.

ஒரு நாள் இப்படி விளையாடியபின், “போஎன்று குழந்தை போலவே பொம்மையைத் தள்ளி விட்டார். கஸ்தூரியைப் பார்த்தார். “நீயும் இந்தக் கரடிதான். உன்னை ஆடற மட்டும் ஆடவைப்பேன். கத்தற மட்டும் கத்த வைப்பேன். அப்பறம் ஒருநாள் இதே மாதிரித் தூக்கிப் போட்டுடுவேன்என்றார்.

அப்பனே குழந்தாய்! எங்களை ஆட்டுவி, பாட்டுவி, பேச்சுவி! எது வேண்டுமானாலும் பண்ணு. பண்ணுவிப்பது நீ என்பது எங்களுக்கு மறவாதிருக்குமாறு மட்டும் நீ செய்து விட்டால் போதும்,

தூக்கிப் போடுவேன்என்றாயே! இப்படிப்போஎன்று தள்ளுவது உடலைத்தானே? அவ்விதம் உடலை எடுத்தெறியும்போது, உயிரைவாஎன்று உனக்குள்ளேயே தானே தூக்கி வைத்துக்கொள்வாய்?

ஆமாம், ஆமாம் அதிலென்ன ஸந்தேஹம்?” என்று உன் குழந்தை முகத்தைக் குலுக்கியபடி நீ கேட்பதாக பாவிக்கிறேன், நிறைவடைகிறேன்.

***

மாம் ஆமாம்என்று ஆமோதிப்பதாகச் சொல்கையில் இன்னொரு குழந்தைமயமான லீலை நினைவு வருகிறது.

ஸ்வாமியின் அனுமதி பெற்று ஜெகா பிரசாந்தி நிலயப் பேட்டி அறையிலேயே அவருக்கு முன். தமது பாடல்களைப் பாடி அர்ப்பணிக்கிறார்.

பாட்டின் இடையிலேகேட்பதை நீயும் கொடுப்பாயோ?” என்று வருகிறது. ஜெகா இந்த வரியைப் பாடும்போது ஸ்வாமி குறுநகை கொப்புளிக்க, “ஆமாம்! ஆமாம்! கொடுப்பேன், கொடுப்பேன்என்கிறார்.

இறைவா, நீ இங்கு வருவாயோ?” என்று ஜெகா பாட, “ஆமாம், ஆமாம்! வருவேன், வருவேன்என்று மலர்கிறார் குழந்தை ஜகதீசர்!

***

லைட்டாக, அதாவது லேசாக வாழ்வதுதான் இந்தக் குழந்தைத்தன்மையின் ரகசியம். ‘லைட்என்றால் ஒளி என்றும் அர்த்தம் அல்லவா? ஞானப் பிரகாசமானதும்தான் அவர் வாழ்க்கை; ஆனால் அந்த லைட்டில் நம் கண் ஒரேயடியாகக் கூசிவிடாமல் குழந்தையின் லைட்னெஸ்ஸை கூட்டிக் கோமளமாக்கிக் காட்டுகிறார்.

விதிக்குக் கட்டுப்பட்டு வாழும்போது நாம் விரைத்துப்போகிறோம், கனத்துப்போகிறோம். ஸ்வாமியோ ஸகல ஸத்யதர்ம நெறிகளுக்கு ஸாரமான, பரம கட்டுப்பாடான வாழ்வு வாழும்போதே நெகிழ்ந்திருக்கிறார், லேசாயிருக்கிறார். காரணம் என்ன? நாம் தர்ம விதிகளை வெளிக் கட்டாக எண்ணுகிறோம். அதனால் அது நெரிக்கிறது. ஸ்வாமிக்கோ அவை தன்னில் தானான உள்ளுறுப்பேயாக உள்ளன. அதனால் நெரிசல் இல்லை. நமக்கு வெளி வஸ்துவாக ஒரு நூலிழையைக் கட்டிக் கொண்டால்கூட அது நெகிழ்ந்து கொடுக்காமல் சிரமப் படுத்துகிறது. நமக்குள்ளேயே இத்தனை நாடி, நரம்புகள் சன்னபின்னலாகக் கட்டியிருந்தாலும் நாம் ஸகல காரியமும் செய்யத் துணையாக எப்படியெல்லாம் வளைந்து கொடுக்கின்றன? தர்மம் என்று வெளியே ஒன்றை வைத்து அதை அநுஷ்டிக்கும்போது, அது விரதம் காப்பது போல் கடுமையாகவும் தீவிர சக்தி உள்ளதாகவும் தோன்றுகிறது. செயற்கையாக ஆக்ஸிஜன் கொடுக்கும் போது ஏற்படும் திணறல்தான்! அதுவே இயல்பாக அமையும்போது இயற்கை மூச்சின் சுளுவில் உயிருட்டுவதான பெருஞ்சாதனையை அநாயாஸமாகச் செய்கிறது.

தாம் தர்மத்தில் கட்டுண்டிராமல், தாம் செய்வதிலெல்லாம் தர்மமே வந்து கட்டுப்படும்படி வாழ்வதால்தான் ஸ்வாமி எத்தனையோ கோடி அலுவல்களில் ஈடுபட்டிருந்தாலும் அலுங்காமல், நலுங்காமல், பதறாமல், படபடக்காமல், நிம்மதியாக, விச்ராந்தியாக, விளையாட்டாக விநோதமாக இருக்க முடிகிறது. இப்படியிருப்பதாலேயே பிழையுறாமல் வெகு திருத்தமாக அனைத்துக் காரியங்களையும் ஆற்ற முடிகிறது.

சென்று போனது, வரப்போவது எல்லாவற்றையும் தோளில் தோய்த்துப் போட்டுக்கொண்டு சுமையிலே குமுறி, காரியச் செவ்வியில் தவறி நிற்கும் நமக்கு, நம் பாரத்தையெல்லாம் தாங்கும் நாயகன் எப்படிச் சுமையின்றி, ஒரு குழந்தைபோல் அந்தந்த விநாடியில் மட்டும் முழு ஈடுபாட்டை வைத்து வாடா மலராக வாழ்கிறான் என்பது பெரும் பாடமாகும். “என் வாழ்வே எனது ஆதேசம், உபதேசம்என்று ஸ்வாமி சொல்வது நூறு விழுக்காடும் ஸத்தியம் என இங்கு காண்கிறோம்.

லீலா விநோதிநிஎன்ற பெயரைப் பராசக்திக்குத் தரும் ஸஹஸ்ரநாமம் அவளைதர்மிணி, தர்மவர்த்தினிஎன்றும் சொல்கிறது. லீலை என்பதால் மனம் போனபடிச் செய்வதாக அர்த்தமில்லை. கட்டுப்பாடான தர்மமே அவளுக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திர விளையாட்டாக இருக்கிறது.

குழந்தையாக விளையாடுகிறார். குழந்தை, மனம் போனபடி விளையாடும். ஆனால் ஸ்வாமிக் குழந்தையின் மனம் போகுமிடமெல்லாம் தர்மமும், ஸத்யமும், பிரேமையும், சாந்தியும் தாமே வந்து ஒட்டிக் கொள்ளுமாதலால் அது மனம் போனபடி விளையாடுவதும் நம் மனத்தை உயர்த்திக் கடைசியில் நம் தனி மனமே போய் விடும்படியான, தானான, நிலையில் சேர்ப்பதாக இருக்கிறது.

***

ஸ்வாமிநூலில் ஸ்தூல ஸாயி, ஸூக்ஷ்ம ஸாயி என்று பிரித்துச் சொல்லியிருக்கிறேன். சரீரம் கொண்டு நம்மிடை நடமாடும் ஸ்தூல ஸாயிக்கு வெளி இயற்கை, உள் இயற்கை இரண்டாலும் ஒரு சொற்பமான அளவுக்குக் குறைபாடுகளும் உள்ளதாகத் தோன்றுகிறது; ஸ்தூல சரீரத்துக்கு மேம்பட்ட அவரது சக்தி அறிவுச் சக்தி, அநுக்ரஹ சக்தி, ஆற்றல் சக்தியாவும் பூர்ணமாகப் பொலியும் அவரது ஸூக்ஷ்ம சரீரத்துக்கு இவ்விதமான குறைபாடுகள் ஏதும் இல்லை என்பதே அந்தப் பிரிவினையின் ஸாரம். பிற்பாடு இதை ஒப்பும் முறையில் ஸ்வாமியே விளக்கினார்: “பாஞ்ச பௌதிகமான (பஞ்ச பூதங்களாலான) ஸ்வாமியின் ஸ்தூல சரீரத்துக்குக் கொஞ்சம் கொஞ்சம் லிமிடேஷன்ஸ் இருக்கிற மாதிரிதான். லைக்ஸ்அன்ட்டிஸ்லைக்ஸ் (வேண்டியன, வேண்டாதன) கொஞ்சம் கொஞ்சம் இருக்கிறாப்போலத்தான். ஆனால் ஸூக்ஷ்ம சரீரத்துக்கு எந்த லிமிடேஷனும் இல்லை. அது அகண்டம். அதற்குள்ளேயேதான் ஸகலமும் இருப்பதால் அதற்கு லைக்ஸும் இல்லை, டிஸ்லைக்ஸும் இல்லை”.

