சத்ய சாய் – 10

28. ‘இன்வால்வ்ஆகும் இனியர்

லிஃபோர்னியாவில் உள்ள ஸான்டா பார்பாரா. அங்கே ஒரு நள்ளிரவிலே காரில் சென்று கொண்டிருக்கிறார் ஸத்ய ஸாயி பக்தர் ம்யூரியல் எங்கில்.

மலைப்பாதை, அதிலே குறுகலான ஒரு திருப்பம். ‘ஸுயிஸைட் கர்வ்’ (தற்கொலை வளைவு) என்றே அந்த இடத்துக்குதிவ்ய நாமம்உண்டு! ஒரு புறம் வானோங்கிய செங்குத்துப் பாறை; மறுபுறம்கான்யன்என்னும் கிடுகிடு பள்ளத்தாக்கு, அதில் க்ரீக் பிரவாஹம் ஓடுவது வேறே!

இத்தனையோடு இருள் கப்பிக் கொண்டு கிடக்க, அதுவும் போதாது என்று மழையும் தொடங்கி விட்டது.

தற்கொலை வளைவுக்கு ஸமீபம் வரையில் காரை வெகு வேகமாக ஓட்டிக்கொண்டு வந்த எங்கில், சட்டென்று ஆபத்தை உணர்ந்து ப்ரேக் போட்டார்.

என்ன சோதனை! ப்ரேக் பிடிக்கவில்லை. அப்புறம் என்ன நடக்குமெனக் கேட்பானேன்? ஆனாலும், “அப்படி நடக்கக் கூடாது; கூடவே கூடாது பாபா!” என்று பக்த உள்ளத்தின் ஒவ்வோர் அணுவும் நம்பிக்கையோடு கூவியது, பிடிவாதமாக.

காரோஸ்கிட்ஆகத்தான் செய்தது, பிடிவாதமாக அந்த கிடுகிடு பள்ளத்தாக்கின் புறமாக.

அப்படியே உருண்டு தொபுகடீரென்று பிரவாஹத்தில் வண்டி விழப் போகிறதா?

வண்டி ஒரே உருளலாக விழ முடியாமல் இதோ ஸ்வாமியின் அபய ஹஸ்தமே ஒரு மாபெரும் மரக் கிளையாகி விட்டாற்போலக் குறுக்கிட்டுக் கார் சரிவதன் வேகத்தை மட்டுப்படுத்துகிறது!

ஆனால் மட்டுத்தான் படுத்தியதேயன்றி, தன் மீதே தடுத்து நிறுத்தித் தாங்கிக் கொண்டு விடவில்லை.

எனவே, வேகம் குறைந்த போதிலும் வண்டி அந்தக் கிளையின் இலைகளினூடே சரசரத்துக் கொண்டு வெளி வந்து தன் அவரோஹணத்தைத் தொடர்ந்தது.

இப்படிக்கூட அபய ஹஸ்தப் பிடி, அபய மூர்த்தியின் காப்புப் பிடிவாதம் தளர்வதுண்டா?

இல்லை, தளரவில்லை. லீலா நாடக ஸாயி அம்மானையாக்கும் ஆடுகிறார்! ஒரு கையால் தாங்கினாற் போல் செய்த அம்மானையைப் பெம்மான் மறுபடி தூக்கிப் போட்டு (கீழே இறக்கி!) இன்னொரு கையால் தாங்கிக் கொள்ளப் போகிறார்! இங்கே அபயவரத ஹஸ்தங்கள் வேறு வேறு இல்லை.

கிளையை விட்டு அதல பாதாளம் நோக்கிப் பாய்ந்த காரின் குறுக்கே காக்கும் கரம் மறுபடி வந்தது.

இப்போது, கிளையாக இன்றி நடு மரமே காரைத் தடுத்து ஒருபுறம் அதற்கு முட்டுக்கொடுக்க, அந்த மர நடுவுக்கும் பள்ளத்தாக்கின் ஓரப் பாறைக்கும் நடுவே வண்டி மாட்டிக்கொண்டு அப்படியே நின்று விட்டது!

எத்தனையோ அடிகள் கீழே விழுந்து சுக்கு நூறாயிருக்க வேண்டிய வாஹனம் இப்படி அயனான முறையில் தடுத்து நிறுத்தப்பட்டது!

பக்கவாட்டங்களில் பலமாக உரசிக் கொண்டு அவ்வண்டி இந்த தரிசங்கு ஸ்வர்கத்துக்கு வந்தபோது கலகலவென்று கண்ணாடிகள் நொறுங்கும் ஒலியை எங்கில் கேட்டார். ஆனால் நொறுங்கிய துண்டுகளில் ஏதோ ஓரிரண்டு சின்னஞ் சிறு சில்லுகளைத் தவிர மீதமெல்லாம் அவரைப் பதம் பார்க்க மறுத்து வண்டிக்கு வெளிப் புறமாகவே சிதறின! ஐயன் அருளே!

