உறவினரும், ஊரிலுள்ளவர்களும் ராமசுவாமி ஜோசியரிடம் வந்து சேஷாத்ரியைப் பற்ரி ஓயாமல் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
“வர வர ரொம்ப மோசமாயிண்டிருக்கான். தெருவிலே யார் போனாலும் அவா காலில் விழுந்து நமஸ்காரம் பண்ரான். சூரியனைப் பார்த்துப் பார்த்து கும்பிடரான். நீர்க் காக்கைப் போல் சும்மா குளத்தில் முழுகி முழுகி எழுந்திருக்கிரா. ஏதாவது கேட்டா உரக்க சிரிக்கிரான். வாய்லே ஏதாவது உளறிண்டேயிருக்கான். நேத்து காமாட்சி கோயில்லே எனக்கு மானமே போயிடுத்து” என்று உறவினர் ஒருவர் கூறி வருத்தப்பட்டுக் கொண்டார்.
ஆமா, நான் கூடப் பார்த்தேன். முந்தா நாள் ஏகாம்பரேஸ்வரர் கோயில் மண்டபத்திலே உட்கார்ந்துண்டு என்னமோ ஜபம் பண்ணிண்டிருந்தான். என்னடா சேஷூ பண்ணிண்டிருக்கேன்னு நான் கேட்டேன். “கர்மம் தொலையரத்துக்காக தபம் பண்றேன் மாமா”ன்னான். என்ன ஜபம்டா பண்றே?ன்னு கேட்டேன். உடனே “காமோ கார்ஷீத்மன்யுர கார்ஷீத்-காம; கரோகி நாஹம் கரோமி” என்ற வேத மந்திரத்தைச் சொல்லி அதைத்தான் ஜபிக்கிறேன்னான். அப்புறம் என்னை உட்காரச் சொல்லி அந்த மந்திரத்தின் அர்த்தத்தை எடுத்து ரொம்பத் தெளிவா சொன்னான். அடேயப்ப! என்ன படிப்பு, என்ன ஞானம்! நான் அப்படியே திகைச்சுப் போயிட்டேன். “மாமா, இதுவரைக்கும் நான் இந்த மந்திரத்தை லட்சம் தடவை ஜபிச்சுட்டேன். இன்னும் அரை லட்சம் பாக்கியிருக்கு. நீங்களும் சொல்லுங்கோ. அப்போதான் கர்மம், தொலையும். கர்மம் தொலைஞ்சாத்தான் மோட்சத்துக்குப் போகலாம். மோட்சத்துக்குப் போகணும்னு உங்களுக்கு ஆசையில்லையா?ண்னு என்னைக் கேட்டான். “ரொம்ப நன்னா பேசறான். அவன் பைத்தியமே இல்லை. வயசுக்கு மீறின ஞானம் வந்துடுத்து. வேறே ஒண்ணுமில்லெ என்று குடும்ப நண்பர் ஒருவர் ஜோசியருக்கு தைரியம் சொல்லி விட்டுப் போனார்.
சிறுவன் ஒருவன் ஓடி வந்தான். “மாமா, மாமா, வந்து பாருங்கோ, நம்ம சேஷு பெருமாள் வரார்னு வீதியிலே இருக்கிற எச்சில் இலையையெல்லாம் எடுத்து ஓரமா போட்டிண்டிருக்கான். தனக்குத்தானே என்னமோ பேசிண்டிருக்கான். எல்லாரும் பார்த்துச் சிரிக்கிறா என்று ராமசுவாமி ஜோசியரை அழைத்தான். அவர் தலையில் அடித்துக் கொண்டார். உலகத்துக்கு ஒரு அதிசயப் பிள்ளையாயிருக்க வேண்டியவனின் கதி, ஊர் சிரிக்கும்படி ஆகி விட்டதே என்று நினைத்துக் குமைந்தார்.
இரண்டு வாரங்கள் கடந்தன. கோயில்களுக்கு சென்று ஜபம் செய்வதை சேஷாத்ரி நிறுத்திக் கொண்டு விட்டார். காலையிலும், பகல் பொழுதிலும் வீட்டில் இருபார். அந்தி வேளையில் வீட்டை விட்டுப் போனால் பிறகு மறு நாட் காலையில் வீடு திரும்புவார். இரவில் எங்கு போகிறார், எங்கு படுக்கிறார் என்று ஒருவருக்கும் தெரியவில்லை….. ராமசுவாமிக்குப் பெருங்கவலையாகி விட்டது. சேஷாத்ரியை விசாரித்துப் பார்த்தார். ஒரு பயனுமில்லை. பதில் சொல்லாமல் அவர் சிரித்து விட்டுப் போய்விட்டார்.
