சேஷாத்ரி வரலாறு = 2

அவர்களுள் கடைக்குட்டியான மரகதம், அம்பிகையின் அம்சமாகவே விளங்கினாள். அழகோடு, நற்குணங்களும், நல்லியல்புகளும் கொண்ட நங்கையாக வளர்ந்தாள். சிறிய தந்தையான காமகோடி சாஸ்திரிகள், பெற்ர தாயைக் காட்டிலும் கண்ணும் கருத்துமாக அவளை வளர்த்தார். சீராட்டினார்; பாராட்டினார். கற்புக்கரசியாக திகழ்வதற்கேற்றவாறு புராணக் கதைகளையும், தர்ம சாத்திரங்களையும் அடிக்கடி கூறி, அவள் சிந்தையை உயர்த்தினார். சங்கீதமும் கற்ருத் தந்தார். துதிப் பாடல்களை மகள் மெய்யுருகப் பாடக்கேட்டு, ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். பன்னிரண்டு வயதிலேயே ‘சாகித்ய சங்கீத கலாநிதி’ என்ற பட்டத்தைப் பெற்றாள் மரகதம்.

மரகதத்திற்கு மணம் புரியும் பருவம் வந்தது. மகளுக்கேற்ற கணவனை தேடி அலைந்தார் காமகோடி சாஸ்திரியார். இறுதியாக தமது மாணாக்கரான வரதராஜனே ஏற்ற வரன் என முடிவு செய்தார். அவரது தந்தையான சேஷாத்ரி ஜோசியரை அணுகிக் கல்யாணம் பேசினார்.  எல்லாப் பொருத்தமும் பார்த்த இறகு, பெரியோர்கள் மனமகிழ்ந்து திருமணத்தை நிச்சயம் செய்தனர். ஒரு நல்ல முகூர்த்தத்தில் வரதராஜன், அக்னி சாட்சியாக மரகதத்தை மனைவியாக ஏற்றுக் கொண்டார். அத்தெய்வத் த்மபதி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்தனர்.

இருவரும் இல்லறம் தொடங்கினர்.  ஒழுக்க சீலரான கணவருக்கு அல்லும் பகலும் பணிவிடைகள் செய்து புனிதம் அடைந்தாள் மரகதம். தினந்தோறும் கணவரை நாடி வந்த சான்றோர்களை வரவேற்று, உபசரித்து, விருந்து படைத்து பண்பட்ட கிரகலட்சுமியாக விளங்கினாள். கணவரோடு சேர்ந்து தர்ம நூல்களையும் புராணக் கதைகளையும் படித்துயர்தாள். மாலை வேளைகளில் இருவரும் ஸ்ரீ வரதராஜரையும், ஸ்ரீ ஏகாம்பரநாதரையும், ஸ்ரீ காமாட்சியையும் தரிசித்த்டு விட்டு வந்த பிறகே, உணவருந்தி உறங்கச் செல்வார்கள்.

தெளிந்த நீரோடை போன்ற நிம்மதியான வாழ்வில் துயரம் கலந்து அவர்களை கலக்கியது. தங்கள் வாழ்வை மலரச் செய்யவும், தங்கள் வம்சத்தை விளங்கச் செய்யவும் ஒரு மகன் பிர்க்க வில்லையே என்று வர்ராஜ ஜோசியரும் மரகதமும் ஏக்க்முற்றனர். அம்பிகையின் அருள் நமக்க கிட்டாதோ, சந்ததியில்லமலேயே நம் மரித்து விடுவோமோ? என்று இருவரும் தனிமையில் இருந்த போதெல்லம் எண்ணி, எண்ணி மருகினர்.

அவர்கள் விரதம் இருந்தனர். தான தர்மங்கள் செய்தனர். புனிதத் தலங்களுக்கு யாத்திரை சென்ரனர். புண்ணிய நதிகளில் நீராடினர். அவர்கள் போகாத கோயில் இல்லை. தொழாத தெய்வம் இல்லை. அத்தனை செய்தும் ஒருவித பயனும் இல்லை.

காமகோடி சாஸ்திரியாரும் மன வேதனைப்பட்டார். மரகதமும் மாப்பிள்ளையும் உள்ளுக்குள்ளேயே குமைந்து, உள்ளம் குமுறும் காட்சி அவர் நெஞ்சை அறுத்தது. காமாட்சியின் ஸந்நிதிக்குச் சென்றார். கண்கள் கலங்க, அன்னையை தோத்திரம் செய்தார். நான் செய்த பூஜைகள் போதவில்லையா அம்மா? ஆசாரத்தில் தவறியிருந்தலோ, என் வழிபாட்டில் குறையிருந்தலோ, எனக்குத் தண்டனை கொடு. என் குழந்தைகளை தண்டிக்க வேண்டாம். உன்னிக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். லோக நாயகியே, கருணைக் கடலே, குலக் கொழுந்து ஒன்று யாசிக்கிறேன். உன் திருக்கடாட்சம் பட்டால் பட்ட மரமும் துளிர்க்குமே, தாயே, என்று வெகு நேரம் கண்ணீர் விட்டுக் கதறினார்.

