சேஷாத்ரி வரலாறு – 6

ஒரு நாள் தாமலிலிருந்து வந்த பரசுராம சாஸ்திரிகள் சேஷாத்ரியைத் திருத்தும் நோக்கத்துடன் அவரை தம் அருகில் அழைத்தார்.

“அப்பா, உன் பக்தியையும், ஜப தபங்களையும் ரொம்ப மெச்சறேன். ஆனால், நீ சுடுகாட்டுக்குப் போய் ஜபம் பண்றது சரியில்லை. அது சாஸ்திரத்துக்கு விரோதம். அதை மட்டும் நிறுத்தி விடு” என்று கேட்டுக் கொண்டார்.

சேஷாத்ரி தாம் செய்வது சரியே என்று வாதம் செய்யத் தொடங்கினார். இருவரும் சமஸ்கிருதத்திலேயே மூன்று மணி நேரம் தர்க்கம் புரிந்தனர். கடைசியாக செஷாத்ரி “நான் நைஷ்டிக பிரம்மச்சாரி, உபாசகன், உபாசகனுக்கு இன்ன நேரத்தில், இன்ன இடத்தில் ஜபம் செய்ய வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளெல்லாம் கிடையாது என்று அடித்துக் கூறி சாஸ்திரியாரை மேற்கொண்டு பேசவொட்டாமல் செய்து விட்டார். கோபங்கொண்ட சாஸ்திரிகள், “நீ என்ன சொன்னாலும், தினமும் சுடுகாட்டிற்குப் போய் விட்டு வீட்டிற்குள் நுழைவது அநாசாரம்” என்று கடுமையாகக் கூறினார். “சரி இனிமேல் வீட்டுக்குள் வரவில்லை” என்று சேஷாத்ரி அன்றையிலிருந்து கோயில்களிலும், குளக்கரைகளிலும், மரத்தடியிலும் அவர் பொழுதைக் கழித்தார். வீட்டுக்கே வருவதில்லை.

அச்சமயத்தில் ஹரித்வாரத்திலிருந்து காஞ்சிபுரத்திற்கு ஒரு யோகீஸ்வரர் வந்திருந்தார். அவருக்கு பாலாஜி சுவாமிகள் என்று பெயர். நான்கு சீடர்களுடன், சர்வ தீர்த்தக் கரையிலுள்ள விசுவநாத சுவாமி ஆலயத்தில் தங்கியிருந்த அவர், பார்ப்பதற்கு தட்சிணாமூர்த்தியைப் போலவே இருந்தார்.

சர்வ தீர்த்தக் கரையில் அனைவருக்கும் தரிசனம் தந்து கொண்டிருந்த பாலாஜி சுவாமிகளைக் கண்டதும் சேஷாத்ரி, உணர்ச்சி வசப்பட்டு, கண்கள் கலங்க காலில் விழுந்து வணங்கினார். ஞான குருவின் அருட் பார்வையில் மெய்ம்மறந்து போனவர், தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தை “கணீர்” என்று சொன்ன போது அவரையும் அறியாமல் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. அம்மகான் சாந்தமுடன் பால உபாசகனை நோக்கி, “குழந்தாய், வருந்தாதே! இப்படியே உட்கார்” என்று சமஸ்கிருதத்தில் மொழிந்தார்.

சேஷாத்ரியும் கட்டுண்ட நாகம் போல், சுவாமிகளின் அருகிலேயே அமர்ந்தார். அக்கணமெ அம்மகானுக்கு அடிமையானார்.

இருவரும் சாஸ்திர சம்மந்தமான விஷயங்களை பற்றி வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர். குருவின் அருள் நோக்கு சீடரின் மீது கருணை மழையைப் பொழிந்து கொண்டிருந்தது. பார்வையாலேயே உபதேசித்தருளி விட்டார் அந்த பரமஹம்சர்.

சுவாமிகள் உத்தரவு கொடுத்தும் கூட அந்த இடத்தை விட்டு சேஷாத்ரி நகரவேயில்லை. அக்கணமெ சுவாமிகளுக்கு ஐந்தாவது சீடராகி அவருக்குப் பணிவிடைகள் செய்யத் தொடங்கி விட்டார்.

