டாக்டர், வக்கீல், ஜோஸ்யன், கடை, பஸ் ஆகிய இடங்களில் நம்மை பேஷண்டு, கட்சிக்காரன், ஜாதகன், வாடிக்கைக்காரர், டிக்கட் என்பர். நல்லவரா, கெட்டவராஎன யோசிப்பதில்லை; பணம் கொடுக்க வேண்டும். சம்பந்தம் செய்ய வேண்டும்எனில் நல்லவரா, கெட்டவரா என யோசிக்க வேண்டும். அந்த இடங்களிலும் அந்த வேலைக்குரியவற்றைமட்டும் கருதினால் பிரச்சினையிருந்தால் குறையும். கடன் வாங்குபவர் நல்லவரா, கெட்டவரா என்பதைவிட அதற்குரிய சொத்துள்ளவரா, மாதாமாதம் வட்டிகட்டும் தொழில் வருமானம் உள்ளவராஎனக் கருதினால் பிரச்சினை எழாது. ஆண்டவன் சிலரை ஒரு பாதையிலும், அடுத்தவரை அடுத்த பாதையிலும் வரச்சொல்லியிருக்கிறான். இருவரும் அவனிடமே வருகிறார்கள். பார்லிமெண்ட்டிற்கு ஒருவர் M.P.ஆகவும், அடுத்தவர் மந்திரியாகவும், வேறொருவர் நிருபராகவும் வந்தால் அனைவரும் பார்லிமெண்ட்டிற்கு வருகிறவர்தாம். பாதை வேறு, இடம் ஒன்று, பலன் வேறு. நல்லவரை அனைவரும் அறிவர். பொல்லாதவரையும் அனைவரும் அறிவர். இருவரையும் உலகம் அறியும். எப்படி உலகம் நம்மையறிய நாம் பிரியப்படுகிறோமோ, அப்படி நாம் போகலாம். ஆனால் அது நம்கையில் இல்லை. அது நம் சுபாவத்தைப்பொருத்தது. நிலைமை மாறினால் தோற்றம் மாறும், பலன் மாறும். பஸ்ஸில் ஒருவரை கண்டக்டர் இடம்மாறி உட்காரச் சொன்னார். அவர் மறுத்தார். போலீஸ்காரன் அவரை மிரட்டினான். அவர் மிரளவில்லை. அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் விலாசம் கேட்டார்கள். அவர் மாஜிஸ்ட்ரேட்எனத் தெரியவந்தது. போலீஸ்காரனுக்கு உடல் ஆடியது. எனக்குத் தெரியாது என்றான். பஸ்ஸில் அனைவரும் பயணிகள். ஒரு பயணியை மிரட்ட அதிகாரம் எவருக்கும் இல்லை. அப்பயணி மாஜிஸ்ட்ரேட்டானால் நிலைமை மாறுகிறது. ஏன் அனைவரையும் சமமாக நடத்தக்கூடாது? நாம் சமமாக நடத்துவதில்லை.
- ஆண்டவன் அனைவரையும் சமமாக நடத்துகிறான்.
- சமமாக நடத்தும் மனம் சரியாக இருக்கும்.
- என்றும், எவரையும் அவருக்குரிய மரியாதையுடன் நடத்தினால் பிரச்சினை எழாது; எழுந்தால் பாதிக்காது.
- தோற்றத்தைக் கருதினால் ஏமாற வழியுண்டு.
- தோற்றத்தின் பின்னுள்ள விஷயத்தைக் கருதினால் ஏமாற முடியாது.
- டிரஸ் தோற்றம் தரும்; அது சிறியது.
- பட்டம், வேலை, பணம், வயது தோற்றத்தை நிர்ணயிக்கிறது.
- படிப்பு, மனிதத்தன்மை, திறமை, நாகரீகம் விஷயத்தைக் கருதுகிறது.
- தோற்றத்தையோ, அந்த நேரத்தின் விசேஷத்தையோ கருதுபவர்க்கு ஏமாற்றம் வரலாம்.
- விஷயத்தையும், என்றும் நிலையானநாணயம், மனிதத்தன்மை போன்றவற்றைக் கருதுபவர் ஏமாற வழியில்லை.
- ஆண்டவனுக்கு அனைவரும் ஆத்மா.
- அனைவரையும் ஆத்மாவாகக் கருதுபவர் ஆண்டவனாவார்.
60. நன்றியறிதல் உடல் புல்லரிக்க வேண்டும்.
உடல் இறைவனை ஏற்பது நன்றியறிதல்.
புல்லரிப்பது முழுவதும் இனிமையாக ஏற்பது.
இதுவரை நடந்தவற்றிற்கு நன்றியறிதல் கூறுபவர்க்கு எதிர்காலம் பெரியது.
நன்றி என்பது நம்முள் உள்ள இறைவன் அருள் வழி வரும் இறைவனைத் தொடுவது.
நன்றி கூறுபவர் எதிர்காலப் பலனை எதிர்பார்த்த நன்றி போக, அந்தஸ்தால் பெற்ற நன்றியையும் விலக்கினால், உண்மையான நன்றியை ஒருவர் கண்டிருந்தால், மீண்டும் மீண்டும் கண்டிருந்தால்
அவருக்கு நன்றியறிதல் உண்டு.
இதுவரை செய்த எந்த யோகமும் உடலைத் தொடவில்லை.
உயிரிலும், மனத்திலும் உள்ளே போய் ஆழத்தைத் தொடவில்லை.
நெற்றிக்கண் நக்கீரருக்கு நன்றியை எழுப்பவில்லை; அகங்காரத்தை எழுப்பியது.
தெய்வங்கள் இறைவனை மறந்துவிட்டனர்.
நன்றி சமீபத்தில்தான் பிறந்தது.
அன்னை ஸ்ரீ அரவிந்தர் வீட்டைக் காட்டியவருக்கு நன்றி செலுத்தினார்.
இத்தாலிய சாணக்கியர் மாக்சிவல் “பிள்ளைகள் தகப்பனாருக்குப் பின் அவரை எளிதில் மறந்துவிடுவார்கள்” என்றார்.
50 ஆண்டிற்குமுன் சமையல்காரன் 10 இலட்சம் சம்பாதித்தான். பெரிய மகனிடம் பெட்டிசாவியைக் கொடுத்தான்.
அடுத்த நாள் பெரிய மருமகள் காலையில் அவருக்குப் பழைய சோறும், கணவனுக்குப் பலகாரமும் சேர்ந்து பறிமாறினாள்.
காரியம் முடிந்தபிறகு கணம் தவறாமல் பணத்தைச் சிக்கனமாகச் செலவு
செய்வது உலகம்.
நன்றியறிதலுக்கு 40 சந்தர்ப்பம் எழுந்தாலும் ஒரு முறையும் நன்றி உள்ளிருந்து எழாது.
வாழ்க்கையில் நன்றி செலுத்த வேண்டிய அனைத்தையும் நினைத்துச் செலுத்தியபின், பாக்கியாக இருப்பது 40 பங்கிருக்கும். நன்றி உடலில் பிறந்ததில்லை.
மனம் நன்றியை அறியாது.
ஆத்மா நன்றிக்குரியது.
அது வெளிவருவதில்லை.
ஆத்மா வாழ்வுமூலம் நன்றியாக மலர்வது அன்னை வாழ்வு.
அன்னையை அறிந்ததற்கே நன்றி உரியது.
நன்றி நம்மை நல்லவராக்கும்.
61. சைத்தியப்புருஷன் அழைக்க வேண்டும்.
இது வளரும் ஆன்மா; ஆன்மாவைக் கடந்த நிலை.
கம்பனியில் முதலாளி ஆன்மா, மேனேஜர் சம்பளக்காரன்.
மானேஜர் முதலாளி அளவு திறமை பெற்று, பொறுப்பேற்றால் கம்பனி ஓஹோஎன வரும். அது சைத்தியப்புருஷனாகும்.
