திக்கற்ற மரகதத்திற்கு மைத்துனர் ராமசுவாமி ஜோசியரும், ஓரகத்தி கல்யாணியும் பெரும் ஆதரவாக இருந்தனர்.
கணவனையிழந்ததிலிருந்தே ஊண், உறக்கம் குறைந்து விட்ட மரகதம், தந்தையின் பிரிவுக்குப் பிறகு ஆகாரத்தை அடியோடு குறைத்துக் கொண்டு விட்டாள். பாதி நாள் உபவாசம் இருந்தாள். ஜபத்திற்கும், தியானத்திற்கும் அதிக நேரத்தை ஒதுக்கினார்.
சேஷாத்ரிக்கு பதினாறு நிரம்பி பதினாழாவது வயது நடந்து கொண்டிருந்தது. மகனை அழைத்துப் பக்கத்தில் அமர்த்தி, தான் கற்றுத் தந்த சுலோகங்களைச் சொல்லச் சொல்லி கேட்பாள். வேத மந்திரங்களை ஓதச் சொல்லி, சன்னமான குரலைக் கேட்டு மகிழ்வாள். வேதாந்தக் கருத்துக்களுக்குப் பொருள் கேட்டு பூரிப்பாள். பக்தி, ஞான யோகங்களை பற்றி விவாதிப்பாள். காமகோடி சாஸ்திரிகள் தேவியின் மீது இயற்றியுள்ள கீர்த்தனங்களை இருவரும் சேர்ந்து பாடுவார்கள். சேஷாத்ரியைப் பொறுத்தவரையில் அன்னை காமாட்சி வேறு, அன்னை மரகதம் வேறு இல்லை. தாயைக் கண்டாஅல் அவருக்கு அத்தனை பக்த,. அத்தனை அன்பு, அத்தனை பரவசம்.
உடல் மெலிந்து, உள்ளம் தளர்ந்துஅணு அணுவாக மரித்துக் கொண்டிருந்த மரகதம், அன்பு மகனுக்குத் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று விரும்பினாள். ஆனால், அந்த ஆசையை அவள் யாரிடமும் கூற வில்லை.
தாமலில் இருந்த அத்தை வெங்கலட்சுமிக்கு காகினி என்று ஒரு பெண் இருந்தார். அந்தப் பெண்ணை சேஷாத்ரிக்குக் கொடுத்து விட வேண்டும் என்று தாய்க்குக் கொள்ளை ஆசை. வரதராஜருக்கும் அபடியொரு எண்ணம் இருந்ததை அவள் அறிவாள். ஒரு நாள் வெங்கலட்சுமி புறபட்டு காஞ்சிபுரம் வந்தாள். ராமசுவாமி அண்ணாவிடம் மெள்ள பேச்சைத் தொடங்கினாள். ஆனால், இந்த சம்மந்தம் வேண்டவே வேண்டாம் என்று கண்டிப்பாக கூறி, சகோதரியின் அந்த எணணத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டார்.ராமசுவாமி ஜோசியர்.
ஏன் அண்ணா அப்படிச் சொல்றே? என்று கவலையுடன் கேட்டாள் வெங்கலட்சுமி.
வெங்கு, சேஷுவின் ஜாதகத்தை நான் அலசிப் பார்த்துட்டென். அது சந்நியாச யோக ஜாதகம். அவனுக்கு கல்யாணமோ குடும்ப வாழ்க்கையோ கிடையவே கிடையாது. அதனால் தான் அப்படிச் சொன்னேன். நீ வேற இடம் பார்ப்பதுதான் நல்லது, என்று அடித்துச் சொல்லி விட்டார் அவர். வெங்கலட்சுமிக்குத் தூக்கி வாரிப் போட்டது. முறைப்பையன் கிடைக்க வில்லையே என்ற ஏக்கம் அவளுக்கு இருந்தாலும், நல்ல வேளையாக அண்ணன் உண்மையை சொன்னாரே என்ற மகிழ்ச்சியும் முகத்தில் பளிச்சிட்டது.
அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையே கூடத்தில் நடைபெற்ற இந்தக் கல்யாணப் பேச்சு, முற்றத்தில், வாத மரத்தடியில் ஜபம் செய்து கொண்டிருந்த மரகதத்தின் தலையில் பேரிடியாக விழுந்தது. மைத்துனர் கூறியது அவள் இதயத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்தது. மகனைப் பற்றி அவள் கட்டிய கோட்டைகளெல்லாம் தவிடு பொடியாயின. “ஐயோ, என் தலையில் பெரிய கல்லாகத் தூக்கி போட்டுவிட்டார்களே” என்று கதறி அப்படியே அம்மரத்தடியில் மூர்ச்சையாகி விழுந்து விட்டாள் மரகதம்.
கோயிலீருந்து ல்திரும்பிய சேஷாத்ரி, மயக்கம தெளிந்து, பேயறைந்தது போல் படுத்திருந்த தாயை அணுகி, “அம்மா, உனக்கு என்னம்மா உடம்பு?” என்று பரிவுடன் விசாரித்தார்.