சேஷாத்ரிக்கு பட்டண்ணா என்றொரு நண்பர் இருந்தார். அவரும் பாலாஜி சுவாமிகளின் சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். இருவரும் ஒரு நாள் சுவாமிகளின் பாதங்களில் விழுந்து, தங்களுக்கு உபதேசம் செய்தருளும்படி வேண்டினர். சுவாமிகள் பட்டண்ணாவுக்கு தேவி மந்திரத்தை உபதேசித்தார். சேஷாத்ரியின் வைராக்கியத்தை கண்டு அவர் ஞான சந்நியாசத்திற்கு மிகவும் ஏற்ரவர் என்று தீர்மானித்து, முறைப்படி சந்நியாசம் கொடுத்து, மகா வாக்கியங்களை உபதேசித்தருளினார்.

உள்ளத்தில் என்றோ சந்நியாசியாகிவிட்ட சேஷாத்ரி, உருவிலும், உடியயிலும் தற்போது அந்த ஆஸ்ரமத்தை ஏற்றுக் கொண்டு விட்டார். உலக இச்சைகளை துறந்தவர், பேரின்பத்தில் லயித்து, ஜீவன் முக்தராய், யோக சித்தராய், ஞானப் பித்தராய் தன் நிலை உணர்ந்து தன்னிச்சையாய் திரியும் தவப் பெரு நிதியாய் பிரும்மானந்தக் கடலில் நீந்தித் திளைத்துக் கொண்டிருந்தார்.

அன்று வரதராஜ ஜோசியருக்கு சிரார்த்த தினம். தந்தையின் திதியில் சேஷாத்ரி எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என்று கல்யாணி அம்மாள் மிகவும் பிடிவாதமாயிருந்தாள். எங்கிருந்தாலும் குழந்தையை தேடிக் கண்டு பிடித்து, எப்படியாவது வீட்டுக்கு அழைத்து வரும்படி முதல் நாள் அவள் கணவரிடம் அழுது புலம்பினாள். வேறு வழியில்லாமல் பையனைத் தேடிச் சென்ற ராமசுவாமி ஜோசியர், தெருவில் அலைந்து கொண்டிருந்த சேஷாத்ரியைக் கட்டிப் பிடித்து, இரண்டு பேர் உதவியுடன் வீட்டுக்கு இழுத்து வந்தார். இந்தக் காட்சியை ஊரே வேடிக்கை பார்த்தது.

நான் சந்நியாசி, கர்மமெல்லாம் தொலைந்து விடது. சந்நியாசிக்கு இந்தச் சடங்குகளெல்லாம் கிடையாது என்று சத்தம் போட்டுக் கொண்டே வந்தார் சேஷாத்ரி.

அதெல்லாம் தெரியாது. இது உன் சித்தியின் கட்டளை. இன்று பூராவும் நீ வீட்டை விட்டுப் போகக் கூடாது. என்ன ஆனாலும் நான் உன்னை விடப் போவதில்லை என்று கூறிய ராமசுவாமி ஜோசியர், சேஷாத்ரியை ஓர் அறையில் தள்ளிப் பூட்டிவிட்டு, சாவியை தன் இடுப்பில் பத்திரமாக செருகிக் கொண்டார்.

சுமார் இரண்டு மணி இருக்கும். சிரார்த்தம் முடிந்தது. வலம் வந்து மூதாதையரின் ஆசியைப் பெற வேண்டிய சடங்கு நடைபெற வேண்டும். அதற்காக சேஷாத்ரியை அழைத்து வர ஜோசியர் அறைக் கதவைத் திரந்தார். அக்கம் பக்கத்திலிருப்பவர்களும் வேடிக்கை பார்க்க குழுமியிருந்தனர். வைதிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.

ராமசுவாமி ஜோசியர் மெள்ள அறைக்குள் நுழைந்தார். சுற்றிப் பார்த்தார். மூலை முடுக்குகளிலெல்லம் தேடினார். சேஷாத்ரியைக் காணவில்லை.