லோகம் முழுதிலும் ஸ்வாமி செய்யும் மிராகிள்கள் ஸூக்ஷ்ம ஸாயியின் லீலைதான். லோக தர்மமே ஸ்வாமியின் லீலையாக இருப்பது ஒரு புறமெனில், லோக இயற்கைக்கு அதீதமான ஒரு தர்மப்படி, மக்களின் கர்மத் துக்கும் அதீதமான காருண்ய தர்மத்தைக் கலந்து ஸூக்ஷ்ம ஸாயி புரியும் லீலைதான் மிராகிள்கள். ஸூக்ஷ்ம ஸாயிக்குக் கட்டுப்பாடே இல்லை என்பதால் இங்கே ஸர்வ ஸ்வதந்திர பாலனாக ஏக விளையாட்டு விளையாடுகிறார். ஸ்தூல ஸாயியைவிட ஸூக்ஷ்ம ஸாயியின் லீலைக் கொட்டம் அதி விமரிசையானது. மிஸ்ஸிஸ் கித்வானி வீட்டில் சிவப்புச் சாயம் கொட்டியதுபோல் இவற்றில் பல மிகவும் குழந்தைத்தனத்தைப் பரமாத்புதத்திலே பிசைந்து தருவனவாயிருக்கும்.

இதுபோன்ற மிரகிள்களைப் பற்றி ஸ்தூல ஸ்வாமி தாமாகச் சொல்வது வெகு அபூர்வமே. நாமாகக் கேட்டாலும் அதிகம் விஸ்தரிக்காமல், “இதெல்லாம் என் விவிடிங் கார்ட். அவ்வளவுதான். அதற்கு மேல் முக்யத்வம் தராதேஎன்று மழுப்பிவிடுவார். அல்லது அவ்வப்போது எவரிடம் பேசுகிறாரோ அவருக்கு ஏற்புடைய மாதிரி ஸமயோசிதமாக ஓரிரண்டு வார்த்தைகள் கூறி, மேலே வளர்த்தவொட்டாமல் வேறு விஷயத்துக்குப் போய் விடுவார். இப்படித்தான்குமுதம்பத்திரிகைப் பேட்டியில் ஸ்ரீமதி ஸௌந்தரா கைலாஸம் அவர்களிடம், தாம் இல்லாத இடங்களில் படத்தில் விபூதி வருவது போன்றவற்றைப் பற்றித் தாம் சொல்வதற்கு ஏதும் இல்லாதது போலவும், ஆழ்ந்த பக்தியுடையவர்களுக்கு அந்த பக்தியின் சாதியாலேயே இவ்வித மிராகிள்கள் கூட்டுவிக்கப்படுவது போலவும் பதில் சொல்லியிருக்கிறார். இவரே வேறொரு சந்தர்ப்பத்தில், இம்மாதிரி மிராகிள்கள் நடக்கும் வீட்டினர் மிராகிள்கள் நடக்காத வீட்டினரைவிடச் சிறந்த பக்தர்கள் என்று எவரேனும் நினைத்தால் அது தவறாகும் என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்!

ஆகையால் இந்த மிரகிள்களில் காரணகாரிய விதி கலவாத ஒரு பாலனின் ஆனந்த விளையாட்டையே அதிகம் காண்கிறோம் எனலாம். இல்லாவிடில், ஒரு வீட்டிலே குருவார பஜனையின்போது ஸ்வாமியின் சித்திரத்துக்கு அணிவித்த புஷ்ப ஸரம் தானாகச் சுற்றிச் சுழலும் அற்புதத்தைக் காண்பதற்கென்றே எட்டாக் கையிலிருந்து வந்த பக்தர்கள் ஏமாறும்படி பஜனை வேளையில் சுற்றாமல், பஜனை முடிந்து எல்லோரும் போய், வீட்டினரிலேயே யாரோ ஓரிருவர் மட்டும் தற்செயலாகப் பார்க்கும்போது ஏன் அந்தப் பூச்சரம் சுற்ற வேண்டும்? அல்லது பஜனைக்கு எவருமே வருமுன்பு ஏன் அது சுற்ற வேண்டும்?

இப்படிப்பட்ட மிராகிள்கள் பற்றி ஸ்தூல ஸாயி அதிகம் விமரிசிக்காமல் மழுப்பிக்கொண்டே போவதற்குப் பொதுவாகக் கூறப்படும் காரணம், பக்தர்களின் மனம் செம்மையாக மாறும் மிராகிள்தான் உண்மையான, அவசியமான மிராகிள் என்பதால், அதற்கு ஓர் அழைப்பாக மட்டுமே உள்ள இந்த வெளி மிராகிள்களை இரண்டாம் பக்ஷமாகக் குறைத்துச் சொல்கிறார் என்பதாகும். இது ஒரு வலுவான காரணம்தான். ஆனால் இன்னொரு உபகாரணமும் தோன்றுகிறது. அதாவது, குழந்தை விளையாட்டுப்போன்ற, ஒரு பச்சைப் பிள்ளை தனக்குத்தானே சிரித்துக்கொள்வது போன்ற, இத்தகைய மிராகிள்களைக் கண்டு நாமும் ஆனந்தித்து அனுபவிப்பது தவிர, இதில் விமரிசித்து வின்யாஸம் செய்ய என்ன இருக்கிறது என்று விட்டு விடுவதாகவும் இருக்கலாம்.

இன்னொன்றும் தோன்றுகிறது: என்ன இருந்தாலும் தாம் ஸூக்ஷ்மத்திலே இத்தனை குழந்தையாக விநோதம் பண்ணவேண்டாம் என்று அவரே ஸ்தூல ரூபத்திலிருக்கையில் வெட்கப்பட்டுக் கொண்டுதான் ஒரு வேளை இது தொடர்பான பேச்சைச் சுருக்கியும் மாற்றியும் விடுகிறாரோ என்னவோ? ஸ்தூல ஸாயியே தமது வயதுக்குதகாதபால லீலைக்காரரெனில், அவரையுமல்லவா விஞ்சுகிறார் ஸூக்ஷ்ம ஸாயிநாதர்? நீங்களே யோசித்துப் பாருங்கள், நீங்கள் கேள்விப்படும் ஸாயி மிரகிள்களில் நூற்றுக்குத் தொண்ணூறில் அற்புதம் மட்டுமின்றி, “அட, இதென்ன வேடிக்கை?” என்று சிரிக்கும்படியாக ஒரு விநோத அம்சமும் உள்ளதல்லவா?

தெய்வச் சித்திரங்களில் விபூதி வந்தால் சரி. ஆனால் இதோ பாருங்கள், வெற்றிலைப் பெட்டியின் மேல், மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்ததுபோல் திருநீற்றுக் கூம்பு! இது குழந்தை விளையாட்டா இல்லையா? ஒரு முறைக்கு இருமுறையாக இப்படிச் செய்திருக்கிறார்.

குழந்தை விளையாட்டு மட்டுமே என்க முடியாதபடி இதிலும் உட்பொருள் இருக்கத்தான் செய்கிறது.

இந்த வீட்டுக்குரியவர் (தற்போது காலகதி அடைந்துவிட்ட திருமருகல் டாக்டர் மயூரநாதன். அவருக்கு வெற்றிலை போடும் பழக்கம் அதிகம். புட்டபர்த்தியில் பகவானிடம் இன்டர்வ்யூ பெற்றபோது தம்முடைய இந்தப் பழக்கத்தைப் போக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஸ்வாமி சிரித்தார்: “ஏன் போக்கணும்? வெத்திலை போட்டுக்கிறது தப்பா என்ன? நானே போட்டுக்கறேனே!”

தாம்பூல அதரத்தில் நகை வழிந்தது.

