சச்சிதானந்தம் = 9

சத் புருஷன்

சமுத்திரம்அனைவரும் சமம்அனந்தம்காலம்பிரம்மம்ஸ்தாணுசிவன்காளிவிவேகம்

                                 – ரிஷிகள் சொல்லாதது.

ஸ்ரீ அரவிந்தம்

(வாழ்வு இறைவனின் சக்தி)

பிரகிருதி புருஷனின் வெளிப்பாடு

உரிமையை அறிந்து கொண்டாடினால் உலகம் உன் காலடியில்.

  • உருவ வழிபாடு நம் நாட்டிற்குரியது.
  • ரூபங்களைக் கடந்த பிரம்மம் நம் நாட்டின் ஞானம்.
  • ரூபங்களைக் கடந்தது, குணங்களையும் கடந்தது.
  • அரூபி, நிர்குணி என பிரம்மம் வழங்குகிறது.
  • பிரம்மம் பிறந்தது நம் நாட்டில். ஆனால் நாம் அறிவதுபிரம்மஹத்தி‘ ‘அடபிரம்மமே.
  • ஏதோ ஒரு ரூபத்தில் பிரம்மம் அன்றாட வழக்கிலும் வந்துவிட்டது.
  • அது கொச்சை மொழி. ஞானம் பிரம்மத்தை எட்டாது எனக் கேள்விப்பட்டுள்ளோம்.
  • ஞானி பிரம்மத்தை எட்டுவார். அது சமாதியில் நடைபெறும். கண்டாலும், விண்டுரைக்க முடியாது.
  • சித்தித்தவரே பேச முடியாவிட்டால், நமக்கு அங்கு என்ன வேலை?
  • நாமே பிரம்மம் எனவும் கூறுகிறார்கள்.
  • ஸ்ரீ அரவிந்தர் பிரம்மத்தை வரம் கேட்டார். நம்மைப் போன்றவர்கள் உள்பட ஜடத்திற்கும் கேட்ட வரம்.

அந்த பிரம்மம் நம் வாழ்வில் சித்திக்க வேண்டும்.”

  • நாம் ஜடம், ஜடப்பிரம்மம், ஜடப்பிரம்மத்திற்கும் பிரம்ம ஞானம் உண்டு என்று நினைக்க முடியுமா?

உண்டு எனக் கூறுகூது ஸ்ரீ அரவிந்தம்

  • உண்டு என்பதே ஆச்சிரியமாக இருக்கிறது. நம்ப முடியவில்லை. பெறலாமா? பெற முடியுமா?
  • உண்டு என்ற பகவான் வழியும் கூறுகிறார். ஆனால் நம்மை வருந்தி அழைக்கவில்லை. அழைக்கவும் தயங்குகிறார். உண்டு, வழியுண்டு என்கிறார். வழியைக் கூறுகிறார்.

