யோக சக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் = 4

பகுதி 3 தொடர்ச்சி ……..

அப்படிப்பட்ட நிலை வந்தால், இது பெரிய விஷயம், நான் சிறிய மனிதன்’ என விலக வேண்டும். அப்படியில்லையெனில் இந்த இடத்தில் அடிமட்டமான மனிதன் என்னவெல்லாம் செய்ய முடியும் என யோசிக்க வேண்டும். இப்படியெல்லாம் யோசனை செய்தால், யோசனைதான் செய்யலாம், வாழ்க்கையை நடத்த முடியாதுஎனத் தோன்றும்.

இது சரியில்லை என்றால், இதே துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் என்ன செய்கிறார்கள் எனப் பார்த்தால், அவர்கள் இந்த எச்சரிக்கைகளை மேற்கொள்வார்கள்.

  • பெருந்தொகையைப் பிறர்க்குக் கொடுக்க ஒரு சட்டம் உண்டு. அது

ரசீது பெற்றுக் கொண்டு தரவேண்டும் என்பது. நான் எப்படி அண்ணனிடம் ரசீது கேட்க முடியும் என்றால், கேட்காதது பண்பு. ஆனால் இந்தத் தொகை எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்யும் என நமக்குத் தெரியாது. அண்ணன் மகனும், நம் மகனும் சண்டையிட்டுக் கொண்டால் அடுத்தாற்போல் அண்ணன் மைத்துனன்எப்படி அத்தொகையை வாங்குவான் எனப் பார்ப்போம்என்பார். அது பிரச்சினையாகும். நாம் கொடுத்த பணம் பிரச்சினையானபின் இப்படியாகும்என்று தெரிந்தால் ரசீது பெற்றிருப்பேன்எனத் தோன்றும். தொகை எதுவானாலும், அண்ணன் முக்கியம், கேட்கமாட்டேன்என்பது பெருந்தன்மை. பிரச்சினைக்கும் தொகைக்கும் சம்பந்தமில்லை. அது இல்லையென எப்படிச் சொல்வது? அதை உடனே கொடுத்துவிடுகிறேன். முடியாவிட்டால் நானே ரசீது எழுதி அனுப்புகிறேன்என்று கூறும் அண்ணன் பண்புள்ளவன்.

சமர்ப்பணம் சந்தர்ப்பத்தால் ரசீது பெறச் செய்யும்.

அண்ணன் உறவைவிட தொகை பெரியதானால் தொகைக்குரிய

முறையைக் கடைப்பிடிப்பது சரி. அதை உதாசீனம் செய்வது

ஆபத்தை அறைகூவி அழைப்பதாகும்.

  • வாழ்வின் சிக்கல்கள் ஏராளம்; பாசம், பிரியம், பழக்கம் ஆகியவை எளியவை. எனவே வாழ்வுக்குரிய முறைகளைத் தவறாமல் பின்பற்றுவது ஆபத்தை விலக்குவதாகும்.
  • நல்லது, பண்பு, உயர்ந்த செயல் என்பவை அந்த நேரத்திற்குச் சரி. நெடுநாளைக்கு அவை பயன்படா. முறை, ரசீது, சட்டம், ஊர், ஒழுங்கு ஆகியவை பேசும். ஆபத்தைத் தேடுவது இதில் ஒரு முறை; பல உண்டு.
  •  எதையும் நேராக, அனைவருக்கும் பொதுவாக, எந்த நாளைக்கும் சரிவரும்படிச் செய்வது ஆபத்தைத் தடுக்கும்.
  •  ஆபத்தை விலக்குவது அவசியம்.

44. உள்ளத்தின் உண்மையை ஓரிழை உயர்த்து.

உள்ளத்தின் உண்மை நேரம் வந்தால் அதற்குத் தகுந்தபடி மாறும்; அதாவது கூடும் அல்லது குறையும்.

உண்மையுண்டுஎன நாம் நினைப்பது, நேரம் வந்தால்தான் தெரியும். 13,500 ரூபாய் சம்பளம் என்பதை 14 ஆயிரம்எனக் கூற எழும் ஆசை உண்மையில்லை.

என் தகப்பனார் இலஞ்சம் வாங்குவார் என்பதைக் கூறவேண்டிய நேரம் வந்தால் நம்மனம் படும் போராட்டம் தெரியும். முடிவில் வருவது உண்மையாக இருக்காது. அந்நேரம் நமது பேச்சுத்திறமை நமக்கே வியப்பாக இருக்கும்.

  • அப்படியெல்லாம் இல்லை;
  • எனக்கு அது தெரியாதே;
  • சும்மா பெறுவதில்லை, வேலைக்குப் பலன்தானே;
  • தகப்பனார் வாங்கமாட்டார், மற்றவர் கட்டாயப்படுத்துவார்கள்;
  • பார்ட்டி வம்பு செய்து தந்தால் எப்படி மறுப்பது?

உண்மை நேர்எதிராக இருக்கும்.

இதில் இரகஸ்யம் என்னவென்றால் உள்ளதுஎன நாம் நினைப்பதைக் காப்பாற்றுவதே சிரமம். உயர்த்துவது நடவாத காரியம்எனப் புரியும்.

அதனால்தான் ஷேக்ஸ்பியர்இருப்பதை உயர்த்த முயன்றால், உள்ளதும் போகும்என்றார்.

உயர்த்துவது சிரமம். 1% உயர்த்துவதும் அதனால் முக்கியம் பெறும்.

தொடர்ந்து மாதம் ஓரளவு உயர்த்துவது, 6 மாதத்திற்கொரு முறை உயர்த்துவது என்பதும் கடினம். தினமும் 1% அல்லது 1/10%ஆவது உயர்த்த முயல்வது முறை.

உண்மையை உயர்த்த முயன்று வெற்றிபெற மற்ற எல்லா விஷயங்களையும் உயர்த்த வேண்டும்என்பது இப்பொழுது புரியும்.

10 வார்த்தையில் சொல்ல வேண்டிய பதிலை 20 வார்த்தையில் சொல்கிறோம். பணம் உள்ளபொழுதும் போன் பில் கடைசி தேதிவரை காத்திருந்து கட்டுகிறோம். இதுபோல் அலட்சியமானவற்றை விலக்காமல் உண்மையை ஓரளவு உயர்த்த முடியாது.

எது உண்மை?

எனக்குள்ள நிலம் 102.48 ஏக்கர் என்பதை 100 ஏக்கர் என்றால் உண்மையில்லை; 102ம் உண்மையில்லை. 102.48 எனச் சொல்வது உண்மையா என்றால்,

எந்த மனநிலையில் சொல்கிறோம் என்பதே முக்கியம்.

100க்கும் 102.48க்கும் நமக்கு ஆதாயமில்லை;

அதில் பொய் பெறும் இலாபமில்லை. அது பொய்யாகாது.

ஓட்டு யாருக்குப் போடுவது என்ற உண்மையை வேட்பாளரிடம் கூறும்பொழுது மனம் போராடும். அங்கு உண்மை வெளிப்படுவது கடினம்.

உங்களுக்கில்லை என்பதை உண்மையாகச் சொல் பிரச்சினையை எழுப்பலாமா?

கேட்க உங்களுக்கு உரிமையுண்டு. யாருக்குப் போடவேண்டும் என்ற சுதந்திரம் எங்களுக்கு வேண்டும்என்று கூறலாமா?

முடிவு செய்யவில்லைஎன்று சொல்லலாமா?

அவசியம் உங்களுக்கே போடுகிறேன்என்று பொய் சொல்ல ஆசைப்பட்டுச் சொல்வது பொய். ஆசை பொய் சொல்லும்.