மயூரநாதன் ஊர் திரும்பிய பிறகு திருமருகலில் வெற்றிலைப் பெட்டியிலேயே விபூதி விளைகிறது!

ஒருமுறை மட்டுமின்றி இரண்டாம் முறையும் இந்த அதிசயம் ஏன் நிகழ்ந்ததென்று சொல்ல வேண்டும்.

வெற்றிலைப் பெட்டியில் விபூதி உண்டானதை வீட்டார்தான் முதலில் கண்டனர். மயூரநாதனுக்குச் சொன்னார்கள். அவருக்கு ஏனோ நம்பிக்கைப்படவில்லை. அகத்து மநுஷ்யர்களிலேயே எவரோ விபூதியைக் குவித்து வைத்து விட்டுக் கதைப்பதாகவே எண்ணினார். அவருடைய அவநம்பிக்கையையும், சந்தேகத்தையும் பார்த்து. அவரது மனைவிக்கும் மகளுக்கும் அழுகையே வந்துவிட்டது.

ஸ்வாமி விபூதி என்றால் மறுபடிதான் அவர்மெடீரியலைஸ்பண்ணட்டுமே!” என்றார் டாக்டர்.

அவரும் மனையாளும் மகளும் அங்கேயே அமர்ந்து விட்டனர். ‘பகவத் பிரஸாதத்தைத் தங்களுடைய ஏமாற்றுக் காரியம் என நினைக்கிறாரேஎன்ற தாளாத துக்கத்தோடு அம்மாவும் பெண்ணும் அரைமணி நேரம் வேண்டிக்கொள்ள, டாக்டரின் கண் முன்னேயே,

மறுபடியும் தாம்பூலப் பெட்டியில் அதேபோல ஒரு விபூதிக் கூம்பு முளைத்தது!

***

லைவலி தாங்க முடியவில்லை அந்தத் திருச்சி அம்மாளுக்கு.

தொட்டி முற்றம் நிறையப் பாத்திரங்கள் தேய்க்கப் போட்டிருந்தது. தேய்க்க முடியாமல் அவளுக்கு மண்டை போடுபோடு என்று போடுகிறது.

தலையில் துணியை இறுகக் கட்டிக்கொண்டு, ‘ஸாயி ராமா, நீயே கதிஎன்று படுத்து விடுகிறாள்.

சற்றுக் கண்ணயர்ந்து எழுந்தால் தலைவலி பளிச்சென விட்டிருக்கிறது.

பாத்திரம் தேய்க்க உள்ளே போனவள் கண்ட காட்சி!

தொட்டி முற்றத்தில் ஒரு பாத்திரமில்லை!

திருடு போய்விட்டதா என்று பயப்பட இடமில்லை. ஏனென்றால் கதவுகளை நன்றாகச் சாத்தித் தாழிட்டிருக்கிறாள்.

அந்த முற்றத்தை நறுவிசாகத் தேய்த்து அலும்பி விட்டிருக்கிறதே! இதிலிருந்தே பாபாவின் லீலை தெரிகிறதே!

பாத்திரங்கள்?

இதோ, அவை பளபளவென்று தேய்க்கப்பட்டு தாங்கள் இருக்கவேண்டிய அலமாரி, ஷெல்ஃப், அடுப்பு மேடை, அகப்பைக் கூடு ஆகியவற்றில் வீற்றிருக்கின்றன!

சக்குபாய்க்கு எடுபிடிக் காரியம் செய்த ஏந்தல், அந்த பக்தையின் ஸ்தானத்தில் வைக்கமுடியாத ஒரு ஸாமானிய ஸ்திரீக்காகப் பாத்திரம் தேய்த்துப் பணிவிடை புரிந்திருக்கிறார்.

தலைவலி தீர்ந்தது மட்டும் போதாதோ? உபரியாக இப்படி ஒரு சேவை செய்ய வேண்டுமா?

இதிலே விசித்திரம், இப்படிச் செய்தாரே என்பது ஒரு விழுமிய உணர்ச்சியாக வந்து அந்த அம்மாளின் நெஞ்சை அடைக்காமல் இதை ஒரு குழந்தை விளையாட்டாக நினைத்துச் சிரித்து மகிழச் செய்ததுதான்!

ஊர், பேர் எதையும் சொல்வதற்கில்லாத இன்னொரு அம்மாளுக்கும் இதேபோல் தினப்படி ஊழியம் செய்கிறாராம் நம் ஆழியன்!

அவளுடைய கணவர் ஒரு முன்கோபி. கொஞ்சம்எக்ஸென்ட்ரிக்வேறு. திடீரென்று, “இன்னும் கால் மணிக்குள் நான் புறப்படணும். அதற்குள் சாப்பாடு ரெடி ஆகணும்என்று கர்ஜிப்பாராம்.

அடுக்களையில் போய் அந்த அம்மாள் கையைக் குவிப்பாள். கை கொடுக்கும் பெருந்தகையின் சிறிய கை தெரியுமாம். தெரிவது மட்டும்தானா? அந்த இரு கைகள் அம்மாளுக்கு உதவியாக ஸகல காரியமும் செய்து தருவது அந்தப் புண்யசாலினியின் கண்களுக்குத் தெரிகிறதாம். இவள் கரியை வதக்கும்போது அந்த இரு கைகள், சிவப்பு ஜிப்பா ஓரம் வரையில் தெரிய, குழம்புக்கு மாவு கரைத்து விடுமாம். குழம்பை இவள் இறக்கி வைத்தவுடன், அந்த மாயக் கரங்கள் தாளிப்புக் கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றுமாம்.

மாயா பஜார் ஸினிமாவில் சமையலாகும் அற்புதத்தைப் பார்த்தோமே, அது தினமும் நிஜமே நடக்கிறது!

ப்ரெஸ்டீஜ்பார்க்காமல் பகவான் புரியும் சமையற்பணியில், அவரது அன்பின் அதிசய பிரஷரினால் கால் மணிக்குள் சம்பிரமமாக முழுச் சாப்பாடும் தயாராகி விடுவதைப்ரெஸ்டீஜ்லெஸ் ப்ரெஷர் குக்கிங்எனலாம்!

இங்கேயும் தம் காருண்ய கனம் ப்ரெஷராகத் தெரியாமல், விநோத லீலையாகவேதான் காட்டுகிறார்.

***

பிரசாந்தி நிலயத்தில் ஸ்வாமி மாடியறையில் இருக்க (இப்போது நம்மிடையில்லாத) ஸ்ரீ கே.ஆர்.கே. பட் கீழ் அறையில் நின்றபோது, ஸீலிங்கிலிருந்து அவர் மார்பின் மேல் புஷ்பங்கள் விழுந்து அதனால் நோவு குணமானது.

சென்னை வெய்யிலாலும் வேறு காரணங்களாலும் மனத் தளர்ச்சியுற்று, அடையாறு பிரம்ம ஞான சபையில் கொசுவலைக்குள் படுத்திருந்த ஸ்ரீ ஹவார்ட் மர்ஃபெட்டின் பெட்ஷீட்டுக்கு உட்புறம் சந்தனகுங்குமம் தடவிய ஏகப்பட்ட இலைகளைவைத்துஅவரது மனத் தளர்ச்சியை விரட்டி உத்ஸாஹமூட்டியது;

தமது வீட்டில் விபூதி வராதா என்று ஏங்கிய ஒஹாய் (கலிஃபோர்னியா) பேராசிரியர் டாக்டர் பெனிடோ ரேயிஸ் வெளியே சென்று வீடு திரும்பியபோது, வீட்டில் தீ விபத்து ஏதேனும் நேரிட்டு இத்தனை சாம்பல் தள்ளியுள்ளதோ என்று நினைக்குமளவுக்கு மூட்டை மூட்டையாக வீடு பூராவும் விபூதியை வாரிக்கொட்டியிருந்தது

என்றிப்படி எத்தனையோ அற்புதங்களில் பாபாவைப் பாப்பாவாகக் கண்டு செல்லம் கொடுக்கத் தோன்றுகிறது.