வண்டி நிறுத்தப்பட்டபோதிலும், அதன் மோட்டார் ஓடிக்கொண்டிருந்தது. அமெரிக்கர்கள்ஹுட்என்று சொல்லும் பான்னெட்டின் கீழிருந்த டாங்கிலோ அவர்கள்காஸ்எனும் பெட்ரோல் நிரம்பியிருந்தது. ஆனாலும் அது வெடித்து விபரீதம் விளைவிக்கவில்லை. அப்பன் அருள்தான்!

நாடி நரம்புகள் ஸகலத்திலும் உதறல் எடுத்த அந்த நிலையிலும் எங்கில் ஸமாளித்துக் கொண்டு மோட்டாரை நிறுத்தினார்.

இதன் உறுமல் நின்றதில், அந்த நள்ளிரவின் பயங்கரத்துக்கு சுருதி கூட்டும் மற்ற சப்தங்கள் கேட்கலாயின. அடியே க்ரீக் பிரவாஹத்தின் ஆதார ஷட்ஜம்; அதற்கு மேலே தவளைகளின் பஞ்சம கோஷ்டி கானம்; அதற்கும் மேலே சுவர்க்கோழிகளின் கோரமான தார ஷட்ஜகோரஸ்!’

தன் அங்கங்கள் யாவும் இருக்கின்றனவா என்று அறிவதற்காகக் கை, கால்களை ஆட்டிப்பார்த்தார் எங்கில். அது அதுவும் சுளுக்கலிலோ, மூட்டு நழுவலிலோ ஏற்படக் கூடிய சிறிய இடமாறுதல்கள் கூட இல்லாமல் ஸ்வஸ்தமாய் அதனதன் இடத்தில் இருந்தன!

அறுந்து தொங்கிக் கொண்டிருந்த கதவு வழியாக வேண்டுமானால் வெளியேறப் பார்க்கலாமா? வெளியே எங்கேயாவது காலை வைத்து மரம் முறிந்தாலோ, பாறை சரிந்தாலோ? இப்போது கொஞ்ச நஞ்சம் நகரும்போதே இப்படியும் அப்படியும் அசங்குகிற கார், நாம் எழுந்திருக்கும் விசையில் தடாலென்று விழுந்தே விட்டால்? எனவே உள்ள மட்டும் பெரிசு என்று பேசாமல் கிடப்போம்.’

பேசாமல் எப்படியிருப்பது? பக்த வாய் தானாகவே, “பாபா, பாபாஎன்று அழைத்தது.

பாபா! இப்போது நானாக ஏதும் செய்து கொள்வதற்கில்லை. நீ எனக்காக என்ன பண்ணப் போகிறாய்?”

தெய்வம் மாநுஷ ரூபேணஎன்பார்களே! யாராவது வழிப் போக்கர்களைத் துணைக்கு அனுப்பு வாரா? ஊஹூம்! இத்தனை உத்பாதத்திலும் இதோ டாஷ்போர்ட் கடிகாரம் ஓடிக் கொண்டுதானிருக்கிறது. 12 மணி 2 நிமிஷம் என்று காட்டுகிறது. இந்த வேளையில் இந்தப் பக்கமாக எவரும் வருவாரென்று எதிர்பார்ப்பதற்கேயில்லை. விடிகிற வரையில் இந்த திரிசங்கு ஸ்வர்கம், அல்லது திரிசங்கு நரகம்தான்!

ஒரு நிமிஷம் ஒரு யுகமாக, ஒன்று, இரண்டு, மூன்று, நாலுபதினொன்று, பன்னிரண்டுபதினேழு, நிமிஷங்கள் ஓடின.

பதினெட்டு ஜயம் என்பார்கள். இதோ மணி 12-20.

ஆஹா! ஓர் ஒளித் தூண் பள்ளத்தாக்கு விளிம்பி விருந்து 45 டிகிரி சாய்வாக எங்கிலின் வண்டிக்குப் பக்கத்தில் விழுகிறது.

எங்கில் ஸர்வ ஜாக்கிரதையாக, அங்குல அங்குலமாய் நகர்ந்து கதவோரத்துக்கு வந்து, “உதவி, உதவி!” என்று குரல் கொடுத்தார்.

மேலேயிருந்து வீசப்பட்ட ஸர்ச் லைட் எங்கிலின் மீது படிந்தது. மனிதர்களின் குரலொலியும் கேட்டது.

அபாயம் நீங்கப் போகிறதென்று அபய வாக்குத் தந்தார்கள். அவர்கள் காவல் துறையினராம்! அவர்களை தொடர்ந்து மீட்புக் குழுவினர் வருக்கிறார்களாம்!

சரியான சமயத்தில் அவர்கள் வந்த அதிசயத்தை என் சொல்ல? ஸாயீசன் அருள் என்றுதான்!

