புட்டபர்த்தி = 16

அத்தியாயம் – 16

அவதாரம் அலர்ந்தது!

நீ சிறுவனாக இருக்கிறாய்
நீயே கோலூன்றிய கிழவனாக மயக்குகிறாய்
அனைத்து வடிவாயும் இருப்பவன் நீதான்

அதர்வ வேதம் 10-8-27

940 மே 23ந்தேதி. ஸத்யாவுக்குச் சரியாக பதின் மூன்றரை வயது முடிந்த சமயம். இவன் பிறந்தது நவம்பர் 23. இது மே 23. அதற்கு இது சரியாக ஆறு மாதம்.

திட்டமாக ஆறுமாத இடைவெளியிருப்பதற்கு ஒரு விசேஷம் உண்டு என்பதை ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர்கள் வாக்கிலிருந்து பெறுகிறோம். “சங்கரநாராயணனாக உருவத்தால் ஒன்றிலேயே இருவர் பாதிப் பாதியாக இருப்பதுபோல், காலத்திலும் இவர்கள் ஓராண்டில் பாதிப் பாதியாக இருக்கிறார்கள்; கிருஷ்ண ஜயந்திக்கும், மகா சிவராத்ரிக்கும் இடையே சரியாக அரை வருட இடைவெளியிருக்கும்என்பது அவர்களது அருள்மொழி.

இன்று ஸத்யாவுக்கு பதின்மூன்று முடிந்து சரியாக ஆறு மாதமாகிவிட்டது. மானுடமாகப் பிறந்த பிறப்புக்கு மூலமாக, ஆர்வத்தில் தான் எந்த தெய்வப் பிறப்பாக இருந்தானோ எதுவாகப் பிறக்கவேண்டிய நாள் இதுவே என்று கொண்டானோ என்னவோ? அதுவும் முந்தைய தெய்வப் பிறவிக்கு விசேஷமான குரு வாரமாக அன்று வாய்த்திருந்தது!

கண்ணனின் காலத்தில் பதின்மூன்றாண்டு பிரிந்து வாழ்ந்தால் ஒரு ஜன்மம் கழிந்ததற்குச் சமம் என்றும், ராமனின் காலத்தில் பதினாலாண்டு பிரிந்து வாழ்ந்தால் ஒரு பிறவி தீர்ந்ததற்கு ஈடாகும் என்றும் கருதப்பட்டது. கண்ணனுக்கும் ராமனுக்கும் மத்தியாக இப்போது பதின்மூன்றரை என்று கொண்டானோ என்னவோ? இத்தனைக் காலம் இவனும் ஒருவிதத்தில் கூட்டுப் புழுவாக அக்ஞாதவாசம்தான் செய்தான். கூட்டை முற்றிலும் பிய்த்து வெளிவந்து சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சியாகிவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்து விட்டான் போலும்!

அன்று காலை எழுந்ததிலிருந்து ஸத்யா வானம்பாடி போல் பாடிக்கொண்டு பரம உற்சாகமாக, ஜீவகளை பொங்கி வழியக் காணப்பட்டான்.

வீட்டார், அண்டையகத்தார் எல்லோரையும் அழைத்துத் தன்னைச் சுற்றி வைத்துக்கொண்டு ஆனந்தமாகப் பேசினான். பாடினான். அன்று அவன் இருந்த மதுர மநோஹரக் கோலம் காரணமாக, இடைக் காலத்தில் பேயோ, பைத்தியமோ என்று அஞ்சியவர்களும் பிரியமுடன் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

செங்கையைச் சுழற்றினான். கை வழியக் கற்கண்டுகள் தோன்றின. அனைவருக்கும் கொடுத்தான். கொடுக்கக் கொடுக்கக் குறையவில்லை. மறுபடி மலர்க்கையை அசைத்தான். கை நிறையக் கவின் மலர்கள்! அதையும் விநியோகம் செய்தான்.

