சத்ய சாய் – 14

40. ஸாயிராமுக்குஜே! ஜே! ஜே!”

மாகுமாரிக்குப்பத்மாசிஷ்யை ஸ்தானத்திலிருந்தவள். திருமணம் செய்து கொள்ளாமல் ஆன்மியத்திலேயே மனம் செலுத்திய ஸாயி பக்தையான ஆசிரியைஉமாகுமாரிக்குத் திடுமென ஒரு தாய்மை வாஞ்சைபத்மாவிடம் ஏற்படத் தொடங்கியது. இதென்ன பந்தம் என பயந்து ஸ்வாமியிடம் முறையிட்டாள். “பரவாயில்லைஎன்றாரவர். “ஜன்ம ஜன்மாந்தர பந்தம். அதன் போக்கிலேயே விட்டால் அது தீர இன்னும் அநேக ஜன்மம் பிடிக்கும். ஸ்வாமி க்ருபையால் அதைச் சுருக்கிக் குறுக்கித் தருகிறேன். கொஞ்ச காலம் மட்டுமே அந்தப் பூர்வ வாஸனையிலே இருக்கும்படியாகும். இருக்கிறவரையில் மனஸார இருஎன்று விளக்கினார். அவதார ஸாயியன்றி யார் அப்படிச் சொல்ல முடியும்?

உமாமனஸார இருக்கலாம். ஆனால் பத்மா? ஆசிரியை திடுமெனத் தன்னைத் தடவித் தரவும், கட்டி அணைக்கவும் தொடங்கியிருப்பதை அந்த யுவதியால் நல்ல முறையில் ஏற்க முடியவில்லை. தாய்மை என்று சொல்லிக் கொண்டு தகாத போக்கில் அந்த அம்மாள் செல்வதாக பத்மா பயந்தாள். அம்மாளின் காரியங்களைப் பார்த்துக் கொண்டு அவளோடேயே இருக்க நேர்ந்த பத்மாவுக்கு அவளிடமிருந்து எப்படித் தப்புவது என்று தெரியவில்லை. பாபா சொன்னதாக உமா சொன்ன ஜன்மாந்தரம் பத்மாவுக்கு நம்பிக்கைப்படவில்லை. “ஸைகாலஜி ட்ரிக்கில் நடக்கும் கன்னாபின்னா ஒன்றில் சிக்கிவிடுவோமோ?” என்றே அஞ்சினாள். அவளும் ஸாயி பக்தையாகப் பக்குவம் பெற்றிருந்தவளாதலால் உமாவிடம் மரியாதைக்குறைவாக நடந்துகொள்ளாமலும், அதே போதில் அவள் தன்னை ஸ்பர்சிக்க அநுமதியாமலும் இருந்தாள்.

உமாவுக்கா, தாளவில்லை! எப்படித்தாளும்? “பரவாயில்லைஎன்று பர்த்தி நாதனேஅப்ரூவ்செய்து விட்ட ஜன்மாந்தர உறவு வாஸனை அவளை ஆவேசமாகப் பிடித்துக்கொண்டுவிட்டது. முரண்டுகிற பத்மாவிடம், தழைந்து, “தாயிடம் குழந்தையாய் என்னிடம் கொஞ்சேன்என்று கெஞ்ச ஆரம்பித்தாள். பத்மா இடம் தரவில்லை. உமாவுக்கு இரு அம்சங்களில் வேதனை. ஒன்று, ‘தன் தாய்மை தாகம் தணியவில்லையே; இந்தப் பெண் தணிக்க மாட்டேனென்கிறதே!’ அதனால், ஸ்வாமி முன் வினையைசுருக்கிக் குறுக்கித் தருவது தடைப்பட்டு நன்றாக நீள நெடுகவே ஆகிப் பழிவாங்கி விடுமோ? என்ற எண்ணம். இன்னொன்று, ‘தன் தூய உணர்வை இப்பெண் ஐயுறுகிறாளே! தாய்மை இப்படி ஆவேச தாபமாக வரும் என்று இவளுக்குப் புரிய வைப்பதெப்படி?’

ஸ்வாமி! ஜன்மாந்தர வாஸனையைத் தீர்ப்பதற்காகவே இருந்தாலும் தற்போது நீங்கள் தான் கிளறி விட்டிருக்கிறீர்கள். எனவே அதன் பரிசுத்தத்தை இப்பெண் அறியுமாறு நீங்கள்தான் சான்றோ ஸங்கேதமோ காட்ட வேண்டும்என ஆழ்ந்து வேண்டினாள்.