மனம் அறிவு பெற்றது, உடல் திறமை பெற்றது, இவை பகுதிகள் என்பதுடன் ஆத்மாவுடன் தொடர்பில்லாதவை; ஜீவனற்றவை.
வளரும் ஆன்மா அறிவில் ஆன்மாவாக உதயமாகும்; அது மேதமை.
உடலின் திறமையில் ஆன்மாவாக எழும்; அவன் செயல்வீரன்.
முதலாளி மகன் கம்பனியில் இன்ஜீனியர், ஆடிட்டராக வேலை செய்வதை
வளரும் ஆன்மா – சைத்தியப்புருஷனுக்கு – எனக் கூறலாம்.
நாம் செய்யும் வேலையில் உடல் திறமையை வெளிப்படுத்தும், உயிர் உணர்ச்சி தரும், மனம் அறிவால் விளக்கம் தரும், ஆன்மா சாட்சியாகப் பின்னாலிருக்கும்.
உடல் திறமையை நம்பாவிட்டால், உயிர் உணர்ச்சியை நம்பாவிட்டால், மனம் அறிவை நம்பாவிட்டால் நம்மால் சமர்ப்பணம் செய்ய முடியும்.
திடீரென ஒரு கம்பனிக்கு கவர்னர் வரப்போகிறார் என்றால் எதுவும் ஓடாது. உத்தரவு கொடுக்க நேரமிருக்காது. கவர்னர் வந்துவிட்டால் நமது சட்டங்கள் எதையும் செலுத்த நேரமிருக்காது. அவரவர் இஷ்டப்படி நடக்க வேண்டியிருக்கும். சமயத்தில் அது முதலாளியில்லாத நேரமாகவும் இருக்கும். கவர்னர் வந்து போனபின், “எப்படி நடந்தது, என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அனைவரும் தானே சிறப்பாக நடந்தனர். இது போல் கம்பனி என்றுமேயிருந்ததில்லை. கவர்னர் வேலை நடப்பதைக் கண்டு பிரமித்துப் பாராட்டினார்” என்று சொல்வார்கள்.
இதை சைத்தியப்புருஷன் வெளிப்பட்டுச் செயல்படுதல் எனலாம். பாடகர், மேடைப்பேச்சாளர், நடிகர் ஆகியவர்கட்கு இதுபோன்ற நேரம் வந்தால் அற்புதமாக இருக்கும். Mood வந்தாலும் இப்படியிருக்காது என்பர். He was in his form, அவர் தம்நிலையிலேயே இல்லை என்பர் (ஆங்கிலத்தில் உண்டு என்பதை தமிழில் இல்லையென்று கூற வேண்டியிருக்கிறது). எவரும் தம் வேலையில் இதுபோன்ற நேரத்தைக் காணலாம். அன்பான, ஒற்றுமையான குடும்பக் கல்யாணத்தில் இதைக் காணலாம். “இது நம் வீட்டு விசேஷமாக நடக்கவில்லை. பெரிய இடத்துப் பெரிய விசேஷமாக அன்னை நடத்தினார்” என்று கூறுவதைக் காணலாம்.
- நம்மை மறந்து அன்னையை நினைத்தால்
சைத்தியப்புருஷன் வெளிவருவான்.
62. கொடுமையை சந்தோஷமாக ஏற்றுக்கொள்.
சுயநலமி, பேய், கொடுமை ஆகியவற்றுக்குச் சட்டம் ஒன்றே.
வருபவை நமக்குரியவை என்பதே அச்சட்டம்.
ஆத்மா ஆழத்தில் புதைந்திருந்தால் அது வெளிவரக் கொடுமை அவசியம்.
நம்மைக் கொடுமை செய்பவர் அச்செயலுக்குக் கருவி. அச்செயல் அருள்.
சுயநலமி, பேய், கொடுமைக்குச் சட்டம் ஒன்றானாலும் அவை செயல் வேறுபடும்.
தோசை, இட்லி, உப்புமா அரிசியால் செய்யப்பட்டிருந்தாலும் ருசி வேறு, பாகம் வேறு.
சுயநலமிக்குத் தன்னை மட்டும் தெரியும்; வெட்கமிருக்காது. பேய் பயங்கரமாகச் செயல்படும்.
கொடுமை செய்பவருக்கு ஈவு, இரக்கம் இருக்காது; தீவிரம் இருக்கும். அன்பு செலுத்த வேண்டியவர் கொடுமை செய்வதை மனம் ஏற்க முடியாது; உயிரும், உடலும் பதைபதைக்கும்.
இப்பதைபதைப்புமூலம் புதைந்துள்ள ஆத்மா வெளிவருகிறது.
8 தலைகீழ் மாற்றங்களில் இது 5 முதல் 8 வரை ஓரிடத்தில் அமையும். அன்பாகத் தேடிவரும் குழந்தையை ஆத்திரமாக அடித்த தாயாரை அன்றே அக்குழந்தை மறந்துவிட்டது. கடைசி நேரம் அக்குழந்தை அருகிருக்க முடியவில்லை. கொடுமையை ஏற்ற ஆத்மா அன்றே தாயார் முகத்தில் விழிக்கக் கூடாதுஎன முடிவு செய்துவிட்டது, வாராத மகளுக்கே தெரியாது.
கொடுமைக்கு ஆளான குழந்தைகள் கடைசி நேரத்தில் கொடுமை செய்தவரருகில் இருக்கமாட்டார்கள்என்பது பொதுச்சட்டம்.
இந்த ஆன்மீக உண்மை எட்டிக்காய்.
கேட்கவும் மனம் சம்மதிக்காது.
உலகில் அன்பில்லை, ஆதாயம் மட்டுமிருக்கிறதுஎன்பது உண்மை.
கேட்டால் மனம் ஏற்காது.
ஏற்றால் உடலெல்லாம் கொப்புளம் வரும்; தோல் கறுத்துப்போகும்.
தோல் வியாதிக்கு இது ஓர் அடிப்படை.
மனமும் ஏற்று, செயலையும் ஏற்பது யோகம்.
ஏற்பதுடன் எரிச்சலும் படக்கூடாது.
சந்தோஷப்படும்பொழுதுதான் பலன் வரும்.
அதனால் அன்னை எவரையும் யோகம் செய்ய அழைப்பதில்லை.
இந்த ஞானம் வாழ்வை வளப்படுத்தும்; பிச்சைக்காரனைப் பெரிய கோடீஸ்வரனாக்கும், தொண்டனைத் தலைவராக்கும்.
63. எந்த முறையையும் தேடாதே.
எந்த முறையும் சக்திவாய்ந்தது; பெரும்பலன் தரவல்லது.
எந்த முறையையும் நாடாவிட்டால், பலன் தானே வரும். அது பெரியது என்பது ஆன்மீக உண்மை.
வசிஷ்ட கணபதி முனிக்கு காவ்ய கண்ட கணபதி எனப் பெயர்.
இவர் உமா சகஸ்ரம் எழுதியவர்; கவி.
இவருடைய சமையல்காரன் எழுதப் படிக்கத் தெரியாதவன்.
குருவின் ஞானம் அடிமனம் வழி சிஷ்யனுக்கு வந்து சேரும்.
கவி பாராயணம் செய்த வேதம், சமஸ்கிருத ஞானம் இவனிடமிருந்து தானே பிரவாகமாக வந்தன.
ஒரு கிரேக்கப் பேராசிரியர் வேலைக்காரியிடமும் இதைக் கண்டார்.
இவர்கள் எந்த முறையையும் நாடவில்லை, கற்க முயலவில்லை.
ஞானம் தானே இவருள் பாய்ந்தது.
சர்ச்சிலோ, இங்கிலாந்தோ ஹிட்லரைத் தோற்கடித்திருக்க முடியாது.
பகவான் சர்ச்சிலின் தைரியத்தால் அவரைக் கருவியாகத் தேர்ந்தெடுத்தார்.
சர்ச்சில் இந்தியச் சுதந்திரத்திற்கு பரமஎதிரி.