மீண்டும் கரத்தை அசைத்தான். ஆஹா, திவ்யமான பாலன்னத்தின் தீஞ்சுவை சுகந்தம்! எல்லோரையும்விட ஒரு படி அதிகமாக அதிசயித்தாள் ஈச்வரம்மா. ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன், பட்டினி கிடந்த பாலன், தாத்தா சாதம் போட்டதாகச் சொல்லிக் கை நீட்டிய போது வீசிற்றே அதே நறுமணம்!

கூடியிருந்த அனைவருக்கும் ஒவ்வொரு பெரிய கவளம் தெய்விகப் பிரஸாதத்தை அளித்தான். “பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடியிருந்துஉண்டு மகிழ்ந்தனர் அம் மக்கள். பயந்தவர், ஐயுற்றவர் அனைவருமே அவனது அன்பிலே உருகி, இதை உண்ணலாமா கூடாதா என்ற யோசனைகள் இன்றி உட்கொண்டு களித்தனர்.

ஆஹா! மஹாமாயையின் ஆளுகையை என்னென்பது? இப்படி எல்லோரும் இன்புற்றிருக்கையில், வெளியே சென்றிருந்த வெங்கப்பர் மட்டும் இதைக் கேள்விப்பட்டு வெகுண்டார். இன்று இவரே நரசிம்மக்கோலம் கொண்டுவிட்டார். ‘ஊர்ப்பிள்ளைகள் போலில்லாமல் இந்த ஸத்யா செய்கிற கூத்துக்களை இன்றோடு முடித்துக்கட்டிவிட வேண்டும்என்று அவருக்கு ஓர் ஆத்திர எழுச்சி பிறந்துவிட்டது.

விடுவிடுவென்று வீட்டுள் நுழையப் போனார்.

வாசலிலே ஏகக் கூட்டம். அதைக் காணவே எரிச்சலாயிருந்தது அவருக்கு. எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்ப்பது போல் அவர்களில் சிலர், “ராஜு சாமி! கடவுளே வந்திருக்காரு. கால் கழுவாம உள்ளே போறீங்களே!” என்றனர்.

இன்றோடு இவனுக்குக் கைதான் கழுவப்போகிறேன்என்று உறுமிக்கொண்டே உள் நுழைந்தார்.

இரண்டில் ஒன்று தீர்த்துவிட்டே மறு காரியம்என்று குமுறியபடி ஒரு பிரம்பைக் கையில் எடுத்துக்கொண்டார்.

அதை ஓங்கிப் பிடித்தபடி ஸத்யாவிடம் சென்று, “நீ யார்? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? சொல்லாவிட்டால் உன் மண்டையை உடைத்துவிடுவேன். சொல்லு. நீ யார்? பைத்தியமா, வெறியா, தெய்வமா, அவதாரமா, பேயா, பிசாசா?” என்று உச்ச ஸ்தாயியில் கூச்சலிட்டார்.

அனைவரும் அச்சமும் ஆச்சரியமும் கலந்த இனம் தெரியாததோர் உணர்வின் உச்சி விளிம்புக்குச் சென்று விட்டனர்.

அன்றலர்ந்ததொரு பெரிய குவளை மலர்போல், அன்பே உருவாக அமர்ந்திருந்த ஸத்யாவின் நவசம்பக உதடுகளையே அத்தனை கண்வண்டுகளும் மொய்த்தன. ‘என்ன பதில் சொல்லப் போகிறான்? உண்மையிலேயே இவன் யாராம்?’

சம்பக மொட்டு மடலவிழ்ந்தது. தேனாகப் பொசிந்தது அவன் வாக்கு:

நான் யாராநான்தான் ஸாயி பாபா!

நிதானமாக, குளுமையாகத்தான் அவன் அப்படிச் சொன்னான். ஆனாலும் அதிலிருந்த ஸத்தியத்தின் அழுத்தம்! மேக விளிம்பிலிருந்து பால் நிலா பொழியும் பூர்ணமதியம் போலத் தண்ணென்று அமர்ந்திருந்தான். சூரியனின் உக்கிரத்தைவிட இந்தச் சந்திரிகையிலேயே தாங்கொணாதவொரு சக்தி ததும்பி நின்றது!