மீட்புக் குழுவினர் நாலு பேர் வந்து குதித்தார்கள். ஒருவிஞ்ச்சின் உதவியுடன், அரைமணி பாடுபட்டு எங்கிலை வெளியே கொண்டுவந்து சேர்த்து விட்டார்கள்.

சாலையிலே சேர்க்கப்பட்ட எங்கில், ஆஹா! தன் காலிலேயே ஊன்றி நெடுங்குத்தாக நிற்கிறார்! மீட்டவர்களுக்கு வியப்பு. எப்படி ஏதோ சிறு கண்ணாடிக் கீறல்களோடு மட்டும் அவர் தப்பினாரென்று!

நீங்கள் என்னைத் தேடி வந்தது எப்படி?” என்று போலீஸ் அதிகாரியை எங்கில் வினவினார்.

தலைமைப் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து எனக்கு 12-11-க்குரேடியோகால் வந்தது. அவ்விடத்துக்கு எவரோ தகவல் கொடுத்திருக்க வேண்டும்என்றார் அதிகாரி.

எவர் தகவல் கொடுத்திருக்க முடியும்?’ – இதை அறிய நமக்கே ஆவலாயிருக்கிறதெனில், எங்கிலுக்குப் பதின் மடங்கு இராதா? அவர்கள் தம்மை வீட்டில் சேர்த்ததும் அவர் அதிகாரியிடம், “தகவல் தந்தவருக்கு நான் நன்றி செலுத்த ஆர்வமாயிருக்கிறேன். தாங்கள் தயவு செய்து தலைமைச் செயலகத்துக்குத் தொலைபேசி, இன்னாரென்று விவரம் பெற்றுத் தாருங்களேன்என்று கேட்டுக் கொண்டார்.

அவ்வாறே தொலை பேசிய அதிகாரி, “யாரோ அநாமதேயமாக ஃபோன் செய்து தகவல் தந்தார்களாம்என்று தெரிவித்தார்.

இப்படி ஓர் ஆபத்தில் உதவி செய்கிறவர் ஏன் தன் பெயரைத் தெரிவித்துக் கொள்ளாமலிருக்க வேண்டும்?” என எங்கில் கேட்டார்.

அதுவா? (போலீஸ் தொடர்புள்ள வியவகாரங்களில்) தாங்கள்இன்வால்வ்ஆக வேண்டாமே என்று பலர் நினைக்கிறார்கள். இதுவும் அப்படி ஒன்றாயிருக்கலாம்என்று தோளைக் குலுக்கிக் கொண்டார் அதிகாரி.

அவருடைய துப்புத் துலக்கும் திறனுக்கு அடுத்த நிமிஷமே ஸைஃபர் மார்க் கிடைத்தது! மார்க் போட்ட மஹாநுபாவர்வேறு யாராயிருக்க முடியும்?

வாசல்வரை சென்று அவ்வதிகாரியை வழியனுப்பிய எங்கிலின் சிரத்துக்குள்,

ஸ்பஷ்டமாக ஒலித்தது,

மஹாநுபாவரின் மதுரக் குரல்!

நான்இன்வால்வ்ஆகித்தான் இருக்கிறேன் – I am involvedஎன்று பரம தெளிவாகக் கூறினார்!

ஆம் ஐயா! நவ கண்டத்தில் உன் அடியார்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும், எங்கெங்கிலுமுள்ள எங்கில்கள் யாவருக்கும், அவர்களது வாழ்வில் இண்டு இடுக்கி விடாமல் ஸகல ஸமாசாரங்களுக்குள்ளும் நீஇன்னிலும்இன்னாகஇன்வால்வ்ஆகித்தானிருக்கிறாய்! அந்த உன் உள்ளீடுபாட்டினை ப்ரேம வால்வ் எக்காலும் திறந்து விட்டுக்கொண்டே இருக்கிறது!

29. கா(ர்)க்கும் கருணை!

1981ஆம் ஆண்டு மார்ச் தொடக்கத்தில் என் ஸாயி ஸஹோதரர்களுள் ஒருவரான ஸ்ரீ டி.ஆர். ரமணியின் குடும்பத்தோடு புட்டபர்த்தி செல்லும்போது நடந்த ஸம்பவம். அவரது காரில் சென்றோம். ஓட்டுனர் அவரே.

புது அம்பாஸிடர் வாங்கிய நாளாக அவருக்கு அதை ஸ்வாமியின் தலைநகருக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்று ஆசை. பல மாஸங்களுக்குப் பின் இப்போதுதான் இந்த ஆசைக்கு ஸ்வாமிஓகேபோட்டிருக்கிறார்.