குல தேவி கருணை காட்டினள். பராசக்தி பக்தர்களை கை விடுவாளா? அன்று இரவே, காமாட்சியன்னை சாஸ்திரியாரின் கனவில் தோன்றி, த்மபதிக்கு வெண்ணை கொடு, ஞானக் குழந்தை பிற்க்கும்,, என்று கூறி மறைந்தாள். அக்கணமே விழித்துக் கொண்டு விட்டார் பெரியவர். விடியும் வரை காமாட்சி தேவியின் அருள் வெள்ளத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்தார்.

காலையில் நீராடி விட்டு, அனுட்டானங்களையெல்லாம் முடித்துக் கொண்டு தம்பதியை அருகி அழைத்து தாம் கண்ட கனவைப் பற்றி கூறினார். இருவரும், மெய் சிலிர்த்துப் போய், செய்வதறியாது திகைத்து, மகானின் பாதங்களில் விழுந்து வணங்கினர். ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, கரங்கூப்பி, அம்பிகையைத் தொழுத வண்ணம் இருந்தனர். பின்னர் காமகோடி சாஸ்திரியர, நவநீதம் எடுத்து, பராசக்திக்குப் படைத்து விட்டு, துதி செய்து, மந்திரங்கள் ஜபித்து, அதை இருவருக்கும் கொடுத்து உண்ணும்படிக் கூறினார்.  தேவியின் பிரசாதத்தைப் பரம பக்தியுடன் பெற்று, இருவரும் உட்கொண்டனர்.

அன்னையின் அருட் பிரசாதம் அருமருந்தன்றோ? மரகதம் கருவுற்றாள்.  உற்றார், உறவினர் பெரும் மகிழ்ச்சியுற்றனர். ஞானக் குழந்தை வளர்பிறை போல் வயிற்றில் வளர்ந்து வந்தது. வளைகாப்பு, சீமந்த வைபவங்கள் இனிது நடந்தேறின. மங்கையர் மரகதத்திற்கு மலர் சூட்டி மகிழ்ந்தனர். புண்ணியனைச் சுமந்த புண்ணியவதியின் திருமேனி பூரண சந்திரன் போல் பொலிவுறா, தந்தத்தில் கடைந்தெடுத்த பதுமை போல் தோற்றம் அளித்தாள்.

நாளும், கோளும் கூடின. விண்ண்னோர் ஆசி கூற, மண்ணோர் ஆசி பெற, கண்ணனுக்கு இணையன ஆண் மகவை ஈன்றெடுத்தாள் மரகதம். 1870-ஆம் ஆண்டு, ஜனவரித் திங்கள், 22-ஆம் நாள், சனிக்கிழமை ஹஸ்த நட்சத்திரம் கூடிய மங்கள நாளில் காமாட்சி தேவி அளித்த வரப் பிரசாதமாக அக்குழந்தை அவனியில் அவதரித்தது.

பாட்டானாரின் பெயராக அமைந்ததாலும், குல தெய்வமான வேங்கடாசலபதிக்கு உரிய சனிவாரத்தில் பிறந்ததாலும், அத்தெய்வக் குழந்தைக்கு சேஷாத்ரி என்ற திரு நாமம் சூட்டபட்டது.

வளரும் குழந்தையின் திருவிளையாடல்களில், பின்னர் வாழப் போகும் மகானுக்குரிய அருமை பெருமைகளைக் காண் முடிந்தது. பராசக்தி அளித்த ஞானப் பிள்ளையாதலால் , தெய்வ சிந்தனையும், இறை வழிபாடும், அதற்கு இயற்கையாகவே அமைந்து விட்டது.

அன்னை மரகதத்தின் இடுபில் அமர்ந்து, ஆலயங்களுக்குச் சென்ற போது, பிறரைப் போலவே சேஷாத்ரி, தாய் பக்திப் பரவசத்துடன் துதிப் பாடல்களைப் பாடும் போது, மெய் மறந்து கேட்ட சேஷாத்ரி, மழலை மொழியிலேயே, சங்கீதப் பயிற்ச்சி பெற்றார். நாங்கு வயது நிரம்புவதற்குள்ளேயே, அந்தத் தாய், மக்னுக்குஅ கிருஷ்ணாஷ்டகம், ராமாஷ்டகம், மூகபஞ்சசதி, குருஸ்துதி முதைய ஸ்தொத்திரப் பாடல்களைக் கற்ருது தந்தாள். தத்தித் தத்தி நடை பயிலும் போதும், தடுக்கித் தடுக்கி விழும் போதும், சேஷாத்ரி தொத்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருப்பார்.

