சச்சிதானந்தம் = 8

  • இல்லறத்தையோ, துறவறத்தையோ ஏற்பது பகுதி.
  • இரண்டையும் ஏற்பது முழுமை.

உபநிஷம் பரமாத்மாவையும், ஜீவாத்மாவுயம் (புருஷப் பிரகிருதி) கண்டது, ஜீவாத்மாவை பரமாத்மாவின் பகுதியாகக் கண்டது. சர்வம் பிரம்மம் என்ற பொழுது பிரகிருதியையும் பிரம்மமாகக் கண்டது உபநிஷம். எப்படி பிரகிருதி புருஷனிலிருந்து வந்தது என்று கேட்க நமக்குரிமையில்லை என்றது உபநிஷம். அதனால் நடைமுறையில் முடிவாக

மோட்சத்தை நாடியது. இதனால் உலகம் புறக்கணிக்கப்பட்டது. வேதரிஷிகள் உலகத்தைப் புறக்கணிக்கவில்லை. உலகத்தை பிரம்மமாகக் கண்டார்கள். கண்டவர்கள் கண்டதை ஏற்று அதன்படி வாழ்ந்தார்கள். பௌத்தர்களும், உபநிஷமும் ஜடம் வேறு, ஆன்மா வேறு என்றனர். ஜடத்தையும் ஆன்மாவையும் இணைப்பது சக்தி என்பது ஸ்ரீ அரவிந்தம். சக்தி ஆன்மாவிலிருந்து வருகிறது என்பது ஸ்ரீ அரவிந்தம். சக்தி சக்தியே என்பது விஞ்ஞானம். ஆன்மாவுடன் தொடர்பு உண்டா இல்லையா என்ற கேள்வியை எழுப்பி சித்சக்தி என்ற அடுத்த அத்தியாயத்தில் பதில் கூறுகிறார். தொடர்பு இல்லை என்ற முடிவுக்கு வந்தால் உபநிஷம் உண்மை. விஞ்ஞானி கூறுவதும் உண்மை. நாத்திகன் கூறுவதும் உண்மை. தொடர்புண்டு என்றால் வேதம் கூறுவது உண்மை. வாழ்வுக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள தொடர்பு வெளிவரும். அது நடந்தால் சத்திய ஜீவன் பிறப்பான். வாழ்வில் தோல்வியிருக்காது. நோய், துன்பம், வறுமை, மரணம் இருக்காது.

அகம்புறம்

அகம் என்பது புறம்

புறம் என்பது அகம்

புறம் அமைதியற்ற அகம்

அகம் சலனமற்ற புறம். அகமும் புறமும் ஒன்றே. அகத்திலிருந்து புறத்தைப் பார்ப்பவன் ரிஷி. புறத்திலிருந்து அகத்தைக் காண்பவன் மனிதன். அகத்தையும் புறத்தையும் காண்பது ஆன்மா. அகத்தையும், புறத்தையும் கடந்தது ஆன்மா. ஆன்மாவைக் கடந்தது பிரம்மம். நாமே பிரம்மம், பிரம்மமே நாம் என்றறிவது பிரம்ம ஞானம். (உபநிஷம் Vol.12 ஸ்ரீ அரவிந்தர்)

கீழிலிருந்து பார்க்கிறோம், சமுத்திரம் தெரிகிறது. அதற்கு மேல் ஸ்தாணு உள்ளது. பிரம்மம் அதற்கும் அடுத்த கட்டம். பிரம்மத்திலிருந்து சமுத்திரத்தைப் பார்த்தால் ஸ்தாணு தெரியும். இந்த ஸ்தாணு அதிவேகமான சுழற்சி. மனிதன் கீழிருந்து அதிகபட்சம் சமுத்திரத்தைத்தான் பார்க்கமுடியும்.