***

விபூதியை வாரிக் கொட்டியதைச் சொன்னதால் இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. அநேக இடங்களில் பகவான் இப்படி விபூதி மழை பொழிகிறான். ஒரு குழந்தை மனம் போனபடி பிடிப் பிடியாக வாரி இறைத்தது போலவே படங்களில் குப்பல் குப்பலாகத் திருநீறு நிற்கும். (ஈரக் கசிவில்லாதபோதிலும் அதெப்படி உதிராமல் நிற்குமோ?) ஆனால் முன்பே சொன்னபடி இந்த தெய்வக் குழந்தை மனம் போனபடி செய்வதிலும் ஒழுங்கு தன்னால் அமைகிறது! அந்த ஒழுங்கையும் இந்த விபூதிச்சூறாவளிக்கு நடுவே பார்த்து ஆச்சரியப்படுவோம். படங்களில் சிலவற்றில்விபூதி வெளிப்பட வேண்டாம்என்று அவர் எண்ணுவார் போலும். அவை ஸ்வாமியின் நடுநாயகமான ஸாயி ஓவியமுங்கூட இருப்பதுண்டு. இந்தப் படம் அல்லது படங்கள் நீங்கலாக மற்றவற்றில் மட்டுமே விபூதி வர்ஷம் காணப்படும். இவற்றிலோ தவறிப்போய் ஒரு திருநீற்றுப் பொடிகூட இருக்காது. இப் படங்களை ஒட்டியே, மேலும் கீழும் இரு பக்கங்களிலும் உள்ள படங்களில் வகை தொகை இல்லாமல் விபூதி வாரி அடித்திருக்க, இடையே மாட்டிக் கொண்டுள்ள படங்களில் மட்டும் ஒரு துகள் கூடப் படாதபடி எப்படிச் செய்கிறார்? இதைக் காணும்போதுதான் குழந்தையின் மனம் போனபடியான விளையாட்டிலும் உள்ள ஒழுங்குப்பாட்டை உணர முடிகிறது!

***

குழந்தைக் குறும்பான ஸ்வாமி லீலைகளில் சொந்த அனுபவமொன்று.

பத்தாண்டுகளுக்கு முன் 1970ல் புட்டபர்த்திக்குச் சென்று பகவானைப் பார்க்கலாமே என்ற ஆசை எனக்கு லேசாக எழும்பியது.

பக்தர் கோஷ்டி ஒன்றோடு பேசிக் கொண்டிருந்த போது இந்த எண்ணம் வாய் வழியும் வந்தது.

போகலாம், வாருங்கள்என்று அவர்கள் ஆவலாகக் கூறினர்.

அப்போது என் நிதி நிலைமை அவ்வளவு சரியாக இல்லை.

பாபா பைஸா கொடுத்தால் போகலாம்என்றேன்.

மறுநாள் விபூதி இட்டுக்கொள்ளக் குழலில் கை விட்டேன். அப்போது ஸ்வாமி விபூதியோ, அல்லது ஸ்வாமி பெயரைச் சொல்லிக்கொண்டு வந்திருந்த ஒரு ஸித்தரின் விபூதியோ ஒரு சின்னக் குழலுருவ டப்பியில் போட்டு வைத்திருந்தேன். அதில்தான் திருநீறு எடுத்துக்கொள்ள விரலை விட்டேன்.

விரலோடு வந்தது ஒரு நயா பைஸா நாணயம்!

இதுபோன்ற அனுபவங்களுக்கு அது ஆரம்பகட்டமாதலால் அலாதி ஆனந்தமாக இருந்தது. ஸ்வாமி நம் முறையீட்டைக் கேட்டு ஈடேற்றுவது எவ்வளவு நிச்சயம் என்பது உறுதியாகிற தொடக்கத்தில் நாம் உறும் உவகை தனிதானே?

ஆனாலும் இங்கே முறையீட்டைக் கேட்டது நிச்சயமானாலும், அதை ஈடேற்றாமல் குழந்தையாக அல்லவா விளையாடியிருக்கிறார்? “பைஸா கொடுத்தால் போகலாம்என்று நான் சொன்னதற்காக ஒரே ஒரு பைஸா அல்லவா போட்டிருக்கிறார்? அதைக் கொண்டு எப்படிப் புட்டபர்த்திப் பயணம் மேற்கொள்வது?

அதிக நேரம் இப்படிக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கவிடவில்லை. அன்று பகலே எதிர்பாராமல் ஏதோ ஒரு ராயல்டித் தொகை வந்தது. புட்டபர்த்திப் பயணமும் இனிதே நடந்தது. 1970 பிப்ரவரி 18ந் தேதி புதன்கிழமை காலை முதன் முதலாக ஸ்வாமியுடன் தனிப் பேட்டி பாக்கியம் கிட்டிற்று.

***

கொடிய நோய்களைத் தீர்ப்பதிலுங்கூட ஸ்வாமியின் குழந்தை விளையாட்டு போவதில்லை. உதாரணமாக ஸ்ரீ பி.எஸ். தீக்ஷித்தின் சகோதரிக்குக் கான்ஸர் வந்தபோது, தீக்ஷித்தின் (!) மார்பில் ஸ்வாமி விபூதி பூசி, பிறகும் தீக்ஷித்தின் நாசியிலிருந்தே ஏதோ திரவம் கொட்டும் படிச் செய்து, அந்த அம்மாளை குணப்படுத்தியிருக்கிறாரே இதிலே பாப்பாவின் லீலா விநோதம் இருக்கத்தானே செய்கிறது?

எனக்குச் சென்ற மாதம் (1979 ஜூன்) ஸ்வாமி செய்த பல்வலி சிகித்ஸையில்கூட ஒரு விநோத அம்சமுண்டு. அதைக் கடைசி அத்தியாயத்தில் சொல்வேன்.

***

விபத்து ரக்ஷணத்திலும் விளையாட்டுப் புத்தி போவதில்லை நம் பகவானுக்கு.

தாம் கொடைக்கானலில் இருந்தவாறே, போபாலில் தற்கொலை செய்துகொள்ள இருந்த பக்தரைக் காப்பாற்ற ஸூக்ஷ்ம சரீரத்தில் சென்றாரே! அப்போது தம் கந்த ரூபத்தில் அவர் முன் போய் நின்றிருக்கக் கூடாதோ? அப்படிச் செய்யவில்லை. லீலா நாடகமல்லவா வோண்டியிருக்கிறது, நாடகக் கலைஞர் குடியிலே பிறந்த நம் நாதருக்கு? ஆதலால் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள இருந்தவரிடம், அவரது பூர்வகால நண்பர், நண்பரின் மனைவி, அவர்களது சாமான்களைத் தூக்கி வரும் பணியாள் என்ற மூன்று ரூபங்களை எடுத்துக்கொண்டு போய்த் தற்கொலையைத் தடுத்திருக்கிறார்! நண்பர் என்ற ஒரு உருவில் போயிருந்தால் மட்டும் போதும்; அவரது மனைவியும் கூலியாளும் அவசியமேயில்லை என்று நமக்குத் தோன்றினாலும், காரியகாரணங்களில் கட்டுப்படாத அவரது குழந்தை விளையாட்டு குணத்துக்கு வேறு விதமாகத் தோன்றுகிறது!

***

1975ம் ஆண்டுத் தொடக்க காலம். மாலை வேளை.

கோலாலம்பூர் ஜெனரல் ஆஸ்பத்திரியில், கான்ஸர் நோயில் உபாதைப்பட்ட இளைஞர் சிவப்பிரகாசத்துக்கு வாழ்வு அடியோடு சலித்து விடுகிறது. ‘எப்படியும் பிழைக்கப் போவதில்லை. இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி அவஸ்தைப்படுவது?’ என்று எண்ணுகிறார். ‘ஏன் படவேண்டும்? இப்போதே உயிரைப் போக்கிக்கொண்டால் போகிறது!’ நோயைத் தீர்க்க பாபா கருணை கூராவிடினும், அவரது அருளில்தான் மேல் மாடியில் நம்வார்ட்அமைந்திருக்கிறதே! இதோ, சில அடிகள்தான் வெளி வராந்தாவுக்கு! அங்கேயிருந்து அப்படியே கீழே குதித்துவிட்டால் 170 பவுண்டிலிருந்து ஐந்தே மாதத்தில் 110 பவுண்டுக்கு இறங்கி விட்ட இந்த சிவாவின் உயிர் சிவலோகம் போய்விடாதோ?

தீர்மானித்துவிட்டார் சிவா!

ஆஸ்பத்திரியில் சேர்ந்துவிட்ட தம் உடைமைகளையெல்லாம் ஒழுங்காகத் தம் படுக்கையருகே திரட்டி வைத்தார். இவர் போக உத்தேசித்த நெடும் பயணத்தில் ஒரு உடைமையையும் உடன் கொண்டு போக முடியாதுதான். செய்தி கேட்டு வரும் தம் பெற்றோருக்குச் சிரமமிருக்க வேண்டாமென்றுதான் தன் சாமான்கள் யாவற்றையும் ஒரே இடமாக ஒழுங்குபடுத்தினார்.