பூட்டிய அறையிலிருந்து யோக சித்தர் சேஷாத்ரி மாயமாய் மரைந்து விட்டார்.

கோயிலில், குளக்கரையில், மண்டபத்தில், மரத்தடியில், மயானத்தில், சத்திரத்தில் எங்கு தேடியும் அவரைக் காணவில்லை. சிறிய தந்தையும் சித்தியும் வேதனையால் மனம் வெதும்பிப் போனார்கள். தாங்கள் கண்டிப்புடன் நடந்து கொண்டதால் தான் பிள்ளை ஊரை விட்டே ஓடி விட்டான் என்ற பழிக்கு ஆளானோமே என்று நெஞ்சு வ்டிகெகக் குமுறி அழுதார்கள்.

சில நாட்கள் கழித்து, சேஷாத்ரி காவேரிப்பாக்கத்தில் இருப்பதாக செய்தி வந்தது. காஞ்சிபுரத்திலிருந்து மேற்கே இருபதாவது மைலில் இருக்கும் அந்த ஊருக்கு சுவாமிகள் எப்படிப் போனார், ஏன் போனார் என்று ஒருவௌர்க்குமே தெரியவில்லை. அவ்வூரில் சேஷாத்ரியின் பெரிய தாயாரான சுந்தரக்கா என்ர சுந்தரம்மாள் வசித்து வந்தார். வேறு சில உறவினரும் இருந்தனர். ஆனால், சுவாமிகள் அவர்களுடைய வீடுகளுக்குச் செல்ல வில்லை. அங்குள்ள முக்தீஸ்வரர் ஆலயத்திலேயே தங்கியிருந்தார். அவருடைய ஒன்று விட்ட தம்பியான சேஷு என்பவர், சுவாமிகளைப் பார்த்து விட்டு வீட்டுக்குச் சென்று, அண்ணா கோயிலில் இருக்கிறார் என்று சொல்லவே, அவர்கள் எல்லோரும் ஓடோடி வந்து, அவர் இருந்த கோலத்தைக் கண்டு பதறித் துடித்தனர். எத்தனை அழைத்தும், அவர்களுடன் வீட்டுக்கு வர அவர் மறுத்து விட்டார். எனவே, தினமும் கோயிலுக்கு உணவு கொண்டு வந்து அவருக்கு அளித்து வந்தனர்.

ஒரு நாள் தம்பியுடன் சேஷாத்ரி கோயிலை வலம் வந்து கொண்டிருந்தார். வடககு மதிற்சுவரின் ஓரமாக இருந்த புன்னை மரத்தடியிலிருந்து ஒரு பாம்பு அப்போத் சீறிக் கொண்டு வந்தது. தம்பி சேஷு அதைப் பார்த்துப் பயந்து, “ஆண்ணா, பாம்பு, பாம்பு” என்று கத்தினார். சேஷாத்ரியோ, இங்கே வா என்று அந்தப் பாம்பை வாஞ்சையுடன் அழைத்தார். தாய் அழைக்க, துள்ளிக் குதித்து ஓடி வரும் குழந்தையைப் போல் அப்பாம்பு வேகமாக ஊர்ந்து வந்து, சேஷாத்ரியின் மேல் ஏறி, அவர் கழுத்தை மூன்று முரை சுற்றிக் கொண்டு தலையின் மீது குடையைப் போல் படம் எடுத்து நின்றது.

சேஷுவுக்கு வியர்த்துக் கொட்டியது. நடுநடுங்கிப் போனவர், “ஐயோ! அண்ணாவைப் பாம்பு கடித்து விட்டது” என்று அலறித் கொண்டு வெளியே ஓடினார்.

சற்று நேரத்தில் அங்கு ஒரு பெரும் கூட்டமே கூடி விட்டது. சுந்தரம்மாள் வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொண்டாள். உறவினரெல்லாம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு செய்வதறியாது திகைத்து நின்றனர்.

சற்றைக்கெல்லாம் அந்தப் பாம்பு சேஷாத்ரியின் உடலிலிருந்து இறங்கி மெள்ள ஊர்ந்து சென்று எங்கோ மறைந்து விட்டது.