“கண்ணே, எனக்கு இனிமேல் என்னடா இருக்கிறது?” என்னைப் போல் ஒரு பாவி பிறக்கவே வேண்டாம். உனக்கொரு கல்யாணம் செய்து பார்க்கலாம் என்று நினைத்தேன். அந்த ஆசையிலும் மண் விழுந்து விட்டது. இனிமேல் இந்த உடம்பில் உயிர் எத்தனை நாள் ஒட்டிக் கொண்டிருக்குமோ, தெரியாது என்று கூறி விட்டு குமுறிக் குமுறி அழுதாள். தாயின் துயரத்திற்கான காரணத்தை அறிந்த சேஷாத்ரி, சிறிய தந்தை அத்தனை வெளிப்படையாக விஷயத்தை உடைத்துச் சொல்லியிருக்க வேண்டாம் என்று வருத்தப்பட்டார். வேறு என்ன செய்வார், பாவம்.
பத்து நாட்களுக்கெல்லாம், காகினிக்கும், திருப்பத்தூர் வெங்கடரமணனுக்கும் தாமலில் திருமணம் நடந்தேறியது. அத்திருமணத்திற்கு காஞ்சிபுரத்திலிருந்து ஒருவரும் போக வில்லை.
மரகதம் தன் பயணத்திற்குத் தயாராகி விட்டாள். அவள் வந்த காரியம் முடிந்து விட்டது. பிடிவாதமாக உபவாசம் இருந்து உடலை வாட்டி வருந்தினாள். கணவனைப் பிரிந்து, மகனுக்காக உயிரைப் பிடித்துக் கொண்டிருந்தவள், இப்போது பறந்து போய் விடத் துடித்தாள். இந்தப் பேரழகனை, குணக் குன்றை, குலக்கொழுந்தை, குடும்பம் நடத்த வேண்டிய பருவத்தில் துறவிக் கோலத்தில் எபடிக் காண்பது? மனத்தை எத்தனை கல்லாக்கிக் கொண்டாலும் அந்தக் கோலத்தைக் காஊம்ன் போது வயிறு பற்றி எரியாதா? ஐயோ, என்னால் முடியாது, முடியவே முடியாது.
உரித்த நாராக உட மெலிந்து வாட, படுத்த படிக்கையாகி விட்டாள் மரகதம். மருந்து உட்கொள்ளவும் மறுத்தாள். தம்பி நரசிம்மனோடு அருகில் நின்ர சேஷாத்ரி, கண்ணீர் மணிகளை மாலைகளாக தொடுத்து, அனையின் திருவடிகளுக்கு சார்த்திக் கொண்டிருந்தார்.
அன்று ஏகாதசி புண்ணிய தினம். சேஷாத்ரியை தன்னருகில் அழைத்து அணைத்துக் கொண்டாள் மரகதம். “அம்பே சிவே” என்ற காமகோடி சாஸ்திரிகளின் கீர்த்தனத்தை தாயும் மகனும் சேர்ந்து சுருதி சுத்தமாக, உள்ளம் உருகப் பாடினர்.
பின்னர் மரகதம், ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்திலிருந்து,
சத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோகத்வம்
நிர்மோகத்வே நிஸ்சலதத்வம்
நிஸ்சலதத்வே ஜீவன் முக்தி –
என்ற சுலோகத்தை, மூன்று முறை சேஷாத்ரியின் மார்பில் அடித்து அடித்துச் கூறினாள்.
சான்றோருடன் நெருக்கமுடன் பழகப் பழக உலகப் பற்றும், பாசமும் குறையும். பற்றற்று வைராக்கியமாக வாழ்ந்தால், மனத்தை மறைக்கும் மாயை விலகி விடும். அஞ்ஞானத்திரை விலகினால், உண்மைப் பொருள் புலப்படும். சத்திய தரிசனம், இந்த வாழ்விலேயே முக்தியை அளிக்கும்.
தாய், மகனுக்கு ஜீவன்முக்த நிலைக்கான வழியைச் சுட்டிக் காட்டினாள். பிரும்ம ஞான தத்துவத்தை உபதேசித்தருளினாள்.
பின்னர், “சிதம்பரத்தைக் கண்டா முக்தி,ல் திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் மரித்தால் முக்தி, அருணாசலத்தை நினைத்தாலே முக்தி” என்ற வடமொழி சுலோகத்தை மைந்தன் நெஞ்சில் கையை வைத்து மூன்று முறை கூறினாள். அந்த ஒலி, அருணசல ஒளியாக சேஷாத்ரியின் உடலில் பாய்ந்தது. “அருணாசல, அருணாசல, அருணாசல” என்று மும்முரை வாய் விட்டு கூறினாள் மரகதம். அண்ணாமலையை நினைத்த மாத்திரத்திலேயே மோட்ச சாம்ராஜ்யத்தின் மணிக்கதவம் மரகதத்திற்காக திறந்தது. மங்கல மணியோசை அந்த மாதர் குல மாணிக்கத்தின் வருகையை முழங்கியது. சேஷாத்ரியை பெற்றெடுத்த பெண்ணரசியை கண்டு புண்ணியம் பெற விண்ணரசர்கள் எல்லாம் அங்கு கூடி விட்டார்கள்.