  • அகந்தையற்ற பார்வைக்கு சமுத்திரம் தெரியும்.
  • மனம் நிஷ்டையில் உயர்ந்து overmindக்குப் போய்ப் பார்க்கும் பொழுது தெரிவது சச்சிதானந்தம்.
  • அது புருஷோத்தமனாகத் தெரிகிறது.
  • மேலிருந்து பார்க்கும் பொழுது முதற்கட்டம் unknowable பிரம்மம் அறிய முடியாதது. அடுத்தது ஸ்தாணு, சமுத்திரம் ஆகியவை.

மேலேயிருந்து பார்ப்பது பிரம்மம். கீழேயிருந்து பார்ப்பது மனிதன். மனிதனும் பிரம்மமும் ஒன்று என்பது பிரம்மம் சித்திக்கும் பிரம்ம ஞானம். அது முழுபிரம்மம். ரிஷிகட்கு சித்திக்காத முழுபிரம்மத்தை மனிதனுக்குக் கொடுக்க அன்னை அவதாரம் எடுத்தார். அதைப் புரிந்து கொள்வது அன்னையைப் புரிந்து கொள்வதாகும். அன்னையை அப்படிப் புரிந்துகொண்டால் நம் வாழ்வை சமுத்திரம் நடத்தும். நாம் புரிந்து கொண்டதை ஏற்றுக் கொண்டால் நம் வாழ்வை அன்னை நடத்துவார். எதிர் முனைக்கு வந்தால் இன்று நம் வாழ்வை குடும்பம் நடத்தவும் நாம் அனுமதிப்பதில்லை.

குடும்பம் நம் வாழ்க்கையை நடத்த அனுமதிப்பது என்பது நாம் குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்று அதன்பிறகு அதற்கேற்றபடி நம் வாழ்வை குடும்பத்தையொட்டி நடத்துவதாகும். அப்படி நடந்தால் நாம் குடும்பத்தில் தன்மையாக இருப்போம். அதே போல் சமூகத்தை ஏற்று நம் வாழ்வை சமூகம் நடத்தினால் நாம் சமூகத்தின் சிகரத்திலிருப்போம். குடும்பத்தில் ஒவ்வொருவர் பொறுப்பையும் நாம் மனதால் ஏற்றால் அவர்கள் திறமை நம் வாழ்வில் வெளிப்படும். அது உண்மையானால் நாம் குடும்பத் தலைவராவோம். அதே போல் சமூகத்தின் எல்லா அங்கங்களோடு நாம் உணர்வால் தொடர்பு கொண்டு அதன் பொறுப்பை மனதால் ஏற்றுக் கொண்டால் சமூகத்தின் எல்லா திறமைகளும் நம் வாழ்வில் செயல்படும். நாம் சமுத்திரத்தை அறிந்து, ஏற்றுக் கொண்டால், சமுத்திரம் நம் வாழ்வை ஏற்று நடத்தும், அதன் முழுத் திறமையும் நம் வாழ்வில் வெளிப்படும். நாம் இறைவனின் கருவியாகி சமுத்திரத்தில் செயல்படுவோம். இதற்கடுத்த கட்டம் அன்னை. நமக்காக அன்னையை நாடாமல், அன்னைக்காக அன்னையை ஏற்றால், நம் வாழ்வில் அன்னையின் முழுத்திறன் வெளிப்படும். இது அன்னையுடன் நாம் ஐக்கியமாவதற்கு முன் கட்டம்.

நாமே பிரம்மம், நாமே அனந்தம் என்று புரியும் பொழுது நம்மைப்போல் அனைவரும் பிரம்மம், அனந்தம் என்று புரிகிறது. எனவே அனைவரும் சமம். பெரியது, சிறியது இல்லை.

நாம் அனந்தமாக இருப்பதால் காலத்தைக் கடக்கிறோம் காலத்தால் உற்பத்தியான கர்மத்தைக் கடக்கிறோம். காலத்தைக் கடந்து ஸ்தாணுவின் அமைதியை பிரம்மத்தின் அதிவேகம் அடைகிறோம். காளி நடனம் காலம். சிவன் நடனத்தின் மையம். மையம் என்பது ஸ்தாணு. ஸ்தாணு என்ற சிவனாகிய மையத்தைச் சுற்றி காளி என்ற காலம் நடனமாடுகிறது. அதுவே சிவனுடைய ஆனந்தத் தாண்டவம்.