உங்களுக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்பது அவசியம்என்பது சாதுர்யமான பதில்.

எதையும் மனம் கருதாவிட்டால் வேட்பாளர் நம்மை வற்புறுத்தமாட்டார் என்பது ஓர் உண்மை.

அவருடன் வருபவர் நாம் சொல்ல வேண்டியதைச் சொல்வார், “நீ கேள்.

அவர் இஷ்டத்தைக் கேட்காதேஎன்பார்.

அன்னை நமக்குப் பொய் சொல்லும் சந்தர்ப்பம் தரமாட்டார்.

45. தவறு சரியென மாறும்பொழுது செய்ய மறுக்காதே.

கோபம், ரௌத்திரமாகும்பொழுது தடை செய்யாதே.

  • மகன் போதைமருந்து சாப்பிட்டால், அதைத் திருடிக் குப்பையில்

போடுவது திருட்டுஎன நினைப்பது தவறு. இந்நிகழ்ச்சியில் திருட்டு புண்ணியமாகிறது.

  • திருமணமானபின் கணவன் 6 மாதம் வடநாட்டில் ஜெயிலிலிருநதான் என்ற செய்தி வெளிவந்தால் அதை வெளியில் கூறுவது உண்மையாகாது. அதைக் கூற மறுப்பது பொய்யாகாது. இந்நிகழ்ச்சியில் பொய் மெய்யாக மாறுகிறது. செய்தி பெண்ணுக்கு வந்து தம் வீட்டாருக்குச் சொல்லாமலிருப்பது, செய்தி வீட்டாருக்கு வந்து பெண்ணுக்குச் சொல்லாமலிருப்பது, அனைவரும் குடும்பத்தில் அறிந்து வெளியில் சொல்லாதது

பொய்யன்றுமெய்.

தவறன்றுசரி.

ஈஸ்வரன் அன்பு பேரன்பாகி, அது பூர்த்தியாகச் சக்திக்குச் சரணடைய முடிவு செய்து சரணாகதியை மேற்கொண்டால், சக்தி அளவுமீறிச் செயல்படுவதும் உண்டு. அதைச் சற்று அடக்க வேண்டும்என பகவான் எழுதியுள்ளார்.

கோபம் வந்தால் அடங்க நேரமாகும்; சமயத்தில் நாளாகும்.

கோபம் தெய்வாம்சம் பெறுவது ரௌத்திரம். நரசிம்ம அவதாரம் போன்றது.

நரசிம்மனுக்கு அது அடங்க 6 மாதமாயிற்று.

அன்னை அன்பருக்குக் கோபம் ரௌத்திரமானால் க்ஷணத்தில் முகம் மலரும்.

சக்தி ஈஸ்வரனிடம் அத்துமீறி நடப்பதுபோல் நிகழ்ச்சிகள் எழுவதுண்டு.

அப்பொழுது கோபம், ரௌத்திரமாகும்.

கோபம் தவறு என்ற கொள்கை அங்குச் சரியாகாது.

அக்கோபத்தை வெளியிட்டால் பிரச்சினை கரையும்.

10,000 ரூபாய் செலவாகும் வீட்டில் ஒருவர் 30,000 ரூபாய் வீண்செலவு செய்வதைப் பொறுத்துக்கொள்வது கடினம். அது 15 வருஷம் தொடர்ந்து வீட்டில் 1 இலட்சம் ரூபாய் செலவாகும்பொழுது வேட்டை விட்ட தொகை 31/2 கோடி என்றால், அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்என்று நினைப்பது தவறு.

பணத்தை அவனிடமிருந்து எடுப்பதும்,

அவனை அளவுகடந்து கண்டிப்பதும்

சரிதவறன்று.

அதைச் செய்யாதது தவறு.

செய்வது புண்ணியம்.

அப்படிப்பட்ட புண்ணியத்தை

எந்த பாவமான காரியம்மூலமும் செய்வது அவசியம்.

அபாண்டப் பொய்யை 50 வருஷமாகச் சொல்லி, அது 1000த்தைக் கடந்தபின், அவர் மனம் புண்படும்எனத் தயங்குவது தவறு. அவர் மனம் புண்பட வேண்டியது அவசியம். உலகத்தில் பொய்யை அழிக்க நாம் செய்யும் புண்ணியம் அது.

46. அனைவரும் அர்த்தமில்லாமல் போற்றுவதை நீயும் போற்றாதே.

கடைக்குப் போகச் சந்தர்ப்பம் வந்தால் மனமும், உணர்வும், உடலும், ஜீவனும் பூரித்துப் புளகாங்கிதமடைபவருண்டு.

ஆசிரமம் வந்து அன்னை வாழ்வை மேற்கொண்டபின் மனம் விசேஷங்களை நாடுகிறது. சிறியதாய் ஆரம்பிக்கும் விசேஷம் வீட்டைக் கல்யாண வீடாக்குகிறது. ஜென்மம் சாபல்யமடைகிறது.

M.A., Ph.D. பட்டம் பெற்றவர் வாரப்பத்திரிகைகளைத் தமிழில் படித்து ஒரு நோட்டில் அதில் வரும் பொன்மொழிகளை எழுதி வருவது அவர் மனவளர்ச்சியைக் (retarded) காட்டுகிறது.

அர்த்தமற்றவை அர்த்தமற்றவர்க்கு அர்த்தபுஷ்டியுள்ளதாகும்.

நாம் அவர்களை விமர்சனம் செய்வது சரியில்லை.

நாம் அவர் போலிருப்பது சரியென நினைத்தால், நினைப்பே சரியில்லை.

உலகில் பெரிய (intellectuals) அறிஞர்கள் 15 பேர் வரலாற்றை ஒருவர் எழுதினார்.

அத்தனை பேரும் உலகப் புகழ்பெற்றவர்கள்.

ஒருவர் பல ஆண்டுகளாக, ஆண்டில் 300 புத்தகம் படித்தவர்.

அடுத்தவர் தத்துவப் பேராசிரியர். அவர் இங்கிலாந்து பிரதமரின் பேரன்.

அவர் எழுதிய தத்துவத்தைவிட அவர் ஆங்கில நடை ஆற்றொழுக்காக அமைந்ததால் தத்துவத்திற்கு இல்லாத நோபல் பரிசை அவருக்குரிய ஆங்கிலப் புலமைக்கு அளித்தனர்.

வேறொருவர் எழுதிய நூல் உலகை இன்று அடியோடு சோஷலிஸப் பாதைக்கு மாற்றியது.

இத்தனை பேரும் ஓர் அந்தப்புரம் வைத்திருந்தனர்.

மேதாவிலாசமும், நடத்தையும் வேறு என்று அதை உலகம் புறக்கணித்து அவர்கள் பெருமையை ஏற்றது.

எவர் வேண்டுமானாலும் (irrational) அறிவுக்குப் பொருத்தமில்லாமல் பேசலாம். இவர்களில் ஒருவரும் அப்படிப் பேசக்கூடாது. இவர்களில் ஒருவர் ஆயுளில் குளித்ததேயில்லை.

அது அவர் நாட்டுப் பழக்கம்எனக் கொள்ளலாம்.

ஆனால் பகுத்தறிவுக்குப் புறம்பான சொல்லை இவர் போன்றவர் ஒருவர்கூட, ஒரு முறைகூடப் பேசக்கூடாது.

  • அப்படிப் பேசினார்கள்.
  • அது மன்னிக்க முடியாதது.

