சேஷாத்ரிக்கு ஏழு வயதானதும், பூணூல் அணிவிக்கப் பட்டு, காயத்ரி மந்திர உபதேசமும் செய்யப்பட்டது. வயதாக ஆக சேஷாத்ரி தாத்தா காமகோடி சாஸ்திரியாரிடமிருந்தும், தந்தையார் வரதராஜனிடமிருந்தும், வேதம், உபநிஷத்துகள், வியாகரணம் முதலான சகல விஷயங்களையும் கற்று அதில் சிறப்பான தேர்த்தியடைந்தார். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை தாயார் மரகதத்திடமிருந்தும் குறைவற கற்றுத் தேர்ந்தார். அத்துடன் காமகோடி சாஸ்திரியார், பேரன் சேஷாத்ரிக்கு, மந்திர உபதேசங்களையும் செய்வித்தார். சேஷாத்ரிக்கு பிறகு, வரதராஜ ஜொசியருக்கு இரண்டாவது மகன் பிற்ந்தான். அவனுக்கு நரசிம்மன் என்று பெயரிட்டனர்.
சேஷாத்ரிக்கு வயது பதினான்கு ஆனது. சேஷாத்ரியின் வளர்ச்சியைக் கண்டு மிகவும் பூரிப்புட்ன த்கழ்ந்த வரதராஜ ஜோசியர் ஒரு நாள் மனைவியார் மரகதத்தை அருகில் அழைத்து, உனக்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். நீ எனக்கு மனைவியாக அமைந்து சகல பணிவிடைகளையும் செய்து, தெய்வ சேயான சேஷாத்ரிக்கும் தாயானார். அவனுடைய புத்தி கூர்மையையும், தெளிவான பேச்சுக்களையும் கேட்டு இத்தனை காலம் மகிழ்ந்திருந்தேன். ஆனால் எனக்கு ஆண்டவனின் அழைப்பு வந்திருக்கிறது. நாளை காலை விடிவதற்குள் நான் இவ்வுலகை நீத்து புறப்பட்டு விடுவேன். நீ இன்னும் சில காலம் இருந்து சேஷாத்ரியின் வளர்ச்சியை கண்டு மகிழ்ந்து பின் என்னை வந்து அடைவாயாக என்றார். கணவரின் இந்தப் பேச்சு மரகதத்தின் தலையில் இடி போல இறங்கியது என்பதை சொல்லத் தேவையில்லை. மயக்கமுற்று, பின் தெளிந்து கணவரிடம் கதறினார். வரதராஜ ஜோசியர், என்ன மரகதம், நீ இத்தனை கோழையா, நான் இல்லா விட்டாலும், சேஷாத்ரியை கண்டு திருப்தியடைவாய் என்று கூறி, தன் இரு குழந்தைகளையும் அருகில் அழைத்து, அணைத்துக் கொண்டு, அம்மாவுக்கு ஏற்ற பிள்ளைகளாக வளர்ந்து, வாழ்க்கையில் உயர்வடைய வேண்டும், என கூறி ஆசீர்வதித்தார். அதன் பிறகு அவர் யாரிடமும் எதுவும் பேசவில்லை. நிஷ்டையில் ஆழ்ந்தவர் போல காட்சியளித்தார். அன்று இரவு, அந்த இல்லத்தில் யாரும் உறங்க வில்லை. விடியற்காலம், திடீரென வரதராஜருக்கு உடல் நலம் குன்றியது. சூரியன் உதிப்பதற்கு முன் அவர் இறைவனடி சேர்ந்தார்.
மங்கல வாழ்விழந்த மரகதத்திற்கு உலகமே இருண்டிருந்தது. வாழ்க்கையே சூன்யமாகி விட்டது. அவளுக்கு இரவில் உறக்கமே வரவில்லை. தப்பித் தவறி அசதியாக சற்று கண்ணயர்ந்தால், வரதராஜர் கனவில் வந்து அவள் பக்கத்தில் அமருவார். அன்புடன் பேசுவார். அந்த காட்சிகள் உண்மை போலவேயிருக்கும், கண் விழித்ததும், மாயத் தோற்றம், மறைந்து, மனவேதனை அதிகமாகும்.
சில சமயம், விழித்துக் கொண்டிருக்கும் போதே, கணவர் அழைப்பது போல் அவளுக்கு ஒரு பிரமை தட்டும். “இதோ வந்துட்டேன்” என்று குரல் கொடுத்துக் கொண்டே ஓடுவாள். பிறகு, தன் நிலை அறிந்து புலம்புவாள். பாவம், இப்படியொரு நரக வாழ்க்கை.