காளியின் நடனம் மனிதனுக்கு இல்லறம். அது காலத்திற்குட்பட்டது. பிரகிருதி எனப்படும் இயற்கை (Becoming) ஆகும். துறவறம் என்பது நமக்கு ஸ்தாணு. அது காலத்தைக் கடந்தது (Being)

ஸ்ரீ அரவிந்தம் இல்லறம், துறவறம் ஆகிய இரண்டையும் கடந்த அன்னை வாழ்வை நமக்குக் கூறுகிறது. இது காலமும், காலத்தைக் கடந்ததும் சந்திக்குமிடத்தில் உள்ளது. Being of Becoming.

  1. இல்லறத்திலுள்ள மனிதனுக்கு தோல்வி, வறுமை, நோய் துன்பமுண்டு.
  2. துறவிக்கு அவற்றைக் கடக்கும் திறனுண்டு.
  3. அன்னை வாழ்வில் தோல்வியில்லை, நோயில்லை, துன்பமில்லை.

The Unknowable- அப்பாலுக்கும் அப்பால் பிரம்மம்– The Absolute-That-The Unmanifest- சச்சிதானந்தாஆதி– Origin- The Infinite Eternal.

  • மேலே போகப் போக ஜடத்தன்மை குறைந்து சூட்சுமமாகிறது.
  • சூட்சுமம் சத்திய ஜீவியத்தில் காரணமாகிறது. (causal-plane-gross-subtle-causal)
  • In the Being,Time and Space vanish.. சத்தில் காலமும், இடமும் இல்லை.
  • In the Being there is no subjectivity or objectivity.அகம் புறம் சத்தில் இல்லை.
  • காலம் இடத்தைக் கடந்தால், அகம் புறம் என்பவற்றை இழந்தால் சத் மீண்டும் பிரம்மமாகும்.
  • காலம் இடத்தைப் பெற்றால், அகம் புற நிலைகளை ஏற்றால் சத்., சித்தாகும், சத்தியமாகும்.
  • சத் நம்மை அசத்திற்கு அழைத்துச் செல்லும்.
  • சத் பரிணாம முடிவில் பிரம்மத்திற்கும் நம்மைக் கொண்டு போகும். அப்பொழுது நாம் பிரம்மமாகிறோம்.
  • மேலே போகப் போக பிரச்சினையில்லை, ஜடத்தன்மை குறையும், சூட்சுமமுமில்லை, ரூபம் மறைகிறது. குணத்தை இழக்கிறோம், சக்தி தன் நிலையிழந்து சத்தாகி, சத் பிரம்மமாகிறது. காலம், இடம், காரணகாரியம்; அகம், புறம், ஞானம், ஆனந்தம், ஜீவியம் ஆகியவை அற்றுப் போகின்றன. ஜீவியமும் அற்றுப் போன ஜீவன் சத் எனப்படும். அதை எண்ணத்தால் நினைக்க முடியுமா?
  • Thought seeks the Absolute எண்ணம் பிரம்மத்தை நாடுகிறது என்கிறார் பகவான்.
  • எண்ணம் பிரம்மத்தை எட்டினால் பிரம்மம் எண்ணத்தில் சித்திக்கிறது.
  • சத்என்ற எண்ணத்தில் பிரம்மம் சித்தித்தால்சத்உண்டாகிறது.
  • ஜடம் என்பதை பகவான் சத் தன் எண்ணத்தால் ஏற்படுத்தியது என்கிறார்.
  • எண்ணத்திற்கு எட்டாதவன் என ரிஷிகள் கூறினார். பகவான் எண்ணம் பிரம்மத்தை எட்டும் என்கிறார்.
  • சத்திய ஜிவியம் நிலையாக பிரம்மத்தைத் தொட்டபடியிருக்கிறது என்கிறார் பகவான்.
  • சத்திய ஜீவியம் பிரம்மத்துடன் நிலையான தொடர்புள்ளது. சத் தன்னை comprehend புரிந்து கொள்ள முயல்வதால் சத்திய ஜீவியம் உற்பத்தியாயிற்று.
  • சத் சத்தியமாகி ஜீவியம் பெறுவதால் சத்திய ஜீவியம் எழுகிறது. Truth-Consciousness (வேகத்தின் சொல்)
  • Truth,Vast,Rhythm. சத்தியம், ரிதம், பிருஹத் என்பது சத்திய ஜீவியம்.
  • பிரம்மம் சத்திய ஜீவியம்வரை நேரடியான தொடர்புடனிருக்கிறது.
  • அத்தொடர்பை ஏற்படுத்துவது எண்ணம்.
  • அதன் அடிப்படை சுமுகமான எண்ணம்.
  • போட்டியழிந்து, பொறாமையழிந்து ஏற்படும் சுமுகத்தை எண்ணம் ஏற்றால் சத்திய ஜீவியம் வெளிப்படும்.
