சத்ய சாய் – 1

னியதில் இனியது அன்பு. அந்த இனிமையே ஸாயி. நம்முடைய வழிபாட்டு முறையே இவ்வினிமையில்தான் தொடங்குகிறது. பிள்ளையாரப்பனில்தானே தொடங்குகிறோம்? அவன் மிக மிக இனியன். “க்ருபா கோமள உதார லீலாவதாரனாக அவனை ஆதி சங்கரர்புஜங்கத் துதியில் இனிக்க வர்ணிப்பது நமது ஸாயியின் வர்ணனை போலத்தானே இருக்கிறது?

நம் சிரஸினுள் சிவாநந்த அமுதம் பெருகுவதற்குத் தொடக்கமாக மூலாதாரத்தில் நுந்திவிடும் ஆனந்த விநாயகன்அம்ருத கணேசன்என்றே பெயர் பெற்றவன். அவன் இனிமையாயின்றி வேறெப்படி இருப்பான்? அவன் வஸிப்பது கருப்பஞ்சாற்றுக் கடலின் மத்தியிலாகும்!

அக்கடலத்தனைத் தித்திப்பும் அவனுள்ளேயே அடக்கம். அதுவே யானையிடமிருந்து பெருகும் மதநீராக அவனது திருமேனியிலிருந்து எப்போதும் வடிகிறது. ஆகம, புராணங்கள் கூறும் இவ்வுண்மையை இந்நூல் நாயகர் நம் கண்ணுக்கு மெய்யாக்கிக் காட்டியிருக்கிறார், பினாங்கில் பட்டர்வொர்த்திலுள்ள ஸ்ரீமதி லா காம் ஸு என்ற ஸாயி பக்தையின் வழிபாட்டு மேடையிலே!

அம்மேடையில் கார்வண்ண கணபதிச் சிலை ஒன்று நின்ற நிலையில் அருள் பொழியும். அந்த அருட்பொழிவைத்தானே மதநீர்ப் பொழிவெனும் அமுத நீர்ப் பொழிவாக ஆகம, புராணங்கள் சொல்வது? லா காம் ஸுவின் பூஜா க்ருஹத்தில் விந்தை பல காட்டியுள்ள ஸ்வாமி, இந்தக் கறுப்புப் பிள்ளையாரின் கருப்பினிமையை (கரும்பினிமையை) வெளிப்படுத்தியிருக்கிறார்! அந்த அமுத கணேசச் சிலையின் கார்மேனியிலிருந்து தேன் போன்ற பரம மதுரமான ஒரு திரவம் அனவரதமும் உருவாகிச் சொட்டுச் சொட்டாக உருண்டு விழுமாறு செய்திருக்கிறார்! ப்ரேம ஸிந்துவின் மதுர பிந்துக்கள்! அதையே ஸாயி கணேச ப்ரஸாதமாகக் கொண்டு தொடங்குகிறோம்.

2. “கூடியிருந்து குளிர்ந்து

துரப் பிரஸாதம்பற்றி ஒரு நிகழ்ச்சி.

ஸஹோதரி மதுரத்தை ஸஹோதரத்துவ உணர்வில் மதுரமாக்கவே மதுர ஸாயி காரமாக ஆனார்! அதில் ஓர் அற்புதமுண்டு. நமக்கொரு பாடமும் உண்டு.

மதுரத்தின் ஸஹோதரர்அதாவது ரத்த உறவுப்படித் தமையனார், மீனம்பாக்கம் விமான நிலைய ஊழியராவார். அவர் ஸ்வாமியிடம் பெற்ற ஒரு பேட்டியில் நிலைய அதிகாரிகளுக்காகவும் விபூதி கேட்டார். ஸ்வாமி அன்போடு ஒரு குத்து திருநீற்றுப் பொட்டலங்களை அள்ளிக் கொடுத்தார்.

பிற்பாடு தமையனார் ஒவ்வோர் அதிகாரிக்கும் ஒரு பொட்டலம் என்று எடுத்து வைத்தபோது இரண்டு பொட்டலங்கள் தேவைப்படுவதாகக் கண்டார். பற்றாக்குறையை நிரப்பத் தன் பொட்டலங்களில் மேலும் ஒன்றைப் போட்டார். இன்னொன்றுக்காகத் தங்கையிடம் கேட்டார்.