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் பூட்டப்பட்டிருந்த அறையிலிருந்து மாயமாய் மறைந்து விட்ட செய்தி ஒரு நொடியில் ஊரெங்கும் பரவி விட்டது. அந்த அற்புத நிகழ்ச்சியைப் பற்றித்தான் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர். ராமசுவாமி ஜோசியரும், கல்யாணி அம்மாளும், “பிள்ளையின் யோக மகிமையைப் புரிந்து கொள்ளாமல், அவன் மனம் நோகும்படி நடந்து கொண்டோமே என்று வருத்தப்பட்டனர்.

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் வரலாற்றில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி படித்த போது எனக்கு புல்லரித்தது. அத்திருவிளையாடலை அவர் நிகழ்த்திக் காட்டிய வீட்டையும், அந்த அறையையும் காண வேண்டும் என்ற பேரவா என்னுள் எழுந்தது. காஞ்சிபுரம் சென்று யார் யாரையோ கேட்டுப் பார்த்தேன். ஒருவருக்கும்ம் அந்த வீடு இருக்குமிடம் தெரியவில்லை.

வயதானவர்களையெல்லாம் விசாரித்துப் பார்த்தேன். ஒரு பயனுமில்லை. நண்பர் மாத்ருபூதம், கொல்லாசத்திரத்திற்கு எதிரிலுள்ள ஒரு சிரு ஓட்டு வீட்டைக் காட்டி, “இங்கேதான் சேஷாத்ரி சுவாமிகளின் மனுஷா இருந்ததாகச் சொல்லுவா” என்று கூறினார். அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தேன். அது மிகப் பழைய வீடுதான். ஆனால், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் வசித்த வீடு அதுதான் என்று எப்படி உறுதிப் படுத்திக் கொள்வது? நேரே ஸ்ரீ காஞ்சி மாமுனிவரிடம் சென்றேன். வேறு எங்கு செல்வேன்?

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் வசித்த இல்லம் எது என்று சரியாகத் தெரியவில்லை. பெரியவாளுக்குத் தெரிஞ்சா….என்று மெள்ள பேச்சைத் தொடங்கினேன் நான்.

சுவாமிகள் யோசனையில் ஆழ்ந்தார்.

“ஏதிர் வீடு என்று சொல்லுகிறார்கலே, அதுவாக் ஐருக்குமோ?” என்று கேட்டேன்.

அது இருக்காது என்பது போல் தலையை அசைத்து விட்டு மீண்டும் சிந்திக்க ஆரம்பித்தார் சுவாமிகள். (அந்த வீட்டில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் சகோதரரான ஸ்ரீ நரசிம்ம ஜோசியரின் குடும்பம் வசித்ததாக பின்னர் கேள்விப்பட்டேன்).

ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளிடம் விளக்கம் கேட்டு விட்டுக் காத்திருந்தால் போதும், விடை எப்படியோ கிடைத்து விடும். அனுபவத்தில் ஏற்பட்டுள்ள நம்பிக்கை அது. அந்த நம்பிக்கையோடு காத்த்ருந்தேன்.

சுவாமிகள் மெள்ளப் பேசினார். “ஸ்ரீ உபநிஷத் பிரும்ம மடத்துக்குப் பின்னாலே அஞ்சாறு சின்ன வீடுகள் இருக்கு. ஏதோ ஒரு வீட்டிலே ரங்கநாதன்னு ஒரு புரோகிதர் இருக்கார். அவர் அஷ்டசஹஸ்ர வகுப்பைச் சேர்ந்தவர். அவரிப் அபோய்க் கேட்டுப் பாரு. அவருக்கு ஒருவேளை தெரிஞ்சிருக்கலாம்.

காஞ்சிப் பெரியவர் இவ்வாறு சாதாரணமாகப் பேசித்தான் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவார். அவர் குறிப்பால் உணர்த்துவார். கோடி காட்டுவார். பொறுமையோடு நாம் தேடிக் கொண்டு போனால், இருள் விலகி, உணமை பிரகாசிப்பதைக் காணலாம்.

