பிரம்மத்தைப் பற்றிப் பேச பிரம்மம் சித்தித்தவரால் மட்டுமே பேச முடியும் என்கிறோம். ஆனால் சித்திக்காதவன் பேசுகிறான் என்றால் அவனுக்கு அந்தப் பிரம்மம் சித்திக்கும் என்று அர்த்தம். (வேதம், உபநிஷம் எல்லாம் ரிஷிகள் மனத்தால் பிரம்மத்தின் பகுதியைச் சமாதியில் கண்டனர். பகவான் சத்திய ஜீவியத்தால் முழுப் பிரம்மத்தையும் விழிப்பில் கண்டார். கண்டவரே விளக்க முடியாது என்றதை பகவான் காணாதவரும் விளக்கும் வகையில் கூறுகிறார். எந்த விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டுமானாலும் அனுபவத்தால் மட்டுமே பேச முடியும். பிரம்மம் என்னும் இடத்தில் அது சித்தித்தால் கூட பேச முடியாது. உரிமை இல்லாதவர்களுக்கு உரிமை வந்து இருக்கிறது. அந்த உரிமையைத் தகுதியால் பெற்றுக் கொள்ளவேண்டும். நவீன சாதனங்களை (பேனா முதல் T.V. வரை) கண்டுபிடிப்பது விஞ்ஞானி, உற்பத்தி செய்வது வியாபாரி, பயன்படுத்துவது பொதுமக்கள். விஞ்ஞானம், வியாபாரம், சேவை சேர்ந்து எதுவும் தெரியாத பொதுமக்களுக்கு எல்லாவற்றையும் அனுபவிக்கும் வாய்ப்பைத் தருகின்றன. அதை விலை கொடுத்து வாங்க வேண்டியதுதான் நமது கடமை. அந்த வாய்ப்பு அத்துடன் முடியவில்லை. நாமும் வியாபாரம் செய்யலாம். நாமும் உற்பத்தி செய்யலாம். நாமும் விஞ்ஞானத்தைக் கற்கலாம். புதுப்பொருட்களைக் கண்டுபிடிக்கலாம் என்பது உலகத்திலுள்ள நிலைமை. அதேபோல் ஸ்ரீ அரவிந்தர் கண்டுபிடித்ததன் பலனை நாம் பிரார்த்தனையால் அனுபவிக்கலாம். அவர் எழுதிய நூல்களைப் படித்துப் புரிந்து கொள்ளலாம். பிறருக்கு எடுத்துச் சொல்லலாம். யோகத்தை மேற்கொண்டு நாமே சத்திய ஜீவியத்தை அடையலாம். பிரம்மத்தை அடையலாம். பயம் தேவையில்லை. தடை ஏதுமில்லை. முயற்சிக்குரிய பலனுண்டு. முழுப்பலனுக்கும் உரிமையுண்டு. நமக்குச் சுதந்திரம் வந்தவுடன் நாட்டில் அனைவருக்கும் பிரதம மந்திரியாகும் உரிமை வந்துவிட்டது. ஆனால் அந்தத் தகுதியை ஏற்படுத்திக் கொண்டால் நாட்டில் ஜனாதிபதியாகும் வாய்ப்பு எல்லோருக்கும் உண்டு. Bank ஏஜெண்ட் பணம் தர முடியாது. அவரிடம் சொந்தமாகப் பணமில்லை. ஆனால் இருக்கும் பணத்தை லோனாகத் தர முடியும். பணக்காரன் இல்லாதவனுக்குத் தொழில் ஆரம்பிக்க பணம் தரமாட்டான். தந்தாலும் அது திரும்பி அவர்களுக்கு வராது. ஆனால் பணமே இல்லாத ஏஜெண்ட்டுக்குப் பணம் தரக்கூடிய (power) திறமை வந்து உள்ளது.