பகவான் சுதந்திரத்தை சூட்சுமத்தில் பெற்றவர்.
யோகசக்தியை பகவான் சர்ச்சிலுக்கு அனுப்பினார்.
வென்றது யோகம்.
சர்ச்சில் கருவி.
இந்தியச் சுதந்திரத்தின் பரமஎதிரி, உலகச் சுதந்திரத்திற்குக்
கருவியாவது ஆன்மீக நடைமுறை.
சர்ச்சில் எந்த முறையையும் நாடி தைரியம் பெறவில்லை.
தைரியம் அவருடையது; சக்தி பகவான் அளித்தது.
வேலைக்காரர்கள் மொழி பயில்வது இவ்வழி.
முறை பலன் தரும்.
பெரிய முறை பெரிய பலன் தரும்.
முறைகளைக் கைவிட்டால் உலகம் அறியாத பலன் எழும்.
ஆப்பிளைக் கண்ட நியூட்டனோ, பாத்ரூமிலிருந்த ஆர்க்கிமிடீஸோ,
E = MC 2 என்று கூறிய ஐன்ஸ்டீனோ எந்த முறைகளாலும் இவற்றைக் கண்டுபிடிக்கவில்லை.
இராமானுஜம் எழுதிய 4 நோட்டுகளில் எதுவும் அவர் படித்த இன்டர்மீடியட் படிப்பால் வரவில்லை.
உலகத்திற்குரியது முறை.
முறைகளைக் கடப்பது உலகைத் தாண்டிச் செல்வது.
64. சுறுசுறுப்பில் அமைதி வேண்டும்.
அமைதியாக இருப்பதோ, சுறுசுறுப்பாக இருப்பதோ சிரமம்.
இரண்டில் ஒன்றைச் செய்யலாம்.
எப்படி இரண்டும் சேரும்?
அமைதியிருந்து சுறுசுறுப்பு எழுகிறது என்பது ஆன்மீகச் சட்டம்.
சுறுசுறுப்பு அமைதியாவது முதற்கட்டம்.
அந்த அமைதி கலையாமல் சுறுசுறுப்பு எழுந்தால் அது பெரியது.
மேடையில் விவாதம் நடந்தால் ஒருவர் ஆர்ப்பாட்டமாகப் பேசுவார்.
கூட்டம் அவரைப் பாராட்டும்.
அவர் முடித்தபின் எதிரி எழுந்து அமைதியாக, முதல் பேசியவர் கூறியவற்றில் உள்ள தவற்றை அமைதியாக சுட்டிக்காட்டினால் விவாதம் இவருக்கு ஜெயிக்கும்.
அமைதிக்கு சக்தியுண்டு.
ஆர்ப்பாட்டத்திற்குத் திறனில்லை.
அமைதியினின்று எழும் சுறுசுறுப்புக்கு உச்சகட்டமான சக்தியுண்டு.
இது எப்படி சாத்தியம்என்று கேட்டவர்க்குப் பதில் கூறும் வகையில்
பகவான் ஸ்ரீ அரவிந்தர், “யோகத்தில் ஓரளவு பரிச்சயம் உள்ளவரும் அமைதியின் சக்தி அபரிமிதமாக எழுவதைக் கண்டுள்ளனர்” என்கிறார்.
அனுபவம் முதிர்ந்து, நிறைந்த பின்னரே அமைதி எழும்.
அமைதி அமைதியாக இருப்பதாலேயே காரியம் நடக்கும். போலீஸ்காரன் துப்பாக்கியால் சுடும்பொழுது அவன் அதிகாரம் தெரியும் என்பது அவசியமில்லை.
காக்கிசட்டை போட்ட போலீஸ்காரன் ஒருவன் வந்துவிட்டாலே கூட்டம் அடங்கும்.
போலீஸ்காரனுடைய செயலற்ற நிலைக்கே சக்தியுண்டு.
அவன் செயல்படும்பொழுது சக்தி அதிகம்.
சுறுசுறுப்பு அமைதியினின்று எழுந்தால் அது பெருஞ்சக்தியாகும்.
அமைதியினின்று எழும் சுறுசுறுப்பு அதுபோல் பெரியது.
பெரிய பண்ணைகள், பெரிய உத்தியோகஸ்தர்கட்கு இந்த சக்தியுண்டு.
சீனியர் வக்கீல் எதிர்கட்சிப் பத்திரத்தைக் கையெழுத்துப் போட்டுத் திருட்டுத்தனமாக எடுத்துக்கொண்டார். இதை திரும்பப்பெற சட்டப்படி கேஸ் நடத்த 2 வருஷமாவது ஆகும். எதிரிக்கு ஜில்லா ஜட்ஜ் வேண்டியவர். அவரிடம் சொன்னார். ஜட்ஜ் வக்கீலைத் திட்டலாம், மிரட்டலாம், கோர்ட்டிலிருந்து விலக்குவேன்என்று கூறலாம். அவர் அமைதியாக ரிஜிஸ்தாரை வக்கீடம் அனுப்பினார். எதிர்கட்சிக்காரர் “என் பத்திரத்தைக் கொடுங்கள்” என்றார். பத்திரம் உடனே வந்துவிட்டது. வக்கீலுக்கு, திருடனுக்குத் தேள் கொட்டியது போலாயிற்று. ஜட்ஜின் அமைதி லேசாகச் செயல்பட்டால் பெரிய அதிகாரம் தடையின்றி செல்லும்.
65. ஒரு முறையைத் தேர்ந்தெடுத்து அதைச் சிறப்பாகச் செய்.
இங்கு சுமார் 100 முறைகளை எழுதியுள்ளேன்.
எதைப் படித்தாலும் செய்ய ஆசையாக இருக்கும்.
நமக்குப் பிடித்தமான ஒரு முறையை நிதானமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இங்கு அம்முறையில் கூறிய அனைத்தையும் perfect சிறப்பாகச் செய்ய வேண்டும்.
முழுப்பலன் கிடைக்கும்.
இம்முறையில் சொல்ல வேண்டியவை மேலும் ஏராளமாக உள்ளன. அவற்றையும் தெரிந்துகொள்ளலாம். அதற்குரிய வழிகள் 3:
1) அன்னை இம்முறையைப் பற்றி எங்கெல்லாம், என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்எனத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றால் நாம் செய்ததை எப்படி உயர்த்த முடியும்என முயல்வது.
2) அருளமுதத்தில் 34 முறைகள் உள்ளன. மற்ற தமிழ்ப் புத்தகங்களில் பல இடங்களில் இம்முறை வருகிறது. அவற்றை a research student ஓர் ஆராய்ச்சி வல்லுனர்போல் படித்து, தேடிக் கண்டுபிடித்துப் பயன் பெற வேண்டும். பிறர் தேடித் தருவது பலன்தாராது. நாமே தேடுவதே பயன்தரும்.
3) இவ்விரண்டையும்விட சிறந்த முறையொன்றுண்டு. நாம் செய்தவற்றை நினைத்து, ஆராய்ந்து, அனுபவித்து, மேலும் என்ன செய்யலாம்என இதுவரை நாம் படித்ததைக் கொண்டு கண்டுபிடித்து முறையை உயர்த்துவது முழுப்பலன் தரும்.
- பலன் வருவது நிச்சயம். அதைப் பெரும்பலனாக்கலாம்; முழுப் பலனாகவும் செய்யலாம்; வந்தது நிலைப்பதாகவும் செய்யலாம்; நிலைத்தது தொடர்ந்து உயர்வதாகவும் செய்யலாம்.
- இந்த முறையையே அன்னையாகவும் மாற்ற முடியும்.
- நமக்குச் சொந்த பழக்கங்கள் உண்டு; எதற்கும் லிமிட் உண்டு; விடாமுயற்சி அவசியம். ஒன்று முடிந்தால் அடுத்ததற்குப் போகத் தாமதிக்கக் கூடாது. இதெல்லாம் பார்த்தால் முடியாது‘ என்பன போன்று சுமார் 20 அல்லது 25 பழக்கங்கள் உள்ளன. அவற்றை நாம் தவறாது பின்பற்றுகிறோம். அதற்குப்பதிலாக அம்முறைகளைப் பற்றி அன்னை என்ன கூறியுள்ளார்என அறிந்து அவற்றைப் பின்பற்றுதல் சாலச்சிறந்தது.