பாலஸமுத்ரம் தாண்டியபின் குசாவதிகாஸ்வேயை அடுத்த டைவர்ஷனில் புட்டபர்த்தி சென்று கொண்டிருக்கிறோம். இன்னும் சுமார் பத்து மைல்களே உள்ளன ப்ரசாந்தி நிலயத்துக்கு, ‘இப்போது மணி மாலை ஐந்தா? அரை மணிக்குள் சென்று சேர்ந்துவிடலாம். பகவான் மந்திருக்கு வெளியே பக்தரிடை உலவுகையிலேயே தர்சனம் பெற்று விடலாம்.’

இந்த உத்ஸாஹத்துக்குச் சற்று அணை போடுவது போல, ஏனோ அந்த இடத்தில், குன்றுகளுக்கு இடையில் பாதை குண்டும் குழியுமாகச் சென்றது. அது மட்டுமின்றி, பாதையில் கார் போகும் மத்திய பாகத்திலேயே அரை சாண், ஒரு சாண் உயரப் பாறாங்கற்கள் கஜத்துக்குக் கஜம் காணப்பட்டன. போக்கிலிகளின் காரியம்!

அர்வப் பயணத்தின் விரைவு குறைய வேண்டியதாயிற்று. ரமணி பார்த்துப் பார்த்து ஸாவதானமாக ஓட்டினார். அவ்வப்போது வண்டியை நிறுத்தி, குறுக்கிட்ட கற்களை அப்புறப்படுத்தவும் வேண்டியிருந்தது

அப்படியும் ஏனோ வண்டி நின்று விட்டது.

ஒவ்வொரு விநாடியும் எத்தனை மதிப்புப் பெற்றது என்பதை இம்மாதிரிக் கட்டத்தில் அடித்துக் கொள்ளும் ஸாயி பக்தர்களின் இதயம்தான் சொல்லும், ப்ரசாந்தி நிலயம் அடையுமுன் இப்படி அசாந்தி கொடுத்துப் பார்ப்பதில் அவருக்கு ஒரு ஸந்துஷ்டி!

வண்டி நின்ற காரணம் புரியவில்லை. வழியே இரண்டு வண்டி மாடுகளை ஓட்டிச் சென்ற ஒருவர்தான். தானாகவே வந்து காருக்கடியில் சோதனை செய்து பார்த்து, அத்தனை கவனமாக ஓட்டியும் ஒரு சக்கரத்தில் கல் பொத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். அதைப் பிடுங்கி எடுப்பதற்கும் உதவி செய்தார்.

எப்படியோ டயரில் பங்க்சர் விழாமலிருந்தது. (ஸாயி பக்தர்களுக்குஎப்படியோஎன்று ஒன்று கிடையாது. எல்லாமே ஸ்வாமியின் திருவிளையாடல்கள்தாம்.)

கல்லை எடுத்தபின்னும் கார் ஓட மறுத்தது.

தள்ளிப் பார்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது. என்னையும், ரமணியின் தாயாரையும் வண்டியில் வைத்தே தள்ளத்தான் மற்றவர்கள் நினைத்தார்கள். ஸாதாரணமாக நாங்கள் அதற்கு உடன்பட்டிருக்கக் கூடியவர்கள்தான். ஆனாலும் எதனாலோ இப்போது நாங்கள் வண்டியில் இருக்க மறுத்துக் கீழே இறங்கினோம். (ஸாயி பக்தர்களுக்குஎதனாலோஎன்று மட்டும் ஒன்று இருக்கிறதா என்ன?)

ஸ்ரீ ரமணியும்வீலில் இல்லாமல், இறங்கித் தள்ளுபவர்களுடன் சேர்ந்து கொண்டார். என்ஜின் ஸ்டார்ட் ஆக கர்ஜனை கொடுக்கும்போது ஏறிக்கொண்டு விடலாமென்பது அவர் எண்ணம். இதுவும் ஐயன் அருள் தானென்று தெரியப்போகிறது, பாருங்கள்!

இப்படியாகத்தானே ரமணி தம்பதியரும், அவர்களது இரண்டு வாண்டுச் செல்வங்களும், என்னில் ஒரு பகுதியே போன்ற அருமை ஸாயி ஸோதரர் பார்த்தாவும் (டாக்டர் பார்த்தஸாரதியாகப் பட்டம் பெற்றும் எனக்கு பரதன் போன்ற தம்பி பார்த்தாவாகவே இருப்பவரும்), வண்டி மாட்டுக்கார வழிப்போக்கரும் தள்ள, ரமணியின் தாயாரும் நானும் ஸாக்ஷியாகப் பார்த்துக் கொண்டிருக்க, அந்த அம்பாஸிடர் மெல்ல மெல்ல முன்னேறியதுகர்ஜனை செய்ய மனமின்றி மௌனமாகவே.

புதுக்காரை உத்தேசித்தேதான் முக்யமாக இந்தப் பயணம்! இப்படி மக்கார் செய்கிறதே!’ என்று கோபம் வந்தது.

அதற்கும் கோப ரோஷம் வந்துவிட்டதா என்ன?