மதுரமோ, “ஸ்வாமி எனக்கென்று கொடுத்த பிரஸாதத்தை நான் வேறொருவருக்குத் தருவதற்கில்லைஎன்று மறுத்து விட்டார்.

எனவே தமையனார் தாம் பெற்றதிலிருந்தே இன்னொரு பொட்டலமும் எடுத்து வைத்தார். ஸோதரர்களான உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவே இந்நூல். விபூதி வேண்டாம் என்பவர்களிடம் திணிக்க வேண்டாம்.

தன் விபூதிகளை மதிப்போர் பற்றிக் கண்ணன் சொல்வானே, “போதயந்த; பரஸ்பரம்; கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்தி ரமந்தி  என்று! “அவர்கள் ஒருவருக்கொருவர் என்னைப் பற்றியே அறிவுறுத்திக் கொண்டிருப்பார்கள்; எக்காலமும் என் கதைகளையே பேசிக் கொண்டிருப்பார்கள்; அதிலேயே நிறைவுறுவார்கள்; அதிலேயே களிப்படைவார்கள்என்று! அப்படிக் களிக்கவே கூடியிருக்கிறோம்.

வேள்வியில் தரப்படும் அவிர்பாகத்தை ஒரு தேவதை மட்டுமின்றி அனைத்து தேவதையரும் பகிர்ந்து கொள்வதுபோல, நீங்களும் எல்லாவற்றையும் எல்லோருடனும் பகிர்ந்து வாழுங்கள்என்று வேத மாதா உபதேசிக்கிறாள்: “தேவா பாகம் யதா பூர்வே ஸஞ்ஜாநாநா உபாஸதே.” தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வைப்பதில் ஸாயிமயமான இன்பத்தை ஸோதர அடியாரோடு பகிர்ந்துகொள்வது போல் ஒன்றுண்டோ?

3. அன்பின் வண்ணம்

மாலின் நீர்மை என்று ஆழ்வார் எதைச் சொன்னார்? நீராய்க் குளிர்ந்து, இனித்து, உயிர்ச்சார மூட்டும்நீர்மையாக நம் ஸ்வாமி காட்டும் ப்ரேமையைத் தானே? ஆழ்வார் கண்ட ‘பாலின் நீர்மை, செம்பொன் நீர்மை, பாசியின் பசும் நீர்மை, நீல நீர்மை யாவுமே காட்டுவது ஸாயியின் அன்பு. அது தூய்மையில், தாய்மையில் பால். உள்ளொளி துலக்கும் பொன். பசுமைக் கொழிப்பில் பாசி. அகண்ட விசாலத்தில் வான்நீலம், கடல் நீலம்.

*அன்பு அறுபதுநூலில் 23-ம் அத்யாயமும் பார்க்க.

ஆயினும் காய் கனிகையில் செம்மை பெறுவதே போல இதயக் கனிவையும் கருதி நமது மரபானது அன்பைச் சிவந்ததாகவே கூறும். அமைதி வெண் சிவமே அன்பில் சிவந்த லலிதையாவதை மஹான்கள் அனுபவத்தில் கண்டு, மற்றோர்க்கும் காட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.

மனிதனின் உணர்வுகளையும் எக்ஸ்ரே போல் கிர்லியன் புகைப்படம் எடுப்பவர்கள் அன்பைபிங்க்என்ற இளஞ்சிவப்பாகவே கூறுகிறார்கள். ‘இளம்என்பதுசோகைச் சிவப்பல்ல. இளமைக்குள்ள வளமையும் வலிமையும் கொண்ட லேசான செந்நிறம். ரோஜா நிற மென்மையில்லை. ஆரஞ்ஜின் கண் கூச்சும் இல்லை. அழகான, இதமான ஒரு வண்ணம்.

ஆங்கிலத்தில்பிங்க்முழுமைக்கு உருவகம்நமக்குச் செம்மை போல், ஒன்றின் பூர்ண நிலையைச் சொல்ல“in the pink of it” என்பார்கள். அன்பெனும் பிங்க் தனது இம்முழுமைப் பிங்கைத் தொடுவது நம் ஸ்வாமியிடமே என்று உலகப் புகழ் கிர்லியன் நிபுணர் பாரனௌவ்ஸ்கி கூறியிருப்பதை ஸாயி பக்தருலகு அறியும்.