ஸாயி பாபாஇந்தப் பெயரைத்தான் பல வருடங்களுக்கு முன்பிருந்தே பஜனைகளிலெல்லாம் இவன் பாடி ஆடிக் கொண்டாடியிருக்கிறான். பண்டரிநாதனை கானம் செய்யும் போதெல்லாம், கூடக்கூட, அதே மஹாராஷ்டிரத்திலுள்ள இன்னொரு தலமாகஷீர்டிஎன்ற ஒன்றைப் பாடி, அப்பதியில் மதியும் ஷீர்டிபதியான இந்த ஸாயிபாபாவைத்தான் போற்றியிருக்கிறான். புட்டபர்த்தி மக்களுக்கோ அந்த ஊரையும் தெரியாது; ஸாயிபாபா என்ற சப்தமும் அவர்கள் செவிக்கு எட்டியிராத ஒன்றுதான். சிவன், ராமன், கிருஷ்ணன், ஆஞ்ஜநேயர் எல்லாம் சேர்ந்த மூர்த்தியாக இந்த ஸாயிபாபாவை ஸத்யா வருணித்துப் பாடிய போதெல்லாம் அவர்களுக்குப் புதிராகவே இருந்தது. ‘ஏதோ துருக்கப் பெயர்போல இருக்கிறது. ஆனால் அவரை ஹிந்து மதக் கடவுளாகப் பாடுகிறானே! என்று வியந்தும், பயந்தும் கூட இருக்கிறார்கள். பாட்டிலே வந்த இந்தப் பெயரைக் கேட்டுத்தான் மந்திரவாதியும் துலுக்கப் பிசாசுஎன்று முடிவு செய்துசிகித்ஸைசெய்தான்!

பூரண சந்திரனாக அன்பு நிலாப் பொழியும் அதிசயப் பிசாசு! பெற்ற தாயின் அன்போடு, காண வருகிறவர்களை எல்லாம் குழந்தைகளாக்கிக் கற்கண்டும், க்ஷரான்னமும் கனிந்தளிக்கும் அற்புதப் பிசாசு!

ஸமர்த்த ராமதாஸர் ஸ்ரீராமனின் நினைவிலேயே முங்கி, உலக வழக்குகளை விட்டுத் திரிந்தபோது அவரிடம் எவரோ, “உன்னைப் பூதமா பிடித்து ஆட்டுகிறது?” என்று கேட்டார். “ஆமாம், ஆமாம், பூதமேதான்என்று கூறி ராமதாஸர் சிரித்தார். ஸ்ரீராமனைப் பற்றி ச்லோகம் ச்லோகமாகப் பாடி, “அந்த ராமபூதம்தான் என்னை ஆட்கொண்டிருக்கிறதுஎன்று முத்தாய்ப்பு வைத்தார். “பேயா, பிசாசா?” என வெங்கமர் கேட்க, ஸத்யா. “நான் ஸாயிபாபாஎன்றது அச் சரிதையை ஓரளவு எதிரொலிக்கிறது.

ஸத்யநாராயணன் என இவனுக்குப் பெற்றோர் நாமகரண மிட்டனர். இன்று இவனேஸாயி பாபாவாகப் பெயர் சூட்டிக் கொண்டு விட்டான். அந்தப் பிறவி முடிந்துவிட்டது. இன்று புதிதாகப் பிறந்துவிட்டான்! ஓரிலையில் இருந்துகொண்டே அடுத்த இலையை நிமிண்டும் பட்டுப்புழு போல், ஜன்மா எடுத்த நாளாகவே இந்த இன்னொரு ஜன்மத்தையும் இவன் தொட்டுக் கொண்டுதான் இருந்தான். பட்டுப்புழு சுருங்கிச் சுருங்கி ஓர் இலையில் முன்னேறி, அடுத்ததில் தவ்விக்கொண்டே வந்து, கடைசியில் அதிலேயே ஜம்மென்று வீற்றுவிட்டது. இதிலேயே பெரியமிராகிள்!’ அடுத்த ஜன்மம் என்று நாம் சொல்கிற இதுவே முந்தைய பிறவியாக இருக்கிறது!

இன்றும் நம் சரித நாதர் ஷீர்டி பாபாவைக் குறிப்பிடும் போதெல்லாம் தமது பூர்வ சரீரம்’, ‘மொதடி சரீரம்என்றே சொல்வது வழக்கம்.