Intuition ஞானம். Reason அறிவு. வேத ரிஷிகள் ஞானத்தால் பார்த்தார்கள். சிஷ்யனுக்கு ஞானம் வந்தபின்தான் புரியும் என்பதை சிஷ்யன் ஏற்றுக் கொள்கிறான். உலகிலுள்ளவர்களில் கொஞ்சம் பேருக்குத்தான் அந்தப் பக்குவம் உண்டு. அவர்களுக்குப் புரியும். ஆனால் அறிவால் அதைக் காண்பிப்பது, அதிலுள்ள பெரிய விஷயம் என்னவென்றால் உலகத்து அறிவு ஒரு ரிஷிக்கு ஞானமாக வருகிறது. உலகத்துப் பணம் தான் பெரிய செல்வருக்கு வருகிறது. அதாவது ஒரு கம்பெனி என்றால் 1000 பேர் உழைத்தால்தான் கம்பெனி முன்னேறும். அந்த முதலாளி செல்வராகிறார். அந்தச் செல்வந்தர் என்ன முடிவு பண்ணவேண்டும் என்றால் அந்தப் பணம் எல்லோரும் பெற வேண்டும் என்ற முடிவு செய்தால் அவர் ஆண்டவருக்கு உரியவர். சர்க்கார் ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்தி Bank என்ற ஒன்றை ஏற்படுத்தி பணக்காரரின் பணத்தை அதில் சேமிக்க வைத்து, அந்தப் பணக்காரரின் பணம் பத்திரமாக இருக்கவும், அது மற்றவர்களுக்கு உபயோகப்படும் விதமாக ஏஜெண்ட் செயல்படுவதுபோல் பகவானின் பிரம்மம் சித்திக்காதவர் பிரம்மத்தைப் பற்றிச் சொல்கிறார் என்றால் பகவான் அந்த உரிமையை எல்லோருக்கும் அளிக்கிறார் என்று அர்த்தம். மனத்தின் உற்பத்தி ஸ்தானம் Supermind. நாம் அதிலிருந்து வந்ததை மறந்துவிடுகிறோம். Mindக்கு, உண்டான குறுகிய பார்வையிலிருந்து விசாலமான பார்வைக்குப் போக நிஷ்டையில் தான் போக முடியுமே தவிர கண்ணைத் திறந்து போக முடியாது. தன்னை மறந்த நிலையில் பிரம்மத்தைப் பார்த்ததால் அது மறந்துவிடுவதால் (கனவு. மறந்துவிடும்) அதைச் சொல்ல முடியாது. மனம் Supermind-இன் பகுதி. அதை ஏற்ற பிறகு கண் மூடாமல் அங்குப் போகலாம். கண் மூடினால் போக முடியாது. தியானம் என்பது கூடாது. விழிப்பாக இருக்கவேண்டும். பகவான் தானம் அந்தப் பொறுப்பை ஏற்று ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்தினார். அந்த ஸ்தாபனம் MOTHER. நாம் அன்னை அன்பர்களாக ஆனபின் அந்தப் பிரம்மத்தைப் பற்றி பகவான் நமக்குச் சொல்வது புரியும். அதை நாம் பிறருக்கு எடுத்துச் சொன்னால் புரியும். Bank எப்படி ஒர ஸ்தாபனமோ அதை எப்படி சர்க்கார் ஏற்படுத்தியதோ அதுபோல் அன்னை என்ற ஸ்தாபனத்தை ஏற்படுத்தி நம்மை எல்லாம் ஏஜெண்டாக ஏற்படுத்தி பிரம்மத்தைப் பற்றிச் சொல்லக் கூடிய தகுதியை அளிக்கிறார். உலகத்து ஞானமும், சொத்தும் (செல்வம்), ஆனந்தமும், திறமையும், அறிவும், சக்தியும் கொஞ்சம் பேருக்கு மட்டும் பயன்படாமல் உலகத்திலுள்ள அனைவருக்கும் பயன்படும் ஸ்தாபனம் ஸ்ரீ அன்னை. அந்த ஞானத்தை இந்த அத்தியாயம் மூலமாக பகவான் நமக்கு அளிக்கிறார். அத்திறமையை, ஞானத்தை பகவான் எல்லோருக்கும் கொடுக்கிறார். அன்னை மூலமாகவே நாம் பெற்றுக் கொள்ள