தாயின் புனித உடலை தன் மார்பி தாங்கிக் கொண்டார் சேஷாத்ரி, திட வைராக்கிய யோகத்தில் திளைத்திருந்த போதிலும், அந்த ஒரு கணம் துடித்தே போய் விட்டார். “அம்மா”, என்று அலறியே விட்டார். அம்மூன்றெழுத்து மாமந்திரத்தில் அடங்கியுள்ள சக்திக்கு, ஈரேழு உலகத்திலும் ஈடு இணை உண்டோ?.
தாய் தந்தையரை இழந்த சேஷாத்ரியையும், நரசிம்மனையும் குழந்தைகளற்ற ராமசுவாமி தம்பதி கண்ணும் கருத்துமாக காத்து வந்தனர். பெற்றோர் இல்லாத குறை அவர்களுக்கு இருக்கக் கூடாது என்பதற்காக அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டனர். இருபினும் சேஷாத்ரிக்கு குடும்ப வாழ்க்கையில் பற்றோ, பாசமோ ஏற்படவில்லை. மரணப் படுக்கையில் அன்னை உபதேசித்த தத்துவம் அவரை ஆட்கொண்டது. ஞான வைராக்கியம் அவர் சிந்தையோடு கலந்து விட்டது.
பெற்றவளை பறி கொடுத்த சேஷாத்ரி, பேரருளின் துணையை நாடினார். பெரும் பொழுதை பூஜையறையில் கழித்தார். அங்கு அருணசலத்தின் சித்திரமும் இருந்தது. அருணாசல மலையை அவர் நேரில் கண்டதில்லை. அன்னை கூறிய சொல் உள்ளத்தில் புகுந்து சிந்தையில் குடியேற, அதன் வடிவத்தைக் கற்பனையில் கண்டு அதை அபடியே சித்திரமாக தீட்டி வைத்து விட்டார்.
காலையில் ஐந்து மணிக்கு பூஜையறையில் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டால், பகல் ஒரு மணிக்கோ, இரண்டு மணிக்கோதான் வெளியே வருவார். எந்நேரமும், அருணாசலேசா, சோணாத்திரி நாதா என்று உரக்கச் சொல்லிக் கொண்டிருப்பார். விடிய விடிய துர்க்கா ஸுக்தத்தை ஜபித்துக் கொண்டிருப்பார். அன்ன ஆகாரத்தை மறந்து விட்டார். உறக்கத்தை துறந்து விட்டார். சிறிய தந்தையும், சிற்றன்னையும் கவலை கொண்டனர். “சேஷு, பட்டினி கிடந்து, கண் விழித்து இப்படி ஓயாமல் பூஜை செய்தால் அப்புறம் உடம்புக்கு ஏதாவது வந்து விடும். வேண்டாமப்பா. உன் வயதுக்கு இத்தனை தீவிரமான உபாசனை கூடாது. குறைத்துக் கொள், என்று அடிக்கடி கூறினார்கள்;.
வீட்டின் தொந்தரவு அதிகரிக்கவே, ஆலயங்களில் பொழுதைக் கழிக்கத் தொடங்கினார் சேஷாத்ரி. காலையில் ஸ்ரீ வரதராஜர் கோயிலில் சக்கரத்தாழ்வார் சந்நிதியில் அமர்ந்து ஜபம் செய்வார். மாலையில் காமாட்சி கோயிலைச் சுற்றிச்சுற்றி வருவார். சந்நிதியில் அமர்ந்து மூக பஞ்சசதியை கண்ணீர் மல்க சொல்லித் தோத்திரம் செய்வார். அம்பாளுக்கு நமஸ்காரம் செயதபடியேயிருபார்.
சில சமயம் இரண்டு மூன்று நாட்கள் சேர்ந்தாற் போல் வீட்டுக்கு வரவே மாட்டார். ராமசுவாமி ஜோசியர் ஊரெல்லம் தேடி, ஏதாவது ஒரு வீட்டுத் திண்ணையிலோ, கோயில் மண்டபத்திலோ அவரைக் கண்டு பிடித்து நல்ல வார்த்தைகள் கூறி, வீட்டுக்கு அழைத்து வருவார். சிறிய தந்தையின் அன்புக் கட்டளைக்குக் கீழ்ப் படிந்து இரண்டு மூன்று நாட்கள் வீட்டில் தங்கியிருப்பார். மறுபடியும் தெருவில் சுற்றக் கிளம்பி விடுவார்.அழுக்குத் துணி, எண்ணெய் காணாத தலைமுடி, தாடி வளர்ந்த முகம், அதில் குங்குமப் பூச்சு, இந்த கோலத்துடன, வாயில் எதையோ முணுமுணுத்துக் கொண்டு, சித்தப் பிரமை பிடித்தவர் போல் இளைஞர் சேஷாத்ரி வீதிகளில் திரிந்து கொண்டிருன்ல்ததைக் கண்ட தாய்க் குலத்தின் பெற்ற வயிறு பற்றி எரிந்தது.