கிடுகிடுவென்று நகரலாயிற்று. என்ஜின் ஸ்டார்ட் ஆகாமலேஸ்பீட்எடுத்திருக்கிறது! ஏன்? இங்கே பாதை சரிவாக இறங்குகிறதல்லவா? அதனால்தான்.

ஐயோ! பாதை இன்னமும் சரிவாகவே போகிறதே! வண்டி மேலும் மேலும் வேகம் எடுக்கிறதே! இவர்களானால் தள்ளுவதற்குப் பதில் நிறுத்துவதற்காக அதை இழுக்கப் பிரயத்தனப்பட, அது இவர்களையும் இழுத்துக்கொண்டு போகிறதே! ஸாயிராமா!

அப்பாடா! தங்கள் முயற்சி பலிக்காது என்று எல்லாரும் காரிலிருந்து கையை எடுத்து விட்டார்கள்.

அத்தனை பேரும், நாங்கள்கைவிட்டஅருமைக் கார் தன் போக்கில் மலைப் பாதையில் ஓடிக் கொண்டிருந்ததைத் திக்பிரமித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

பாதையையும் விட்டுவிட்டுப் பக்கவாட்டில் ஒரு பள்ளத்தில் அது பாய்ந்தது. ‘தடால் தடால்என்ற ஓசையுடன் பாறை பாறையாக மோதிக் கொண்டும், குதித்துக் கொண்டும், சப்பாத்திக் கள்ளிகளை த்வம்ஸம் செய்து கொண்டும் சுமார் கால் கிலோ மீட்டர் ப்ரளய தாண்டவம் செய்தது.

அப்பனே ஸாயிராமா! புதுக் கார் உன் ஆஸ்தானத்துக்கு வரும்போதே மோக்ஷ லோகம் சேர்கிறதே என்று தவிப்பாகத்தான் இருந்தாலும், இந்த மட்டும் எங்களில் எவரும் அதற்குள் இருந்து விடாமல் இறங்க வைத்தாயே! நன்றி சொல்லித் தீருமா?’

அப்படியே போய் அடிபட்டு நொறுங்கியிருக்க வேண்டிய கார், கால் கிலோ மீட்டருக்குப் பிறகு ஒரு குட்டிப் பாறைச் சரிவில் ஸ்தம்பிதமாகி விட்டது.

அந்தக் கோணத்தில் அது எப்படிக் குட்டிக் கரணம் போடாமல் நின்றது?

மஹா ஆபத்தான அந்த இடத்தில் காருக்குள் ஏறி ஸ்டார்ட் செய்து பார்ப்பதாக ரமணி வீரராகப் புறப்பட, அவருக்கு உதவுவதற்காகப் பார்த்தாவும் சூரராகப் போனார். அப்போது எனக்கும், ரமணியின் தாயாருக்கும், ஸ்ரீமதி ரமணிக்கும் வயிற்றில் கரைத்த புளியில் ஸ்வாமி எங்களுடைய பூர்வ கர்மாவில் எத்தனையோ டன்னைக் கரைத்திருப்பார்!

நல்ல வேளை, இவர்களது வீர சூர ஸாஹஸத்துக்கு மசியாமல் அம்பாஸிடர் அங்கேயே ஸமாதி நிஷ்டை கூடிவிட்டதால் திரும்பி வந்தார்கள்.

மணி ஆறே கால். மந்திருக்கு வெளியே தரிசனம் போச்சு! உள்ளே பஜனையில் தரிசனம் கிடைப்பதும் சந்தேகந்தான்.

அது சரி, இனி மந்திருக்குப் போவதெப்படி? புட்டபர்த்திக்கு இங்கிருந்து பஸ் உண்டா?

நாளைக்கு உண்டுஎன்று ()தைரியம் கொடுத்தார் வழிப்போக்கர். இது டைவர்ஷனாதலால் அபூர்வமாக ஓரிரு பஸ்தான் இவ் வழி செல்லுமாம்.

அட ராமா! ஸாயி ராமா! இரா முழுவதும் உணவில்லாமல், உறையுள் இல்லாமல் இந்தப் பொட்டல் காட்டிலா கிடக்க வேண்டும்?’

எதிர்ப்பக்கம் பாலஸமுத்ரம், ஹிந்துப்பூர் போன்ற ஊர்களுக்காவது பஸ் போகுமானால் அங்கே போய் இரவு தங்கிக் கொள்ளலாம் என நினைத்தோம்.

போதாத காலம்பத்து நிமிஷம் முந்தித்தான் எதிர்ப்புறம் போகும் கடைசி பஸ்ஸும் போய் விட்டதாம்.

எங்கிலைப் போலவே நாங்களும்எம் வசமாவது யாதொன்றுமில்லைஎன்று பகவானிடமே எங்களை ஒப்புவிக்கக்கொண்டு நின்றோம்.