கனடாக்காரரான ஸ்ரீமதி மேரிலின் ரோஸ்னெர் ஓரளவு புகழ் பெற்றஸென்ஸிடிவ்அல்லதுஸைகிக்’ – அதாவது ஐம்புலனுக்கப்பாற்பட்ட அதிர்வலைகளை உணரவும், அதீந்திரிய சக்திகளோடு தொடர்பு கொள்ளவும் திறம் பெற்றவர். தாமே அதிசய சக்தி படைத்தவரான இப்பெண்மணி கூறுகிறார்: “ஸாயிபாபா பேசிக்கொண்டே போகையில் அவரிடமிருந்து வண்ண வண்ணங்கள் பெருகக் கண்டேன்நீலம் ஓடிய ஆழ்சிவப்பு, பிங்க் சிவப்பு, நீலமுமே! “வெரி ஹாப்பி டு ஸீ யூ ஆல்என்று அவர் கூறிய வார்த்தைகளில் அன்பு அப்படியே நிரம்பி வழிந்தது. அப்படி அவர் சொல்கையில் அவ்வண்ணங்கள் ஓர் இதயத்தின் வடிவமாகச் சேரக் கண்டேன்.”

***

டில்லி பல்கலைக்கழகக் கல்லூரிகளில் ஒன்றின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் .என். பட்நாகர். ஸ்வாமியின் அண்மைக்காகவே அவர் ஒய்ட்ஃபீல்டில் வாடகைக்கு வீடு அமர்த்திக்கொண்டு தங்கியிருந்தார்.

பிறகு ஸ்வாமி சென்னைக்கு விஜயம் செய்து ஸ்ரீ வேங்கடமுனியின் வீட்டில் தங்கியிருந்தார். தமையனார் விமான நிலைய அதிகாரிகளோடு அங்கேலௌஞ்ஜில் தரிசனத்துக்காகக் காத்திருந்தார். மதுரமும் உடனிருந்தார்.

மாடியிலிருந்து இறங்கி வந்த பகவான் அவர்களைக் கண்டதுமே தமது அருள் நினைவின் கரிசனத்தோடு, “இவங்களுக்கெல்லாம் ப்ரஸாதம் கொடுத்தியா?” என்று தமையனாரிடம் வினவினார். தமது திருக்கரத்தால் இப்போதும் விபூதி படைத்து ஒவ்வொருவராக அவர்கள் யாவருக்கும் போட்டுக்கொண்டே சென்றார்.

மதுரத்தின் கையில் மட்டும் போடாமல் அடுத்த நபருக்கு நகர்ந்தார்.

மதுரம் கையை முந்தி நீட்டினார்.

சண்டை! விபூதி கேட்டால் தரமாட்டேன்கிறது!” என்று சொல்லியவாறு யாவுமறியும் ஸ்வாமி நகர்ந்தே விட்டார்! ஆம், மதுரத்துக்குப் பிரஸாதம் தராமல் அழ அழவிட்டுப் போய்விட்டார், ‘அகிலம் மதுரமானவர்!

இப்படிச் செய்யலாமா என்றால், அவர் செய்யும் அகிலமும் மதுரம் என்பதில் இந்தக் காரமுங்கூட மதுரந்தான்! அதனால் அந்தக் காரமே ஸஹோதரியின் மனத்தில், ‘ஸ்வாமி நமக்குத் தருவது, நம் போலவே அவரது குழந்தைகளான ஸகலரோடும் நாம் பகிர்ந்து கொள்ளத்தான்என்ற ஸோதர உணர்வை அழுத்தமாக ஏற்படுத்தி விட்டது. கார நெடி கொண்ட எருவைப் போட்டு மதுர மாங்கனி பழுக்கச் செய்யும் அற்புதந்தான்!