ஸாயிபாபாஎன்றால் என்ன அர்த்தம் என முன்பே கண்டோம்! “பாபாஎன்றால் தந்தை, மகான். “ஸாயிஎன்பதுஸ்வாமியின் திரிபு. “ஷாஹிஎன்ற பெர்சிய பதம் மகாபுருஷர் என்று பொருள்படும். அதுவேஸாயியானதாகவும் சொல்வர் என்று கண்டோம்.

நம் ஸ்வாமியோ அற்புதப் பொருள் சொல்வார். “ஆயி என்றால் அம்மா, அம்பா. பாபா என்றால் பிதா, லோக பிதாவாம் சிவன். எனவே ஆயி (ஸாயி) பாபா என்பது அம்மையப்பனான அம்ப (ஸாம்ப) சிவமேஎன்பார்“BABAவில் B என்பது Being  ஸத்; A என்பது Awareness – சித்; அடுத்த என்பது Bliss ஆனந்தம்; கடைசி A – Atma – இத்தனையுமான, ஸச்சிதானந்தமான, ஆத்மாஎன்பார்.

நாம் வேறு தத்வார்த்தமும் ஸாயி நாமத்தில் காணலாம். ‘ஸாய்என்ற தாதுமுடிவிப்பதுஎன்று பொருள்படும். எனவேஸாயிதான் ஸம்ஸாரத்தை முடிவிப்பவர். அதன் தொடக்கமும் இவரே! ஏனெனில்ஸய் என்றால் சலனமுறுவது எனப்பொருள். அசலப் பிரம்மம் சலித்தவுடன்ஸாயிஆகிறது.

ஸாயியுடன்யுஜ்’ (சேருவதே) ஸாயுஜ்யமாம் முக்தி எனலாம்.

தமிழில்சாய்என்றால் ஒளி (ஞானம்), அழகு (கருணை)!

சாயி என்றால் சயனித்த பெருமாள். ரங்கசாமி, வடபத்ரசாயி என்கிறோமல்லவா? இதய தல்பத்தில் சயனிக்கும் பரமபுருஷனே சாயி. வேதத்தின்நாராயண ஸுக்தம்உடலில் ப்ராணாக்னியாயுள்ள ஆத்ம வஸ்துவைக் குறுக்காகவும் மேலாகவும் கீழாகவும் கிரணம் பரப்பிச் சயனிக்கின்றதிர்யக்ஊர்த்வம்அத: சாயீஎன்று பகரும்.

நான் தான் ஸாயிபாபாஎன்ற மஹத்தான பிரகடனத்தைச் செய்ததோடு, அந்தத் துருக்கப் பெயருக்குப் பொருத்தமில்லாமல் தொடர்ந்தான், இதுகாறும் ஸத்ய நாராயணனாக இருந்தவன். ஆம், நான்தான் பாரத்வாஜ கோத்திரத்தில் ஆபஸ்தம்ப சூத்திரத்தில் பிறந்த ஸாயிபாபா. உங்கள் துயரெல்லாம் தீர்க்கவே மீளவும் வந்திருக்கிறேன். உங்களுடைய இல்லங்களை, உள்ளங்களைத் தூய்மையாக்கிக் கொள்ள விரும்புங்கள். நான் அங்கு குடிகொண்டு ரக்ஷிக்கிறேன்

அமர வாசகங்கள்! பதின்மூன்றரை வருட அக்ஞாத வாஸம் முடித்து, மேகமூட்டம் வெடித்து அவதார ரகசியம் பரசியமாக மழை கொட்டிவிட்டது. முட்டி நின்ற மழை அந்தக் கரு மேகத்திலேயே தெரியத்தான் செய்தது; அவ்வப்போது அது பூஞ்சிதறலாகவும் உதிர்ந்தது; இப்போதுதான் பூரணமாகப் அதிர்ந்து, அடித்தே பெய்துவிட்டது. பதின்மூன்றரை ஆண்டுகள் கர்ப்பத்தில் குமுறிக் கொண்டிருந்த ஸத்யம் ஜனனம் எடுத்துவிட்டது. ஸத்யநாராயண ஜனனம் இதிலேயே ஒருவாறு முடிந்தும்விட்டது.