பிரயத்னம் பண்ணக்கூடிய நிலையிலேயே ஸர்வப் பிரயத்னத்தையும் விட்டு அவன் வசம் என்றிருப்பதுதான் சரணாகதி; அப்போதுதான் அவன் பாய்ந்து வந்து ரக்ஷிப்பான்என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்தப் பக்குவம் இல்லாதாரையும் ஸ்வயப் பிரயத்னத்துக்கு இடமே இல்லாத நிலையில் கொண்டு வைத்து, தனது ரக்ஷணையை அங்கு பாய்ச்சுபவன் ஸத்ய ஸாயிநாதன்.

கடைசி பஸ் போய்விட்டதாக வண்டி மாட்டுக்காரர் சொல்லி ஓரிரு நிமிஷங்களிலேயே பஸ்ஸின் குழலொலி கேட்டது. புட்டபர்த்திப் பக்கத்திலிருந்து எதிர்ப்புறம் போகும் ஒரு பஸ் வந்தது. பெயர்ப்பலகை தெலுங்கில் இருந்ததால் எந்த ஊர் போகும் பஸ்ஸென்று தெரியவில்லை. பிரயாணிகளும் கிராமவாசிகளான தெலுங்கர்கள்தான். எனவே அவர்களோடும் பேசிப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆனால்ஆஹாஹா! பாபா அனவரதமும் செப்பும் இதயமொழியாம் ப்ரேம பாஷை அன்று அங்கே புரிந்த ஆனந்த நிருத்யமுண்டே!

நாங்கள் ஏதும் கேட்டுக் கொள்ளாமலே எங்களைப் பார்த்ததும் பஸ் நின்றது. பஸ் பயணிகள் அனைவருள்ளும் இனியரின் பிரேமை ஆவேசித்திருந்தது. எவரோஅரவவாடுப் பண மூட்டைகளின் காருக்கு விபத்தானால் தங்களுக்கென்ன என்றிராமல் ஆடவர் யாவரும் இறங்கினர். பெண்களோ ஆறுதல் கூறி (இதயமொழியாதலால் புரிந்து விட்டது) ‘தேவுடுபுகழை எடுத்தோதினர். தலைப் பொறுப்பாகப் பிரயாணிகளும், டிரைவரும், கண்டக்டரும் கார் விழுந்தஅல்லது விழ முடியாதஇடத்தை நோக்கிப் போனார்கள்.

அவர்கள் என்னதான் செய்தார்களோ, காரை அந்தப் பாறைக்கு அப்பால் சற்று ஸமதளமாக இருந்த இடத்தில் சேர்த்து விட்டனர்!

அவ்விடத்தில் பஸ் டிரைவர் கார் டிரைவரானார்.

என்ன ஆச்சரியம்! அவர் வண்டியைஸ்டார்ட்செய்ய, சற்று முன்பு தடால் தடாலென்ற ஓசையுடன் பாறை பாறையாக மோதிக்கொண்டும், குதித்துக் கொண்டும் சுமார் கால் கிலோ மீட்டர் பிரளய தாண்டவம் செய்திருந்த அந்தக் கார் அதி சமர்த்தாகப் புறப்பட்டு விட்டது!

அதென்ன மாயமோ? பாதையே இல்லாத அந்தக் குன்றுகளின் சாரலில் எவ்வாறோ சரியான வழி கண்டு, ராஷ்டிரபதி பவன் ராஜ் பாத்தில் செல்வதுபோல் பரம நாஸுக்காக வளைத்து வளைத்து வண்டியை ஓட்டி, புட்டபர்த்திச் சாலைக்கே கொண்டு வந்து சேர்த்தார் டிரைவர்.

அவருடைய திறமை ஒரு பக்கம் இருக்கட்டும். ஸுமுகத்தை, ப்ரேமை நிறைந்த ஸேவையை என்ன சொல்வது? அவர் மட்டுந்தானா? கன்டக்டர், வண்டி மாட்டுக்காரர் ஆகியவர்களும் எப்படிப்பட்ட உத்தமப் பணி உணர்வில் முக்குளித்திருந்தார்கள்? அன்பளிப்பு எதையுமே பெறமுடியாது என்று தீர்மானமாக அவர்கள் மறுத்து, புட்டபர்த்தியின் புறம் திரும்பிக் கையெடுத்துக் கும்பிட்டு, எல்லாம்தேவுடுசெய்ததுதான் என்று நெஞ்சாரச் சொன்னதுண்டே!

என் வாழ்வின் மறக்கவொணா மஹா ஸம்பவங்களிலொன்று முடிவாக நடந்தது. காரை எங்களிடம் சேர்த்து, பஸ்ஸைக் கிளப்பவிருந்த சமயம் அத்தனை பேரையும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தேன். இருள் படரத் தொடங்கிவிட்டதால் அவர்களது உருவம் தெளிவாகத் தெரியவில்லைதான். ஆயின் உள்ளம் தெள்ளத் தெளியத் தெரிந்தது. வெளியிலே எத்தனை மோஹ மாயைகளும், கோப தாபங்களும் அவர்களைக் கவிந்திருக்கக் கூடுமாயினும் உள்ளத்தில் அத்தனை பேரும், ஒவ்வொருவரும் (ஸ்வாமி பரியம் பில்க அழைப்பது போல்) ‘ப்ரேம ஸ்வரூபலாராவேதானென்று பிரத்யக்ஷமாகத் தெரிந்தது.