அவசர அலுவல்கள் காரணமாக காஞ்சிபுரத்தை விட்டுப் புறப்பட வேண்டியிருந்ததால் அன்று நான் திரு ரங்கநாதனை சந்திக்க இயலவில்லை. இரண்டு மாதங்கள் கழித்துத்தான் அவரை சந்திக்க முடிந்தது.

இந்த ஏழையைத் தேடி எப்படி வந்தீர்கள் என்று கேட்டார் திரு ரங்கநாதன். அவரைப் பார்த்து விசாரிக்கும்படி சுவாமிகள் என்னை அனுப்பி வைத்ததைப் பற்றி நான் கூறியபோது அவர் கண்கள் கலங்கி விட்டன.

என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, என்னை நினைவு வைத்துக் கொண்டு உங்களை என்னிடம் அனுப்பி வைத்த அவர் கருணையே கருணை. அந்த மகான் இருக்கிறதினாலேதான் ஊர்லே கொஞ்சமாகவது மழை பெய்கிறது என்று கூறியவர், உணர்ச்சி வசப்பட்டு சிறிது நேரம் எதுவுமே பேச முடியாமல் திணறினார். நான் வந்த காரியத்தை மீண்டும் நினைவுபடுத்திய பின்னர்தான் திரு ரங்கநாதன் பேசினார்.

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் வசித்த வீடு எது என்று எனக்கு நிச்சயமாகத் தெரியாது. சின்னக் காஞ்சிபுரத்திலே யானைக்கட்டித் தெருவிலே இருக்கிரதாக எங்க பெரியவா சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன். பெரிய தோப்பும், துரவுமாக இருக்குமாம்.

அதற்கு மேல் அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து கிளம்பி நேரே சின்ன காஞ்சிபுரம் சென்றோம். யானைக்கட்டித் தெருவில் அப்படியொரு இடமோ, வீடோ இல்லை எனக் கூறி விட்டார்கள். அப்படியிருந்தும் நான் நம்பிக்கையை இழக்க வில்லை.

வயது முதிர்ட்ந்த வைணவப் பெரியோர்கள் ஓரிருவரைத் தேடிச் சென்று விசாரித்தேன். அவர்களும் கையை விரித்து விட்டனர். சேஷாத்ரி என்ற பெயரையே கேள்விப்பட்டதில்லை என்று கூட ஒருவர் சொல்லி விட்டார்! அப்படியும் நான் நம்பிக்கையை இழக்க வில்லை.

உடன் வந்த உள்ளூர்வாசி பத்மநாபன் என்னை நல்லபா ஜீயப்பங்கார் என்ற பெரியவரிடம் அழைத்துச் சென்றார். படிப்பும், படிப்புக்கேர்ர பண்பும் நிறைந்த முகப் பொலிவு. வீடு தேடி வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்று, உதவி புரியத் துடிக்கும் உயர்ந்த குணம். நாங்கள் நாடி வந்த விஷயத்தைப் பர்றி அவரிடம் கேட்டோம். படுத்திருந்தவர் உற்சாகத்துடன் எழுந்து உட்கார்ந்தார். எங்களையும் உட்காரச் சொன்னார்.

நான் சொல்லும் வீடு தெற்கு வீதியின் கீழ்க்கோடியில் இருக்கிறது. இப்போது அது நாலு கை மாறிவிட்டது. நாற்பது வருஷங்களுக்கு முன் என் நண்பர் ஒருவர் அந்த வீட்டில் குடியிருந்தார். நான் குடியிருக்கும் வீடு சேஷாத்ரி சுவாமிகள் இருந்த வீடு என்று அவர் சொல்லியிருக்கிறார். அதனால்தான் அத்தனை நிச்சயமாகக் கூறுகிறேன். வாருங்கள், அந்த வீட்டைக் காட்டுகிறேன் என்று அவர் எங்களை அழைத்தார். நேரத்தைக் கடத்தாமல் நாங்கள் புறப்பட்டுச் சென்றோம்.

ஒரு மாடி வீட்டைக் காட்டி, இது தான் நான் சொன்ன வீடு. இதில் தான் என் நண்பர் குடியிருந்தார் என்று சுட்டிக் காட்டினார் ஜீயப்பங்கார் சுவாமி.

