- செயல் அடங்குவதால் வாழ்வு ஏற்படுகிறது.
- ஆர்ப்பாட்டம் அடங்கினால் மனம் ஏற்படுகிறது.
- சிந்தனை அடங்கினால் சத்திய ஜீவியத்திற்குச் செல்லலாம்.
- ஞானத்தைத் தேடவில்லை என்றால் ‘சித் ஆகிறோம்.
- ஆனந்தத்தையும் தேடவில்லை என்றால் ‘சித் ஆகிறோம்.
- தன்னை உணரத் தேவையில்லை என்றால் ‘சத் ஆகிறோம்.
- நம்மை வெளிப்படுத்த அவசியம் இல்லை என்றால் அல்லது நாம் இருக்கவேண்டாம் என்றால் பிரம்மம் ஆகிவிடுகிறோம்.
1. காலமும் இடமும்
இடம் என்பது புறம்.
அகம் என்பது காலம்.
புறத்தைக் கடக்கலாம். (உ.ம்) வெளியிலுள்ள ஜடப்பொருட்களை நகர்த்தலாம், தூக்கலாம். அகம் என்பது உள்ளே என்பதால் அகத்தைக் கடக்க முடியாது. அது நம்மை நாமே தூக்குவது போல் ஆகும். யோகியால் அது முடியும். அதுபோல் காலத்தைக் கடப்பது என்றால் கடந்த காலம் எதிர்காலம் நிகழ்காலம் சேர்ந்தது காலம் என்பதால் கடந்ததை நினைக்காமல் வருவதை எதிர்பார்க்காமல் நிகழ்காலத்தில் நாம் நம்மை மறந்துவிட்டால் நாம் காலத்தைக் கடப்பதாக அர்த்தம்.
கடந்ததைக் கைவிட வழி : வேலையை நாம் மேலோட்டமாகச் செய்கிறோம். வேலையை முழு ஈடுபாட்டுடன் நாம் செய்வது இல்லை. (உ.ம்) சமைக்கும் போது பேசுவது T.V. பார்த்துக் கொண்டே சாப்பிடுவது.
2. பிரம்மம் என்பது சொல்லுக்கு அகப்படாது. அதை அடையலாம். விளக்க முடியாது என்று வேதகாலத்திலிருந்து இன்று வரை கூறுகிறார்கள். ஆனால் அதையும் விளக்கலாம் என்று பகவான் கூறுகிறார். விவரிக்கலாம் என்கிறார். அதை விளக்கும்போது ஆன்மா வெளியில் வந்து கேட்டுக் கொள்ளும். பிறருக்கு ஆன்ம விளக்கம் கொடுக்க முடியும் என்பவரால் பிரம்மத்தை விளக்க முடியும். குரு சிஷ்யனுக்குப் பிரம்மத்தை மௌனமாக விளக்கலாம். சொல்லால் சொல்ல முடியாது.
சத், சித், ஆனந்தம் என்பது பிரம்மம். களி மண்ணிலிருந்து பானை செய்கிறோம். பானை செய்ய களிமண் தேவை. துணி தைக்க நூல், ஊசி தேவை. இவை எல்லாமே ஜடப்பொருட்களுக்கு உண்மை. கதை சொல்ல கற்பனை தேவை. இதற்கு ஜடப்பொருள் தேவையில்லை. அறிவு கண்ணுக்குத் தெரியவில்லை என்றாலும் அறிவால் பேசும் பேச்சு காதிற்குக் கேட்கும். அறிவு ஜடத்தைவிட உயர்ந்தது. சூட்சுமமானது. ஆன்மா அறிவைவிட உயர்ந்தது. ஜடத்தில் உற்பத்தியாவதைவிட அறிவில் உற்பத்தியாவது நீண்டகாலம் இருக்கும். அறிவு உற்பத்தி செய்தால் ஞானமுடையதாக இருக்கும். அறிவுக்கே எட்டாதது ஞானம். கண்ணுக்குத் தெரியும் பானை, கண்ணுக்குத் தெரியாத கதை ஆகியவற்றை கடந்தது ஆன்மா. ஆன்மா உற்பத்தி செய்வது ஞானம். ஞானம் உற்பத்தி செய்வது தத்துவம். ஆன்மா என்பது சத்தியத்திற்கும் சத் புருஷனுக்கும் இடையில் உள்ளது. அறிவு கண்ணுக்குத் தெரிவது இல்லை. ஆன்மா அறிவிற்குத் தெரிவது இல்லை.
ஆன்மாவை உற்பத்தி செய்தது சத் புருஷன். அது அறிவு, உணர்வு இரண்டிற்கும் தெரியாது. அந்த சத் புருஷனை உற்பத்தி செய்தது பிரம்மம். அதைவிடப் பெரியது. எவ்வளவுக்கு எவ்வளவு தெரியாமல் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பெரியது. தெரியாததைத் தெரியவைப்பது அறிவு.