- நமக்கு தர்மபுத்திரன், சிவனடியார்கள், ஆழ்வார்கள், சரித்திரத் தலைவர்கள், காந்தி, நேரு போன்றவர்கள் செய்தவை அடிக்கடி வழிகாட்டும்.
அதற்குப்பதிலாக அன்னை வழிகாட்ட வேண்டும்.
- முறை முழுமை பெறும்பொழுது பலன் முழுமை பெறும்.
பலன் முழுமை பெறும்பொழுது பக்குவம் வரும்.
பக்குவம் வாராமல் பவித்திரம் வாராது.
முறையும், பலனும், முழுமையும், பக்குவமும், பவித்திரமும் நம்மால்
இதுவரை செய்ய முடியாதவற்றைச் செய்யும்.
அதைக் கடந்தது அன்னை. அன்னை மட்டும் அனைத்துமாகும்.
66. சக்தி, வீர்யம், தெய்வப் பிரகிருதியைக் கடந்த சிரத்தையை நாடு.
ஆர்வமாகச் செயல்படுவது சக்தி செயல்படுவது.
தீவிரமாக முழுமூச்சுடன் செயல்படுவது வீரியம்.
மனித சக்தியை தெய்வ சக்தியாக்குவது தெய்வப் பிரகிருதி. நம்பிக்கை இவற்றைக் கடந்தது.
எலக்ஷனில் பிறருக்காக வேலை செய்யாமல் ஆர்வமாகச் செயல்படுவது முதல் நிலை.
தீவிரமாக எலக்ஷனில் வேலை செய்பவன் தன்னால் முடிந்த எதையும் பாக்கி வைக்காமல் செய்பவன்.
சக்தியும், வீரியமும் நம்திறமை.
அவற்றைச் சமர்ப்பணம் செய்தால் சக்தி தெய்வ சக்தியாகும்; வீரியம் தெய்வீக வீரியமாகும்.
நமது சக்தியும், வீரியமும் சமர்ப்பணத்தால் தெய்வத்தன்மையைப் பெறுகின்றன.
நம்பிக்கை எனில் இவற்றுள் உள்ள நம் பங்கை விலக்கி முழுவதும் தெய்வ சக்தி, தெய்வீக வீரியமாவது.
ஆபத்தான வியாதி வந்தவுடன் ஆஸ்பத்திரிக்குப் போகிறோம். டாக்டர் ஆபத்தை விலக்குகிறார்; மருந்து தருகிறார்; நம்மால் செலவு செய்ய முடியும்என நம்பி செயல்படுவது நம்முடைய சக்தி, டாக்டருடைய சக்தி.
அது பலிக்கவில்லை. உள்ளூர் ஸ்பெஷலிஸ்ட், சென்னை, டெல்லி ஸ்பெஷலிஸ்ட் முயல்வது வீரியம் செயல்படுவது.
அவர்கள் செயல்படும்பொழுது சமர்ப்பணத்தை நம்புவது.
எதுவும் பலிக்கவில்லையெனில் நமது சக்தியிலும், வீரியத்திலும், சமர்ப்பணத்திலும் நம்பிக்கை போகிறது. நடப்பது நடக்கட்டும்என விட்டுவிடுகிறோம்.
நடப்பது நடக்கட்டும்என விரக்தியாக விடுவதற்குப்பதிலாக, நமது சக்தி,நம் வீரியம், நம் சமர்ப்பணம் உள்பட நாம் கலந்திருப்பதால் நாம் தொந்தரவு மட்டும் தரமுடியும். இனி இவற்றில் நம்பிக்கை போய்விட்டதால் pure faith, தூய நம்பிக்கை செயல்படும்என நம்புவது Faith.
இப்படி வாங்கிய பேனா 30 வருஷம் வருவதுடன், அதனால் எழுதிய எதுவும் வெற்றிபெறத் தவறுவதில்லைஎனக் காணலாம்.
பேயான மனைவி, கணவனையுடையவர் past cosecration, கடந்தகால சமர்ப்பணத்தால் நம் சக்தி, நம் வீரியம், நமது சமர்ப்பணத்தை withdraw வாபஸ் செய்தால் கணவன் கந்தர்வனாவான், மனைவி பஞ்சகன்னிகைகளில் ஒருவராவார்.
செய்வது ஞானத்தை சித்தியாக்கும்.
செய்ய ஏராளம் உண்டு.
பேசுவதை நிறுத்தி, செய்ய ஆரம்பிப்பது சரி.
67. Life Responseஐ மதித்து நட.
நாம் சகுனம் என்று கூறுவது Life Response வாழ்வின் எதிரொலியில் ஒரு பகுதி.
வாழ்க்கையில் நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகள், உத்தியோகம், course திருமணம், கூட்டாளி, டெக்னாலஜி போன்றவை, இந்த ஞானம் உள்ளவர்க்கு Life Response வாழ்வை நிர்ணயிக்கக்கூடியவை.
நமக்கு முழுவெற்றி கிடைத்தவற்றில் 1 வருஷம், 1 மாதம், 10 வருஷம் ன்னால் யோசனை செய்துபார்த்தால் வாழ்க்கைத் தெளிவாக சுட்டிக்காட்டியது தெரியும்.
போட்டோவிலிருந்து ஒருவர் தலையை வெட்டி எடுத்தனர். இது சிறுபிள்ளை குறும்பு. 4, 5 வருஷம் கழித்து அவரிறந்தபொழுது போட்டோ நிகழ்ச்சியை பலரும் உணர்ந்தனர்.
ஒரு IAS ஆபீசர் தகப்பனாருடன் கோபித்துக்கொண்டு தம் initialஐப் போட மறுத்தார்.
நண்பரையும், அவர் நட்பையும் போற்றி அதற்கடையாளமாக அவரிடமிருந்து ஒரு புத்தகம் பெற்றபொழுது அவர் பெயர் அதிலிருந்து கத்தரித்து
எடுக்கப்பட்டது கண்டு வருத்தமடைந்தார்.
பிற்காலத்தில் அந்தப் பெயரே கசக்கும் நிலை வாழ்க்கை எழுப்பியது.
கெட்ட நடத்தையைக் குறிக்கும் செயல்கள் பல உள.
நீ மணக்க இருக்கும் இளைஞனுக்கு அது போன்ற பழக்கம் உள்ளது உன் கண்ணில் படவில்லை என்றபொழுது, வாழ்க்கை அடுத்தவர்மூலம் எடுத்துக்காட்டுகிறது. ஏற்பதால் என்ன நடந்தது, மறுத்ததால் விளைவு என்ன என்பதை பிற்காலம் குறிக்கும்.
இங்கிலாந்தில் 1900, 1800இல் இவள் கர்ப்பமாக இருக்கிறாள்‘ என ஆண்கள் பெண்களோடு பேசமாட்டார்கள். குறிப்பாகவே பேசுவார்கள். நம் நாட்டில் ஒரு பண்பாடு; மனிதன் சொற்கள், பேச்சில், எழுத்தில் வெளிவருபவை அவர் மனநிலையைக் காட்டும். நேரடியாக அது வெளிப்பட்டு மனம் அருவெறுப்புப்பட்டபின் அவரை மணக்க விரும்பினால், அம்முடிவின் பலனை அனுபவிப்பதில் ஆச்சரியமில்லை.
இதுவரை நாம் செய்த காரியங்களும், அவற்றின்வழி நாம் பெற்ற பலன்களும் நம் மனத்தில் பதிவாகியுள்ளன.
வாழ்வுக்கு அது பெரிய ஜாதகம்.
உடன் உறைபவர், உயிரின் பகுதியானவர் உயிரை எடுக்கப்போகிறார் என்பது பல ஆண்டுகள்முன் தெரியும்.