பத்து நாட்கள் கழித்து அந்த மர்மம் புரிந்தது. சேஷாத்ரி தினமும் இரவில் மயானத்திற்குச் சென்று ஜபம் செய்கிறார் என்ற செய்தி ஜோசியரின் காதில் விழுந்த போது அவர் மிகவும் வேதனை அடைந்தார். ஜனங்களுடைய தொந்தரவு பொறுக்க முடியாமல் தனிமையை நாடி சுடுகாட்டிற்கே சென்று விட்டார் சேஷாத்ரி!
ஒரு நாள் சிறிய தந்தை சேஷாத்ரியிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.
:அப்பா, சேஷு! மயானத்திற்கெல்லாம் போகாதே, அந்த அசுத்தமான இடத்தில் ஜபம் செய்வானேன்? வீட்டிலேயோ, கோயிலிலேயோ ஜபம் செய்தால் போதாதா?.
சேஷாத்ரி சிரித்தார். “அதுவா அசுத்த பூமி? அது ஸ்ரீ ருத்ரரின் பூமி. அங்கு ஜபம் செய்தால் ஈசுவரன் சீக்கிரம் பலனைஅளிபார். வெளியில் ஆயிரம் தடவை ஜபித்துப் பெறும் பலனை மயானத்தில் ஒரே தரம் ஜபித்துப் பெற்று விடலாம் என்று அவர் கூறவே, ராமசுவாமி ஜோசியருக்குக் கோபம் வந்து விட்டது. அன்று மாலை சேஷாத்ரி வெளியே கிளம்ப முடியாமல் அவரை ஓர் அறையில் அடைத்துப் பூட்டிவிட்டார்.
ஆனால், எதிர்பாராதது நடந்து விட்டது. சேஷாத்ரி உள்ளுக்குள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, ஜபத்திலும், தியானத்திலும் ஆழ்ந்து விட்டார். நான்கு நாட்கள் வெளியே வரவேயில்லை; உணவு உட்கொள்ளவும் மறுத்து விட்டார்.
சேஷாத்ரியின் உண்ணாவிரதத்தையும், சத்தியாகிரகத்தையும் கண்டு ராமசுவாமி பயந்தே விட்டார். பட்டினி கிடந்து இறந்து விட்டால் பழி அவரைத் தானே சேரும். வேறு வழியில்லாமல் கதவைத் திறந்து விட்டு விட்டார். சேஷாத்ரி மயான ஜபத்தை மீண்டும் தொடங்கி விட்டார். தீவிரமான உபாசனையில் இரங்கி விட்டார். கடுமையான உபவாசம் இருந்தார். உடலை மேலும் வருத்திக் கொண்டார். உள்ளத்தில் ஓளி பிறந்தது. அது முகத்தில் பிரதிபலித்தது. அதைக் கண்டு உலக்ம வியந்தது.
ஆனால், சிறிய தந்தைக்கோ சேஷாத்ரியின் போக்கு சிறிதும் பிடிக்க வில்லை. சமயம் வாய்த்த போதெல்லம் அவரிடம் தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.
அன்று சனிக்கிழமை. வீட்டில் எல்லோரும் எண்ணெய் தேய்த்து நீராடும் தினம். மணி பத்தாகி விட்டது. சேஷாத்ரி இன்னும் மயானத்திலிருந்து வீடு திரும்ப வில்லை. ராமசுவாமி ஜோசியருக்குத் தாங்க முடியாத கோபம். அதை யாரிடம் காட்டுவது? “இன்று எண்ணெய் தேய்த்துக் கொள்ளப் போவதில்லை” என்று வெறுப்புடன் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து விட்டார்.
சேஷாத்ரி வந்தார். அவர்தான் சிற்றப்பாவுக்கு எண்ணெய் தேய்ப்பது வழக்கம். எண்ணெய் கிண்ணத்தைக் கையிலெடுத்துக் கொண்டு ஜோசியரிடம் சென்றார். அவர் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
“சேஷு, உன் சித்தப்பா இன்னிக்கு எண்ணெய் தேய்ச்சுக் கொள்ளப் போறதில்லையாம்” என்றாள் சித்தி கல்யாணி அம்மாள்.
ஏன் சித்தி? என்று ஆச்சரியத்துடன் கேட்டார் சேஷாத்ரி.
உன்னைப் பற்றித்தான் அவருக்கு வருத்தம். வர வர நீ சொன்ன பேச்சையே கேட்க மாட்டெங்கறயாம் என்றாள் சித்தி.