காரிடாருக்கு வந்தார். கைப்பிடிச் சுவரருகே நின்று கீழே பார்த்தார். ‘ஆஹா, ஒரு துள்ளல்தான்! அதோடு தீர்ந்தது கஷ்டம்!’

தோளிலே திண்ணென ஒரு கை பதிந்தது. (பாபாதான் என்று நினைக்கிறீர்களாக்கும்!)

திடுக்கிட்ட சிவா திரும்பிப் பார்த்தார்.

நண்பர் ஸுப்ரமணியம்தான்! சிவாவைப் பார்க்க அடிக்கடி வருபவர் அவர்.

இந்த சமயம் பார்த்துத்தானா வரவேண்டும்?”

ஸுப்ரமணியம் சிவாவிடம் நீண்டநேரம் உரையாடினார். மிகவும் அறுதலாகப் பேசி உத்ஸாஹம் தந்து விட்டார்!

மாடியிலிருந்து குதித்தால் எல்லாம் தீர்ந்ததுஎன்று நாம் நினைத்தது எவ்வளவு தவறு என்று சிவாவுக்குப் புரிந்தது. ‘இந்த உடல்தான் தீருமே தவிர, உயிர் தீராது; அது வேறு எந்த உடலில் பிறந்து, இன்னும் என்னென்ன பாடு பாடுமோ?” என்ற ஞானம் அவருக்கு ஏற்பட்டது. எது எப்படியானாலும் ஆகட்டும், தற்கொலை உத்தேசம் கூடாது என்று முடிவு கட்டினார்.

ஸுப்ரமணியம் வந்ததிலிருந்து ஒரு புதுத் தெம்பே அவருக்கு ஏற்பட்டு விட்டது. அவரை நண்பர் கீழே அழைத்துப் போய்ப் பழங்கள் வாங்கிக் கொடுத்து அனுப்பப்பினார்.

மறுநாளே சிவாவின் தந்தை ஸ்ரீ பெருமாள் வந்து அவரைப் புட்டபர்த்திக்கு அழைத்துப்போக ஏற்பாடு செய்திருப்பதாக கூறினார்.

பிப்ரவரி 20ந் தேதியன்று தந்தையும் மகனும் கப்பலில் இந்தியாவுக்குப் புறப்பட்டனர்.

மார்ச் 6ந்தேதி பகவான் சிவாவைத் தனிப் பேட்டிக்கு அழைத்துப் பேரருள் செய்தார்.

உனக்கு கான்ஸரே இல்லைஎன்று ஆரம்பித்தார்.

(நோயாளிக்குக் கலவரம் கூடாதென்பதற்காகவே சில சமயங்களில் ஸ்வாமி இவ்விதம் அவர்களுக்கு உள்ள வியாதியை மறுத்துப் பேசுகிறார் என்பது ஓர் ஊகம்.)

தரையை நோக்கி மும்முறை கரத்தைச் சுழற்றினார் ஸ்வாமி. அவரது உள்ளங்கை முழுதும் செக்கச் செவேலென்று ஒரு ஆயின்மென்ட் தோன்றியது.

(புற்றுநோய்க்கு இப்படியொரு மருந்து உண்டா என்றால் யார் பதில் சொல்வது? ஸ்வாமியின் கருணை உள்ளச் செம்மைதான் உள்ளங்கையில் சிவப்பு அஞ்ஜனமாக வந்ததோ, அல்லது காரணகாரியமில்லாத குழந்தை லீலையில்தான்உவ்வாவுக்குச் சேப்பு மந்துஉண்டாக்கினாரோ?)

சிவாவின் வயிற்றில் எந்த இடத்தில் கான்ஸர் லம்ப் இருந்ததோ வெகு சரியாக அங்கே அஞ்ஜனத்தைத் தேய்த்தார் அஞ்சல் தரும் கையால். “நீ ரொம்ப லக்கி ஆளுஎன்றார்.

வாஸ்தவம்தானே? இப்போது நாம் பார்த்தது போதாதா, சிவாவின் லக்குக்கு?

குழந்தை ஸ்வாமி நம்மைக் குழந்தையாக்கி அன்பு மயமாகக் கடிந்து கொள்வதுண்டல்லவா? அதன்படி சிவாவிடம், “உனக்கு ஸ்வாமிகிட்டே பூர்ண நம்பிக்கை இல்லை, ‘ஸுயிஸைடில்தான் நம்பிக்கை! இல்லை? பைத்தியக்காரா! ஹாஸ்பிடல் காரிடார்லே என்ன ப்ளான் பண்ணினே? தப்பு இல்லை? ஸ்வாமி நான் இருக்கச்சே அந்த மாதிரில்லாம் நினைக்கலாமா? உனக்கு எங்கிட்டே முழு நம்பிக்கை இல்லாட்டாலும் ஸ்வாமி எப்பவும் உன் பக்கத்திலேயேதான் இருக்கேன். அன்னிக்கு என் சக்திதான் உன்னைஸுயிஸைட்விளிம்பிலேருந்து இழுத்துக் கொண்டு வந்தது…”

மேற்கொண்டு சிவாவின் கதையைப் பிறிதொரு அத்தியாயத்தில் பார்ப்போம். இப்போதைய அத்தியாய விஷயத்துக்கு அந்தக் கதை தொடர்புடையதல்ல. குழந்தைத்தனம் தோன்றும் லீலா அம்சம்தானே இங்கு நம் மையப் பொருள்?

கோலாலம்பூரில் ஸுப்ரமணியமாக வந்தது ஸ்வாமிதானா? அப்படி அவர் தெளிவாகச் சொல்லவும் இல்லையே! முழுக்க உடைத்துவிடாமல் நாடக அங்கங்களை நீட்டிக்கொண்டே போவதில் மகிழ்பவரல்லவா?

ஊருக்குத் திரும்பியபின் சிவா ஸுப்ரமணியத்தைக் கண்டு பேசுகையில், முன்னொரு நாள் மாலை வேளையில் அவர் தம்மைக் கீழே அழைத்துப் போய்ப் பழங்கள் வாங்கிக் கொடுத்தது பற்றிப் பிரஸ்தாவித்தார்.

நானா? சாயந்திர வேளையில் வந்தேனா? இல்லவே இல்லை. பலதடவை உன்னைப் பார்க்க நான் வந்திருந்தாலும் ஒருநாள்கூட ஸாயங்காலத்தில் வந்ததே கிடையாதே!” என்றார் ஸுப்ரமணியம்.

ஏன் ஸ்வாமீ, இதென்ன விளையாட்டு உனக்கு? சாக நினைத்த சிவாவுக்கு முன் நீ உன் ரூபத்திலேயே தோன்றியிருக்கக் கூடாதா? பிரத்யக்ஷமாக இல்லாவிடினும் உருவெளித் தோற்றமாவது காட்டியிருக்கக் கூடாதா? அல்லது அவரைச் சுற்றி உன் விபூதியைத் தெளித்தோ, தேனைத் துளித்தோ உன் அருட்காப்பை உறுதிப்படுத்தித் தற்கொலையெண்ணத்தைத் தவிர்க்கச் செய்திருக்கக் கூடாதா? சரி, நீதான் ஸுப்ரமணியமாக வந்தாயே, அதையாவது தனிப்பேட்டியில் வெளிப்படச் சொல்லியிருக்கக் கூடாதா? அல்லது சொல்லாமலேயாவது விட்டிருக்கக்கூடாதா? இரண்டுமின்றி, ‘என் சக்தி உன்னை இழுத்ததுஎன்று புதிர் போட்டிருக்கிறாய்!

வேண்டியிருக்கிறது உனக்கு இத்தனை விளையாட்டு!

தற்கொலையிலிருந்து காப்பதில் எத்தனைகனம்இருக்க வேண்டும்? அதைப் பூம்பந்தாக்கி விடுகிறார்!

இன்னும் அழுத்தமான அதாவது அழுத்தமில்லாத ஓர் உதாரணம். ஒரு யாழ்ப்பாண இளைஞர் வைத்தியப் படிப்பில் தோற்றுவிட்ட அவமானத்தால் நள்ளிரவில் கிணற்றில் விழ எண்ணினார். பக்கத்தில் படுத்திருப்போர் கவனியாதவாறு படுக்கையிலிருந்து அங்குல அங்குலமாக எழுந்திருந்தார்.