அவன் சொன்னதன் அர்த்தம் கூடியிருந்தவருக்கு எவ்வளவு தூரம் புரிந்ததோ, புரியவில்லையோ, அதன் அழுத்தம் அவர்களை அப்போதைக்கேனும் வாயடைக்கச் செய்தது.

வெங்கப்ப ராஜு ஓங்கியிருந்த பிரம்பு கை நழுவி விழுந்தது. பிள்ளையையே வெறிக்கப் பார்த்தார். தன் பிள்ளைதானா?

காலை இனிய ஸத்யாவாக இருந்த அவனை அண்டவே ஒரு கௌரவமான தயக்கம், பக்தியான அச்சம் அனைவருக்கும் உண்டாயிற்று.

அவன் பிற்பகல் வரையில், திரும்பத் திரும்பபாரத்வாஜ கோத்ரம், ஆபஸ்தம்ப ஸூத்ரம்என்பதையே ஜபம் செய்வதுபோல் சொல்லிக் கொண்டிருந்தான்.

புட்டபர்த்திக்கு வந்திருந்த தமையன் சேஷமராஜுவுக்குத்தான் சற்றுத் தைரியம் வந்தது. “ஸாயி பாபா என்று துருக்கப் பெயர் மாதிரி ஏதோ சொன்னாய். இப்போது அவருக்கு நம்முடைய கோத்திரத்தையும் சூத்திரத்தையும் சொல்லிக் கொண்டிருக்கிறாயே! இதற்கு என்ன பொருள்?” என்று வினவினார்.

ஸாயிபாபா இளமையில் துருக்க ஃபகீர் ஒருவரால் வளர்க்கப்பட்டு, பிற்பாடு ஷீர்டி மசூதியில் இருக்கை கொண்டபோதிலும், அவர் பிறந்தது பிராமணக் குடியில்தான். ஸ்ரீமத் ராமாயண காலத்தில் ஐயனைச் சேர்ந்த ஆயிரமாயிரவர்க்கு அற்புத ஆற்றலால் அறுசுவை உண்டி படைத்த போதிலும்வெறும் சித்துக்காரர்என்று அவப்பெயர் பெறாமல்மஹர்ஷி’, ‘பகவான் என்றெல்லாம் வால்மீகியால் புகழப் பெற்ற பரத்வாஜ முனிவரின் கோத்திரத்தில் அவதரித்தவர் ஷீர்டி பாபா. அக்னி மயமான அங்காரகன் அந்த பரத்வாஜரின் சந்ததிதான். ஷீர்டி பாபா தூய்மைக்காக கோத்திரத்தில் நெருப்புச் சம்பந்தம் கொண்டார். குளுமைக்காக சூத்திரத்தில் நீரின் தொடர்பு கொண்டார். ஒரு சமயத்தில் தண்ணீரையே தூணாக நிறுத்தி வைத்ததால் ஆபஸ்தம்பர் என்று பெயர் கொண்ட ரிஷி வகுத்த வாழ்முறைகளைக் கூறும் சூத்திரத்தைப் பின்பற்றும் குடியில் இந்தப் பெரிய சூத்திரதாரி அவதரித்தார்.