எனக்குப் பெரியவர்கள் குறையைப் பற்றிப் பேசுவது நோக்கமன்று. அவர்களிடம் இது இருப்பதால், நம்மிடமில்லைஎனக் கூற முடியாது.

  • அதைக் களைவது அவசியம்.

அதுபோன்ற செய்கை மனிதனைப் பூரிப்படையச் செய்யும். அர்த்தமற்ற பூரிப்பு, நம்மை அர்த்தத்திலிருந்து விலக்கும்.

மனம் அதை நாடுவதையும் நாம் அனுமதிக்கக்கூடாது.

இம்முறையைக் கைக்கொள்ள முயன்றால் நம் சுபாவம் நம்மை மீறுவது தெரியும். ஒரு முறையும் கட்டுப்படாது.

ழுவதும் கட்டுப்படுவது அவசியம்.

47. உன் சுபாவத்தை சுட்டிக்காட்டும் உடற்குறை சிறியதானாலும் அதை அகற்ற முயல வேண்டும்.

நம்வியாதி நம்குணத்தைக் குறிக்கும்.

அளவுகடந்து உணர்ச்சியில் பயம் உள்ளவர்க்கு ஏராளமாகத் தும்மல் வரும்.

பாசம் அதிகமானவர்க்கு மலச்சிக்கலுண்டு.

சிடுமூஞ்சிக்கு வயிறு எரியும் வியாதி வரும்.

திடீரென ஜுரம் வருவது insecurity பாதுகாப்புப் போய்விடும் என்ற பயத்தால் வரும்.

உடல் உள்ள மரு, மச்சம் ஆகியவை குறிப்பிட்ட துர்அதிர்ஷ்டத்தைக் குறிக்கும்.

பெற்றோர், உடன்பிறந்தோர் மரணத்தைக் குறிப்பவைமச்சம்உண்டு.

வறுமையைக் கைரேகை காட்டும்.

தனரேகை அதிர்ஷ்டத்தைக் குறிக்கும்.

வறுமைக்கேயுரியவர்தரித்திரம்அன்னையை ஏற்றுச் செல்வம் பெற்றால், தனரேகை உற்பத்தியாகும்.

ரேகை நம்முள் ஆழத்திலிருப்பது.

வியாதி லேசானது.

பிரார்த்தனையாலும், குணத்தை மாற்றுவதாலும், மனம்மாறச் சம்மதிப்பதாலும் உடற்குறைமலச்சிக்கல், மச்சம்குறையும், மறையும்.

ஏதாவது ஒரு விஷயம் அப்படி நம் முயற்சியால் மாறினால் இப்பயிற்சி பலன் தரும்.

தீயசக்தியின் ஆக்ரமிப்பில் உள்ளவர் கண்மூடினால் அது தொடர்ந்து சிமிட்டும்.

சர்க்கரை வியாதி, B.P. பிரார்த்தனையால் குணமாகியிருக்கிறது.

Kidney sone சிறுநீரகக் கல் பிரார்த்தனையால் மறைந்துள்ளது.

கோபம் தன் குறியை உதடு துடிப்பதில் காட்டும்.

ஏதாவது ஒரு மச்சத்தை அடிக்கடி சமர்ப்பணம் செய்தால் அது மறையும்.

அன்னையிடம் வந்து நாளானால் பல மச்சங்கள் மறைந்தது தெரியும்.

Ulcer வயிறு எரிவது சிடுமூஞ்சித்தனத்தால்;

குணத்தை இதமாக, இனிமையாக மாற்றினால் ulcer இருக்காது.

வியாதியை, சமர்ப்பணத்தால் விலக்குவது பெரியது.

ஒரு கை விரல் படபடப்பது tension படபடப்பு இருப்பதால்;

முயன்று படபடப்பை விலக்கினால் கை ஆட்டம் குறைந்து, மறையும்.

திடீரென முழுவதும் மறைவதும் உண்டு.

வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள் (vital) குணத்தோடு அதிகத் தொடர்பு உள்ளவை.

பயம் உள்ளவர்க்கு வயிற்றுப்போக்கு எழும்.

பயத்தைத் தைரியமாக மாற்றினால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

வியாதியைக் குணப்படுத்துவது வேறு; குணத்தைக் குறிக்கும்

வியாதியைக் குணப்படுத்துவது வேறு.

எந்த முயற்சிக்கும் பலன் உண்டு.

இந்த முயற்சிக்குப் பெரும்பலன் உண்டு.

எதுவும் செய்யாவிட்டாலும் அன்னையை அறிந்தபின் ஏராளமான பலன் தொடர்ந்து வந்து நிறையும்.

48. வெட்கத்தைக் கடந்த மனநிலையை நாடு.

கோபிகைகள் வெட்கத்தைவிட்டு கிருஷ்ணனை நாடினர்.

மனிதன் விலங்காக இருந்து மனிதனாக மாறியபொழுது முதல் பெற்ற உணர்ச்சி வெட்கம்.

இறைவனுக்கும், மனிதனுக்கும் உள்ள தடைகள் சொத்து, குடும்பம், பாசம், தர்மம், ஆசை என்பவை. வெட்கம் அவற்றைக் கடந்தது.

அனைத்தையும் விடலாம். வெட்கத்தை விட முடியாது.

அதையும் விட்டவனுக்கே இறைவன் தரிசனம் உண்டு.

இதை ஏற்கும் மனம் பெரியது.

இதே கருத்தை வாழ்வை இலட்சியமாக நடத்துபவனுக்குப் பொருத்திக் கூறுவது இக்கட்டுரை.

வெட்கப்படுபவர்க்கு மேடையில் நின்று பெறுபவையில்லை.

பலரைச் சந்திக்க உடல் வெட்கப்படுபவர்க்கு அப்பிரபலமில்லை.

அடுத்த நிலையில் உணர்ச்சியின் வெட்கம்.

பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் எனக் கேட்பதும் நாவிற்கு வெட்கப்படக் கூடிய குறை என்பது குறள். அது நம் வேதம்.

அனுசுயாவும் தன் வெட்கத்தைக் காப்பாற்றும் வகையில் திருமூர்த்திகளை வென்றாள்.

சுதந்திர இயக்கத்திற்குப் பணம் வசூல் செய்ய வெட்கப்பட்டிருந்தால் சுதந்திரம் வந்திருக்காது.

1920 வாக்கில் குடும்பப் பெண்கள் பாட கூச்சப்படுவார்கள். நடனம் ஆடுவது என்ற பேச்சேயில்லை. அது தேவதாசிக்குரியது என்பது அன்றைய கருத்து.

ருக்மணி அருண்டேல் அதை மீறி கலையை வளர்த்ததால் இன்று நடனக்கலை வீடுதோறும் முழங்குகிறது.

எந்த இலட்சியத்தை நிலைநாட்டவும் வெட்கம் தடை.

எவரும் செய்யாதவற்றைச் செய்ய வெட்கப்படுபவருக்கு எந்த இலட்சியமும் இல்லை.

அன்னை முறைகளும், வழிகளும் எவரும் பின்பற்றாதவை.

அவற்றுள் சிலவற்றைப் பின்பற்ற வெட்கப்பட வேண்டும்.

திருமண விழாவுக்குப் போய் வந்தபின் 1 ஆண்டு தியானம் கரையும்.

இருந்தாலும் உறவினர் அவசியம் என்பவருண்டு.

1 ஆண்டு தியானப்பலனை இழக்க விரும்பாவிட்டால் திருமணங்களுக்குப் போக முடியாது. போகாமல் சமூகத்தில் பழக வெட்கப்பட வேண்டும்.

திருமண விழாவிலும் தியானப் பலனழியாமலிருக்கும் நிலை அரிது.