எங்கே நடப்பதையும் கவனிக்கும் ஸ்வாமி சும்மா இருக்கவில்லை. என்ன செய்தார்? குழந்தை விளையாட்டுத்தான் செய்தார். இளைஞர் அங்குல அங்குலமாக எழுந்திருக்க, அருகே தரையைத் தொட்டுக்கொண்டு மாட்டியிருந்த பாபாவின் சித்திரமும் அவரோடு அங்குல அங்குலமாகச் சுவர் மேல் ஏறிற்று!

அதன் மூலமே ஸ்வாமியின் ஸாந்நித்யத்தையும் அநுக்ரஹத்தையும் உணர்ந்து தற்கொலை யோசனையை இளைஞர் விட்டு விட்டார்.

***

விபத்துக்களிலும் விபரீதங்களிலும் விரைந்து வந்து ரக்ஷிக்கும்போதுகூடத் தம் விளையாட்டை, அதிலுள்ள புதிரை, நாடக ரஸத்தை ஸ்வாமி விடுவதில்லைதான். உதாரணங்களை அடுக்கிக்கொண்டு போகலாம். ஸாயி பக்தர்கள் நன்கு அறிந்த ஒன்றை மட்டும் பார்க்கலாம்:

காலஞ்சென்ற டாக்டர் பி. ராமகிருஷ்ணராவ் உத்தரப் பிரதேச கவர்னராக இருந்தபோது, ஓரிரவு அவரும் அவரது மனையாளும் ரயில் பயணம் செய்தார்களே, அப்போது மின் விசிறியிலிருந்து தீப்பொறி கொட்டியதே! அதை நிறுத்த ஓடும் ரயிலுக்குள் மெகானிக் வேஷத்தில் வந்த ஸ்வாமியை ஸ்ரீமதி ராவ் திருடன் என்றல்லவா நினைத்தார்? பிற்பாடு அந்த அம்மாள் இந்த விஷயத்தையே மறந்தும் விட்டாரே! வேறொரு சமயம் காசியில் இத் தம்பதியரின் விமானம் க்ராஷ்லான்டிங் ஆகாமல் ஸ்வாமி காத்தபோது, அந்த அம்மாள் அப்போது பெங்களுரிலிருந்த பகவானுக்கு ஃபோன் போட்டு நன்றி தெரிவிக்க, “அது சரி, ரயில் சமாசாரத்துக்கு ஏன்தாங்க்பண்ணவில்லை?… என்ன? மறந்து போச்சா? நான் ஓடோடி வந்து மெகானிக் வேலை செஞ்சேன். நீ கூட என்னைக் கொள்ளைக்காரன்னு நினைச்சாயேஎன்று மறுகோடியில் ஸ்வாமி மறுமொழி சொன்னாரே! இதிலே எத்தனை குழந்தை லூட்டி?

***

க்தரின் கார் கியர்ராட் நடுவழியில் உடைந்தால் வேற்றுருவில் வந்து அதை ரிப்பேர் செய்து போகிறார் ஸ்வாமி. ரொம்ப சரி. ஆனால் எப்படி ரிப்பேர் செய்ய வேண்டுமோ அந்த முறைமையையே கைக்கொண்டால் என்னவாம்? ஹூம், அப்படிப் பண்ணமாட்டாராம்! டௌதிக விஞ்ஞானத்துக்குத் தாம் மேம்பட்டவர், தம் சட்டம் மேம்பட்டது என்று இந்த ரிப்பேரிலும் காட்டியாகணுமாம்! இதையே குழந்தை விளையாட்டாகவும் உண்ண வேண்டுமாம்! அதனால் கார்காரரிடம் ஒரு ஸேஃப்டி பின் வாங்கி அதை வண்டிக்குக் கீழே நிப்பிளில் குத்தச் செய்துவிட்டுப் போய் விடுகிறார்.

மக்கார் செய்த காரும் ஜம்மென்று பறக்கிறது. (ஆகாயத்திலாக்கும் என்று நினைத்துவிடாதீர்கள்! அதிசயோக்தியாகத்தான்பறக்கிறதுஎன்ற பதத்தைப் போட்டது.)

பிற்பாடு ஓர்க்ஷாப்பில் காரை விடும்போது போதாக நிப்பிளையும் காணோம், ஸேஃப்டி பின்னையும் காணோம், எப்படியோ கியர்ராட் உடைந்த நிலையிலேயே கார் முப்பது மைல்கள் சொஸ்தமாக வந்திருக்கிறது!

கடப்பாரையை முழுங்கிவிட்டுச் சுக்குக் கஷாயம் குடிக்கிற மாதிரிஎன்பார்கள். கியர்ராட் உடைந்த காருக்கு ஸேஃப்டி பின் வைத்தியம் இதற்கு ஒரு படி மேலேதான்!

குழந்தையாக மனம் போனபடி விளையாடுவேன். அதிலேயே பரம ரக்ஷணை பொழியும்என்று காட்டுகிறார்.

***

நலனைப் பொறுத்த இதுபோன்ற விஷயங்களில் மட்டுமின்றி, பர நலனைத் தரும் தெய்விக அநுக்ரஹங்களிலுங்கூட பாபா குழந்தை விளையாட்டுப் பண்ணுகிறார்.

பல வாசகர்கள் அறிந்திருக்கக்கூடும் கைவல்ய நதிக்கரை மண்ணைக் கிளறி பாபாஎடுத்தஸ்ரீராம விக்ரஹம் நீலமேக ச்யாமளமாயின்றி வெள்ளை வெளேரென்று இருந்தது. இந்த விக்ரஹம்வருமுன் அவர் கிளறிய மண்ணிலிருந்தோ நல்ல நீல ஜ்யோதிஸ்தான் எழும்பிற்று! விக்ரஹத்தை அந்நாள் வேங்கடகிரி ராணியிடம் கொடுத்து ஒருநாள் முழுதும் பட்டிலே சுற்றி மூடி வைத்துவிட்டுப் பிறகு திறந்து பார்க்கச் சொன்னார், ஸஸ்பென்ஸ் வைக்கிற நம் ஸர்ப்ரைஸ் நாடகாசிரியர்! அவ்வாறே செய்து மறுநாள் பட்டைப் பிரித்துப் பார்க்க, வெள்ளை ராமன் தனக்கே உரிய நீல வண்ணம் பெற்றிருக்கிறான்! இதற்குத் தத்வார்த்த விளக்கங்கள் இருக்கலாம். ஆனால் பாலகேளி என்றே கொண்டால் தித்திக்கிறது.

தமிழோ தெலுங்கோ அறியாத பார்ஸியர் ஃபனிபண்டாவுக்கு ஷிர்டி ஸாயிப் பதக்கம் ஸ்ருஷ்டித்துத் தருகிறார் ஸ்வாமி. அதில் தமிழிலேநானிருக்கப் பயமேன்?” என்றும், தமிழ்தெலுங்கு இரு லிபிகளிலும்அபயம்என்றும் பொறித்திருக்கிறது. ‘இந்த ஸாயி பாபாவுக்கு ஸ்ருஷ்டி சக்தி கிடையவே கிடையாது. ஏற்கெனவே எங்கோ உள்ள பொருளைக் கடத்தி வரும்அப்போர்ட்சக்திதான் அவருக்கிருப்பது. அதைப் பிரயோகிப்பதில் உண்டாகிற கோளாற்றில்தான் இம்மாதிரி புரியாத பாஷை மெடல் ஒருத்தருக்குக் கிடைக்கிறது என்று எதிராளிகள் சொல்வதற்கு ஸகல நியாயமும் உள்ள விதத்தில் இப்படி பாலா லீலா நடக்கிறது! திட்டு வாங்கிக் கொள்ளவே ஆசைப்பட்டு விஷமம் செய்கிறது பேபி பாபா. எங்குமே அதற்குமுன் இருந்திருக்க முடியாத எத்தனை வஸ்துக்களை அவர் படைத்தளித்திருக்கிறார்? தன்னை ஸேவிக்க வந்தகீர்த்தன்கார்களின் குருதம்பதியான குஸுமாஹரநாத் உருவங்கள் பொறித்த டாலர்; தம் முன் நாகஸ்வர இசை படைத்த திருவெண்காடு ஸுப்ரமண்யப் பிள்ளையின் குல தெய்வமான வீரபத்ரர் பொறித்த பதக்கம்; உடுமலைப் பேட்டை ஜி.டி.கே. நாயுடுவின் தூள் தூளாகிவிட்ட பல்ஸெட்டின் அச்சாக அதிலிருந்ததேபோல் ஒரு பல் மூளியான இன்னொரு புதிய (பழைய!) ஸெட் என்று லிஸ்டை நீட்டிக்கொண்டே போகலாம். இப்படி, நிச்சயம் நூதன ஸ்ருஷ்டிதான் என்று உறுதியாகத் தெரியும் படைப்புக்களைச் செய்பவர், வசவு வாங்க விரும்பியேதான் இங்கு பார்ஸியருக்குத் தமிழ் தெலுங்கு மெடல் கொடுத்து விளையாடுகிறார்!