முடியும். அதனால் தான் (பகவான்) அன்னை இல்லாமல் ஸ்ரீ அரவிந்தர் இல்லை என்று சொல்கிறோம். அகந்தையின் பார்வைக்கு இந்த பிரம்மமோ. சச்சிதானந்தமோ, ஸ்தாணுவோ, சத் புருஷனோ தெரியாது. உலகத்தில் யார் எதைப் பெற்றுக் கொண்டாலும் அது உலகத்தின் சொத்து. அது எல்லோருக்கும் உரியது. சுயநலமான பார்வைக்கு அன்னை தெரியா. சுயநலமற்ற பார்வைக்கு முதலில் சமுத்திரமும், இரண்டாவதாக ஸ்தாணுவும் அடுத்தாற்போல் சச்சிதானந்தமும் முடிவான பிரம்மமும் தெரியும். சிருஷ்டியின் அமைப்பு எப்படி என்றால் ஒன்று உற்பத்தி ஆனால் அது திரும்பவும் பழைய நிலைக்குப் போகாது. (அரிசி சாதமாக ஆனபின் திரும்ப அரிசியாவது இல்லை). ஒவ்வொரு நிலைக்கும் ஒரு முறை உண்டு. அரிசி சாதமாக உலை கொதிக்க வேண்டும். ஆனால் பகவான் திரும்பப் போகமுடியும் என்கிறார். அது பரிணாமம். சாதம் அரிசியாக முடியுமா என்றால் முடியும். அந்த சித்தி கிடைத்தவருக்கு முடியும். எப்படி? குணம் இல்லாத பிரம்மம் குணத்தை ஏற்று சத் புருஷனாகிறது. அது குணத்தை கடந்ததால் பிரம்மமாகலாம். (மனம்) பகுதியான மனம் பகுதியை விட்டு முழுமையை மேற்கொண்டால் மீண்டும் சத்திய ஜீவியமாகலாம் என்பதை பகவான் சொல்கிறார். கர்மம் என்பது குணத்தால் ஏற்பட்டது. குணத்தை விட்டுவிட்டால் கர்மம் கரைந்து விடுகிறது. வறுமை சில குணக்குறைபாடுகளால் வந்துவிட்டது. வறுமைக்கு உண்டான குணத்தை விட்டுவிட்டால் செல்வம் வந்துவிடும். எந்தக் குணத்தால் நமக்கு வறுமை வந்ததோ அதை ஆராய்ந்து அந்தக் குணத்தை இன்று விட்டுவிட முடிவு செய்து விட்டுவிட்டால் செல்வம் வந்துவிடும். ஆன்மா அகந்தையை ஏற்றதால் சமுத்திரம் தெரியவில்லை. சமுத்திரம் என்றால் என்ன? அது எங்கு உற்பத்தியாயிற்று? (உதாரணமாக) படிப்பு இல்லாதவனுக்கு சட்டம் தெரியாது. அவனுக்கு உள்ள உரிமைகளை அறியமாட்டான். வாக்குரிமை என்றால் என்ன? என்று அவனுக்குத் தெரியாது. சர்க்கார் தரும் சந்தர்ப்பங்களும், சமூகம் அளிக்கும் அளவு கடந்த வாய்ப்புகளும் அவனுக்குத் தெரியாது. அவன் தன்னையும், தன் குடும்பத்தையும் தான் பிறந்து வளர்ந்த சந்தர்ப்பங்களையுமே அறிவான். அவனுடைய பிள்ளை கல்வி கற்று கவர்னர் ஆகலாம் என்று கனவில் கூடப் புரியாது. தலைவனாகி M.L.A.