அந்த வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினோம். நாங்கைந்து குழந்தைகளைத் தவிர அந்த வீட்டில் பெரியவர்கள் ஒருவரும் இல்லாததால் ஒன்றுமே விசாரிக்க முடியவில்லை. பின்புறம் சென்று பார்த்தோம். தென்னை மரங்கள் அடர்ந்த பெரிய தோப்பாக இருந்தது. திரு ரங்கநாதன் கூறிய அடையாளங்களைக் கொண்டு இந்த இடமாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். இருப்பிஉன்ம் சந்தேகம் தீரவில்லை. மனத்திற்கு முழுமையான திருப்தி ஏற்படவில்லை. அந்த மாடி வீட்டிற்குக் கிழக்கில், அதை ஒட்டினாற்போல் ஒரு ஓட்டு வீடு இருந்தது. அதுவாக இருக்குமோ என்ற சந்தேகம் தோன்றியது.

அந்த சிறு வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு காலி மனை. அதையடுத்து ஒரு சிறு திண்ணை. அதில் ஒரு கிழவர் சுருண்டு படுத்திருந்தார்.

அவரைக் கேட்டுப் பாருங்க. அவரு இதே ஊர்தான். அவருக்கு தொண்ணூறுக்கு மேல் வயசாகுது. ஒரு வேளை அவருக்குத் தெரிஞ்சிருக்கும்…. என்று ஓர் அம்மாள் சொன்னாள்.

அந்தக் கிழவரை குரல் கொடுத்து எழுப்பினோம். அவர் மெள்ள எழுந்து உட்கார்ந்தார். எங்களையும், எங்கள் கேள்வியையும் புரிந்து கொள்ளவே அவருக்கு பத்து நிமிடம் ஆயின.

பெரியவரே, இதோ இந்தப் பக்கத்து வீட்டிலே யார் இருந்தாங்கன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா? என்றேன். “எது?…. அந்த மாடி வீடா….? அது நான் கட்டினதுதான். அது பஞ்சாங்கக்கார ஐயர் வீடு…. என்றார் கிழவர்.

அம்முதியவரின் பெயர் கிருஷ்ணப்ப முதலியார், கொத்தனார், மேஸ்திரியாக இருந்திருக்கிறார்.

அதுக்குப் பக்கத்து வீட்டிலே யார் இருந்தாங்க?

அங்கேயும் அவங்க மனுஷாதான் இருந்தாங்க. பெரியவௌர் இறந்துட்டாரு…. அப்புரம் அவங்களெல்லம் வீடுங்களை வித்துட்டு எங்கேயோ போயிட்டாங்க.

இந்த வீட்டிலே சேஷாத்ரின்னு ஒருத்தர் இருந்தாரே. நீங்க பார்த்திருக்கீங்களா?

கிழவர் ஞாபகப்படுத்திப் பார்க்கிறார். அவருக்கு ஒரு பெய்பரும் நினைவுக்கு வரவில்லை.

அவரு கூட சின்ன வயசிலேயே சாமியார் ஆயிட்டாராமே, உங்களுக்கு ஞாபகம் இல்லையா…?

ஏங்கேயோ மினுக் என்ரு மின்னுவது போல் கிழவருக்கு ஒரு கணம் லேசாக பழைய நினைவு வருகிறது.

சிவப்பா, ஒடிசலா ஒரு புள்ளையாண்டான் இருந்தாரு. அவரு… வீட்டை விட்டுப் போயிட்டாரு…. அப்புறம் பெரியவங்களும் செத்துட்டாங்க. மத்தவங்க வீடு, தோட்டம், துரவு எல்லாத்தையுமே வித்துட்டுப் போயிட்டங்க. அப்புறம், இரண்டு தரம் ஐயரைப் பார்த்தேன்.  பெரிய காஞ்சிபுரத்திலே இருக்கிறதாச் சொன்னாரு.

பெரிய காஞ்சிபுரத்திலே எங்கே இருந்தாங்க, தெரியுமா?