தன்னிடம் பேத புத்தியைத் தானே இப்படி உண்டாக்குவதோடு, தன் பக்தர்களிடையிலும் சில மையங்களில் பேதத்தை உண்டாக்கி மகிழ்கிறது இந்தப் பொல்லாத பாப்பா. “தெருவில் அத்தனை பெண்களையும் ஆகாதடிப்பான்என்று கண்ணனைப் பற்றிக் கவி சொன்ன அளவுக்கு நம் ஸ்வாமியைச் சொல்வதற்கில்லைதான். பெரும்பாலும் ஸாயி பக்தர்கள் ஓர் அன்புக் குடும்பமாகக் கட்டுண்டிருப்பவர்கள் தாம். ஆனாலும் எப்போதேனும் இதற்கு விரோதமாக, விநோதமாக விளையாட்டு மூலமே விவாதி ஸ்வரமும் எழுப்பி அடியார்களிடை விவாதம், மனோபேதம் கொஞ்சம் உண்டாக்கிக் களிக்கிறது இந்தக் குழந்தை. சில பக்தர்கள் வீட்டில் மட்டும் விபூதி முதலியவற்றை உண்டாக்குவது, அவர்கள் வீட்டு பஜனையில் மட்டும் தவறாமல் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்டதொரு அற்புதம் புரிவது, அவர்களைவிட பக்தியில் சற்றும் பிற்படாத வேறு சில அடியார்கள் எத்தனை அழுது வேண்டினாலும் அவர்களுக்கு இவ்வித அநுக்ரஹ ஸமிக்ஞைகள் காட்டாமல் கிராக்கி செய்வது, இதனாலேயே இவ்விரு சாராரிடை பேதம், வாதம் உண்டாவது என்றிப்படி ஆங்காங்கு கேள்விப்படுகிறோம்.

கல்கத்தா மாதவியம்மா வீட்டில் முன்பு சுவரை அடைத்துப் பெரிதாக விபூதியிலேயே கீதோபதேசக் காட்சி உருவாயிற்று. அதில் பிரதானமான கண்ணனின் வடிவம் சிலருக்குத் தெரியும்படியும், சிலருக்குத் தெரியாதபடியும் நம் கதாநாயகக் குழந்தை குறும்பு செய்தது. இதனால் கண்ணனின் வடிவைக் காணக்கூடியவர் மட்டுமே மெய்யடியார் என்று ஒரு பேச்சு எழும்ப, இதன் பல விளைவுகளை விஷமக்காரர் ரஸித்தார்! ஒன்று, அடியார்களுக்குள் சற்றுக் கருத்து வேற்றுமை உண்டானது; இரண்டு, அங்கே போய்க் கண்ணன் தெரியாமல் அவமானப்படப் போகிறோமே என்று சிலர் பயந்தது; மூன்றாவதாக, சிலர் கண்ணனின் ரூபம் தெரியாதிருந்தும் தெரிவதாகச் சொல்லி விட்டு, மெய்யாலுமே தர்சனம் பெற்று நுணுக்கமாக வர்ணித்தவர்களிடம் விளக்க முடியாமல் மாட்டிக் கொண்டது இப்படிப் பல விளைவுகள்.

பரமஹம்ஸ ராமகிருஷ்ணர் சொன்னார்: “ஆண்டவன் ஒரு குழந்தை மாதிரி இருக்கிறான். ஒரு குழந்தை தன் கையிலே வைத்திருக்கிற வஸ்துவைத் தாயும் தந்தையும் கேட்கும்போது தரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. அப்புறம் எவனோ முன்பின் தெரியாதவனிடம் தூக்கிப் போட்டு விட்டுப் போகிறது. ஈச்வரனும் இப்படித்தான் தன் அநுக்ரஹத்தை, அதையே வேண்டும் நல்ல பாத்திரர்களுக்குத் தராமலும் வேறு எவருக்கோ அள்ளி வீசுகிறான்.” நம் ஸ்வாமி கர்ம கதி, கருணை கதி இவற்றை எடை நிறுத்தே அநுக்ரஹம் செய்கிறார் என்பதே பொதுவிதியாகத் தோன்றினாலும், ஸ்ரீ பரமஹம்ஸ குருமஹராஜ் விளம்புகிறபடி, சில ஸமயங்களில் இவ்வித காரணகாரியமின்றியே குழந்தை இயல்பில் அவர் தமது அருளைச் சிலருக்குப் பொழிந்தும், சிலருக்கு மறுத்தும் வருகிறாரோ என்றும் சிறு ஸம்சயம் ஏற்படுகிறது. ‘அருள்என்ற பெரிய தத்வம் எப்படியாயினும், அதன் ஸங்கேதமான மிரகிள்களைப் புரிவதில் பரமஹம்ஸர் சொன்ன குழந்தையாகவே ஸ்வாமி அதிகம் செயற்படுகிறார் என்றுதான் நூலாசிரியருக்குத் தோன்றுகிறது.

***

ற்புதக் கலப்பில்லாமல் அன்றாட மானுட நாடகத்திலேயே ஸ்வாமியிடம் துளும்பும்குழந்தைமை‘… ஆஹா, பரமானந்தம், பரமானந்தம்!

எப்போ வந்தாச்சு?” என்று பாண்டுரங்கனைப் போல் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு கேட்பதிலேயே ஒரு குழந்தைத்தன்மை.

இன்னொரு பக்தர் வெளியே தர்சனத்துக்குக் காத்திருக்கிறார் என்று சொல்ல முற்பட்டு அவர் பெயரை நாம் ஆரம்பித்தவுடனேயே, கண்களை அகல விரித்து, “ வந்தாச்சே! பாத்தாச்சே!” என்கிறபோது ஸ்வாமி குமாரஸ்வாமியாகவே இருப்பார்.

பக்தை கொண்டு வந்துள்ள தாம்பூலத்தை அவள் நீட்டுமுன் தாமே அவளுடைய கைப்பையிலிருந்து உருவிக் கொள்ளும் போது நம் மஹா பகவானிடம் சின்னக் கண்ணனின் மோஹனத் திருட்டு மிளிரும்.

பர்ணாவதாரியின் தர்பார் என்று தயங்கிப் வேர்த்துத் தடுமாறி நிற்கும் ஹிந்திக்காரரிடம் போய் பச்சைப் பிள்ளையாகச் சிரித்து, “என்னாய்யா ஸமாசாரம்?” என்பார் தமிழில்! பய பக்தியில் ஒடுங்கி நிற்கும் தமிழரிடம் சென்று பழகு குழந்தையாகக்யா கபர்?” என்று ஹிந்தியில் விசாரிப்பார்.

ஆயிரம் கண்கள் மொய்க்க ஆஸனத்தமர்ந்து பஜன் கேட்டுக் கொண்டிருக்கிறார். “போலோ பாபா மஹாதேவா, போலோ பாபா மஹாதேவாஎன்று இரண்டு முறைலீட்செய்பவர் பாடிய பிறகுதான், மற்றவர்கள் அது முழுதையும் திருப்பவேண்டும். ஆனால் முன்னர் இந்த நாமாவளி கேட்டிராத சிலர், ‘லீட்செய்பவர் ஒருமுறைபோலோ பாபா மஹா தேவாசொன்னவுடனேயே அதைத் திருப்பிப் பாடி விடுகிறார்கள். ‘லீட்செய்பவரின் ஒற்றைக் குரலை இவர்களுடைய கர்ண கடூரக் குரல் விழுங்கியதால், பஜனா ரஸத்திலேயே ஒரு பானகத் துரும்பு புகுந்தாற்போல் பக்தர்களுக்கு இடறுகிறது. ஸங்கீர்த் தனத்தின் ஒழுங்கமைப்பில் கூர்த்த கவனம் கொண்ட பாபா மஹாதேவர் சினம் கொண்டிருப்பாரோ என்று அவரைப் பார்த்தால்அடாடா, இளசிலும் இளங் குழந்தையாக வாய்விட்டுச் சிரிக்கிறார்! தவறாகப் பாடியவர்களின் புறம் திரும்பிய அவரது பார்வையில் அணுவும் கோபமில்லை. “தப்பாப் பாடிட்டிங்களே! அது ரொம்ப ஜோக்கா இருந்திச்சுஎன்று பரிஹாஸம் செய்யும் குழந்தைக் குறும்பே அப் பார்வையில் நிறைந்திருக்கிறது.