ஸ்வாமி காட்சி கொடுத்தார்.

என்று கிறுக்கிக் காட்டிவிட்டு மறைந்து விட்டார்.

அவர் கிறுக்கிக் காட்டியது என்னவென்றே சற்று நேரம் உமாவுக்குப் புரியவில்லை. பிறகுதான் ஆங்கிலத்தில் மூன்றுஎஸ்கள் SSS என்று போட்டு, 235 எனக் குறிப்பிட்டிருக்கிறாரெனப் பொருள் கொண்டாள். S S S என்பது அவரது சரிதமானஸத்யம் சிவம் ஸுந்தரத்தையோ, அவரது உரைத் தொகுப்பானஸத்ய ஸாயி ஸ்பீக்ஸையோ சுட்டுவதாகவும், இவற்றிலொன்றின் 235-ம் பக்கத்தில் தான் வேண்டிய சான்று இருப்பதாகவும் பொருள் கொண்டாள்.

அந்த இரு நூல்களின் எல்லாப் பகுதிகளையும், ஒவ்வொன்றாகப் புரட்டி 235-ம் பக்கத்தைப் பார்த்தாள். ஊஹூம்! இவள் விரும்பிய ஸங்கேதம் அவற்றிலெதிலுமே இல்லை. குழம்பினாள்.

சற்றும் எதிர்பாரா விதமாக அப்போது வேறொரு புஸ்தகம் அவள் கைக்கு வந்தது. இந்தியாவில் விநியோகத்திற்கு வந்திராத அப்புஸ்தகப் பிரதி பிரசாந்தி நிலயப் பிரமுகர் ஒருவரிடமிருந்து எப்படியோ இவள் கைக்கு வந்தது. மலேஷியா ஜகதீசன் எழுதிய Sai Baba and the World என்ற நூல். இத் தலைப்பில் மூன்றுஎஸ்கள் இருக்கவில்லைதான். ஆனால், என்ன ஆச்சரியம்!

அட்டையிலே கீழ்ப் பகுதியில், பாதர்

JOURNEY TO GOD – PART 2
J. JEGATHESAN

என்பதாக நூலின் மற்றொரு தலைப்பும், ஆசிரியர் பெயரும் போட்டிருந்ததில்,

முதல் வரியில் JOURNEY என்பதிலிருந்த J-யும், ஆசிரியர் பெயரிலிருந்தJ.Jயும் சேர்ந்து மூன்று J-க்களாக உமாவின் கண்களில் பளீரெனப் பட்டன!

சுளீரென உறைத்தது உண்மை! அன்று ஸ்வாமி கிறுக்கியது மூன்று S-கள் அல்ல, மூன்று J-க்களே என்ற உண்மை! மேலே வைத்த மூன்று புள்ளிகள் தெளிவாக இவள் நினைவில் வர, அவை கையெழுத்தில்ஜேக்கு மேல் வைக்கும் பொட்டுக்களேதான் எனத் தெளிந்தாள்.

அவசர அவசரமாக ஜகதீசனுடைய நூலின் 235-ம் பக்கத்தைப் புரட்டினாள். அதிலே இவள் கண்பட்ட இரண்டாம் பாராவிலேயே அசாதாரணமான சான்று. சங்கேதம் கிடைத்துவிட்டது!

இவள் பத்மாவைக்கொஞ்ச வாஎன்று கூப்பிடுவது போலவே கிஷோர் என்ற பையனை ஸாக்ஷாத் ஸ்வாமி கூப்பிடுவதாகவும், அவன் அப்படியே அவரைக் கொஞ்சுவதாகவும், அவனது பெற்றோர் இந்த சாச்வதப் பெற்றோனிடம் மகன் கொஞ்சுவது கண்டு உருகித் தேம்பியழுவதாகவும் அப்பாராவில் கண்டிருந்தது!

இதைப் பத்மாவுக்குக் காட்டினாள் உமா!

அதன்பின் இவளது தூய உணர்வை அவள் எப்படி சந்தேகிக்க முடியும்?