திருமணங்கட்குப் போகாவிட்டால் பலரும் பலவகையாக நினைப்பார்கள்.

அவை மானம் போகும் விஷயங்களாகவுமிருக்கும்.

இவரை எவரும் அழைக்கமாட்டார்எனவும் நினைப்பார்கள்.

வெட்கத்தைக் கடந்த மனநிலை வாராமல் வெளியுலகில் தைரியமாகப் பழகமுடியாது.

மனம் வெட்கத்தைக் கடந்தால், வெட்கப்படக்கூடிய நிலை எழாது.

49. விரயத்தை விலக்கு.

பொருள்கள், சக்தி, நேரம், இடம், வாய்ப்பு ஆகியவற்றின் விரயத்தை முழுவதும் விலக்கியவர் வருமானம் இரண்டு மடங்காகும். உண்மையில் 10 மடங்காகும்.

18 ரூபாய் 80 பைசாவுக்கு வாங்கக்கூடிய பொருளை 18 ரூபாய் 90 பைசாவுக்கு வாங்காத மனநிலை விரயத்தை விலக்குவது.

நாம் வழக்கமாகச் செய்யும் வேலைகளுக்குத் தேவைப்படும் நேரத்தைக் குறித்து அவற்றைக் குறைக்க முயல்வது ஒரு முறை.

குளிக்கும் நேரம் 25 நிமிஷமானால், எதையும் விலக்காமல் கவனமாகக் குளித்தால் 25 நிமிஷம் சுருங்கும். 1 மாதம் கழித்து 25 நிமிஷம் 15 நிமிஷமாவது தெரியும். அந்த 10 நிமிஷம் எனக்கு என்ன செய்யும் எனக் கேட்பதைவிட 1 மாதம் இது போல் எல்லா வேலைகளையும் efficient திறமையாக மாற்றினால் தினமும் 11 1/2 மணியில் முடிந்த வேலை 81/2மணியில் முடியும். அதற்குள் வருமானம் 2 அல்லது 5 மடங்கு உயர்ந்திருப்பதைக் காணலாம்.

Energy சக்தியை அப்படிக் கவனித்தால், மற்ற எல்லா விஷயங்களிலும் விரயம் அறவே விலக்கப்பட்டால் முடிவில் நம்நிலை அடுத்தக் கட்டத்திற்கு வரும். 5 ஆண்டுக்குப்பின் வரவேண்டிய பிரமோஷன் இப்பொழுது வரும். Pay scale மாறி சம்பளம் கணிசமாக உயரும்.

முனிசிபல் கௌன்சிலர் பதவியை மனம் நாடும்பொழுது MLA சீட் கிடைக்கும்.

  • விரயத்தை விலக்க எடுக்கும் முயற்சி முழுமுயற்சி.
  • இம்முயற்சி நம் திறமையை உயர்த்துவதுடன் நம் பர்சனாலிட்டியையும் உயர்த்தும்.
  • நம் மனம் உயர்ந்த அளவுக்கு வாய்ப்பு நம் சூழலில் இல்லையெனில் நம்மை வேறு இடம் கொண்டுபோகும்.
  • விரயத்தை விலக்கும்பொழுது நாம் பொருள்கட்கு முடிவான கவனம் செலுத்துகிறோம்.

கவனம் கடவுளின் பொறுப்பு.

  • ஒரு விஷயத்தில் கிடைக்கும் பலன் கணிசமானது.
  • எல்லா விஷயங்களிலும் கிடைக்கும் பலன் மிகப்பெரியது.
  • விரயம் என்பது ஒரு தலைப்பு.

பல தலைப்புகளும் சேர்ந்து தரும் பலன் பிரம்மாண்டமானது.

பலனை நாம் இன்றுள்ள நிலையைக்கொண்டு நிர்ணயிக்க முடியாது.

திறமை உடன் முயற்சி.

விரயத்தை விலக்க மனம் முயலவேண்டும்.

மனம் உடலைவிட ஏராளமாகப் பெரியது, முக்கியமானது.

விரயம் விலகிப் பலன் பெறாதவரில்லை.

திவாலான கம்பனி விரயத்தை விலக்கினால் இலாபகரமான கம்பனியாகும்.

இது சுலபமான முறை, பெரும்பலன் தரும்.

50. அளவுகடந்த அர்த்தமற்ற விரயத்திற்கு அர்த்தம் உண்டென அறியலாம்.

விரயத்தை விலக்கும் பலனை, விரயமும் தரும்என்பது ஆன்மீகச் சட்டம்; எதிரானவை உண்மை.

கட்டுப்பாடு பெரும்பலன் தரும்; சுதந்திரமும் அதே பலனைத் தரும்.

விரயம் செய்தால் எப்படிப் பலன் வரும்?

விரயம் உண்மை; பலன் வரும்என்பதும் உண்மை.

பலன் அதே நிலையில் வாராது; அடுத்த நிலையில் வரும்.

MPSC எழுதி சர்க்காரில் குமாஸ்தா ஆனவன் குமாஸ்தாவாகவே ஓய்வு பெற்றான். ஓயாது சூது ஆடுவான். சம்பளம் வீட்டிற்கு வாராது. மனைவி தன்தாயார் குடும்ப ஆதரவால் கடின வாழ்வை நடத்தினாள்.

இரண்டு பெண்கள் வயதிற்கு வந்தன.

இதுவரை சிறிய உதவிகளைச் செய்த தாயார் வீட்டில் இனியும் உதவி எதிர்பார்க்கும் நிலையிலில்லை.

மைத்துனனே இரு பெண்கட்கும் வரன் ஏற்பாடு செய்து அவன் செலவில் தலைக்கு 100 பவுன் சீர் செய்து பெரிய இடத்தில் திருமணம் செய்தான்.

அதன்பிறகும் சூது தொடர்ந்தது.

சூது தவறு, விரயம் தவறு என்பதை மறுக்க முடியாது.

விரயம் (போகாது) வெளியே போவதை அதிகப்படுத்துவதால், உள்ளே

வருவது அதிகப்படும் என்பது ஒரு விதி. இன்று அமெரிக்காவில் விரயமாகும் உணவுப்பண்டம் ஒரு நாட்டைக் காப்பாற்றப் போதும் என்கிறார்.

போக்கு அதிகமானால், வரவு அதிகமாகும் என்பது சட்டம்.

இதை நாம் புரிந்துகொள்ளலாம், பின்பற்ற முயலுதல் சரிவாராது.

அளவுகடந்த விரயம் அளவுகடந்து அழிப்பதைக் காண்கிறோம்.

அவர்கட்கும் ஆத்மாவில் அளவுகடந்த பலன் வரும்.

தத்துவத்தை அறிவது பலன் தரும்.

பின்பற்ற முயல விரும்பினால் அவர்கள் அறிய வேண்டியவை அதிகமாக உள்ளன.

இதை அரசியலில் அதிகமாகக் காணலாம்.

முறையாக உழைத்த தொண்டர், தொண்டர் தலைவராகி, MLA ஆவதுண்டு.

எந்த முறையையும் பின்பற்றாமல் சந்தர்ப்பம் கிடைத்தால் எந்தத் தலைவரையும் துரோகம் செய்து கட்சித் தலைவனாக வந்தவர் நிலையை ஆராய அரசியலோ, மனோதத்துவமோ போதாது; ஆன்மீக வாழ்க்கை விளக்கம் தேவை.

விரயத்தால் அழிந்தவர் பலர்.

விரயத்தால் பலன் பெற்றவர் சிலர்.

அதை அதிர்ஷ்டம் என்கிறோம்.