மனப்பூர்வமான தூய்மையான சரணாகதி அவர் வகுத்த வழி

  • உண்டு என்பதால் பலிக்குமா? வழியுண்டு என்பதால் கிடைக்குமா? வழி தெரியும் என்பதால் பின்பற்ற முடியுமா? ஏன் பகவான் நம்மை அழைக்கவில்லை? அழைத்தால் போக முடியுமா?
  • இறைவன் தேடுவது லீலையில் ஆனந்தம். நாமே இறைவன். மறந்துவிட்டோம். மறந்ததை நினைவுபடுத்துவது அருள். நினவுபடுத்தினால் நினைவு வருமா? நினைவு எழுந்து தேடுவது ஆனந்தம்.
  • தேடிக் கண்டுபிடிக்கும் முன், பிரம்மத்தை உணர வேண்டாமா? உணருமுன் தெரிய வேண்டாமா?
  • இதுவரை தெரிய முடியாது என்பதை சத்புருஷன் என்ற அத்தியாயம் தெரிவிக்கிறது.
  • பிரம்மம் தெரியாவிட்டால், அது சமுத்திரமாகத் தெரியும் என அறிவிக்கிறது.
  • சமுத்திரத்திற்கு நம்மீது அக்கறையுண்டு எனக் கூறுகிறது.
  • சமுத்திரம் நம் வாழ்வை சமுத்திரமாக்கும் எனவும் விளக்குகிறது.
  • சமுத்திரம் சமுத்திரமில்லை, அமைதியான ஸ்தாணு எனவும் மேலும் கூறுகிறது. ஸ்தாணு முடிவில் பிரம்மமே என்று நாம் அறிகிறோம்.
  • பிரம்மத்திற்கு எறும்பும், சூரியனும் சமம் எனவும் பேசுகிறது.
  • ஒரே சக்தி, சமமான சக்தி எறும்பை சிருஷ்டித்தது, அதுவே சூரியனை சிருஷ்டித்தது, அதுவே சூரியனை சிருஷ்டித்தது, நம்மையும் உற்பத்தி செய்தது.
  • பிரம்மத்திற்கு எல்லாம் சமம், சர்வம் சமம் எனத் தத்துவமாக விளக்குகிறது.
  • அகந்தையைக் கடந்து சமுத்திரத்தைக் காணலாம், சலனத்தைக் கடந்து ஸ்தாணுவைக் காணலாம், ரூபத்தையும், குணத்தையும், காலத்தையும், இடத்தையும், அகந்தையும், புறத்தையும் கடந்துசத் புருஷனை அடையலாம்.
  • சிருஷ்டியே தேவையில்லை எனில் சத்புருஷனைக் கடந்தும், பிரம்மமாகலாம் என நூல் கூறுகிறது.
    • பிரம்மமாகு முன் உணரலாம், உணர்வதற்கு முன் அறியலாம் (conception, perception, sensation) என இவ்வத்தியாயத்திலிருந்து அறிகிறோம்.
    • அறியும் நிலைகள் மூன்று intelligence,intution,integral experience.Integral experience என்பது நாமே பிரம்மமாவது.Intution என்பது ஞானத்தால் அறிவது. Intelligence என்பது பகுத்தறிவால் அறிவது.
    • ஞானத்தாலும் அறிய முடியாது என இதுவரை கூறியதை பகுத்தறிவால் அறிய முடியும் என்பது சத் புருஷனுடைய விளக்கம்.
    • இருப்பது சொத்து என மனிதன் அறிவான்.இல்லாதது சொத்து என்பது புது விளக்கம்.
    • இல்லாதது, இருப்பதை உற்பத்தி செய்யும் என்பது மனிதனுடைய நீண்டகால அனுபவம்.
    • எதுவுமேயில்லாத மனிதன் இந்த நாகரீக உலகத்தை ஏற்படுத்தியுள்ளான். அவனுடையது அறிவு.
    • அறிவே அனைத்தையும் சிருஷ்டித்தது. அறிவு அழிந்தபின் எழுவது ஞானம். ஞானத்திற்கு சக்தியுண்டு. ரூபம் உண்டு. குணம் உண்டு. ஞானமும், சக்தியும், ரூபமும், குணமும் அழிந்தபின் ஏற்படுவது பிரம்மம்.
    • எதுவுமேயில்லாத பிரம்மம், எல்லாப் பிரபஞ்சங்களையும் சிருஷ்டித்தது.
    • எதுவும் இல்லாவிட்டால், எல்லாம் இருக்கும் என்பது பிரம்மத்தை அறிவது அதுவே பிரம்ம ஞானம்.
    • எதுவுமே சக்தி, ரூபம், குணம் இல்லாத காரணத்தால், எல்லாவற்றையும் சிருஷ்டிக்கும் பிரம்மத்தை நாம் எப்படி அறியலாம்?
    • நமக்கும் எதுவுமில்லாவிட்டால் அகந்தை, அறிவு, காலம், சக்தி, குணம் நாமும் எதுவும் இல்லாத பிரம்மத்தை அறியலாம்.
    • நமக்கு என்ன இருக்கிறது?
    • ஜடமான உடலும், சத்தியமான வாழ்வும், அறிவுள்ள மனமும், அதைக் கடந்த ஆத்மாவும் நாம்.
    • ஜடமான உடல், ஜடமான பொருள்களை மட்டும் அறியும்.
    • வாழ்வு, வாழ்வுக்குரிய உணர்வுகளையும், உறவுகளையும் அறியும்.
    • மனம் அறிவுலக பொக்கிஷங்களை பெற விழையும்.
    • நாம் உடல் வாழ்ந்தாலும், உடலுக்குக் கட்டுப்பட்டவரில்லை என்றால் உடலைக் கடந்து செல்லலாம்.
    • உணர்வுமயமான உறவுகள் உற்சாகப்படுத்தாவிட்டால், உயிர் உணர்வைக் கடந்து செல்லும்.
    • அறிவு முக்கியம் எனில் அறிவு பயன்படும். அறிவே முக்கியம் என்றால் நாம் அறிவுக்கு அடிமையாவோம். அறிவுக்கு அடிமையாகாவிட்டால், அறிவையும் கடக்கலாம்.
    • அறிவைக் கடந்தால், ஞானமுண்டு. அறிவைக் கைவிட்டதுபோல், ஞானத்தைக் கைவிடலாமா?
    • பிரம்மத்தைத் தேடுபவனுக்கு ஞானமும் விலங்கு. பொன் விலங்கு எனலாம்.
    • ஞானம் சக்தி வாய்ந்தது. அதற்கு ரூபம் உண்டு. குணமும் உண்டு.
    • சக்தியையும், ரூபத்தையும், குணத்தையும் சிருஷ்டி என அறிவது அவற்றைக் கடக்க உதவும்.
    • அவற்றைக் கடந்தால், காலமும், இடமும் உள்ளன.
    • புறமான இடமும், அகமான காலமும் கடப்பதற்கு கடினம்.
    • இடத்தையும், காலத்தையும் கடந்தபின் அவற்றிற்குரிய புறமும், அகமும் நிற்கும்.
    • சத்தியமே புறத்திற்குரியது. சத் அகத்திற்குரியது.
    • சத்தியத்தை கடந்து புறத்தையும், ‘சத்தைக் கடந்து அகந்தையும் கடக்கலாம்.
    • அவற்றையும் கடந்தபின் எஞ்சி நிற்பது பிரம்மம்.
    • நாமே பிரம்மம் என்பதால், அவற்றைக் கடந்தபின் பிரம்மம் அறிவுக்குப் புலப்படும்.
    • அறிவுக்குப் புலப்பட்டது அகத்திற்கு தேவை என்ற ஆர்வம் பக்தியாக எழுந்தால் அறிவு ஞானமாகி பிரம்ம ஞானமாகும்.
    • ஞானத்திற்கு தேவைப்பட்டது ஆத்மாவிக்குரியது. ஆத்மாக அதனுடன் இரண்டறக் கலக்க வேண்டும் என்றால் ஞானம், அனுபவமாகும்.
    • அனுபவம் பூரண அனுபவமானால் (integral experience) பிரம்மம் சித்திக்கும்.
    • சித்தித்த பிரம்மத்தை ஏற்று, அதன்படி வாழ்வது தெய்வீக வாழ்வு.
    • அதை வாழ்பவன் Supramental  being சத்திய ஜீவன்.
    • ஸ்ரீ அரவிந்தர் நமக்காக பிரம்மத்தைக் கேட்ட வரம் அது.

வரம் பூரண சரணாகதியால்பலிக்கும்.