  • சத்திய ஜீவியம் ஜடத்திலும் வெளிப்படும்.
  • பிரம்மம் ஜடம் வரை சித்திக்கும், பகவானுக்கும், அன்னைக்கும் சித்தித்தது.
  • சித்திப்பதின் அடிப்படை சுமுகம்.
  • எண்ணத்தால் இவற்றை எட்டலாம். இது வேறுவகையான எண்ணம். சொல்லாலானது அல்ல.மௌனத்தையும் கடந்தது. மௌனத்திற்குப் பின்னாலுள்ள மௌனத்தைச் சேர்ந்தது.
  • பிரம்மத்தை எண்ணத்தால் சிந்திக்க முடிவது, மனத்தில் பிரம்மம் சித்திப்பது ஆகும்.
  • இதற்கு அத்தியாவசியமான அம்சங்கள். சத்தியம், சுமுகம், ஆனந்தம்.
  • போட்டியை மனம் ஒத்துழைப்பாக்கி, பொறாமை பெருந்தன்மையாக திருவுறுமாற்றி, வலியை பிறருக்கு நாம் கொடுக்கும் வலியை ஆனந்தமாக்கி பிறருக்கு ஆனந்தம் கொடுத்து பிரம்மத்தை மனதில் கொண்டு வந்தால் சத் சத்திய சுமுக ஆனந்தம் வழி நம் மனதிலுதிக்கும்.
  • இதை நாம் செய்ததற்கு அடையாளம் நமக்கு போட்டி, பொறாமை, பிரச்சினை, வலியிருக்கக்கூடாது. அடுத்த கட்டத்தில் எவரும் நம் மீது பொறாமை, போட்டி, வலியை திணிக்க முயலக்கூடாது.
  • நாம் சுமுகத்திற்கு உற்பத்தி ஸ்தானமாக இருக்கவேண்டும்.
  • It is by self-giving that one grows into something. பிரம்மத்திற்கு தன்னை அர்ப்பணம் செய்பவர் பிரம்மமாவார். பிரம்மம் குணம், எண்ணம் அற்றது என்பதால் நமது குணம், எண்ணம் அற்ற பிறகே நாம் நம்மை பிரம்மத்திற்கு அர்ப்பணம் செய்ய முடியும்.
  • அன்னைக்கு செய்யும் சமர்ப்பணம் நம்மை பிரம்மத்துடன் தொடர்பு கொள்ளச் செய்யும்.
  • Mother is an organisation of Brahmic consciousness in the evolution.. சிருஷ்டியிலும் பரிணாமத்திலும் பிரம்மம் செயல்பட ஏதுவான அமைப்பாக ஸ்தாபனமாக அன்னையிருக்கிறார்.
  • அன்னையின் அவதார நோக்கம் சிருஷ்டியில் உள்ள பிரம்மத்தைத் தன்னுட் கொண்டது.
  • பிரம்மம் வேறு, சிருஷ்டியிலுள்ள பிரம்மம், பரிணாமத்திலுள்ள பிரம்மம் ஆகியவை வேறு.
  • மனம் பிரம்மத்தைத் தொடும் பாக்கியம் பகவான் தருவது.
  • பகுதியான பிரம்மத்தை விளக்க முடியாது பொழுது முழுமையான பிரம்மத்தை சிந்தனைக்கு எட்ட வைத்த அத்தியாயம் சத் பிரம்மம்.
  • மனித ஹிருதயம் சமுத்திரம்.
  • சமுத்திரம் நம் வாழ்வை நடத்தக் காத்திருக்கிறது.
  • அகந்தை அழிந்தால் சமுத்திரம் தெரியும்.
  • சமுத்திரம் வாழ்வை நடத்தினால் ஸ்தாணு தெரியும்.
  • ஸ்தாணுவை உள்ளே கண்டால் பிரம்மம் தெரியும்.
  • ரிஷிகளுக்கெட்டாத பிரம்மம் நமக்கு சித்திக்க வந்தவர் அன்னை.
  • உலகில் எவர் பெறுவதும் உலகம் பெறுவதேயாகும்.
  • உலகிலுள்ள அத்தனையும் நாம் பெற அவதாரமெடுத்த சூட்சும ஸ்தாபனம் அன்னை.
  • பெரியதும் சிறியதும் ஒன்றே.
  • அகம் காலம், புறம் இடம்.
  • காலத்திற்குரிய அனந்தம் பிரம்மத்திற்குரியது. ஜடம் முதல் சித் வரை அனைத்துக்கும் உரியது.
  • சிவன் துறவறம், காளி இல்லறம். இவற்றை ஏற்பது யோகம். அறிவது விவேகம்.
  • சத்தியத்தை சத்தியமாக ஏற்பவருக்கு பிரம்மம் சித்திக்கும்.
  • அசுரன் பொய்யைக் கைவிட்டால் உலகத்திற்கு குரு ஆவான்.
  • எல்லாவற்றிற்கும் உள்ள அனந்தம் பணத்திற்கும் உண்டு.
  • நாம் அன்னை யார் என உணர்ந்தால் அன்னை நம்மை பிரம்மமாக்குகிறார்.