நமக்குப் புரியாததை அதிர்ஷ்டம் என்று கூறுகிறோம்.

அப்படிப் பலன் பெறுபவரிடையே ஆழ்ந்து ஒரு நல்ல value குணம் புதைந்திருக்கும்.

Life Response படிப்பவர் இதையறியலாம்.

எந்த உண்மைக்கும் எதிரான உண்மையுண்டுஎன்பது இவ்விஷயத்தில் உண்மை.

முதலாளி பெற்ற அதே பலனை அவன் தொழிலாளி பெறுகிறான்.

விரயம் பெரிய சாஸ்திரம்; எளிதில் படித்து முடிக்க முடியாது.

51. நமக்குள்ள திறமையை நமக்கு மறக்குமாறு நடக்க வேண்டும்நாமே பாராட்டினால் அது வளரும்.

நாம் பாராட்டாததைப் பிறர் பாராட்டுவர்.

அழகானவர் தம்அழகை நினைந்து மகிழ்வார்.

ஏதோ காரணத்தால் தன்அழகை தான் உணருவதில்லையெனில் உலகம் அதைப் பாராட்டும்.

திறமைக்குப் பலன் உண்டு.

பலனை அதிகமாகக் கருதினால், திறமையைக் கருத முடியாது.

நாம் கருதாததைப் பிறர் கருதுவர்.

Silent willஇல் நாம் கூறாததைப் பிறர் கூறுவதும், இங்கு நாம் பாராட்டாததைப் பிறர் பாராட்டுவதும் ஒன்றே.

1947 முதல் 1977 வரை இந்திய சர்க்கார் ஆயிரம் துறைகளில் முயன்று எல்லாத் துறைகளும் வெற்றிடமாக இருந்ததால், செய்ய வேண்டியவை ஏராளம்.

எவ்வளவு செய்தாலும், செய்ய வேண்டிய பாக்கி ஏராளமாக இருந்தது.

சர்க்கார் தான் செய்ததை நினைக்க நேரமில்லை.

உலகம் இந்தியா செய்தவற்றைக் கூர்ந்து கவனித்துப் பாராட்டியது.

நம்மைப் பிறர் பாராட்ட வேண்டும் எனில் எந்தத் திறமைக்காகப் பாராட்ட நாம் நினைத்தாலும், அது நம்மனத்தை விட்டகன்றால் உலகம் பாராட்டும்.

நாமே பாராட்டியபின் உலகம் பாராட்டாது.

உள்ள திறமையை எப்படி அறியாமலிருக்க முடியும்?

நம்திறமை ஒரு விஷயத்தில் 80%ஆனால் நாம் மேலும் பெற வேண்டியதை மட்டும் கருதினால், நாம் பெற்றதை நினைக்க முடியாது.

இது சிறப்பின் தன்மை.

சிறப்படைய ஒருவர் முயன்றால் அவர் முயற்சிக்கு முழுச்சக்தியும் செலவாகும்.

அதனால் உள்ளதைப் பாராட்ட சக்தியிருக்காது.

என்னுடைய திறமை எவர் கண்ணிலும் படவில்லையென வாழ்நாள் முழுவதும் குறைப்படுபவர், திறமையேயற்றவராக இருப்பார்.

சுமார் 1 பக்கம் தவறில்லாமல் ஆங்கிலம் எழுதத் தெரியாதவர், உடனுள்ள அனைவரிடமும் தம் ஆங்கிலப் புலமையின் பெருமையைப் பறைசாற்றினார். கேட்டவர் அனைவரும் விபரம் தெரியாதவர் என்பதால் அதை ஏற்றுப் பாராட்டினர். புலமைக்குச் சோதனைக் காலம் வந்தது.

அஸ்திவார அறிவுமற்றவர்என அம்பலமானார்.

தங்கள் திறமையைத் தாங்களே வியந்துகொள்பவர் எந்தத் திறமையும் அற்றவர்களாக இருப்பார்கள்.

உலகம் நம்மைப் பாராட்ட வேண்டியது நமக்கு அவசியமில்லை.

நாம் திறமையைப் பெறுவது அவசியம்.

பெற்றதை முழுமைப்படுத்தினால் அதைப் பெறலாம்.

அம்முயற்சி பெருவெற்றி பெறும்.

நம் சக்தியனைத்தும் அதில் செலவானால் நம்மால் நம்மைப் பாராட்ட இயலாது.

நாம் அதை மறப்போம்.

நாம் மறந்ததை உலகம் ஏற்கும்.

52. சுயநலமிக்குச் சேவை செய்யாதே.

சுயநலத்தை எவரும் விரும்பமாட்டார்.

பிறர் சுயநலத்திற்குச் சேவை செய்வது நாம் சுயநலமாக இருப்பதைவிடத் தவறு. ஏனெனில் அது வளரும்.

எதைக் கவனித்தாலும், பாராட்டினாலும் அது வளரும்.

எதுவும் அனந்தம்; சுயநலமும் அனந்தம்.

பிறர் சுயநலத்தை வளர்ப்பதால் வளர்வது சுயநலம். அது நல்லதன்று.

அப்படிச் செய்யும் சேவை அவருக்குத் தப்பபிப்பிராயம் தருகிறது.

சுயநலம் தவறன்றுசரி என்ற முடிவுக்கு அவர் வருகிறார்.

அவர் சுயநலத்தை நாம் வளர்ப்பதால், கரைய வேண்டிய நம் சுயநலம் நம்மைச் சுடும்.

வேலை செய்யாத வேலைக்காரனுக்குச் சம்பளம் கொடுத்தால் வேலையின் மனம் புழுங்கும். அதனால் நடந்துவரும் நல்ல வேலை கெடும்.

படிக்காத மாணவர்கட்கு மார்க் போட்டு பாஸ் செய்த பேராசிரியர் தம் மகன் படிக்க மறுப்பதைக் கண்டு திகைத்தார். அவர் தவறாகப் பாஸ் போட்டதில் பலன் பெற்றவன் படிக்காதவன். அதனால் படிக்காத பழக்கம் வளர்கிறது.

அது அதிகமாகத் தன்வீட்டில் எழும் என்ற சட்டம் அவர் அறியாதது.

திருமணமானவனுடன் வாழ விரும்பினால், அந்த விருப்பம் பூர்த்தியாகாமல் தனக்கு திருமணமானபின் தன்எண்ணம் தன்வாழ்வில் வெளிப்படும்என அறிவதில்லை. இரண்டு திருமணம் தன்வாழ்வில் எழுவதின் அர்த்தம் புரியாது.

சுயநலம் கூர்மையானது.

கையால் தொட்ட பொருள் தன்னுடையதுஎன நினைப்பார்.

தான் வேலை செய்யும் கம்பனி தனக்கு வேண்டும்எனத் தோன்றும்.

அந்த எண்ணங்கட்குத் துணைப் போகக்கூடாது.

விலை பேசி நண்பருக்காக நிலம் வாங்கியவர் அது தனக்கு வேண்டும் என்றார்.

சுயநலத்தின் சுயரூபம் கடூரமானது.

கணவன், மனைவி, பெற்றோர், குரு, நண்பன், அண்ணன் என்பதால் சுயநலமிக்கு வேலை செய்து நஷ்டப்பட்டால், அத்துடன் விடாது.

அந்த நினைவு அழியும்வரை அது நம்மைச் சுடும்.

மனிதனால் தாங்க முடியாத அளவுக்குச் சுடும்.

யோகத்தை மேற்கொள்பவர்க்கு அது பயன்படும்.

குடும்பஸ்தனை அப்பழக்கம் அழித்துவிடும்.