அந்தா ஸாயி மயம்அனைத்தும் அவனே என்பது உயிரநுபவமாகப் புரிந்தது. மந்திருக்கு வெளியே தர்சனம், உள்ளே பஜன் தர்சனம் ஆகியவற்றுக்கு எத்தனையோ மேல் அல்லவா உள்ளும் வெளியும் அன்பேயான இந்த உள் உள்ளதர்சனம்? என்றென்றும் உள்ள தர்சனம்?

ரமணி ஸ்டீயரிங்கைப் பிடிக்கக் கார் ஜம்மென்று பறந்தது ப்ரேமாலயத்துக்கு. அதன் ஸகல இயந்திர இந்திரியங்களும் பூர்ண ஆரோக்யத்தோடேயே இயங்கியது விந்தையிலும் விந்தைதான்!

மறுநாள் காலை வெளிச்சத்தில் அதன் வெளியுருவத்தை எத்தனை சோதித்தும் ஒரு அற்ப நசுங்கல், ஒரு சொற்பக் கீறல்கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை!

இருந்தாலும் காருக்குக்கூட உள்ளே ஊமைக் காயம் படுவதுண்டோ என்ற பயம். இதில் திரும்பச் சென்னை செல்லலாமா என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நம் ஸநாதன ஸாரதிக்கு ஸாரதியாயிருக்கிற ஸ்ரீ சக்கரையை (சக்கரவர்த்தியை) அணுகினோம். அவர் ஸ்வாமியின் அந்த ராஜதானியிலேயே காரை ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டு வந்து, “மெட்ராஸா? பத்ரிநாத்துக்கே இதில் போகலாம்என்று சர்க்கரையாக வாக்கும் சொன்னார். பர்த்திநாத் அருள் விலாஸம்தான்!

இரண்டு நாள் திவ்ய தர்சனம் செய்துவிட்டு ஊருக்குப் புறப்படுகிறோம்.

ஆசிரமக் கீழண்டை வாசலருகே பஸ் ஸ்டாண்டில் காரைச் சற்று நிறுத்தி, மறுபடி எடுக்கவிருந்த சமயம்,

நேர் எதிரே ஒரு ஜீப் வருகிறது.

சற்றும் எதிர்பாரா அதிசயமாக அதில் ஸ்வாமி!

மலர்ச்சியான மலர்ச்சி பொங்க எங்களைப் பார்க்கிறார்.

ஆயிரம், பதினாயிரம், லக்ஷம், பத்து லக்ஷம் அடியாருக்குக் காப்புத் தரும் திவ்ய ஹஸ்தம் எழும்புகிறது!

திருமுகத்தில் குறும்பு கொழிக்கக் கரத்தைச் சற்றே கீழ் நோக்கத் தாழ்த்தி

ஆம்! காருக்குத்தான் அபய அருள் புரிகிறார்!

மறு விநாடியே கரம் நேரே உயர்ந்து எங்களனைவருக்கும் அபயம் பாலிக்கிறது!

சரியாக நாங்கள் புறப்படும் அந்த நொடியில் இந்தத் தெம்பு எங்களுக்கு ஊட்டவேண்டுமென்று வந்து குதித்திருக்கிறாள் அபயாம்பிகை ஸாயி!

எங்களுக்குஎன்பதில் அசேதனம் என நினைக்கும் காரைத்தான் முக்கியமாய் சொல்ல வேண்டும்! அந்த அம்பாஸிடர்தானே முதலில் அம்பாளருள் பெற்றது? எங்கிலுக்கும், காந்தியத் தலைவருக்கும் நேர்ந்த விபத்துக்களில் அவர்களது கார்களைக் காருண்யன் பூரணமாகக் காத்ததாகத் தெரியவில்லை. ஆனால் எங்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய விபத்து முழுதையுமே இப்பயணத்துக்குக் காரணமான புதுக்காரின் பக்கம் திருப்பிவிட்டு, அதற்கும் தாமே கவசமாக இருந்து, அந்த அசேதனக் குழந்தைக்கும் ஒரு சிறு காயம்கூடப் படாமல் காத்து, இப்போதுஅஞ்சேல்சாதித்திருக்கிறார்!

30. போக்குவரத்துப் போலீஸ்காரர்!