“இதென்னடா வம்பாப் போச்சு. என்னைப் பத்தி இவர் ஏன் வருத்தப் படணும்? நான் என் நிலையில் இருக்கேன். அவரவர் நிலையிலே அவரவர் இருந்துட்டா உலகத்திலே ஒருத்தருக்கும் வருத்தமே இருக்காது என்று சிரித்துக் கொண்டே கூறிய சேஷாத்ரி, சிற்றப்பாவின் அருகில் சென்று “ஏன் மேலே கோபமா சித்தப்பா? என்று வேடிக்கையாகக் கேட்டுக் கொண்டே அவர் தலையிலே எண்ணெயை வைத்துத் தேய்த்தார்.
திடீரென்று எண்ணெய் தேய்ப்பதை சற்று நிறுத்தி விட்டு, முற்றத்திற்கு வந்து ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து விட்டு, கூடத்திற்கு திரும்பி வந்தார் சேஷாத்ரி.
“வானத்திலே என்ன பார்த்து விட்டு வந்தே? என்று கேட்டார் ராமசுவாமி.
“ஓன்றுமில்லை சித்தப, ஆகாயத்த்பில் தேவதைகள் பாடிக் கொண்டு போனார்கள். சத்தம் கேட்டது. போய்ப் பார்த்தேன்” என்று வெகு சாதாரணமாகப் பதில் கூறி விட்டு, சிற்றப்பாவின் தலையில் தாளம் போட்டுக் கொண்டே அழுத்தித் தேய்த்தார்.
சேஷாத்ரி ஏதோ பிதற்றுகிறார் என்று நினைத்த ராமசுவாமி, “தேவதைகள் மட்டும் தான் போகிறார்களா” கந்தர்வர்கள் போக வில்லையா” என்று நகைத்துக் கொண்டே ஏளனமாக கேட்டார்.
“ஓ, கந்தவர்களும் போகிரார்களே, சிலருக்கு இறக்கையும் இருக்கு, ரொம்ப அழகா இருக்கா…. கந்தர்வ கானம், கேட்க தேனாயிருக்கு….”
“ஏன்ன ராகம் பாடிண்டு போறா?” “பிலஹரி…. அற்புதமாயிருந்தது….”
“உனக்கு சரியான பைத்தியம் பிடித்து விட்டது. அவா பாடிண்டு போனா உன் காதுலே மட்டும்தான் விழுமா? ஏன் என் காதிலே விழலே?”
“சேஷாத்ரி லேசாக சிரித்தார். “சித்தப்பா, உலக பந்தத்துலே சிக்கிண்டு இருக்கிற கர்மிகள் காதுலே அதெல்லாம் விழாது…. எல்லாத்தையும் துறந்துட்டு, சுதந்திரமா, தன் நிலையில் இருக்கிறவா காதுலேதான் அது விழும்” என்று கூறி விட்டுப் போய் விட்டார் சேஷாத்ரி.
பையனுக்கு பைத்தியம் முற்றி விட்டது என்று தீர்மானித்து விட்டார் ராமசுவாமி. சேஷாத்ரி ஆகாயத்தில் கந்தர்வ கானம் கேட்ட செய்தியை அவர் நான்கு பேரிடம் சொல்ல, அது ஊரெல்லம் பரவ, “சேஷாத்ரிக்கு மூளை குழம்பி விட்டது என்பதே காஞ்சிபுரம் முழுவதும் பேச்சாகி விட்டது.
சேஷாத்ரியி, நிலையைப் பற்றி அவரவர் புத்திக்கு எட்டிய வரையில் விதவிதமாக விளக்கம் தந்ததோடு, ஆளுக்கொரு வைத்தியமும் சொன்னார்கள். சிலர் “ஆவனுக்குக் கல்யாணம் செய்து விட்டால் பைத்தியம் தெளிந்து விடும்” என்றும் யோசனை கூறினார்கள்.
“அதை ஒருவர் ராமசுவாமி ஜோசியரிடமே நேரில் வந்து சொன்னார்.
“நான் சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்கோ ஜோசியரே, சேஷாத்ரி இப்படிப் பித்தனா அலையறத்துக்குக் காரணம் நீங்கதான் என்று அவர் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டார்.
ஜோசியருக்குத் தூக்கி வாரிப் போட்டது. “நான் காரணமா?” என்று கேட்பது போல் வந்தவரை பார்த்து விழித்தார் அவர்.