1. முரண்பாடு உடன்பாடு
மனிதனுக்கு அவன் திறமை அவனையறியாமல் தெரியாமல் வெளிப்பட வேண்டும். நம் திறமையை வெளிப்படுத்தும் அறிவே நமக்கு இருப்பது இல்லை. திறமை வெளிப்பட்டால் அவன் பெரிய மனிதனாக வருவான். திறமை உச்சகட்டத்தில் பரிமளிக்க நம் குறைகள் தெரிவது அவசியம் அவற்றை விலக்கவேண்டும். நம் குறையை மற்றவர்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்பதை ஏற்று நம் குறையை உணர்ந்தால் நம் குறை நிறைவாகத் திருவுருமாறிவிடும். அதுவே முரண்பாட்டை உடன்பாடாக மாற்றுவது நம் குறை நிறைவாகத் திருவுறுமாறிவிடும். அதுவே முரண்பாட்டை உடன்பாடாக மாற்றுவது ஆகும். பொய் சொல்லுவது இல்லை என்ற முடிவை எடுத்தால் 10 மடங்கு வருமானம் வரும். 10 மடங்கு வருமானம் யாருக்கு வருகிறதோ அவர்களிடம் உண்மை இருக்கிறதாக அர்த்தம்.
2. நாத்திகனின் மறுப்பு
ஜடமும் ஆன்மாவும் ஒன்று. பொருட்களை ஜீவனுள்ள பொருட்களாகக் கருத வேண்டும். நாம் வீடு என்றால் பொருட்களை (ஜடம்) அஸ்திவாரமாக வைத்திருக்கிறோம். ஆன்மாவை அஸ்திவாரமாகக் கொள்ள ஆன்ம விழிப்பு வேண்டும். ஆன்ம விழிப்பு என்றால் என்ன? ஒரு வேலை செய்யும்பொழுது ஆன்ம விழிப்பு இருக்கிறதா என்று தெரியவேண்டும். மனச்சாட்சியைக் கவனிப்பது போல் ஆன்மாவைக் கவனிக்கத் தெரியவேண்டும். ஆன்ம விழிப்புள்ளவர் இனிமையாகப் பேசுவார்கள். உண்மையாகப் பேசினால் ஆன்மாவில் இனிக்கும். கடுமையான சொல் வந்தால் ஆன்மா கறுப்பாக இருக்கும்.
சத் புருஷன்
மனதில் எண்ணங்கள் இருக்கின்றன. அறையில் காற்று இருக்கிறது என்றால் காற்று எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறது. உலகில் உள்ள காற்று நம் அறையிலும் இருக்கிறது. நம் உடல் உள்ள எல்லாப் பாகங்களிலும் காற்று இருக்கிறது. காற்று எப்படிப் பரவியிருக்கிறதோ அப்படி எண்ணங்கள் பரவியுள்ளன. அறையில் உள்ள காற்றை எப்படி வெளியேற்ற முடியாதோ அதைப்போல் நம் மனதிலுள்ள எண்ணங்களை வெளியேற்ற முடியாது. அறையில் உள்ள காற்றை அகற்ற (Vacuum) மெஷின் வைத்து அகற்றவேண்டும் அதற்குரிய நுணுக்கத்துடன் அம்முறையைக் கையாள வேண்டும். அதற்கு நாம் விஞ்ஞானியாகவோ, இன்ஜினீயராகவோ இருக்கவேண்டும். மனத்திலுள்ள எண்ணத்தை வெளியேற்ற நிஷ்டையை மேற்கொள்ளவேண்டும். அவை காற்றில்லாமலிருப்பதும், மனம் எண்ணமில்லாமலிருப்பதும் ஒன்று. விஞ்ஞானி அறையில் காற்றை அகற்ற வேலை செய்ய வேண்டும். யோகி அதுபோல் நிஷ்டையில் ஜபத்தை மேற்கொள்ளவேண்டும். 18 வருஷ தவத்தில் மௌனம் பலிக்கும் என்கிறார்கள். இந்த சித்தியை சமாதியைத் தரிசிப்பவருக்கு அன்னை வழங்குகிறார். இப்படி ஒரு விஷயமிருப்பதும் நாமறியோம். நாம் இவற்றை எல்லாம் அன்னையிடம் கேட்பதில்லை. இவையெல்லாம் பெற நாம் அன்னையின் கட்சியில் மெம்பராக இருக்கவேண்டும். அசைபோடும் மனம், அலைபாயும் எண்ணமுள்ள வாழ்வில் உறுப்பினராக இருக்கிறோம்.