தமது கல்லூரி மாணவர்கள் அவர்களது வயதுக்கு மீறிய விவேகம், வாக் சாதுர்யம், பக்தி இவற்றோடு வெளி நாட்டாரிடம் ஸம்பாஷிக்கும் அருமையை வெளிப்படுத்திக் காட்டுவதற்காக ஸ்வாமி குழந்தையாகி விடுவது அருமையிலும் அருமை. அந்த மாணவர்கள் கவனிக்காத படி வெளி நாட்டாரைப் பார்த்து, ‘இன்ன கேள்வி கேளுங்கள்என்று தாமே ரஹஸ்யமாகச் சொல்லிக் கொடுப்பார். கேள்விக்கு மாணவர் சொல்லும் மணியான மறுமொழியில் பாபா களிக்கும்போது குழந்தையின் சமர்த்தில் பூரிக்கும் தாயாக மட்டுமா இருப்பார்? தாயின் சீராட்டில் களிக்கும் குழந்தையுமாக இருப்பார்!

கோடைப் பயிற்சித் தொடக்க விழா, முடிவு விழா, விஜயதசமி, ஜயந்தி போன்ற மாபெரும் உத்ஸவங்களில் ஸகல ஏற்பாடுகளையும் மஹோந்நதமாகச் செய்யும் இந்த அற்புத நிர்வாகி, மேடை ஏறியதும் ஒரு பதினைந்து, இருபது நொடிகள் ஏதுமறியா ஸாது பாலனாகப் பார்த்துக் கொண்டு நிற்பாரே, அப்போது நிஷ்கல்மஷ நித்திலமாகவே நம்மை உருக்கி விடுவார்.

உய்யாலோத்ஸவத்தின்போது திண்டுகளை இப்படியும் அப்படியும் மாற்றிப் போட்டுக்கொண்டு, வெள்ளையங்கி வெள்ளையுள்ளப் பிள்ளையாகச் சாய்ந்திருப்பவர், நறுக்கென்று நிமிர்ந்தமர்ந்து முழங்கால்களைக் கட்டிக்கொண்டு விசையாக ஆடும்போது குழந்தைமையின் ஜீவ ஸாரமே எதிரே வீற்றிக்கும். அந்த ஜூலாபாலாவைநன்னா கன்னத்தைப் பிடிச்சு இழைக்கணும்என்று தோன்றும். பிரமிப்பூட்டும் அற்புதக்காரராகவும், பயப்பட வேண்டிய மாந்திரீகராகவும், பிரம்மாண்ட நாயகராகவும், ஒதுக்க வேண்டிய கபடியாகவும் இப்படி நல்லதும் அல்லதுமாகப் பலவிதங்களில் வர்ணிக்கப்பட்டு, அதனால் அருகே போகமுடியாமல் இருப்பவரை இப்படிப் பரம வாத்ஸல்யத்துடன் செல்லம் கொடுக்கத் தோன்றுகிறதே இதை என் சொல்ல? இந்த ஸௌலப்ய பிரேமையைச் சின்னக் கண்ணன் தவிர வேறெந்த தெய்வ மூர்த்தியோ, அவதாரமோ, மஹா புருஷரோ பெற்றிருப்பாரா என்பது சந்தேகந்தான். பாபாவைப் பாப்பாவாகக் காட்டவே ஓர் அத்யாயம் எழுத வைத்திருக்கிறாரே, இது போதாதோ அவரது அதிநெருக்கமான அன்பு இழையலுக்கு?

பாபாவுக்கே பிரஸித்தமானவை அவரது விரித்த சற்றைக் குழலும், சிவப்புப் பட்டங்கியும்தான். இதற்குப் பல உள்ளர்த்தங்கள் பலர் சொல்கிறார்கள். நானும்ஸ்வாமியில் இப்படி நிறைய எழுதியிருக்கிறேன். இப்போது தோன்றுகிறது இப்படி: குழந்தை உள்ளத்துக்கு இப்படிப்பட்ட கேச பாரமும், பளபளா உடையுமாக இருக்கப் பிடிக்கிறது என்று. இவையே ஒரு குழந்தைக்கு அழகு அலங்காரமாக இருக்கிறது. நீங்களே யோசித்துப் பாருங்கள், பாபாவே ஒரு பாப்பாவாக இருந்தால் அவரது சுருள் முடியை வெட்டிவிட்டோ வேறு விதத்தில் அலங்கரிப்பதையோவிட நாமே இப்படிப் பம்பைப் படராக விட்டுப் பார்ப்பதில்தானே அதிகம் மகிழ்வோம்? அந்தக் குழந்தைக்கு வேறு விதமான உடுப்புக்கள் அணிவிப்பதைவிடச் செக்கச் செவேல் பட்டு ஜிப்பா கழுத்தோடு கால் போட்டுத்தானே பெரிதும் களிப்போம்?

***

குழந்தை ஒன்றையே வைத்து அற்புத ரக்ஷணையைக் குறும்பு விநோதமாக நம் அப்பன் செய்த ரஸமான நிகழ்ச்சியோடு இந்த அத்யாயத்தைத் தலைக் கட்டலாம். இது டாக்டர் வி.கே. கோகாக் அவர்கள் கூறும் ஸம்பவம்.

கர்நாடகத்தைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியரொருவருக்கு ஒரு பெண் குழந்தை. துரதிருஷ்ட வசமாக அது ஊமைப் பெண்ணாக இருந்தது.

ஊமையானால் என்ன? எப்படியோ அப்பெண்ணுக்கு நம் ஸ்வாமியிடம் ஆழ்ந்த பக்தி ஏற்பட்டது. இந்த பக்தி பாக்கியம் தகப்பனாருக்குக் கிட்டவில்லை. எதனாலோ அவருக்கு ஸ்வாமியிடம் வெறுப்பே ஏற்பட்டிருந்தது. அப்பாவுக்குத் தெரியாமல் சிறுமி அக்கம் பக்கத்தில் நடைபெறும் ஸாயி பஜனைகளுக்குச் செல்வாள். பஜனை பாட முடியாவிட்டால் என்ன? செவியால் அமுதைப் பருகுவாள்; சிந்தையில் அமுதனை வைத்து மகிழ்வாள்.

பஜனைக்குப் போகக்கூடாது என்று தடுத்தார் தந்தை. பக்தி இல்லாவிட்டாலும், பாபாவை ஒரு அற்புத வைத்தியராகவாவது நினைத்து அநேகத் தந்தைமார் குழந்தைகளை அவரிடம் அழைத்துவரக் காண்கிறோம். நமது தொடக்கப் பள்ளி ஆசிரியரோ இந்த ரீதியில்கூட ஸ்வாமியின் தொடர்பு கூடாதென்று கருதியிருக்கிறார். பகவான் தானாகட்டும், ஒரு பஜனையின்போதே இந்தப் பெண்ணைப் பளிச்சென்று பாடவைத்து, அவளுக்கு வாயும் வாழ்வும் தருவதோடு, தந்தைக்கும் நல்லறிவு தரக்கூடாதோ? ஸாயிக் குழந்தை ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது!

ஒருநாள் தந்தையின் தடுப்பையும் மீறி பஜனைக்குத் தந்திரமாகக் கிளம்பினாள் மகள். தந்தை கண்டுபிடித்து விட்டார். மகளின் முன்போய் நின்று மறித்தார். “எத்தனை சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறாயா? நன்றாக ஒரு போடு போட்டால்தான் கேட்பாய்என்று இரைந்து மிரட்டியபடி அந்த வாயில்லா ஜீவனை அடிக்கக் கையை ஓங்கினார்!

ஊமைக்குழந்தை உடனே பேசிற்று! “ஐயோ, அம்மாஎன்றா? இல்லை, “ஸாயிராமா!” என்றா? அப்படியும் இல்லை. இவ்வாறெல்லாம் சொன்னால் விளையாட்டு விநோதம் என்ன இருக்கிறது?

வாயில்லாச் சிறுமி பளீரென்று சொன்னது என்ன தெரியுமா? “பாபாகிட்டே சொல்லுவேன்என்று பதிலுக்குத் தந்தையை மிரட்டியது!பிள்ளைப் பெருமாளின் லீலையே லீலை!