ஆயினும்இங்கேதான், ஸ்வாமி எத்தனையெத்தனை அற்புதம் செய்தாலும் தம்மிடம் மனமொப்பித் தரப்படாத ஒரு மனத்தில் புகுந்து அதை மாற்ற மாட்டாரென்ற அவரது அபாரக் கட்டுப்பாடு வருகிறது. ஸ்வாமியைக் கிஷோர் கொஞ்சினாற்போல் உமாவைக் கொஞ்சப் பத்மாவுக்கு மனம் திறக்கவில்லை! திறக்காத மனத்தில், திறக்கப்பட வேண்டும் என்று தாபமும் கொள்ளாத மனத்தில் ஸ்வாமி எவ்வித மாற்றமும் ஏற்படுத்தவில்லை. இப்படிக் கட்டுப்படுவதே நம் ஸர்வ சக்தனின் பேரற்புதமாகும்.

உமா விரும்புவது போல தன்னால் பழக முடியாதெனப் பத்மா தீர்மானமாகக் கூறினாள். ஆனால் அதுகாறும் தான் அவளிடம் அன்புடனும் விச்வாசத்துடனும் இருந்தது போலவே இனியும் இருந்து அவளது பணிகளைப் புரியவும் தயாராக இருந்தாள்.

தன் தூய்மை நம்பப்பட்டது என்ற நிறைவு உமாவுக்கு ஏற்பட்டாலும் தாய்மையின் வெளிப்பாட்டுக்குத் தாழ் போடப்பட்டு விட்டதே என்ற தவிப்பு நீங்காமல் ஸ்வாமியிடம் முறையிட்டாள்.

அப்போது, ஒப்பித் தரப்பட்ட மனத்திலே புகுந்து அதை மாற்றும் தமது மஹா அற்புதப் பிரபாவத்தை ஸ்வாமி காட்டினார். முன் வினையைச்சுருக்கிக் குறுக்கிமட்டுமின்றி, அப்படியே பூர்ணமாகவே கருக்கி எரிக்கும்விசேஷ கிருபையான மஹா மஹா பிரேமாற்புதத்தையும் தாம் அபூர்வமாகச் சில அடியாரிடம் காட்டுவதுண்டு என்பதையும் காட்டினார்.

உமா முறையிட்ட அன்றே அவளில் மண்டிக் கிளர்ந்து வந்த முற்பிறவி வாசனையான தாயுணர்ச்சியை அடியோடு துடைத்தெடுத்து விட்டார்! தாய்மை ஆவேசம் பறந்தேபோக, அவள் முன் போலவேபத்மாவிடம் பழகலானாள்.

***

ந்த லீலைக்கு ஓர் ஒட்டு லீலை உண்டு! ‘உமா குமாரிக்கு உண்டான நுட்பமான பூர்வ உணர்வை அந்த அம்மாளோடு நெடுங்காலம் நெருங்கிப் பழகியபத்மாவே ரஸாபாஸமாக எண்ணிவிட்டபோது வாசகர் சிலரும் அப்படி எண்ண இடமுண்டல்லவா? என்னதான் நான் புனைபெயரில் குறிப்பிட்டிருந்தாலும் அவரை அடையாளம் காணக் கூடியவர்கள் அவர்மீது ஐயப்படக் கூடுமே! ஏன், கிஷோரிடம் ஸ்வாமி காட்டிய தாய்மை விழைவைக்கூட விபரீதமாக எண்ணக்கூடியவர்களும் இருக்கலாம்! எனவே தேசம் விட்டுத் தேசம் ஒரு புஸ்தகத்தைக் கொண்டு வந்துஉமாவுக்கு சந்தேசமாக JJJ காட்டிய இந்த அருமையான லீலையைப்ரியப்படாத மனத்தை வலிந்து மாற்றாமலும், சரண் செய்த சித்தத்தை முன்வினை நெடி அறவேயின்றி மாற்றியும் காட்டிய அரும் பண்பு லீலையைஇந்நூலில் எழுதலாமா, வேண்டாமா எனத் தெரியாமல் குழம்பினேன்.

இதற்கும் நூல்வழி ஸங்கேதம் வேண்டி, எதிரேயிருந்த ஒரு ஸாயி நூலை அது என்ன என்று கூடப் பாராமல்பிரித்தேன். பார்வை பட்ட இடத்தில்ஜேஎன்ற ஒரு மேனாட்டவரின் பெயர் பளிச்சிட்டது! JJJ விஷயமாக வினவியதற்கு “Jay” என்ற புனை பெயர் மூலம் பாபா விஷமமாக விடை கூறிவிட்டார்! என்ன விஷம மெனில், ‘Jay’ என்றால்அசடுஎன்று அர்த்தம்! “அசடே, இதென்ன கேள்வி?” என்று எனக்கு விடை!