ஆகும் உரிமை அவனுக்குண்டு என்று யார் சொன்னாலும் நம்பமாட்டான். அறியாமை உள்ளவரை சமூகத்தின் விஸ்வரூபத்தை அவன் காண முடியாதது. அதே போல் அகந்தை உள்ளவரை நமக்கு சமுத்திரம் இருப்பதோ. நாமே சமுத்திரம் ஆகலாம் என்பதோ அதைக் கடந்த மூன்று நிலைகளோ (ஸ்தாணு, சச்சிதானந்தம், பிரம்மம்) அவனுக்குக் கனவிலும், கற்பனையிலும் வருவது இல்லை. அறியாமை எளியவன் கண்ணை மறைப்பதுபோல், அகந்தை ஆன்மீக உண்மைகளைக் காணமுடியாமல் தடுக்கிறது. சமுத்திரம் என்பது வாழ்வில் முடிவில்லாத ஆன்மீக வாய்ப்புகள். அந்த அலைகள் நம்மைச் சுற்றி ஏராளமாக எந்த நேரமும் இருப்பதையும் அதனால் நாம் பயன்பெற முடியும் என்பதையும் நமக்கு விளக்க ஏற்பட்ட ஸ்தாபனம் அன்னை. அன்னையே சமுத்திரம். சமுத்திரத்தின் உற்பத்தி ஸ்தானத்தில் உற்பத்தியானவர் அன்னை. சமுத்திரம் என்பது பிரபஞ்சம் முழுவதையும் உற்பத்தி செய்த சக்தி. சமுத்திரம் உலகத்தின் மூலம். ஆதி. நாம் சமுத்திரம் என்று சொல்வது நீராலான சமுத்திரமன்று. சக்தியாலான சமுத்திரம். இது அகண்ட பிரம்மாண்டமான சமுத்திரமானாலும் நம் அகத்துள் தன்னைச் சுருக்கி உறையும் சமுத்திரம். அகந்தையற்ற பார்வைக்கு சமுத்திரம் தெரியும்.
சிருஷ்டியில் ஒவ்வொரு நிலைமையிலும் ஒவ்வொரு குணத்தை ஏற்று அடுத்த நிலைக்குப் போகிறோம். அந்தக் குணத்தை விட்டு விட்டால் பழைய நிலைக்கு வந்துவிடலாம். சத், குணத்தை விட்டால் பிரம்மம் ஆகலாம். கிருஷ்ணாவதாரத்திற்கு முன் பக்தி இல்லை. அதற்கு முன் ஞானம் தான் இருக்கிறது. கிருஷ்ணன் over mind-ஐச் சேர்ந்தவர். அதுபோல் பிரம்மா, விஷ்ணு, சிவன் over mind gods. இராமாவதாரம் higher mind-இன் கடவுள். சைத்தியப் புருஷன் முதன் முதலில் கோபிகைகளுக்கே உற்பத்தியானது. அதற்கு முன் இல்லை. ஸ்ரீ அரவிந்தரும், மதரும் சுப்ராமெண்டல் அவதாரம். இந்த சமுத்திரம் தெரிவது, ஸ்தாணு தெரிவது நம் யோகத்தின் பகுதி இல்லை. ஆனால் எது தெரிய வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளும் திறமை உண்டு. நமக்குக் கடமை என்னவென்றால், சமுத்திரம் நம் வாழ்வில் பலிக்கும்படி நடக்க வேண்டும். இது நமக்கு ஞானமே தவிர நம் கடமை அன்னைக்கு சரண் அடைவதுதான். அன்னை அன்பராக இருந்து இந்த சமுத்திரம் எல்லோர் வாழ்விலும் பலிக்கும்படியாக நடந்துகொள்ள வேண்டும். அன்னை இஷ்டப்படிதான் நாம் இருக்கவேண்டுமே தவிர நம் இஷ்டம் என்று அங்கு இருக்கக் கூடாது. அன்னை மூலமாகவே அந்த சமுத்திரம் நம் வாழ்வில் பலிக்கும். நமக்கு ஒரு M.L.A. நண்பராக இருந்தால் அதன் வசதியுயம் செல்வாக்கையும் நாம் அறிவோம். நம் கம்பெனி முதலாளி நம்மை Officerஆக மட்டும் இல்லாமல் நண்பராக ஏற்றுக் கொண்டால் அதில்வரும் சந்தோஷம், சௌகரியம், செல்வாக்கு, அந்தஸ்து நாம் அறிந்ததே. Softwareஇல் வேலை செய்பவர் புதிய ideaவுக்கு என்ன power உண்டு என்று அறிவார்கள் சமீபத்தில் Hotline என்பதைக் கண்டுபிடித்தவர் சில ஆண்டுகளில் பல நூறு கோடி