தெரியாமலோ, வேறு வழியில்லாமலோ சுயநலத்திற்குச் சேவை செய்தால் அது உயிரையே எடுத்துவிடும்.

யோகி அதைச் சுயநலமிக்குச் செய்தால் சுயநலமியின் உயிர் போகும்.

உலகில் கடுமையானது இரண்டு; கயமை, சுயநலம் என்கிறார் பகவான்.

எக்காரணத்தை முன்னிட்டும் அதற்குச் சேவை செய்வது தவறு.

அண்ணனுக்காகத் திருடலாமா?

அதைவிட மன்னிக்க முடியாத குற்றம் சுயநலத்திற்குச் சேவை.

நல்லதிற்கே சேவை செய்வதைவிட இறைவனுக்குச் செய்வது, சேவை செய்வது மேல்என்று கூறும்பொழுது சுயநலமிக்குச் சேவை செய்வது பாவம்; அறிவீனம்.

53. முழுச்சுயநலமிக்கு முழுமையாக ஆதரவு கொடு.

முன்கூறியதும், இதுவும் எதிரானவை. இரண்டும் உண்மை. முழுச்சுயநலமிக்கு ஆதரவுகொடு என்றால் சுயநலம் நல்லதுஎனப் பொருளன்று.

நாம் சுயநலமியைத் தேடிப் போகவேண்டும் எனவும் பொருளில்லை.

நம்மைத் தேடி சுயநலமி வந்தால் அது நம் சுயநலத்தின் பிரதிபலிப்பு என்பதை ஏற்க வேண்டும். இது ஸ்ரீ அரவிந்தத்தின் அடிப்படை.

அதுவும் தவிர்க்க முடியாத உறவானால், நாம் அதைத் தவிர்க்க முயலக் கூடாது.

தவிர்த்தால், உடனே அதைவிடப் பெரிய சுயநலமி வந்து சேருவான்.

யோகச் சட்டம் என்னவென்றால், நமக்கு அமைந்துள்ள சந்தர்ப்பத்தை நாம் ஏற்று அதன் அனுபவத்தைப் பெற்றால் அது நம்மை விட்டு முடிவாகப் போய்விடும்.

சுயநலமான தம்பி, பார்ட்னர், தம்பதியிருந்தால், அவர்கள் மாற விரும்பினால் அவர்கள் சுயநலம் பூதாகாரமாக வளரும்.

எதிர்ப்பு வளர்க்கும்ஏற்றால் அடங்கும்.

இயல்பாக உள்ள சுயநலத்தை எதிர்க்காமல் ஏற்பது விரதம்.

எதிர்க்காமல் அமைதியாக ஏற்றால் குறைந்த காலத்தில் அது விலகும்.

சுயநலமி சீக்கிரம் விலக, அவன் சுயநலத்தை எரிச்சல்படாமல் அமைதியாக, இனிமையாக, இயல்பாக ஏற்க வேண்டும்.

அதற்குப் பொறுமை அதிகம் வேண்டும்.

அடுத்தவர் சுயநலத்தை ஏற்கிறோம் என்ற எண்ணம் அதை வளர்க்கும்.

இது நம்சுயநலம் என்ற ஞானம் பொறுமை தரும்.

பொறுமையால் நம்சுயநலம் சீக்கிரம் போகும் என்ற தெளிவு இனிமை தரும்.

ழுச் சுயநலமிக்கு முழுஆதரவு கொடுப்பது நம் முழுச் சுயநலத்தை விரைவாக விலக்குவதாகும்.

இது சுயநலத்திற்கு மட்டும் உரிய சட்டமன்று.

நமக்குத் தேவையான குணங்களை அனுபவத்தால் பெறும் சந்தர்ப்பங்களை வாழ்க்கையும், வாழ்க்கைமூலம் அன்னையும் வழங்குகின்றார். அது எரிச்சல், கசப்பு, விரக்தி; எதிர்ப்பு கொடுத்தால் அனுபவம் பெறத் தகுதியற்றவர் நாம் என்றாகும்.

இயல்பாக அமைந்த சந்தர்ப்பங்களை இயல்பாக, முடிந்தால் இனிமையாக ஏற்று, அமைதியாக அனுபவித்து, ஆர்ப்பாட்டமில்லாமல் அனுப்பி வைக்க வேண்டும்.

பெற்றோர், பிள்ளைகளுக்கு இது முக்கியம்.

இதன் பெருவிசேஷம் தம்பதி.

விவாகரத்து செய்பவர் அடுத்த தம்பதி அதேபோல் மேலும் மோசமாக இருப்பதைக் காண்கின்றனர். முதல் ரத்து செய்த அதே தம்பதியை பல ஆண்டு கழித்து மீண்டும் மணப்பது பரவலான பழக்கம்.

வருவதை ஏற்று அனுப்புவது பக்குவம்.

54. பெருமை தரும் அடக்கம் பெரியது.

அறிவில்லாதவர் அடக்கமாக இருப்பது அடக்கமாகாது.

It is the vegetarianism of a toothless tiger.

அறிவுஎன ஏற்பட்டால், அது தன்னை வெளிப்படுத்தியபடியிருக்கும்.

ஒளியால் ஒளிந்துகொள்ள முடியாது. அது தானிருப்பதை வெளிப்படுத்தியபடியிருக்கும். இது ஒளியின் இயல்பு; அறிவும் அதைப்போன்றது.

அடக்கம் இயல்பன்று; நாகரீகம் வந்தபின் மனிதன் கற்றது.

வாழ்வு (existence) எனில் சக்தி சலனத்தால் செயல்படுவது.

மேட்டிலிருந்து நீர் பள்ளத்திற்குப் போவதைப்போல், தெளிவான அறிவு தெளிவில்லாதவரை நோக்கிப் போய்க்கொண்டிருப்பது இயல்பு.

மேட்டில் நீரைத் தேக்க முயல வேண்டும். தேக்கினால் அதற்கு சக்தி (power) உண்டு. தானே தண்ணீர் மேட்டில் சேராது.

மனம் அறிவின் சிறப்பை அறிந்து, அதை வெளிப்படுத்தாமலிருப்பது நாகரீகம்என உணர்ந்து, அறிவை வெளிப்படுத்தாமலிருப்பது அடக்கம்.

வெளிப்படும் அறிவு (sharp) காரமாக இருக்கும்.

பிறர் பொருளை அபகரிக்க (extortion) அது பெரும்பயன்படும்.

வறுமையுள்ள இடத்தில் அறிவு வன்முறையை நாடும்.

தானே அடக்கம் வாராது; முயன்று பெற வேண்டும்.

நாம் அடக்கமாக இருக்கிறோம்என அறியாத அளவுக்குள்ள அடக்கமே அடக்கம்.

பரம்பரைப் பணக்காரனுக்குத் தன்செல்வம் நினைவு வாராது.

பரம்பரையாகப் பிரபலமான அந்தஸ்துடையவர்க்கு அப்பெருமையிருக்காது.

தாம் அக்குடும்பத்தினர்என அறிமுகப்படுத்திக்கொள்ளத் தோன்றாது.

அளவுகடந்து படித்தவர்க்கு தம்படிப்பின் உயர்வு நினைவு வாராது.

தமிழ்நாட்டிலேயே தலைசிறந்த வைஷ்ணவ வித்வான், ஈடு வியாக்கியானத்தில் பாண்டித்யம் பெற்றவர் 50 ரூபாய் சம்பளத்தில் தமிழாசிரியராக இருந்தார். தம் பாண்டித்யத்தின் பெருமை அவர்

அறியாதது. அது வெளிவந்தவுடன் அவரைப் பல்கலைக்கழகத்தில் உயர்ந்த பதவியில் அமர்த்தி 260/- ரூபாய் சம்பளம் கொடுத்தனர். அடக்கம் அடக்கமானால் அது பெருமை தரும்.