இக் கதாபாத்திரங்களைப் புனைபெயர் போட்டுக் குறிப்பிட வேண்டுமென்று உணர்த்தவேஜேஎன்ற புனை பெயரைக் காட்டியிருக்கிறார்! எர்னஸ்ட் என்று இயற்பெயர் கொண்ட இந்தஜேயை லோவென்பெர்க் எழுதிய The Heart of Saiயில் பக்கம் 139-ல் சந்திக்கலாம்.

இப்படிப் பல லீலை புரிபவருக்குப் போடுவோம் – “ஜே! ஜே! ஜே.”

41. ‘விமான நடுவில் வித்தகம்!

னக்குப் பரம நேசத் தம்பிராஜப்பாவான ப்ரொஃபஸர், டாக்டர் கே. ஸ்ரீநிவாஸன் அப்போது வெளி நாடொன்றில் இருந்தார். ஒரு பிரச்னை சம்பந்தமாக ஸ்வாமியிடம் எழுத்து ஸங்கேதம் வேண்டினார். நிறைவேறுவதற்கில்லாத அஸாதாரண அடையாளம் என்றே கருதக்கூடிய ஒரு ஸங்கேதமாக்கும் கேட்டுவிட்டார்! அது நம் நாட்டிலேயேப்ரெஸ்டீஜ்மிகுந்த ஏடுகள் பாபாவைப் பற்றிச் செய்தி வெளியிடுவது தங்களது ப்ரெஸ்டீஜுக்குக் குறைவு எனக் கருதிய காலம். இவரோ அந்த வெளி நாட்டில் தாம் வாங்கும் அந்த வெளிநாட்டு ஏட்டில் அன்று பிரிக்குமிடத்தில் பாபா தொடர்பாக ஏதாவது பிரசுரமாயிருக்க வேண்டும் எனக் கோரினார்!

பிரித்தார் ஏட்டை. பெரிய எழுத்திலே கொட்டை கொட்டையாக SAI என்ற வார்த்தையைக் கண்டு வார்த்தையில் வாராத உணர்ச்சியெழுச்சி கொண்டார்!

எவரேனும் ஏதேனும் பிழை கண்டுபிடித்துக் கூறினால் அவருக்கு அவ்வேட்டினர் பரிசளிப்பார்கள். அவ்வளவு நேர்த்தியும் கவனமும் கொண்டதாம் அவர்களுடைய ப்ரிண்டிங்! அப்படிப்பட்ட ஏட்டில்தான் இன்று ஆகாய விமானக் கம்பெனியானஸ்விஸ்ஸேர்விளம்பரத்தில் ‘SWISSAIR’ என்ற கொட்டையெழுத்துப் பெயரிலேயே முதல் நாலெழுத்துக்களான ‘SWIS’ என்பதும், கடைசி எழுத்தான ‘R’ என்பதும் அச்சாகாமல், ‘SAI’ மட்டுமே அச்சாகியிருந்தது! பிரச்னையில் ஸ்ரீநிவாஸனின் கருத்துக்குஓகேதெரிவித்துக்கொண்டு அது காட்சியளித்தது!

42. அட்டைப் படக்* குட்டியற்புதம்

வரிவடிவம் எனும் எழுத்து வழி அத்புதம் இருக்கட்டும். வடிவ அற்புதமாகவே ஒன்றுஅதுவும் இந்நூல் தொடர்பாகவே அவர் நிகழ்த்திய ஒன்று:

இவ்வாண்டு ஸ்வாமி கோவை விஜயம் செய்த போது ஸாயி ஸேவா ரத்னமான ஒரு டாக்டரின் இல்லத்துக்கு எழுந்தருளியபோது எடுத்த படத்தையே அட்டையில் கண்டு மகிழ்கிறீர்கள் படத்தில் பெருமான் சூடியுள்ள பிறைமதி எங்கிருந்து, எப்படி வந்தது என்று எவரும் அறியார்!