காதற்ற ஊசி காலத்திற்கும் உயிரைக் காப்பாற்றப்போகிறது என்பதை பழைய நிகழ்ச்சிகளினின்று காணலாம்.
பெரிய மனிதர்கள் வரலாறு, புகழ்பெற்ற கதைகளில் இந்த ஞானம் மண்டியிருப்பதையும், விரவியுள்ளதையும் காணலாம்.
1 மாதம் நம் வாழ்வைக் கவனித்தால் இத்தனை ரகஸ்யங்களும் வெளிவரும்.
அறிவது எளிது; பின்பற்றுவது எளிதன்று.
மனம் வேண்டாததை ஆர்வமாக விழையும்.
Life Response பெரிய ஞானம்.
68. தவறு என்று தெரிந்ததைச் செய்யும் ஆர்வம் கூடாது.
தவறு என்று தெரியாதது வழக்கம். முக்கியமான விஷயத்தில் தெரிந்தவற்றை விரும்பிச் செய்வதுண்டு.
திரும்பத் திரும்பவும் செய்வதுண்டு.
கடைசி காலம்வரை செய்வதுண்டு.
கறுப்புப்பணத்தைக் கையாலும் தொட மறுப்பவர், வெள்ளைப்பணத்தை கறுப்புப்பணமாக மாற்றுகிறார். காரணம் அவசரம். சிறிய விஷயத்தில் அவசரம், பெரிய விஷயத்தில் ஆபத்தைக் கொண்டு வரும்.
அவசரம், சில்லறை ஆசை, பெருமை, ஆடம்பரம் ஆகியவை தவறு எனத் தெரிந்தாலும், மீண்டும் செய்யத் தூண்டுவது. தூண்டுவது தவறன்று; குணம்.
பிறர் இதே விஷயத்தில் அவரை யோசனை கேட்டால், வேண்டாம் என்பார்.
தனக்கு என்றபொழுது தவறாது செய்வார்.
இதற்கு வழியுண்டா?
இதுபோன்ற விஷயத்தில் நாம் பிறருக்குக் கட்டுப்படுதல் இதைத் தடுக்கும்.
நமக்கு முக்கியமான ஒருவரைக் குறிப்பிட்டு இந்த மாதிரி விஷயங்களில் அவர் பேச்சுக்குக் கட்டுப்பட வேண்டும்என்றால் இத்தவறு தடுக்கப்படும்.
அன்னைக்குக் கட்டுப்படுவது சமர்ப்பணம்.
சமர்ப்பணம் செய்தால் காரியம் தவறாது.
சமர்ப்பணத்திற்குக் கட்டுப்படுவது சிறப்பு.
மனிதருக்குக் கட்டுப்படுவது அடுத்தது.
பொறுப்பற்றவர், பிறரை ஏமாற்ற முயல்பவர், வேலையைத் தட்டிக் கழிப்பவர், வேண்டுமென்று தவற்றை நாடுபவர் போன்றவர் இதற்கு விலக்கு.
தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவருக்கு வழியுண்டு.
தான் கட்டுப்படக்கூடாது என்பவர் அவரிஷ்டப்படி நடக்கிறார்.
பிறருக்கு யோசனை சொல்லக்கூடாது, கேட்டால்தான் சொல்லலாம் என்பது இதன் சாரம்.
சுயநலமிக்குத் தவறு என்று தெரிந்தாலும், அதையும்மீறி இலாபம் வரும் என்ற கற்பனையுண்டு.
திருடன் அகப்படமாட்டான் என்றுதான் திருடப்போகிறான்.
20 கோடி இலஞ்சம் பெற்றதை சர்க்கார் எடுத்துக்கொண்டது. 2000 கோடி சம்பாதித்தார்எனில் அவர் இலஞ்சத்தின்மூலம் முன்னேறக்கூடிய ஆத்மாவாகும்.
அவர் சட்டம் மற்றவர்க்குதவாது.
செய்வனவெல்லாம் தில்லுமுல்லு, பொய், அழிச்சாட்டியம், இருந்தும் வெற்றி வருகிறதுஎனில் அது அவர் ஆத்மநிலை.
நமக்கு அவர் நிலை வழிகாட்டியாக இருக்காது.
69. கடந்ததில் ஒரு தவற்றிலிருந்தாவது விலகு.
நமக்குத் தெரிந்த தவறுகள் ஏராளம்.
அவற்றுள் ஒன்றை எடுத்து யோசனை செய்து, இந்தத் தவற்றை இனி செய்யக்கூடாதுஎன முடிவு செய்வது இம்முறை. எல்லாத் தவறுகளையும் விலக்க வேண்டும். ஒன்றை விலக்கினாலும் அதற்குரிய பலன் தெரியும்.
Small Scale Industries பெரிய கம்பனிக்கு சப்ளை செய்தால், பெரிய கம்பனி மாமியார்போலப் பழகும்.
1975இல் 11 இலட்ச ரூபாய்க்குத் தொழிலைச் செய்பவர் அப்படிப்பட்ட நிலையிலிருந்தார்.
34 npக்கு செய்யும் partஐ பெரிய கம்பனி 35 npக்கு வாங்குகிறது. அது மட்டுமன்று, ஆர்டரை எப்பொழுது நினைத்தாலும் இரத்து செய்யும்.
SSIக்கு வரவேண்டிய இலாபம் பெரிய கம்பனிக்குப் போகும்.
போட்டி ஏராளமாக இருப்பதால் SSI செய்வதற்கு ஒன்றுமில்லை.
SSI முதலாளிக்கு அன்னை பரிச்சியமானார்; ஆனால் நம்பிக்கையில்லை.
தரமான சரக்கு என்பதால் பெரிய கம்பனிக்கு அடிமையாக ஊழியம் செய்வது தவறுஎன எடுத்துக் கூறியதை முதலாளி ஏற்றார்.
சொந்தமாக ஒரு சரக்கு product செய்தால், அதை மார்க்கட் ஏற்றுக் கொண்டால், 34 npக்கு அடக்கமானால், 50 npக்கு விற்கலாம், 100 npக்கும் மார்க்கட் ஏற்றுக்கொள்ளும் என்பது விளங்கியது.
புது product செய்தார். தரமான இலாபம் வைத்து விற்றார். கம்பனி 11 இலட்ச வியாபாரம் 50 இலட்சமாயிற்று. இது 3 வருஷத்தில் கிடைத்தது.
இது தொழில் செய்த தவறு.
இதுவே அறிவால் செய்த தவறானால் பலன் அதிகம்.
உணர்வின் தவறு மாறினால் மேலும் பலன் வரும்.
தவற்றிலிருந்து விலகுவதைவிட நல்லதைக் கண்டு சேர்த்துக்கொள்ள வேண்டும். எதைச் செய்தாலும் மனம் ஈடுபட்டு முழுமையாகச் செய்தால் வரவேண்டிய முழுப்பலன், முடிவில் வருவதற்குப்பதிலாக முதலிலேயே வரும்.
வாழ்க்கை கடல் போன்றது.
எதைச் செய்தாலும் பலன் உண்டு.
தவற்றை விலக்குவது ஒரு முறை.
நல்லதைச் சேர்ப்பது அடுத்த முறை.
புதியதைக் கண்டுபிடிப்பது நல்ல முறை.
அன்னையை நினைத்துச் செயல்படுவது அருள் முறை.
வாழ்வைப் போற்றுவது வளம் பெறும் வழி.
70. அபிப்பிராயம் ஒன்றைக் கைவிடு.
சூட்சுமப் பார்வைக்கு உலகில் உலவும் அபிப்பிராயங்கள் ஊசிபோல் தெரியும்.
மனம் குறுகியது. அது ஒரு பக்கம் மட்டுமே காணவல்லது.
சிந்தனை அதனுள் ஒரு பகுதி.
அபிப்பிராயம் என்பது
ஒரு விஷயத்தைப் பற்றி நம் மனத்தின் முடிவு.