பட்டம் பெறாத படிப்பின் பெருமையை உலகம் அறியாது. தானும் அதைப் பாராட்ட மறுத்தால் அதற்குரிய பெருமை தேடிவரும். அழகு, செல்வம், அந்தஸ்து, பிரபலம், உடல்வலிமை, பாண்டித்யம் போன்றவற்றைப் பெற்றவர் அதைப் பாராட்டாமலிருப்பதுண்டு; அது அரிது. தகப்பனார் பெயர் தமிழ்நாடு முழுவதும் தெரியும் என்றாலும் தன்னை அவர் மகன்எனக் கூறி அறிமுகப்படுத்தத் தோன்றாத அடக்கம் உண்மையான அடக்கம்.

55. எதைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறோமோஅதை விட்டுக்கொடுக்க வேண்டும்.

குடும்பம், உத்தியோகம், பணம், நாணயம்என ஏதாவது ஒன்றை மனிதன் பலமாகப் பிடித்துக்கொண்டிருப்பான். அவன் உயிர் அதிலிருக்கும். அதுவே ஜீவநாடி. அது போனால் எல்லாம் போய்விடும். நண்பன், சீட்டு, ரேஸ், வைப்பாட்டி, கருமித்தனம், நடிப்பு, பொய்க் கதையைப் பொருத்தமாகச் சொல்லுதல், உரிமையற்ற சௌகரியத்தை முழுமையாக அனுபவிப்பது, மந்திரத்திலுள்ள நம்பிக்கை, தெய்வபக்தி, பிரார்த்தனை, விருந்தினரை உபசாரம் செய்வது, வேலையைப் பவித்திரமாக செய்வது, உயர்ந்த தமிழ்ச் (phrases) சொற்களை உருவாக்குவது, கதை படிப்பது, TV பார்ப்பது, பேரக்குழந்தையைப் பேணுவது, தாயார்சொல்லைத் தலைமேல் ஏற்பது, மனைவிசொல்லைத் தட்டாதது, கட்சி, கொள்கை என வாழ்வில் பல உண்டு. உயிர் போனாலும் மெய் சொல்லத் தவறுவதில்லை, உயிரைக் கொடுத்தாலும் ஒரு மெய் சொல்லக் கூடாது என்ற தீர்மானம் ஆகியவற்றுள் ஒன்றை மனிதன் ஆணித்தரமாய்ப் பிடித்திருப்பது வழக்கம்.

அன்னையை அணுக இவற்றுள் எதுவும் தடை.

மெய் உயர்ந்தது; பொய் பொல்லாதது; மெய் அன்னையை அணுக

உதவும்; பொய் தடைசெய்யும்; மெய்யும் அன்னையை அணுக ஓரளவுதான் உதவும்; 80 பங்கு, 90 பங்கும் உதவும்; 100 பங்கு அணுக அதுவும் பயன்படாது. மெய்யைக் கெட்டியாகப் பிடித்து 90 பங்கு அன்னையை அணுகியபின் கெட்டியாகப் பிடித்திருப்பது தடைஎனப் புரியும். மெய் நமக்கு இயல்பாக அமையவில்லை என்பதால் கெட்டியாகப் பிடித்திருக்கிறோம்என்பது உண்மை. நாம் மெய்யைக் கைவிட்டாலும், பிடித்துக்கொள்ளாவிட்டாலும், மெய் நம்மை விட்டகலவில்லை எனில் நமது ஜீவியம் மெய்க்கு உரிய ஜீவியம்எனப் பொருள்.

  • அதனால் பிடித்திருப்பது, பிடி தடை.
  • எந்த நல்லதும் இயல்பாக அமைவது சரி.
  • மெய்யும் அதற்கு விலக்கன்று.
  • நாம் சரணாகதியை ஏற்றால், மனம் அதில் மட்டுமிருந்தால் அன்னையை அடைவோம்.
  • நாம் அன்னையை அடைந்தபின், அன்னை நம்மை ஏற்று, நம்மைப் பிடித்துக் கொள்கிறார்.
  • அது பேரருள்.
  • அதுவும் அன்னையாவதாகாது.
  • அன்னையாக நாமே மாற சரணாகதியும் தடை; இரண்டறக் கலப்பதும் ஓரளவு தடை; அன்னையே மறந்துபோவது நாம் அன்னையானதற்கு அறிகுறி.

56. பரம எதிரியின் வாயால் நல்ல பெயர் வாங்க வேண்டும்.

அப்படி ஒரு காரியம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் நமக்குப் பெரும்பலன் தரும்.

சுத்தம் வருமானத்தை உயர்த்துவதற்கு எத்தனையோ காரணங்களுண்டு.

அவற்றுள் ஒன்று, சுத்தத்திற்கு நாம் எடுக்கும் முயற்சியால் அதிக சக்தி உள்ளே வருகிறது; அது பணம்.

சாஸ்திரிக்கு சமஸ்கிருதம் தெரியும்; செட்டியாருக்குப் பணம் உண்டு;

புரொபஸர் படித்தவர்; ரெட்டியாருக்கு செல்வாக்குண்டு; நடிகை அழகி; அரசியல்வாதிக்குக் கூட்டம் வருகிறது.

சாஸ்திரியைப்போல் 5, 6 மடங்கு சமஸ்கிருதம் படித்த பட்டேலை சாஸ்திரி ஏற்கமாட்டார். செட்டியாருக்கு 1 கோடியிருந்தால், நாயுடு 5 கோடி சம்பாதித்தாலும் செட்டியார் வாயால் நாயுடுவைப் பணக்காரன் என்று கூறமாட்டார். புரொபஸர் M.A. படித்தவர். பட்டம் பெறாமல் M.Phil.,Ph.D., D.Litt. பாடங்களைப் படித்தவரை புரொபஸர் தம்வாயால் படித்தவர்என ஏற்கமாட்டார். ரெட்டியார் பஞ்சாயத்து பிரஸிடெண்ட். அவர் குத்தகைக்காரன் M.L.A. ஆனாலும், M.P. ஆனாலும் அவனுக்கு பிரபலம் உண்டு என ஏற்கமாட்டார்.

சீனுவாச ராமானுஜம் எழுதியவற்றை இன்றுவரை உலகில் புரிந்து கொள்ள ஒருவரும் (Mathematician) இல்லை. அவர் கேம்பிரிட்ஜிலிருந்த பொழுது பெரிய மனது செய்து அவருக்கு B.A. பட்டம் கொடுத்தனர். பிறகு M.A.யும் கொடுத்தனர். (Establishment) ஏற்கனவே உலகில் செல்வாக்குடன் வாழ்பவன் அவனைவிட 100 மடங்கு பெரியவனையும் ஏற்கமாட்டான்என்பது அனுபவம். சர்ச்சில் நேருவை leader of a tiny minority சிறுபான்மையோர் தலைவர் என்றார். இவையெல்லாம் உண்மையானாலும், எதிரானவையும் உண்மை.

  • மாமியார் தாயார் போலும் இருக்கிறார்.
  • Max Muller ஐரோப்பியர் என்றாலும் Max Muller பவன் கட்டி, அவர் பாண்டித்யத்தைப் பாராட்டுகின்றனர்.
  • காமராஜை இராஜாஜி பிரபலமான முதல்வர் என்றும் கூறினார்.