ஸ்வாமியின் முக்யமான விபூதி என்னவெனில் அவரது லீலா விபூதிதான்! அதாவது, திவ்ய சக்தியில் விளைந்த திருவிளையாடல்கள்தான்! இந்த விபூதியின் ஸாம்பிள்களை பக்ததாப ஜ்வரம் கண்டது. டாக்டரான அவரது மனைவியாரே சிகிச்ஸையளித்தார். பட்நாகர் தர்சனத்துக்குச் செல்ல முடியாததால் ஸ்ரீமதி மட்டும் பிருந்தாவனம் சென்று வந்தார்.

அம்மாளிடம் வந்தார் ஸ்வாமி, களிப்புமயமாக, பட்நாகர் ரொம்ப ஊர் சுற்றுவதாகத் தமாஷ் செய்தார்: “பஹத் ஃபிர்த்தா ஹை!”

பாபா! அவர் காய்ச்சலுற்றல்லவா கிடக்கிறார்?” என்றார் ஸ்ரீமதி.

அதில் என்ன ஹாஸ்யமோ கண்டு சிரித்தார் ஸ்வாமி. “106 டிக்ரி?” என்று கேட்டு மேலும் களித்தார்! “ப்ரஸாத் தேகாஎன்றார்.

சொன்னாரே தவிரப் பிரஸாதம் எதுவும் தரவில்லை. அவரது பிரஸன்ன முகமே பிரஸாதம் எனக்கொண்டு அம்மாள் வீடு திரும்பினார்.

மறுநாளும் ஸ்வாமி இதே விளையாடல் செய்தார்.

அன்று மாலை ஸாயிக் கல்லூரி மாணவரிருவர் பட்நாகரின் வீடு வந்து, ஸ்வாமி கொடுத்தனுப்பியதாகச் சொல்லி அவரிடம் சில விபூதிப் பொட்டலங்கள் அளித்துச் சென்றனர்.

பட்நாகர் ஒரு பொட்டலத் திருநீற்றை உட்கொண்டார். சில நிமிஷங்களில் ஜுரம் இறங்கிவிட்டது.

இதுவல்ல விஷயம். இனிதான் வருகிறது சரக்கு!

காய்ச்சல் தணிந்த பட்நாகர் அமைதியாய்ப் படுத்திருந்தார். ஸ்ரீமதி அறைவாயிலில் நின்றிருந்தார்.

திடுமென அந்த அம்மாளிடமிருந்து ஓர் ஆனந்த ஆர்ப்பு எழுந்தது. “வந்து பாருங்களேன், காம்பவுன்ட் முழுதும்பிங்க்பரவியிருப்பதை!” என்று கூவினார்.

பட்நாகர் வாரிச் சுருட்டிக்கொண்டு சென்று பார்த்தார்.

என்ன ஆச்சரியம்! கண்களுக்கும் கருத்துக்கும் ரமணீயமான எத்தகு மெத்து மெத்து வண்ண வெள்ளம்!

வானம் இருண்டு மூடியிருந்த அந்த ஸந்தியா காலத்தில், இருநூறடிக்கு நூறடி கொண்ட விஸ்தாரமான காம்பவுன்டை அடைத்துக்கொண்டு ரத்ன கம்பளம் விரித்தது போலப் பிங்க் வண்ணப் பிரவாஹம் பரவிக் கிடந்தது! அதன் சாயல் சிதறி அங்கு பூத்திருந்த மலர்களுக்கு இளம் சிவப்பில் நைஸான லேஸ் கட்டியிருந்தது!

“Apparelled in celestial light” “விண்ணக ஒளிதனை வஸ்திரம் பூண்டுஎன்ற வேர்ட்ஸ்வர்த் வாசகம் பேராசிரியரின் நினைவில் லேஸ் கட்டிற்று.

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம்எப்படி? அவனது உருவ மூர்த்தியின்றியே அவன் மூர்த்திகரித்திருக்கும் எண்ணம் அன்பு எனக் காட்டியது எப்படி?

இந்த அன்பு எண்ணத்தில் விளைந்தவைதாம் அவரது ஸகல அற்புதச் செயல்களும். எனவேதான், ‘அற்புதம் அறுபதுக்கு மட்டுமல்ல, ‘அற்புதம் அனந்தத்துக்குமே அடிப்படையான, ஜீவ ரத்தமான அவ்வன்பின் செம்மையை. அவன் காட்டிய இந்த அற்புதத்தை நூலின் தொடக்கத்திலேயே கொடுத்திருக்கிறோம்.