பாபம் புரிந்த சந்திரன் சாபம் பெற்றுக் கலைகள் தேய்ந்து வரலானான். அவனைப் பரமேச்வரன் முடியில் சூடிக்கொண்டு வளர்பிறையாக்கி மீளவும் முழுமை பெறச் செய்தான். அந்தப் பிரேமாத்புதம்தான் ஈசனைப் பிறைசூடிய பெம்மானாக்கியது. ‘ஆத்திசூடிஎன்று முதற்பாடம் படிக்கிறோமே, அங்கே ஆத்தி உவமிக்கும் பிறையை தரிக்கும் சந்திர மௌளீச்வரனைத்தான் அவ்வை நமக்குக் காட்டிக் கொடுக்கிறாள். சம்பந்தர் முதற் பாட்டிலேயே “தூவெண் மதி சூடியைச் சொல்கிறாரெனில் சுந்தரரும் தம் முதல் அடியிலேயே, “பித்தா, பிறைசூடி என்று அழைக்கிறார். அப்பிறைசூடியே ஈந்து, ஸ்ரீ சங்கர பகவத்பாதர் தமது திருமடங்களின் ஆராதனை மூர்த்தியாக வைத்திருப்பதும் சந்திரமௌளீச்வரர் எனப்படும் லிங்கங்களைத்தான்.

* இது முற்பதிப்புக்களின் அட்டைப் படத்தைக் குறிப்பதாகும். தனது லீலா நாடகத்தில் ஐயன் இந்த நிகழ் பதிப்பில் அந்த சிவ வடிவில் காட்சி தராமல் சிவவிஷ்ணு சமரஸத்தைக் காட்ட விரும்பியிருக்கிறார் போலும்! பதிப்பின் மேலட்டையில், சிவபெருமானின் பாகமாகிய வலது கரத்தில் லிங்கத் திருமேனியையும், இடது கரத்தில் லக்ஷ்மிநாராயண பிம்பங்கள் உள்ள தாலத்தையும் ஏந்தி அகமும் முகமும் மலர்ந்து அருள் சிந்துகிறார். இப்பிம்பங்கள் அவரே அற்புத ஆற்றலால் பத்ரிநாத்தில் படைத்தவைதாம். ஆயினும் அற்புதராக இன்றி, குழந்தைத் தெளிவுடனேயே அன்று அறுபது வயதை நெருங்கிய அவர் காண்கிறார். பின், அறுபத்துநாலாம் வயதில் இதை விடவும் குழந்தையின் தெளிவு மின்ன அவர் கொடைக்கானலில் ஒரு மோதிரம் சிருஷ்டித்துக் காட்டுவதைப் பின்னட்டை தாங்கி வருகிறது.

மதியொளி மதியைக் கெடுத்துப் பித்தராக்கும் என்று ஓர் எண்ணமுண்டு. ‘லூனாடிக்என்று சித்தக் கோளாறுள்ளவரைச் சொல்வதும்லூனார்என்ற சந்திரத் தொடர்புள்ளதே. பிறைசூடிப் பித்தன் உலக மாயைப் பித்தம் தெளியும் மருந்தாக இருந்து பக்திப் பிச்சேற்றுவான். சிவானந்தப் பித்தம் ஏற்றுவதே அருளற்புதத்தில் முடிமணி.

இத்தனை அரும் பொருள் கொண்ட கோவைப் படக்கோவையே அட்டையில் தரிசிக்கிறீர்கள்.

ஆயின், இப்படம் அவர் புரிந்த அற்புதமா? அல்லது தற்செயலாக, காரணம் கூற முடியாமல், விசித்ர உருப்பெற்ற photo freak தானா என்று புரியவில்லை.

உன் அருளற்புத விரலாட்டம் இதில் இருந்து, இதையே அட்டைச் சித்திரமாக்க உன் ஆமோதிப்பு இருந்தால்…” வேறென்ன கேட்டிருப்பேன்? புத்தகத்தின் மூலம் ஸமிக்ஞை கேட்டேன்.

புஸ்தகராக்குகளில் என்னையறியாமல் சைவ நூல்களுள்ள பகுதியில் கை வைத்து, இன்ன புஸ்தகம் என்று பாராமல் கையில் பட்ட ஒன்றை எடுத்து, கை போனபடி அதைப் பிடித்துக் கண்ணில் பட்ட வரியைப் பார்த்தேன்.

அப்பர் ஸ்வாமிகளின் “அடையாளத் திருத் தாண்டகத்தில், “படர்சடைமேல் ஒளிதிகழப் பனிவெண் திங்கள் என்ற வரி என் கண்ணில் பட்டுச் சித்தமெலாம் சந்த்ரிகை பொழிந்தது!

தாண்டகத்தின் தொடக்க வரிகளைப் பார்க்க, மகிழ்ச்சிப் பிறை பூர்ண சந்திரனாகவே வளர்ந்தது:

சந்திரனை மாகங்கைத் திரையால் மோதச்
சடாமகுடத் (து) இருத்துமே!