1978ஜூலை 30-ந் தேதி அப்போது திருவனந்தபுரத்தில் நீதிபதியாயிருந்த ஸ்ரீ வி. பாலகிருஷ்ண எராடி அன்று பிற்பகல் இரண்டரை மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு ஊருக்குக் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். கோவைபாலக்காடு வழியில் சாலையில் எப்போதும் ட்ராஃபிக் நிறைய இருக்கும். ஏதாவதொரு வண்டி சற்று நின்றாலும் பெரியஜாம்உண்டாகிவிடும். இச்சாலையில் குறுகலான ஓரிடத்துக்கு மூன்றே காலுக்குக் கார் வந்தது.

திடுமென மான்ஸுன் மழை கண் தெரியாமல் கொட்டத் தொடங்கியது. வாஸ்தவமாகவே எதிரே என்ன இருக்கிறது என்று ஓட்டுநருக்கு கண் தெரியாதபடி இருள் கப்பி, கனமழை பொழிந்தது. அப்படியும் திறமைசாலியாதலால் வேகமாகவே ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

போதாத காலம்! வண்டி எப்படியோ தடம் தப்பியது. ‘ஸ்கிட்ஆன கையோடு ட்ரைவரின் கைவசத்திலிருந்து அது விடுபட்டு ஸ்வதந்திரமாக நர்த்தனம் செய்யத் தொடங்கி விட்டது! போக்குவரத்து நெரியும் அச்சாலையின் அந்த ஆபத்தான குறுகல் பகுதியில் இந்த ஓரத்திலிருந்து அந்த ஓரத்துக்கு திச்ர, மிச்ர கதிகளில் பாய்ந்தது! அப்புறம் சுழன்று சுழன்றும் நடனமாடியது!

ஸாயிராம், ஸாயிராம்!” என்று கூவியவாறு எராடியும் அவர் மனைவியும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உள்ளே உட்கார்ந்திருந்தனர்.

நிமிஷத்துக்கு நூறு வண்டி எதிரும் புதிருமாய்ச் செல்லும் அவ்விடத்தில் இரண்டு நிமிஷங்கள் இப்படிக் கார் தாண்டவம் புரிந்தும் எந்த வண்டியும் வராதது பெரிய புதிர்தான், ஸாயிராமின் சதுர் அறியாதவர்களுக்கு!

இரண்டு நிமிஷம் என்பதை நூற்றிருபது ஸெகன்ட் என்று நீட்டிச் சொல்ல வேண்டிய கட்டம் அது. எந்த ஸெகன்டும் இன்னொரு காரோ, பஸ்ஸோ, லாரியோ இந்த வண்டியின் மீது மோதும் ஆபத்து வாய்ப்புள்ள கட்டம். அவன் கிருபையில் ஆபத்து நேராமலிருந்தது. இரு நிமிஷ டான்ஸுக்குப் பிறகு கார் ஒரு முழு ரவுண்ட் அடித்து, எப்படியோ அக்குறுகல் சாலையின் ஓரத்தில் அழகாக ஒதுங்கி அப்படியே நின்றுவிட்டது!

இத்தனை நேரம் இரு திசைப் போக்குவரத்தையும் நிறுத்தி வைத்திருந்த அற்புத ட்ராஃபிக் போலீஸ்காரர் கார் ஓரத்தில் ஒதுங்கி நின்றுவிட்ட அந்த ஸெகன்டே பச்சை விளக்குக் காட்டிவிட்டார்! ஏதோ லெவல்க்ராஸிங் கேட்டை நெடுநேரத்துக்குப் பின் திறந்தது போல், உடனேயே விர்விர்ரென்று இரு திசைகளிலும் வண்டிகள் நெருக்கமாக வரத்தொடங்கின.

சரியாக ஒரு வாரம் சென்றபின், ஆகஸ்ட் 6-ந் தேதி பாலகிருஷ்ண எராடி ஸாயிகிருஷ்ணஎவர் ரெடிகாப்பாளரை தரிசித்தார்.

ஸாயி கிருஷ்ணராமர் சொன்னார்: “நீங்க ரெண்டு பேரும்ஸாயிராம், ஸாயி ராம்னு கூவறச்சே நான் கேக்காம இருக்கலாமா? ஆனாலும் என்னா ஸ்பீட்? மழை ஸீஸன்லே இப்படியா போறது? நான் ரெண்டு பக்கமும் ரெண்டு நிமிஷம்ட்ராஃபிக்கை நிறுத்த வேண்டியிருந்ததுதான் கொஞ்சம் ட்ரபிளா ஆச்சு!”

ஏறக்குறைய இதேட்ரபிளை ஸ்வாமி அமெரிக்காவில் இந்திரா தேவிக்காக ஏற்க நேர்ந்ததைஸ்வாமிநூலில் (அத். 41 முடிவில்) காணலாம்.

இப்படிக் கொஞ்சம் கொஞ்சம் ட்ரபிள்களாக எத்தனையோ பேருக்கு எத்துணைக் காலமும் ஸ்வாமி சுமை ஏற்கிறார்! எண்ணி மாளுமா ஹிமாலயக் கருணையை!