சம்பாதித்ததை உலகம் அறியும். இவருக்கு Software technologyஇல் பரிச்சியம் இருந்ததால் இந்தச் செல்வம் அது கொடுத்த வரப்பிரசாதம். Billgates என்பவர் சம்பாதித்ததை நாம் அறிவோம். அவருக்கு organisation உடைய சூட்சுமம் தெரியும். Organisation கொடுத்த அனுக்கிரகம் அவர் பெற்ற செல்வம். உலகில் எதுவும் இல்லாத மக்கள் ஏராளம். ஏதோ ஓர் ஆதரவு உள்ளவர்கள் உண்டு. அவர்கள் பெறும் முன்னேற்றத்தை உலகம் கண்டு ஆச்சர்யப்படுகிறது. இன்று சமூகம் வளர்ந்துள்ள நிலையில் சமூகத்தை அறிந்து ஏற்றுக் கொள்பவர்கள் பெறும் வரப்பிரசாதம் இது. சமூகம் சமுத்திரத்தில் ஒரு துளி. சமுத்திரத்தை அறிந்து ஏற்றுக் கொள்வது பெரியது. சமுத்திரம் அன்னையின் பகுதி. அன்னை நம்மை ஏற்றுக் கொள்ள விரும்பி நாடி வருகிறார்கள். நாம் அவர்களை ஏற்றுக் கொண்டு நம் வாழ்வை அன்னைமயமாக்கலாம். அகந்தை இருந்தால் சமுத்திரம் தெரியாது அகந்தை போனபின் சமுத்திரம் தெரியும். தெரிந்தபின் போன அகந்தை திரும்பி வந்து சமுத்திரத்தை தனக்கு வேலை செய்யச் சொல்லும். அது நமக்கு வேலை செய்யவில்லை என்றவுடன் அதை விட்டு நாம் விலகி விடுகிறோம். இவையெல்லாம் இல்லாமல் இருக்க நாம் அன்னையை ஏற்றுக்கொண்டால் சமுத்திரமான சக்தி நம் வாழ்வில் பலிக்கும்படிச் செய்கிறார்.
அன்னையைச் சரண் அடைவது என்றால் என்ன? ஏன் அன்னையைச் சரணடைய வேண்டும்? சமூகம் பிரம்மம் போல் அதன் முழு உரிமையுயம் ஓட்டு உரிமை மூலமாகக் கொடுக்கிறது. நாம் ஓட்டை போட்டுவிட்டுப் பேசாமல் இருக்கிறோம். பெறுவது ஓட்டுரிமை, நாடு நமக்குக் கொடுத்தது. நாட்டின் முழு உரிமை. ஒவ்வொரு முறை பிரார்த்தனை பலிக்கும் பொழுதும் அன்னை தன்னை முழுமையாகக் கொடுக்கிறார். நம் பிரார்த்தனை பலிப்பது தெரிகிறது. அன்னை அதன் மூலம் தன்னை முழுமையாகக் கொடுக்கிறார் என்பதே தெரிவது இல்லை. அன்னைக்குச் சரண் அடைந்தால் நாம் அன்னையாகிறோம். அன்னை என்பது ஜீவியத்தின் ஸ்தாபனம். சமுத்திரத்திற்கு நாம் முக்கியம் என்பது தெரிய வேண்டுமானால் நம்மால் முடிந்த காரியங்களை சமுத்திரத்திடம் விடவேண்டும் அப்படி விட்டால் மனை வாங்கவேண்டும் என்னும் போது, வீடு ரிஜிஸ்டர் ஆனது போல் நடக்கும். அதே போல் எல்லாக் காரியங்களையும் சமுத்திரத்திடம் விடும் போது ஸ்தாணு தெரியும். வெளியில் தெரியும் ஸ்தாணுவை உள்ளே பார்த்தால் பிரம்மம் தெரியும். பணத்தை வினியோகம் செய்ய Bank இருப்பது போல் திறமையையும், வாய்ப்பையும் வினியோகம் செய்ய ஸ்தாபனம் உலகில் ஏற்படவில்லை. அந்த ஸ்தாபனமாக அன்னை செயல்படுகிறார். அதை சூட்சுமமாகச் செய்கிறார்.