ஆகாரத்தைக் குறைந்துக் கொண்டாள் மரகதம். எந்நேரமும், தியானமும் ஜப்மௌமாக சந்நியாசினியாக காலம் கடத்தினாள். கண்ணீர் சிந்தியபடியே இருந்த தாய்க்கு, கண்ணின் மணிகளான, சேஷாத்ரியும், நரசிம்மநும் ஆறுதல் அளித்தார்கள். இருவரியயும் கட்டித் தழுவுவாள். ஒரு கணம் பாசத்தால் கட்டுண்டு, பேரின்பத்தில் மிதபாள். அடுத்த கணம், “நம் செல்வங்க்களின் அறிவைப் பாராட்ட கணவன் இல்லையே” என்று நினைத்துக் கொள்வாள். துக்கம், தொண்டையை அடைக்கும். அடி வயிற்றைக் கலக்கும். பொங்கி வரும் கண்ணீரை புடவைத் தலைபால் துடைத்துக் கொள்வாள்.
மரகதத்தின் கோலமும், அவள் படும் வேதனையும் ஞானக்கிழவரான காமகோடி சாஸ்திரிகளையே உலுக்கியது. இடம் மாறினால் இதய கனம் சற்று குறையலம் என்று கருதி, மரகதத்தையும், குழந்தைகளையும் காஞ்சிபுரத்திலிருந்து வழூருக்கு அழைத்துச் சென்றார். அமைதி தவழ்ந்த அந்தக் கிராமத்தின் சூழ்நிலை துயரத்தில் ஆழ்ந்தவளுக்கு சற்று மனச்சாந்தியை அளித்தது.
சேஷாத்ரிக்கு அப்போது பதினான்கு வ்டயதே நிரம்பி இருந்தது. அறிவுச் சுடராக இரகாசிப்த்த சிறுவனுக்கு உபநிடதங்க்கள், பிரும்ம சூத்திரங்க்ள், பகவத் கீதை யாவற்றையும் போதித்தலர் பாட்டனார். தம் வம்சத்திற்குரிய மந்திர ரகசியங்களை உபதேசித்தார். வேதாந்த சாஸ்திரங்களை புகட்டினார். தாம் அறிந்த வித்தைகளையெல்லம் குல விளக்குக்கு கற்றுத் தந்தார். ஒளியிலிருந்து ஒளி பிறந்தது.
பதினைந்து வயது நிரம்புவதற்குள்ளேயே, சேஷாத்ரி புராண இதிகாசங்களைக் கற்றுணர்ந்து விட்டார். அச்சமயத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி இதற்கோர் எடுத்துக் காட்டாக விளங்குகிறது.
திருவாங்கூர் திவானாயிருந்த சர் சி. பி. ராமசாமி ஐயரின் தாய்வழிப் பாட்டனாரான வெங்கடசுப்பையர் அப்போது வந்தவாசியில் தாசில்தாராக இருந்தார். ஸ்ரீமத் பாகவதமும், ராமாயணமும் கேட்க வேண்டும் என்று அவர் காமகோடி சாஸ்திரிகளை நாடி வந்தார். மரகதத்தையும், சேஷாத்ரியையும் அழைத்துக் கொண்டு வந்தவாசிக்கு சென்று, வெங்கடசுப்பையரின் இல்லத்திலேயே ஓராண்டு தங்கினார் சாஸ்திரிகள். மூப்பின் காரணமாக உடல் தளர்ச்சியுற்றிருந்ததால், சேஷாத்ரியைக் கொண்டே தாசில்தாரின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தார். சிறுவன் சேஷாத்ரி சுலோகங்களை படித்து, பொருள் கூறியதைக் கேட்டு அதிசயிக்காதவர்களே இல்லை.
கமகோடி சாஸ்திரிகளுக்கு தொண்ணூறுக்கு மேல் வயதாகி விட்டது. ஆன்ம பலம் இருந்தாலும், உடல் பலம் குன்றி விட்டது. ஏதாவது ஒரு நோய் அவரை வாட்டிக் கொண்டேயிருந்தது. அதனால் எல்லோரும், புற்ப்பட்டு காஞ்சிபுரம் வந்து விட்டார்கள்.
காஞ்சிபுரம் வந்த சில நாட்களுக்குள்ளேயே தமது இறுதிக் காலம் நெருங்கி விட்டதை உணர்ந்தார் காமகோடி சாஸ்திரிகள். அவர் ஆபத் சந்நியாசம் பெற்றுக் கொள்வது என்று முடிவு செய்து, காஞ்சியிலுள்ள உபநிஷத் பிரும்ம மடத்திற்கு சென்றார். அப்போது மடாதிபதியாக இருத்ன ஸ்ரீ கிருஷ்ணானந்த சரஸ்வதி சுவாமிகள் சாஸ்திரியாருக்கு முறைப்படி சந்நியாச தீட்சை அளித்து, பிரும்மானந்த சரஸ்வதி என்ற யோகப் பட்டத்தையும் வழங்கினார்.