“ஆமா, நீங்க எதையோ சொல்லி அவ்ன கல்யாணத்தை நிறுத்திட்டேள். சந்நியாச யோகமாவது, மண்ணாங்கட்டியாவது! கல்யாணம் நடந்திருந்தா அவன் தலையெழுத்தே மாறிப் போயிருக்கும். அது நின்னு போனதினாலேதான் அவன் புத்தி நிலை தடுமாறிப் போச்சு…. நீங்க செய்தது ரொம்ப தப்பு. சொந்த அப்பன் இருந்திருந்தா இப்படிச் செய்திருக்கவே மாட்டார். முதல்லே ஒரு பொண்ணைப் பார்த்து சேஷுவுக்கு கல்யாணத்தைப் பண்ணி வையுங்கோ, அப்புறம் அவ்ன போக்கே மாறிப் போயிடும், பாருங்கோ என்று அவர் அடித்துப் பேசினார். உறவினர்களில் சிலரும் இதே அபிப்ராயத்தைத் தெரிவித்தனர்.
ராமசுவாமி ஜோசியருக்கு உண்மையிலேயே நெஞ்சு வெடித்து விடும் போலாகி விட்டது. ஜாதகத்தைப் ஆர்த்து ஏதோ ஜோசியம் சொல்லப் போக, இப்படியொரு பழி வந்து சேர்ந்து விட்டதே என்று இடித்து போனார் அவர். பையனுக்கு ஒரு கல்யாணத்தைச் செய்து விட்டால் அந்தப் பழியை துடைத்து விடலாம் என்று தீர்மானித்து, தீவிரமாக பெண்ணைத் தேட ஆரம்பித்தார். பாவம், எங்கு போய் பெண் கேட்டாலும் அவருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. பித்துப் பிடித்த்டு, பேய் போல் மயானத்தில் அலைபவனுக்கு யார் துணிந்து பெண்ணைக் கொடுப்பார்கள்? மரியாதையுடன் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி ஜோசியரை அனுபி விட்டார்கள்.
தம் உள்ளக் குமுறலை ஒரு நாள் ஜோசியர் சேஷாத்ரியிடம் தெரிவித்தார். தமக்கேற்ர்பட்ட அவப் பெயரைக் கூறி வருந்தினார். சேஷாத்ரி சிறிய தந்தைக்கு ஆறுதல் கூறினார்.
“சிற்றப்பா, நீங்கள் ஏன் வீணாக வருத்தப் படறேள்? ஊரில் நாலு பேர் நாலு விதமாத்தான் பேசுவா. கல்யாணம் பண்ணிக்கலையேன்னு நான் வருத்தப் பட்டாத்தானே அந்தப் பழி உங்களைச் சேரும். எனக்கு கல்யாணத்தில் கொஞ்சமும் ஆசை கிடையாது. நீங்கள் உண்மையைச் சொல்லி எனக்கு ரொம்ப ஒத்தாசை பண்ணியிருக்கேள். ஊரார் சொல்றான்னு என் கல்யாணத்துக்கு ஒருவித முயற்சியும் செய்ய வேண்டாம். கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி நீங்க என்னைக் கட்டாயப் படுத்தினா, நான் அப்புரம் வீட்டுப் பக்கமே வர மாட்டேன்; ஊரை விட்டே போயிடுவேன், என்று சுய புத்தியோடு தெளிவாகவே பேசினார்.
இதைக் கேட்டு சமையலறையிலிருந்த கல்யானி அம்மால் அதறிப் போய் ஓடி வந்தாள்.
அப்பா சேஷு, அப்படியெல்லாம் இன்னொரு தரம் பேசாதே. எனக்கு நெஞ்செல்லாம் படபடன்னு அடிச்சிக்கிறது. உன் கல்யாணத்தைப் பத்தி இனிமே ஒருத்தரும் பேசமாட்டோம். நீ கல்யாணமெ பண்ணிக்க வேண்டாம். ஆத்துலே இருந்தா போதும். மன்னி சாகற போது உன்னை கவனிச்சுக்கச் சொல்லிட்டுப் போயிருக்கா. நீ எங்கேயாவது போயிட்டேன்னா, நான் ஒரு நிமிஷம் கூட உயிரோடு இருக்க மாட்டேன் என்று கூறி தேம்பித் தேம்பி அழுதாள். பின்னர் கணவரைப் பார்த்து, இதோ பாருங்கோ, நீங்க உங்க வேலையை கவனியுங்கோ. இனிமே குழந்தை கிட்டே கல்யாணத்தைப் பற்றிப் பேசாதீங்கோ. உங்களுக்குப் புண்ணியமா போகட்டும் என்று கெஞ்சாத குறையாக மன்றாடினாள். அத்துடன் அந்த வீட்டில் கல்யாணப் பேச்சே அடியோடு நின்று விட்டது.