நான்

  • நான்வளருவது வழக்கம்.
  • ஞானம்நான்என்பதை அழிக்கவல்லது.
  • நான்ஞானத்தை, தான் வளரப் பயன்படுத்தும்.
  • நான்இறைவனையும் தனக்குப் பயன்படுத்தும்.
  • நான்நம் கண்ணுக்கு அகப்படாது.
  • நான்இருப்பதைக் காண முடிவது பெரிய ஞானம்.
  • ஞானத்தைநான்என்பதற்கு கருவியாக மறுப்பது sincerity உண்மை.
  • ஞானம் வந்து அதுநான்அழிய உதவுவது அடக்கம்.
  • சரணாகதி எந்த வழியிலும்நான்வளரக்கூடாது.
  • சரணாகதியால்நான்அழிவது பூரண யோகம்.
  • நான்என்பதை அழிக்கும்நான்உலகில்லை.
  • ஆத்மா மட்டுமேநான்அழிய உதவும்.
  • ஆத்மாவும்நான்என்பதற்கு பலியாவதை ஆணவ மலம் spiritual ego என்றும் எனவும் கூறுவர்.
  • சைத்தியப் புருஷனுக்குநான்இல்லை. ‘நான்போன பின் வருவது சைத்தியப் புருஷன்.
  • சைத்தியப் புருஷனை சரணாகதியால் மட்டும் அடைய முடியும்.

சத் பிரம்மம் ஸ்ரீ அரவிந்தம்

விவேகம்

  • சிவனையும் காளியையும் ஏற்பது விவேகம்.
  • காளி சிவனுடைய சக்தி என்று அறிவது சூட்சுமம்.
  • நாம் பொறாமைப்படுகிறோம், போட்டி போடுகிறோம், அதைவிட்டு மனிதர்களுடன் தொடர்பு கொள்வது விவேகம். தொடர்பைப் புரிந்து கொள்வது அதிர்ஷ்டம்.

தொடர்பு புரிய நாம் தூசி என்ற அடக்கம் வேண்டும்.