ஏங்கே இருக்கீங்கன்னு நான் கேட்கலே. நமக்கு எதுக்கு அதெல்லாம். அது ஆவுது. எத்தினியோ வருஷம். சும்மா நோண்டி நோண்டி கேள்வி கேட்டா, எனக்கு ஞாபகமா இருக்கு? என்று அலுத்துக் கொண்டு மீண்டும் திண்ணையில் முடங்கிக் கொண்டார். பழைய நாட்களைக் கிளறி சற்ரு நினைவுப் படுத்திக் கொண்டதால் ஏற்பட்ட் களைப்பு அவரை மேலும் பலவீனம் அடையச் செய்தது. “போய்வரோம் தாத்தா” என்று நாங்கள் கூறிய போது கண்ணைத் திரந்து பார்க்கக் கூட முடியாமல் அவருக்கு அத்தனை அசதி, இயலாமை. ஒரு வேளை அன்று முழுவதும் பொறுமையுடன் காத்திருந்தால், சிறிது சிறிதாக நினைவு படுத்திக் கொண்டு தெரிந்தவற்றையெல்லாம் கூறியிருப்பாரோ என்னவோ! நாங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

அந்தச் சிறிய ஓட்டு வீட்டில்தான் சேஷாத்ரி சுவாமிகள் வசித்திருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு கூரவே, அந்தச் சிறிய வீட்டினுள் நுழைந்தோம்.

வாசற்கதவு சற்று திறந்திருந்தது. ரேழியில் ஒரு பெரியவர் படுத்துக் கொண்டிருந்தார். அவரிய எழுப்பி, வீட்டைப் பார்க்க வேண்டும் என்று கூறினோம். அவரும் உடனே எழுந்து எங்களுக்கு வழி விட்டார்.

அந்த வீட்டை முன் பக்கம் இடித்துக் கட்டியிருக்கிறார்கள். வலப்புரம் இருந்த அரைக்குள் எட்டிப் பார்த்தேன். “ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளை அவருடைய சிறிய தந்தை ராமசுவாமி ஜோசியர் இந்த அறையில்தான் பூட்டி வைத்திருந்தாரோ? இங்கிருந்துதான் சுவாமிகள் மாயமாய் மறைந்தாறோ?” அவ்வாறு நான் எண்ணிய உடனேயே உடலில் மின்சாரம் பாய்ந்தது போன்ற ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது.

உள்ளே சென்றோம். இரண்டாம் கட்டு பாழடைந்து கிடந்து. முற்றதில் இருக்கும் கிணரு மூடப்பட்டிருந்தது. இடிந்த செங்கற் சுவர்களையும், உதிர்ட்ந்த காரைகளையும் பார்த்த போது, நூறு வருஷங்களுக்கு முன் கட்டப்பட்ட வீடாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் இந்த வீட்டிலேதான் வசித்திருக்க வேண்டும் என்ர எண்ணம் வேரூன்றியது.

இதையெல்லாம் கூட நல்லா இடிச்சுட்டுப் புதுசாக் கட்டப் போகிறோம்…… என்றார் அங்கு இருந்தவர்.

எனக்கு பகீர் என்றது. சரித்திரச் சின்னங்களை அழிக்கிறார்களே என்று உள்ளூர வருந்தினேன். நமக்கு புனித சரித்திரம், அவர்களுக்குச் சாதாரண வீடுதானே!

அந்த அழிவுச் சின்னங்களை புகைப்படம் பிடித்துக் கொண்டு, நேரே கொல்லாசத்திரத்திற்குச் சென்று, சுவாமிகளிடம் நாங்கள் கேட்டவற்றையும், பார்த்தவற்ரையும் கூறினேன். “அந்த வீடுதானா?” என்ற சந்தேகம் மட்டும் மனத்தின் ஒரு மூலையில் ஏனோ என்னைக் குழப்பிக் கொண்டிருந்தது.

சுவாமிகள் நான் கூறியவற்றைப் புன்னகையுடன் மௌனமாகக் கேட்டுக் கொண்டார். என் மன நிலையை அறிந்து, “ஆந்த வீடாகத்தான் இருக்கணும்” என்று கூறி என் சந்தேகத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.