அதனால் இது உண்மையாக இருக்க முடியாது.
மனம் உண்மையை அறிய முடியாதது.
காமராஜ் பெரியவர் என்பது என் அபிப்பிராயம்.
காமராஜ் பெரியவரல்லர் என்பது மற்றோர் அபிப்பிராயம்.
என் அபிப்பிராயம் நல்ல அபிப்பிராயம் எனலாம்.
காமராஜ் எப்படிப்பட்டவர் என்பதை ஆராயும் திறன் என் அபிப்பிராயத்திற்கில்லை. குறுகிய மனம் ஒரு விஷயத்தைப் பற்றி எடுக்கும் முடிவு மேலும் குறுகியதாக இருக்கும். அதில் விசேஷமில்லை.
அபிப்பிராயமே இல்லாத மனம் (open mind) வெள்ளைமனம் எனப்படும். அதற்கு மனத்தின் சக்தியுண்டு.
அபிப்பிராயம் எப்படி உருவாயிற்றுஎன்று கண்டு, அதைக் கரைத்தால், மனம் அபிப்பிராயம் என்ற தளையிலிருந்து விடுபடும்.
ஒரு தளையிலிருந்து விடுபட்டாலும், மனம் அனுபவிக்கும் சுதந்திரம் பெரியது.
ஓர் அபிப்பிராயம் விலகினாலும், பிரச்சினை உடனே விலகும்.
ஒருவர் முதுகில் cept கட்டி போன்ற உருண்டை 5 வருஷமாக இருந்தது.
டாக்டர் கண்ணில் அது பட்டவுடன் அதை அறுத்துவிடச் சொன்னார்.
அவர் தமக்குத் தெரிந்த அன்பரிடம் இதைக் கூறினார்.
அன்பர் 1 வாரம் பொறு என்றார்.
மறுநாள் அது தானே உடைந்துவிட்டது. டாக்டர் அறுத்து எடுப்பார் என்ற அபிப்பிராயம் மனத்திலிருந்து விலகியவுடன், கட்டி உடைந்துவிட்டது.
விஷயம் எதுவானாலும், அதில் பிரச்சினை எழுந்தால், அதைப் பற்றி நமக்குள்ள அபிப்பிராயங்களை விலக்கினால், பிரச்சினை தீரும்.
பிரச்சினையே நம் அபிப்பிராயம்.
அபிப்பிராயத்தை விலக்குவது சிரமம்.
அன்னையை நம்பியவருக்கு அதை விலக்க முடியும்.
Pride & Prejudiceஇல் எலிசபெத் தன்அபிப்பிராயத்தை மாற்ற படும் போராட்டம் எவ்வளவுஎன நாம் கண்டோம். டார்சிக்கு அவள்மீது காதல் எழுந்தாலும், எலிசபெத் அபிப்பிராயம் மாறமறுக்கிறது. பெம்பர்லிதான் அதை மாற்றியது.
71. நல்லபடியாக நடப்பதை ஆழத்திற்குக் கொண்டு போ.
எல்லோரிடமும் நாம் நல்லபடியாகப் பழகுகிறோம்என்று நமக்குத் தெரியும், அனைவரும் ஏற்கின்றனர். அவ்வகையில் எந்த ஆபீஸுக்குப் போனாலும், எந்த விசேஷங்களுக்குப் போனாலும் நமக்கு வேலை நடக்கிறது, நம்மைச் சுற்றிப் பலர் சூழ்ந்து பிரியமாக விசாரிக்கிறார்கள் எனில், அங்கு நாம் மேலும் செய்யக்கூடியதுண்டு.
இதனுள் உள்ள தத்துவங்கள் சில:
1) இது மேலெழுந்தவாரியான பழக்கம். நிலைமை உயர்ந்தபொழுது நம் பழக்கமும் உயராவிட்டால், இது எதிராக மாறும் வாய்ப்புண்டு.
2) இந்த நல்ல பழக்கத்தை ஆழத்திற்குக் கொண்டுபோனால், அன்னை நம்மை MLAயிலிருந்து மந்திரியாக மாற்றுவதுபோன்ற மாற்றங்களைக் கொண்டுவருவார்.
3) இந்த நல்ல பழக்கம் ஆழத்தில் எதிரான பழக்கமிருப்பதால் ஏற்பட்டதாகும்.
அனைவரும் நம் பழக்கத்தை ஏற்கும்பொழுது, நமக்கு மட்டும் இது நம் பழக்கமன்று. உள்ளே நான் எதிராக இருக்கிறேன்எனத் தெரியும். சமயத்தில் நாம் நம் உண்மையை மறந்து, பிறர் சொல்வதையே ஏற்றுக் கொள்வோம். அதைச் செய்தால், அத்துடன் எல்லாம் முடிந்துவிடும்.
- உள்ளே உள்ள பழக்கத்தை‘ நாம் நினைவுபடுத்திக்கொண்டேயிருக்க வேண்டும். பிரமோஷன் வந்தவரைப் பாராட்டும்பொழுது நம்மனம் அதை வெறுத்துக் கரித்துக் கொட்டும். வாழ்க்கை அதைக் காட்டத் தவறாது. அந்த நேரம் ஒருவர் கதவைச் சாத்துவார். பாராட்டுப் பெறுபவர் விரல் நசுங்கும். இது நம் எண்ணத்தைப்‘ பிரதிபலிக்கும். வராண்டா வழியே பேசிக்கொண்டு போகின்றவர்கள் “இத்தனையும் வேஷம், நம்பாதே” என அவர்கட்குள் பேசிக்கொள்வார்கள். அது நம்மனநிலையைக் காட்டும்.
- ஒவ்வொரு தரம் பிறர் நம்மைப் பாராட்டும்பொழுது உள்ளேயுள்ளதை நினைவுபடுத்திச் சமர்ப்பணம் செய்ய வேண்டும். சமர்ப்பணம் உதட்டளவிலிருந்தால் வருஷம் 20 ஆனாலும் எதுவும் நகராது. உண்மையான சமர்ப்பணம் உடலையே உலுக்கும். தொடர்ந்து செய்தால் சில நாட்களில் உள்ளே சந்தோஷம் வரும். அதே நேரம் அன்னை செயல்படுவார்.
- அப்படி அன்னை செயல்படும்பொழுது கம்பனி சேல்ஸ்மேன் MLAஆகி, அடுத்த பீரியடில் மந்திரியானதுபோலிருக்கும்.
- டிகிரியும் எடுக்காதவருக்குப் பல்கலைக்கழக சிண்டிகேட் மெம்பர் கிடைக்கும்.
- ஆழம் அற்புதம்.
அற்புதம் செயல்பட அன்னை கண்ணில் நம் ஆழம் பட வேண்டும்.
ஆழத்தின் உண்மை தவறாது, அன்னை தவறமாட்டார்.
அற்புதம் வரக்காத்திருப்பது தவறாது. அதற்குத் தவறத் தெரியாது.
நம் உண்மை தவறக்கூடாது.
72. உன்னை அழிக்க விரும்புபவன் தரும் பெரிய பரிசை மறுத்துவிடு.
உன் சொத்தைப்போல 10 மடங்கு சொத்தை வலிய உனக்குத்தர அன்புடன் ஒருவர் கூறுவதை எப்படி மறுக்க முடியும்?
உனக்கு வரஇருக்கும் உலகப்புகழை அச்சொத்து அழிக்கும்என்று தெரிந்தால் அதைப்பெறலாமா? பெற முடியுமா?
அதை ஏற்க மறுக்கும் எண்ணம் அருள்.
வாழ்க்கையில் இதை மனிதன் தெரிந்து செய்வது குறைவு.
தானே நடப்பதைத் தலைவிதிஎனக் கொள்கிறான்.
தகுதிக்கு மேல் வரும் பரிசை, அதிர்ஷ்டம்என ஏற்பது வழக்கம்.