வரதராஜ ஜோசியருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. குழந்தை பிறக்குமா? என்று ஏங்கியவர், ஞானக் குழந்தை பிற்க்க என்ன பாக்கியம் செய்தேனோ? என்று புளகிதம் அடைந்தார். சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது, பையனை மடியில் வைத்துக் கொள்வார். வேதாந்தப் பாடங்களானாலும், சேஷாத்ரி கவனமாக கேட்பார்.

தந்தை கணகளை மூடித் தியானத்தில் அமர்ந்திருப்பைத் பார்த்து, குழந்தை சேஷாத்ரி, தானும் அவ்வாறே அமர்ந்து, சின்முத்திரை காட்டித் தவம் இருப்பது போல் காட்சி தருவார். பார்ப்பவர்கள் பிரமித்துப் போவார்கள்.

தங்கப் பதுமையாக நடமாடிக் கொண்டிருந்த சேஷாத்ரிக்கு, நான்கு வயது நிரம்பியது. ஒரு நாள் தாயுடன் வரதராஜ பெருமாள்  ஆலயத்திற்குச் சென்றார். அப்போது திருவிழாக் காலம். விற்பனைக்காக ஒருவன் ஒரு சாக்கு நிறைய பாலகிருஷ்ண விக்ரகங்களைக் கொண்டு வந்திருந்தான். அதைக் கண்ட சேஷாத்ரி தனக்கு ஒரு பொம்மை வேண்டும் என்று தாயிடம் கெஞ்சினார். அன்னை அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.  கடைக்காரன், குழந்தையின் அழகைக் கண்டு சொக்கிப் போனான்

அம்மா, உங்க குழந்தையைப் பார்த்தா, கிருஷ்ணனைப் போலவே இருக்குது. அது ஆசைப் பட்டு கேட்குது. ஒரு பொம்மையை எடுத்துக் கொள்ளட்டும்……. என்று சொல்லி, சேஷாத்ரியை அருகில் அழைத்து தன் கையாலேயே ஒரு பொம்மையை எடுத்துக் கொள்ளும்படி கூறினான். மகிழ்ச்சி அடைந்த சேஷாத்ரி, சாக்கு பையில்  தனது சிறு கையை விட்டு, ஓர் அழகிய கிருஷ்ண விக்ரகத்தை எடுத்துக் கொண்டு, துள்ளிக் குதித்து ஓடினார். மரகதம் பணத்தை எடுத்துக் கொடுத்தாள். ஆனால், கடைக்காரன் அந்த்சக் காசைப் பெற்றுக் கொள்ள மறுத்த் விட்டான்.

என்ன ஆச்சரியம்! அன்று மாலைக்குள் அவன் கொண்டு வந்திருந்த ஓராயிரம் வெண்கல விக்ரகங்களும் விறனை ஆகிவிட்டன.! மறுநாள் மாலை வழக்கம் போல் மரகதம் குழந்தை சேஷாத்ரியுடன் கோயிலுக்கு சென்றாள்.  அந்த கடைக்காரன் சேஷாத்ரியைக் கண்டதும் ஓடி வந்து குழந்தையின் கையை பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டு, மரகதத்தைப் பார்த்து, என்ன அதிசயம் சொல்வேனம்மா….. நேற்று இந்த குழந்தை என் சாக்கு பைக்குள் கையை விட்டு ஒரு பொம்மையை எடுத்துக் கொண்டது.  மாலைக்குள் நான் கொண்டு வந்திருந்த அத்தனை பொம்மைகளும், விற்றுத் தீர்ட்ந்து விட்டன.  இது போல் எப்போதும் நடந்தத்தில்லை.  இது சாதாரணாக் கை இல்லை…… தங்கக் கை, தங்கக் கை என்று பலமுறை குழந்தையின் கைகளை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு கண்ணீருடன் கூறி மகிழ்ந்தான் அந்தக் கடைக்காரன்.  இதைக் கேட்டு, மரகதத்திற்கு அத்தனை பூரிப்பு முகத்தில்.  பின்னாளில் சேஷாத்ரி ஸ்வாமிகளை, தங்கக் கை சேஷாத்ரி, என உலகமே புகழ்வதற்கு, அந்த நிகழ்ச்சி ஒரு அச்சாரமாக அமைந்தது.  இந்நிகழ்ச்சி காஞ்சிபுரம் முழுவதும் பேச்சாக அடிபட்டது என்பது சொல்லத் தேவையில்லை.