வாழ்வில் ஆயிரத்திலொருவருக்கு நடப்பது அன்பர்கள் அனைவருக்கும் நடக்கும்.

நமக்கு எதிரி என்று ஒருவர் ஏற்பட்டுவிட்டால், அவர் வாயால் நல்ல பெயர் வாங்க முனைந்தால் அது அன்பனை அன்னைக்குகந்தவராக்கும்.

உங்கள் நாணயத்தை உலகம் மெச்சும்”,

உயிரை விட்டு ஸ்தாபனத்திற்கு உழைத்தீர்கள்எனப் பரம எதிரி அன்பர்களைச் சொல்யதுண்டு.

57. துரோகத்தைப் போற்று.

சர்வம் பிரம்மம் எனில் துரோகமும் பிரம்மம்.

அனுபவத்தில் கடந்தகால துரோகம் பெரிய காரியம் சாதித்ததை அறியலாம்.

பிறர் நமக்குச் செய்ததும், நாம் பிறருக்குச் செய்ததும் அப்பலன் கொடுத்தன.

ATM முதலாளியின் அனுபவம் தெளிவானது.

ஆழ்ந்து புதைந்துள்ள ஆத்மாவை துரோகம் மட்டுமே வெளியில் கொண்டு வரும்.

கொலை, கொடுமை, சூன்யம், துரோகம் அழிப்பதையும் காணலாம்.

பலன் பெரியது என்பது மட்டும் உறுதி.

துரோகம் செய்பவர் ஏதோ ஒரு சமயம் உயர்வதும் உண்டு; இது விதிவிலக்கு.

விலக்கு விளக்குவதுபோல் சொல்நயம் விளக்காது.

செய்பவர் மனநிலைக்கேற்ப பலன் வரும்.

சண்டிக்குழந்தையை அடித்து வளர்ப்பது நல்லது.

எந்த மனப்பான்மையுடன் அடிக்கிறோம் என்பதின் பலனை அடிப்பவர் பெறுவார்.

குழந்தை முன்னுக்கு வரும் மனப்பான்மை நல்லது.

துரோகம் ஒருவர் முன்னேறப் பயன்படும் என அறியாமல் செய்பவருக்கு

ஆழ்ந்த நல்ல எண்ணமோ, கெட்ட எண்ணமோ இருக்கலாம்.

பகவான் அன்னைக்குத் தடைகளை ஏற்படுத்தியவண்ணமிருந்தார்.

நல்லது என்ற அறிவில்லாமல் சுபாவத்தால் துரோகம் செய்து பலியானவர் உயர்ந்தால், துரோகம் செய்பவரும் உயர்வார்.

கெட்ட எண்ணம் கெட்ட பலனை அவருக்குத் தரும்.

T.E.Lawrence of Arabia அனுபவம் அடிப்படை உண்மை.

உண்மையில் ஆரம்பித்தால் உண்மை வளரும்.

எதில் ஆரம்பித்தாலும் அது வளரும்.

பொய்யில் ஆரம்பித்தால் பொய் வளரும்.

துரோகியை அன்னையாக அறிவது ஆத்மஞானம்.

துரோகி தம்மை உயர்ந்த கருவியாகவும் செய்யலாம்.

திருவுருமாற்றம் பெரியது; உலகம் அறியாதது. துரோகிக்குக் கிடைக்கும்.

எல்லோருக்கும் திருவுருமாற்றம் உண்டு.

துரோகியின் திருவுருமாற்றம் முடிவான பெரியது.

எந்த நேரம் உண்மையை உணர்ந்தாலும் பலன் உடனே வரும்.

மனம் துரோகத்தை நாடக்கூடாது.

எதிரியின் துரோகத்தைப் பாராட்டினால் துரோகம் வளரும்.

துரோகம் செய்வது மனிதரானாலும், வாழ்வானாலும் அதைச் சேவையாக

நினைப்பது திருவுருமாற்றத்திற்குரிய நினைவு.

எதுவும் நல்லதே.

துரோகம் பெரிய நல்லது.

58. பேயான மனிதனுக்கு அடிமையாகச் சேவகம் செய்.

சுயநலமிக்கும், பேயான மனிதனுக்கும் சட்டம் ஒன்றே.

ஒன்று ஐஸ், அடுத்தது ஐஸ்கிரீம்.

ஒன்று கூலிக்காரன்; அடுத்தது நரி பிடிக்கும் குறவன்.

நம்மை நாடி பேய் வருகிறதெனில் நம்முள் உள்ள பேய் அழைத்து வருவது அது.

பல முறை நம்மைப் பிறர் பேய்என்று கூறியிருப்பார்கள்.

ஒரு முறையாவது அப்படிச் சொல் வாராமலிருக்காது.

பொதுவாக அது நமக்குத் தெரிந்ததாக இருக்கும்.

என்னைக் கிளப்பாதே. நான் பேயாய்விடுவேன்என நாம் கூறுவது நினைவு வரும்.

வந்த பேய் உள்ளே உள்ள நான்என்பதை ஏற்பது யோகஞானம்.

அதை ஏற்க மனமில்லாதவர் அடுத்த வரி படிப்பது பலன் தாராது.

அதை ஏற்றபின் அவர் செய்வது எதுவும் நமக்கு எரிச்சல் தரக்கூடாது.

அரைக் கூட்டாளி 50 இலட்ச இலாபத்தில் 45 இலட்சம் கேட்பார். உனக்கு 5 இலட்சம் போதாதா என்பார். நியாயத்தை எதிர்பார்த்தால் இந்த disciplineக்கு வர முடியாது.

அவர் கேட்பது நியாயம். நானும் அப்படித்தான்என மனம் ஏற்க துறவியாலும் முடியாது. இந்த யோகத்தைத் துறவிகளால் செய்ய முடியாது. அவர்கள் சபிப்பவர்கள். எரிச்சலே வரக்கூடாது என்றால் கோபத்திற்கு இடமில்லை.

எதிரியின் அநியாயம் ஏற்றமிகு நியாயம்என 100 வருஷத்திற்கு முன்னிருந்த மருமகள், தொழிலாளிபோல் மனம் ஞானம் பெற்று, வணங்கி காத்திருந்தால் அவர் நிலை நம்நிலையாகும்; நம்நிலை அவர்நிலையாகும்.

அந்த நேரம் நம்முள் உள்ள பேயின் வீரியம் குறைந்திருக்கும். என்கூட்டாளி என்உயிரை எடுத்திருக்காவிட்டால், நான் பண்பாக மாறியிருக்கமாட்டேன்என முடிவில் தோன்றும்.

அப்பொழுது இலாபத்தில் 90% நாம் பெறும் தொழில் ஏற்படும்.

அநியாயம், ஆண்டவன் நியாயம்என மனம் ஏற்க வேண்டும்.

ஏற்பதே கடினம். செயல்படுத்துவது அதனினும் கடினம்.

நம் பொருளை அநியாயமாக எடுத்துப்போகும் நபரை நாம் பொறுத்துக் கொண்டிருந்தால் நம்மை அவர் திட்டிவிட்டுப் போவார்.

பொறுமை கடினம்.

கடினமான பொறுமை கனவிலும் கருதாத ஆன்மீகப்பலன் தரும்.

கணவனே பேயாவதுண்டு. மனைவிக்கு அந்த உரிமையுண்டு.

பெற்றோர் அதுபோல் நடக்க உரிமை கொண்டாடுவர்.

உரிமையை இழந்து, பொருளையும், மானத்தையும் எரிச்சல்படாமல் இழந்து, பொறுமையாக இருந்தால் பலன் உண்டு