பெறும்பொழுது மனத்தைச் சோதனை செய்தால் பின்னால் வரப்போகும் பெரிய நஷ்டத்தை மனம் தன்உணர்ச்சியால் வெல்லும். அதேபோல் அன்னையிடமிருந்து வருவதைப் பெரும்பாலோர் அடக்கமாக மறுத்துவிடுவர். அதை ஏற்பது ஆத்ம விளக்கம் தரும்.
மனிதன் மறுக்க வேண்டியதை ஏற்பான்; ஏற்க வேண்டியதை மறுப்பான்.
பிரதம மந்திரி பதவி, முதலமைச்சர் பதவி சிறிய மனிதர்களை அழித்தது உண்டு. பாரம் தாங்கும் பர்சனாலிட்டி வேண்டும்.
வாழ்வில் இப்படி எவரும் நடப்பார்என எதிர்பார்க்க முடியாது.
தகப்பனார் மத்திய மந்திரியாக இருந்தவர். மகன் முனிசிபல் சேர்மனாக ஆசைப்பட்டு, பிரம்மப்பிரயத்தனப்பட்டு ஜெயித்தான். கவுன்சிலில் நடைமுறையில் அவனுக்குக் கேவலமான திட்டு கிடைத்தது. ராஜினாமா செய்தான்.
கொடுத்தால் பெறக்கூடாததை இந்த அப்பாவி தேடிக் கண்டுபிடித்து எதிர்காலத்தை நாசம் செய்து கொண்டான்.
இந்தநிலைமை இலட்சியவாதிக்கு வருவதற்கும், சாமான்யனுக்கு வருவதற்கும், ஆத்ம விளக்கம் பெற்றவனுக்கு வருவதற்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்த்துப் புரிந்துகொள்ளுதல் பலன் தரும்.
ஒரு படி உயர வாழ்நாள் முழுவதும் காத்திருக்கவேண்டிய உயர்வை 6 படி உயர்த்தித் தேடிவந்து வாழ்வு தருகிறது. அது இலட்சியவாதியின் நிலை.
சாமான்யனுக்கு 100 மடங்கு சொத்தாக வருகிறது.
இறைவனே சாவித்திரிக்கு அதுபோன்ற பெரிய பரிசை சொர்க்கலோக வாழ்வாக அளித்தார். அவள் மறுத்துவிட்டாள்.
இது எல்லோருக்கும் நடப்பதில்லை.
அடுத்த லோக அற்புதம் ஆண்டவனால் அனுமதிக்கப்பட்டபின், வாழ்வு
அப்படிப்பட்டவர்க்கு இதை அளிக்கும்.
சிறியவர், பெரியவர், நல்லவர், கெட்டவர், அனைவருக்கும் சட்டம் ஒன்றே.
73. ஒரு குறையை அடிபட்டவர் திருப்திப்படும் அளவுக்கு அகற்று.
ஒரு குறை நமக்குக் குறையெனத் தெரிய அக்காரியம் கெட்ட பிறகே தெரியவரும். பிரமோஷன் தகுதியுள்ளவரை விலக்கி, தகுதியற்றவருக்குக் கொடுத்தது மனத்தில் படாது. காரியம் கெட்டுப்போய், தகுதியற்றவன் நிலை தடுமாறும்பொழுதுதான் அது தெரியும். ஒரு பையனைத்தான் படிக்க வைக்க முடியும் என்றால், படிப்பு வரும் பையனை விட்டு, நமக்கு வேண்டிய பையனைக் காலேஜில் சேர்த்து, அவன் முடிக்காமல் வந்தபின்தான் தவறு தெரியும். அப்பொழுது அது தெரியாதவருண்டு. அவனுக்குத் திசை சரியில்லை, இல்லாவிட்டால் டிகிரியுடன் வந்திருப்பான் என்பார்கள். புத்திசாலிப் பையனைப் படிக்க வைக்கவில்லை. அவன் சர்க்காரில் குமாஸ்தாவாக இருக்கிறான். படிக்க வைத்தவனுக்கு படிப்பு வரவில்லை. வருடம் 4 போயிற்று. இந்த நிலையில் குறையை ஒருவர் உணர்ந்தால், செய்வதற்கு ஒன்றில்லை. அடிபட்ட மகனுக்கு, இப்பொழுதாவது என்னைத் தகப்பனார் நினைக்கிறாரே‘ என்று ஆறுதல் வரும்.
அன்பர்கட்கு முழுநிலைமையும் சீரடையும்; சற்று உபரியும் வரும்.
அதற்குரிய முக்கிய நிபந்தனை: தவற்றை மனம் உணர வேண்டும். தவற்றைச் செய்தவர் உணர்ந்தால் நஷ்டப்பட்டவருக்கு ஆறுதல் வரும். நஷ்டப்பட்டவர் மனம் திருப்திப்படும் அளவு தவறு செய்தவர் உணருவது – சொல்லை விலக்கி, செயலையும் விலக்கி, மனத்தால் மாறினால் – sincerity உண்மை. அந்த உண்மை பூரணம் பெறும்வரை மனம் அமைதியாக இருக்கும். பலன் வாராது. பூரணமான அதே நேரம்
நிலைமை மாறும். சர்க்காரில் குமாஸ்தாவாக வேலை செய்பவனுக்கு special selection புதுச் சட்டப்படி டிகிரி எடுத்திருந்தாலும் எது கிடைக்காதோ அந்த வேலை தேடிவரும். இது தவறாது நடக்கும். ஆசிரியராக ஓய்வு பெற்றவர்க்கு பாங்க் ஏஜெண்ட் வேலை தேடிவந்தது. முதல் வருஷம் கல்லூரிப் பரிட்சையில் பெயிலானவர் டெபுடி கலெக்டர் ஆனார். அவை வாழ்வில் நடந்தவை. அன்னையிடம் அன்னை முத்திரையுடன் நடப்பவை நடந்தபின்னும் நம்ப முடியாது.
- குறையைக் குறையாக உணர்வது reversal தலைகீழ் மாற்றம்.
- அறிவு மனநிம்மதி தரும்.
- உணர்வு சூழலை மாற்றும்.
- அடிபட்டவர் மனம் திருப்திப்படுவது சூழல் நிலைமையை மாற்றும்
- அளவுக்குத் திறன் பெறும்.
- மனம் மாறும் நேரமும், நிலைமை மாறும் நேரமும் ஒன்றாக இருக்கும்.
- தெரியாமல் செய்த தவற்றால் ஏற்பட்ட குறை ஒன்று.
- வேண்டுமென்றே செய்த தவற்றால் ஏற்பட்டது வேறு குறை.
- மனமாற்றம் செயலுக்குத் தகுந்தாற்போலிருக்க வேண்டும்.
- அப்படி மாறும் நேரம் அற்புதம் நிகழும் தருணம்.
- மனத்தின் ஆழ்ந்த உணர்வு, சூழல் செயலை மாற்றும் திறனுடையது.
- அவை சந்திக்குமிடம் சூட்சும வாழ்வு.
74. அழிச்சாட்டியத்தை ஆதரிக்க வேண்டும்.
இந்த முறை வாழ்க்கைக்குரியதன்று. வாழ்வைக் கடந்தது. இவை வாழ்வில் வரக்கூடாது. வந்தால் அதற்கு முடிவில்லை. அதற்கும் அன்னையிடம் முடிவுண்டு என்பது இம்முறை.
தமிழ்நாட்டிலேயே முதன்மையான செல்வர் 1960இல் “நான் எதுவும் சம்பாதிக்கவில்லை. தகப்பனார் கொடுத்ததைக் காப்பாற்றினேன்” என்றார். அவர் மகன் உலகில் ஒரு பெருநகரம் தவறாமல் ரேஸ் நடத்துகிறான்.
50ஆம் வயதில் 6 பிள்ளைகளை விட்டுவிட்டு 3 பிள்ளைகள் உள்ள பெரிய மனிதன் மனைவியைத் திருமணம் செய்து பகிரங்கமாக வாழ்கிறார் ஒருவர்.