வாமனாவதாரத்தில் காச்யப கோத்திரத்தில் பிறந்த திருமால் அடுத்ததான பரசுராம அவதாரத்தில் பார்க்கவ கோத்திரத்துக்கு மாறினார். ஸ்ரீராமனாக சூரிய வம்சத்தில் தோன்றியவர் பலராமனாகவும் கண்ணனாகவும் வந்தபோது சந்திர வம்சத்துக்கு மாறினார். ஆனால் ஷீர்டி பாபாவாக இருந்த நான் மறுபடி இதோ இப்போது பிறந்திருக்கும் போது கோத்திரத்தையும், சூத்திரத்தையும் மாற்றிக் கொள்ளவில்லை. அன்று அந்தணனாகச் சற்றே அடங்கியிருந்தவன், இன்று கொந்தளித்துச் சக்தியைக் காட்ட க்ஷத்ரியனாகி இருக்கிறேன். அன்று மஹாராஷ்டிரத்தில் பத்ரியில் பிறந்தேன். இன்று ஆந்திரத்தில் பர்த்தியில் பிறந்திருக்கிறேன். இப்படியே என் தோற்றம், ஆற்றலைக் காட்டும் பான்மை இவற்றிலும் முன் அவதாரத்திலிருந்து சிறு மாறுதல்கள் காட்டுவேன். ஆனாலும் அன்றும் இன்றும் மாறாதவை இந்த கோத்திரமும், சூத்திரமும். ‘கோஎன்றால்உலகு’; ‘த்ரம்என்றால் காப்பது. உலகைக் காக்கும் பணி அன்றும் இன்றும் ஒன்றே யாதலால்கோத்ரம்மாறவில்லை. பரத்வாஜர் உருவகிக்கும் சமத்கார சக்தியே இந்த அவதாரத்திலும் பிரதானமாக இருக்கும். ஸூத்ரம் என்பது நூல். பல மணிகளைச் சங்கிலியாக இணைக்கும் போது உள்ளே ஓடும் சரடு அது. எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும் உள்ளே இழையோடுவது கருணை என்னும் ஒரே குளுமைச் சரடாதலால் சூத்திரத்தையும் மாற்றிக் கொள்ளவில்லை. இங்கும் அற்புத சக்தியை வற்புறுத்தவே நீரைத் தூணாக நிறுத்தி வைத்த ரிஷியின் சூத்திரத்தைத் தேர்வு செய்து கொண்டேன். உள்ளூர நாங்கள் ஒன்றே என்று காட்டத்தான் அன்று பாம்புகள் மலிந்த ஷீர்டியில் (‘சீரஎன்றால் வடமொழியில்பாம்புஎன்று அர்த்தம். சீர வாடியே ஷீர்டி என ஆகியிருக்கும்!)1 பிறந்தேன். இன்றும் புற்றுக்கள் மூடிய புட்டபர்த்தியில் பிறந்து உரவகொண்டா என்ற அரவக்குன்றில் சிறுகச் சிறுக சுய உருவம் கொள்ளலானேன். இனியும் என் அருள் பொலியப்போகும் பல மந்திரங்களில் (கோயில்களில்) புற்றுக்களை உண்டாக்கி, நாக ஸாயியாக வெளிவருவேன். அன்றும் இன்றும் முதலில் குதிரையைக் கண்டுபிடித்துக் கொடுத்தே என் மகிமையை உலகுக்குப் பயனாக்கினேன் இப்படியெல்லாம் நம் ஸத்யா சேஷமராஜுவுக்கு விளக்கம் தந்தானா என்றால் அதுதான் இல்லை!

2 ‘சீலதீ’ – ஒழுக்கத்தில் சிறந்த அறிவுஎன்பதேஷீர்டி ஆயிற்றுஎன்றும் கூறுவர்.

அவதாரத்தை உடைத்து வெளியிட்ட பின்னருங்கூட, உட்பொருள்களை உடனுக்குடன் உடைக்க அவன் பிரியப்படவில்லை. பிரபஞ்ச காவியத்தைப் புனைந்துள்ள இறைவன் மஹாகவி. சொல்லாமற் சொல்லும்த்வனிஅல்லது வியங்கியத்தில் தானே கவி நயமே உள்ளது? உலகிலே தன்னை உறுத்துமாறு காட்டிக் கொள்ளாமல் உருக்கரந்து சூட்சும சங்கேதம் மட்டுமே கொடுக்கிறான் இறைவன். அதை நாம் புரிந்துகொள்ளாதபோது காவிய நயத்தையும் தியாகம் செய்து, இயற்கைக்கு மேம்பட்ட ஆற்றல்களை வெளிக்காட்டுகிறான். அப்போதுங்கூட அதற்குள்ளேயே நுட்பமாகப்பொடிவைத்து ஆங்காங்கு ரகசியம் செய்துவிடுகிறான். பக்குவமற்ற மக்களுக்கு எட்டுவதற்காக அற்புதங்கள் செய்து தெய்வத்தன்மையை உடைத்துக் காட்டிக் கலைத்தியாகம் செய்கிற நம் நாயகரும் ஊடே ஊடே ஒளிந்து கொண்டு விடுவார். ‘தேவர்களுக்கு ஒளிந்திருப்பதிலேயே பிரியம் போலும்என்ற உபநிடத மொழிக்கு ஒப்ப.