துறவுக் கோலம் பூண்ட பிறகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வார் சந்நிதியிலேயே தங்கியிருந்தார் பிரும்மானந்த சரஸ்வதி என்ற காமகோடி சாஸ்திரிகள். மரகதம், பிள்ளைகளுடன் சென்று தினமும் பெரியவருக்கு பிட்சையளித்து வந்தாள்.
சேஷாத்ரி சுவாமிகளின் அத்தை வெங்கலட்சுமி அம்மாள் கணவர் சுந்தரமய்யருடன் காஞ்சிக்கு மேற்கே எட்டாவது மைலிலிருக்கும் தாமல் என்ற கிராமத்தில் வசித்து வந்தாள். சுந்தரமய்யரின் சகோதரரான பரசுராம சாஸ்திரிகள் பிரும்மானந்த சரஸ்வதி சுவாமிகளை தாமலுக்கு அழைத்துச் சென்றார். பத்து தினங்களுக்கெல்லாம் சுவாமிகள் சித்தியடைந்து விட்டார். அவரை அங்குள்ள பாம்புக் கால்வாய் கரையிலேயே அடக்கம் செய்தார்கள்.
ஸ்ரீ காமகோடி சாஸ்திரியாரின் அதிஷ்டானத்தைத் தரிசித்து வரலாம் என்று தாமலுக்குச் சென்றேன். ஆனால், சமாதிக் கட்டிடம் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்கவே முடிய வில்லை. அந்த ஊரில் தற்போது உள்ள வயோதிகர்களுக்குக் கூட ஒன்றும் தெரியவில்லை. அந்த ஊர் மணியக்காரர், சர்ப்ப நதிக் கரியயில் ஓர் இடத்தைக் காட்டி, “இங்கு ஒரு சமாதிக் கட்டிடம் இருந்ததுங்க. இந்த மனையை வாங்கினவரு, மேலே இருந்த கட்டிடத்தை இடிச்சுட்டாரு. தோண்டிப் பார்த்தால் உள்ளே ஒரு வேளை கட்டடம் இருக்கலாம் என்று கூறினார். தற்போது சேஷாத்ரி சுவாமிகளின் உறவினர் யாருமே அந்த ஊரில் இல்லை. ஒரு காலி மனையையும், இரண்டு ஓட்டு வீடுகளையும் காண்பித்து, சேஷாத்ரி சுவாமிகளின் பந்துக்கள் இங்கேதான் வசித்ததாக கேள்வி என்று ஓரிருவர் கூறினர்.
ஸ்ரீ காமகோடி சாஸ்திரிகள் சில வருஷங்கள் தங்கியிருந்த வழூர் கிராமத்திற்குச் சென்றேன். காஞ்சிபுர்ம – வந்தவாசி பாதையில், வந்தவாசிக்கு இரண்டு மைல்களுக்கு முன்னால், கிழக்கே திரும்பும் பாதையில் நான்காவது மைலில் அந்த அமைதியான கிராமம் இருக்கிறது. உள்ளே நுழையும் போதே அழகான குளமும், அதன் கரியயில் ஒரு பெருமாள் கோயிலும் கண்ணில் படுகின்றன. கோயிலும் சிதிலமாகி, பூஜையெல்லாம் நின்று போய் பாழடைந்து காணப்படுகின்றது. முட்புதர்களும், அசுத்தங்களும், நிறைந்த கோயிலில் மூலவர் மாத்திரம் பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறார்.
அக்கோயிலுக்கு தெற்கே ஒரு காலத்தில் அக்ரகாரம் இருந்திருக்கிறது. அதை அகரம் என்கிறார்கள்.
அங்கிருந்த பத்து அதினைந்து வீடுகளில் ஒரு வீட்டில்தான் காமகோடி சாஸ்திரிகள் வசித்திருக்க வேண்டும். அந்த வீடுகள் ஒன்று கூட இப்போது இல்லை. காலி மனைகளைக் காட்டி, “இங்கே ஐயர்மாருங்க இருந்ததாகச் சொல்லுவாங்க. வீடெல்லாம் இடிஞ்சிப் போச்சு. இந்த இடத்தை வாங்கினவங்க இங்கேயிருந்த நாலஞ்சு துளசி மாடங்களை எடுத்து, அதோ அங்கே போட்டாங்க. அந்தப் புதருக்குள்ளே பார்த்தா தெரியும் என்று ஓர் அம்மாள் கூறினாள்.