பெரிய முழுச் சொத்தையும் அதிவிரைவில் அழித்து ஆனந்தப்படுகிறான் ஒரு சிறுவன்.
எந்த எந்தக் குற்றங்களைச் செய்யக்கூடாதோ, அத்தனையும் கணவர் ஒன்றுவிடாமல் செய்து பெருமைப்படுகிறார்.
இதுபோன்ற செய்திகளை 50 ஆண்டில் ஒன்று கேள்விப்படுகிறோம்.
அவற்றைத் தீர்க்க முடியாது.
அவர் செயல் அருணகிரிநாதர் செயல் போன்றது.
இப்படிப்பட்ட சிக்கலில் உள்ளவர் அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவர்மூலம் பிரச்சினையைத் தீர்க்க முன்வந்தால் முதற்காரியமாக நமக்கு இது தவறு. ஆண்டவனுக்கு இது தவறில்லை‘ என்பதைப் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன்பின் அவர் செய்வதை மனதாலும் வெறுக்காமல், ஏற்று ஆதரிக்க வேண்டும். அதே நிமிஷம் மனம் மாறும், நிலைமை மாறும், அனைத்தும் மாறும். என்அனுபவத்தில் இப்படிப்பட்ட நிலைமைகள் பல எழுந்துள்ளன. அவை எனதுவாழ்வுக்குள் ஏற்பட்டவையல்ல. என் பார்வையில், பொறுப்புக்கு வெளியில் எழுந்தவை. ஒரு விஷயத்தில் நான் அதை ஏற்று மனதால் ஆமோதித்துக் கடிதம் எழுதினேன். பதிலுக்கு வாழ்க்கையை தலைகீழே மாற்றி, வாழ்வின் பாதைக்குள் வந்துவிட்டதாகச் செய்தி வந்தது. நான் ஏற்றவை அத்தனையும் சிறிது காலம் அல்லது நீண்ட நாளில் மாறிவிட்டன. பிறருக்குக் கொடுமை செய்வதையே ஆனந்த அனுபவமானவர் உறவை – தேவையில்லாததை – யோகப்பயிற்சியாக ஏற்றேன். பலன் உடனே தெரிந்தாலும், முழுப்பலன் எழ 14 வருஷமாயிற்று. அவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் உலகம் வியக்கத்தக்க மாற்றம்.
- இதையும் கடந்த பொய்யின் இருள் உண்டு.
- அதை mean, perverse. falsehood கயமையான குதர்க்கத்தின் இருண்ட பொய் எனலாம்.
- அவை வாழ்வில் வருவதில்லை. யோகத்தில் ஒரு கட்டத்தில் வரும்.
- அவர்கள் தங்களை அறிவார்கள். பிறரைப் பொறி வைத்துப் பிடித்து கொடுமைப்படுத்துவார்கள். அவர்களை மாற்றுவது யார் கடமையும் இல்லை. அவர் பிடியில் சிக்கியவர் விடுதலை பெறும் வழி அவரை மனம் ஆமோதித்து ஏற்பது.
- அநியாயம் ஆண்டவன் நியாயம் என்பது இச்சட்டம்.
75. மன்னிக்க முடியாத குற்றத்தை அளவுகடந்து பாராட்டு.
பெண்ணுக்குத் திருமணம் செய்தால் அவள் வருமானம் போய்விடும் என்று திருமணம் செய்யாமலிருப்பது; நேருவை இந்த நாட்டில் பேர், ஊர் தெரியாத தலைவர்எனப் பேசுவது; மகாத்மா காந்தியை 1945இல் சிலர் பின்பற்றினர் என்பது; மகன் முதல் மார்க் வாங்கியபொழுது இக்காலத்தில் மார்க்கை அள்ளிப் போடுகிறார்கள்‘ என்பது; ரூ.200 சம்பாதிக்கும் தகப்பனாரிடம் 1960இல் தான்பெற்ற 62 ரூபாய் சம்பளத்தில் 1 ரூபாயும் எடுத்துக்கொள்ளாமல் கொண்டுவந்து கொடுத்ததால், அப்படி வை‘ என்று சொல்லி 5 மணி நேரம் அதைத் தொடாமலிருப்பது; ஊரிலேயே பெரிய சொத்து சம்பாதித்தவரை அவருக்கு வருமானமில்லை, சும்மா உட்கார்ந்திருக்கிறார்‘ என்பது அனைவரும் காணமுடியாத அற்புதங்கள். இவை மன்னிக்க முடியாத, பொறுக்க முடியாத குற்றங்கள். வாழ்க்கையில் இதற்குப் பொதுவாகக் கிடைக்கும் பலன், பெண் தானே திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறுவாள்; உள்ள பெரிய பதவி அழிவது (சர்ச்சில் இங்கிலாந்து பிரதமராக இருந்தபொழுது நேருவை அப்படிப் பேசினார். இங்கிலாந்தின் பிரதமர் அன்று உலகப் பிரதமர். அவர் போரில் நாட்டையும், உலகையும் காப்பாற்றினார். போர் முடியும்முன் பதவி போய் விட்டது); காந்திஜீயை அப்படிப் பேசியவர் அல்பாயுசாகப் போனார்; தகப்பனார் அலட்சியம் செய்த சம்பளம் அடுத்த மாதத்திலிருந்து
அவருக்கு வாராது; சும்மா உட்கார்ந்திருக்கிறார் எனக் கூறியவருக்கு சாப்பாடில்லாமல் சும்மா உட்காரும்நிலை தண்டனையாக வரும்; மன்னிக்க முடியாதவையென்னும் இவை வாழ்வின் வண்ணங்கள். நாம் செய்யக்கூடியவை அவற்றைவிட்டு விலகலாம்; ஆத்திரமாக எதிர்த்து சண்டையிடலாம்; நிச்சயமாக வெற்றி கிடைக்கும். அவை சரி. ஏற்பதும், பாராட்டுவதும் தேவையில்லை. இவை நமக்கு ஏன் வந்தனஎன அன்னை நோக்கத்தில் கண்டால், இப்படிப்பட்டவருள்ளும் அன்னை வசிக்கிறார்; அவரைக் கண்டறிவது அன்னையின் அதியுயர்வைக் காண வாய்ப்பு என ஓர் அன்பர் புரிந்துகொண்டால், இது அவருக்குரிய முறை.
- அப்படிச் செய்த பெண்தான் தன்இஷ்டப்படி திருமணம் செய்து, கடைசி வரைப் பெற்றோரைக் காப்பாற்றினாள்.
- அலட்சியம் செய்யப்பட்ட மகன் தகப்பனாரைக் கடைசிவரைக் காப்பாற்றியதுடன், அவர் ஆசை – கற்பனைக்கெட்டாத ஆசையையும் பூர்த்திசெய்தார்.
- சும்மா உட்கார்ந்திருக்கிறார் எனப் பேசிய உத்தமருக்கு ஒரு பக்கம் வருமானம் 15 மடங்கு அதிகரித்தது; செல்வாக்கு பெருகியது. உலகில் உள்ள அவ்வளவு வியாதிகளும் ஒன்று தவறாமல் வந்து பெரும்பாலும் ஆஸ்பத்திரி, மருந்து, குறை சொல்வதுடன் வாழ்கிறார்.
- குணம் வியாதியாகப் பரிமளிக்கும்என இவர் வாழ்வு நிரூபிக்கிறது.
- அன்னை அவற்றுள்ளும், அவற்றைக் கடந்தும் தெரிவார். அதைக் காண்பது யோக பாக்கியம். இப்படிப்பட்டவரிடம் நல்லபேர்என எவரும் பெற்றிருக்கமாட்டார்கள். அதை ஒரு நண்பர்பெற முனைந்தார், பெற்றார். அவர் வாழ்வு பரிமளித்தது. மன்னிக்க முடியாத குற்றத்தை அளவுகடந்து பாராட்ட பரந்தமனம் தேவை. பரந்தமனம் பல கோணங்களிலும் வரும்.