இப்போதும் இவ்வாறுதான் தமையனிடம் மௌனம் சாதித்தான் ஸத்யா. எத்தனை துளைத்துப் பார்த்தும் பயனில்லை என்று கண்ட சேஷமர் சலிப்படைந்தார். ‘எதற்காக இப்படி ஒருவன் நம் வீட்டிலே பிறந்து வளர்ந்து, நம்மையே கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டுப் பிரமிக்கச் செய்கிறான்?’ என்றெண்ணினார்.

தமையனின் மன ஓட்டத்தை உள்ளங்கை நெல்லிக்கனியாகக் கண்டுகொண்ட ஸத்யா, “நான் ஏன் இந்த வீட்டில் வந்து பிறந்தேன் தெரியுமா? உங்களுடைய வெங்காவதூதர், ‘இறைவா, இந்த உலகைக் காக்க நீ அவதரிக்க வேண்டும். அப்படி அவதரிக்கும்போது இந்த அருமைச் சீடரின் குடியில் வந்து தோன்ற வேண்டும்என்று தவமிருந்து பிரார்த்தித்தார். அதனால்தான் இங்கே வந்தேன்என்றார்.

கொண்டமராஜுவின் குருபிரானானஒருகால் வம்ச முன்னோருமான இம்மஹானைப் பற்றி முன்பே கூறியுள்ளோம். அவதூதராக ஸர்வ ஸங்கப் பரித்தியாகம் செய்த பின்னும்கூட அவருக்குத் தம் அருமைச் சீடரின் குடி என்ற பாசம் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்தது போலும்! இவனோ இக் குடும்பத்திலேயே பிறந்து வளர்ந்து வந்த போதிலும் இதைத் தன் குடியாகவோ, வெங்காவதூதரைக் தன் குல மூதாதை குருவாகவோ எண்ணாமல்உங்களுடைய வெங்காவதூதர்என்கிறான்! லீலாவிநோதராகத் தோன்றும் நம் நாயகரை விடப் பரம வைராக்கியசாலி இல்லை என்பது தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும் அதாவது அவராகத் தெரிவித்துக் காட்டியவருக்கே தெரியும்!

வெங்காவதூதரின் பிரார்த்தனைக்காக வந்தவனை வெங்கப்ப ராஜு இன்னமும் பூரணமாகப் புரிந்து கொள்ளாவிடினும், ‘இது பேய் பிசாசு இல்லை, யாரோ ஒரு முஸ்லீம் மஹான் நம் மகன் மேல் ஆவேசித்து வருகிறார்என்ற அளவுக்கு மனத்தை சமாதானப்படுத்திக் கொண்டார்.

ஆவேசித்து வருகிற ஹிந்துத் தெய்வங்களைத் தணித்து மலையேறச் செய்வதற்குக் கற்பூரம் காட்டுவது வழக்கம். துருக்கச் சாமியை எப்படித் திருப்பி அனுப்பி வைப்பது?

சாமியையே கேட்டார், “உனக்கு எப்படிப் பூசை போட வேண்டும்?” என்று.

சாமி சிரித்தது. “இல்லத்தை, உள்ளத்தைத் தூய்மையாய் வைத்துக் கொண்டால் அதுவே எனக்குப் பூஜை. குரு வாரத்தில் சம்பிரதாய பூஜையும் செய்யலாம்என்றது தகப்பனாரை நோக்கிப் பூஜிக்கச் சொன்ன தகப்பன் சாமி!“பாலகனாம் சத்திய சாயி எனும் பகவன் சீலமதாய் கொண்டாடும் குருவாரம்” என்று இதைத்தான் என்றோ ரிஷி கூறிவிட்டார் பிரம்ம நாடியில்.